Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைசி இலங்கை தமிழ் மன்னனின் சமாதி:

Featured Replies

1174873_646629332037368_1802447817_n.jpg

கடைசி இலங்கை தமிழ் மன்னனின் சமாதி:

2300 ஆண்டு பாரம்பரியம்மிக்க இலங்கை தமிழ் மன்னர் ஆட்சியை ஆங்கிலேயர்கள் முடிவுக்கு கொண்டுவந்த பின், அங்கு கடைசியாக ஆட்சி புரிந்த நான்கு மன்னர்களின் ஒருவரும் கண்டி பகுதியை ஆட்சி புரிந்து வந்த தமிழ் மன்னருமான "ஸ்ரீ விக்ரம ராஜ சின்ஹா" அவரை ஆங்கிலேயர்கள் தமிழகத்துக்கு நாடுகடத்தி வேலூர் கோட்டையில் வீட்டு கைதியாக சிறைபிடித்து வைத்தனர். பின்பு அவர் இறந்த பின் அவரை வேலூர் கோட்டையிலேயே புதைத்தனர். அவரின் சமாதி இன்றும் வேலூர் கோட்டையில் காணலாம்.

 

காலக்கோட்டுப் படங்கள் facebook

 

"ஸ்ரீ விக்ரம ராஜ சின்ஹா" பௌத்த மதத்திற்கு மாறித்தான் ஆட்சி புரிந்ததாகக் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

"ஸ்ரீ விக்ரம ராஜ சின்ஹா" பௌத்த மதத்திற்கு மாறித்தான் ஆட்சி புரிந்ததாகக் கேள்வி.

 

ஸ்ரீ ராஜ விக்கிர சிங்கன் தமிழன், அவரது கையெழுத்துக்களின் மூலப் பிரதிகள் லண்டன் மியூசியத்தில் இருந்த‌து, நாம் முள்ளி வாய்க்காலில் தோற்ற பின்னர்... தந்திரமாக ஸ்ரீலங்கா அரசு வாங்கிக் கொண்டு போய் விட்டது. இதனைப் பற்றிய பழைய... பதிவு ஒன்றும், யாழ் களத்தில் உள்ளது. எங்கென்று... இப்போது, தேட முடியாது.

தமிழன், என்ன... சிறப்பு பெற்றிருந்தாலும்... அழிவு தமிழனால்... தான்.

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

"ஸ்ரீ விக்ரம ராஜ சின்ஹா" பௌத்த மதத்திற்கு மாறித்தான் ஆட்சி புரிந்ததாகக் கேள்வி.

 

கறுவல் அவர் தமிழ் பெளத்தர்.....மொழிதான் முக்கியம்.....மதம் முக்கியமல்ல :D தமிழ் மொழியால் பல மதங்கள் வாழ்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

கறுவல் அவர் தமிழ் பெளத்தர்.....மொழிதான் முக்கியம்.....மதம் முக்கியமல்ல :D தமிழ் மொழியால் பல மதங்கள் வாழ்கின்றன

 

வாயிலை... கெட்ட தூஷணம் வருகின்றது.

அதைச் சொல்ல, நாக்கு, தடக்குது புத்து.

  • கருத்துக்கள உறவுகள்

வாயிலை... கெட்ட தூஷணம் வருகின்றது.

அதைச் சொல்ல, நாக்கு, தடக்குது புத்து.

 

அமைதி ...அமைதி ........மணிமேகலை தமிழர் காப்பியம் என்றால் தமிழர்கள் பெளத்தர்களாகவும் வாழ்ந்தர்கள் என்பதுதானே உண்மை.......சிங்களவனுக்கு மட்டும் பெளத்தம் சொந்தமல்ல .... இன்று தமிழர்களில் அந்தோனிப்பிள்ளை இருப்பது போல் சிங்களவர்களில் அன்டன்புள்ளே இருப்பது போல் அன்று தமிழ் பெளத்தரும் சிங்கள பெளத்தரும் வாழ்ந்திருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து....அல்லது எண்ணம்

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி ...அமைதி ........மணிமேகலை தமிழர் காப்பியம் என்றால் தமிழர்கள் பெளத்தர்களாகவும் வாழ்ந்தர்கள் என்பதுதானே உண்மை.......சிங்களவனுக்கு மட்டும் பெளத்தம் சொந்தமல்ல .... இன்று தமிழர்களில் அந்தோனிப்பிள்ளை இருப்பது போல் சிங்களவர்களில் அன்டன்புள்ளே இருப்பது போல் அன்று தமிழ் பெளத்தரும் சிங்கள பெளத்தரும் வாழ்ந்திருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து....அல்லது எண்ணம்

 

சிங்களவனுக்கு, வக்காலத்து வாங்க, வெளிக்கிட்ட தமிழர்களின்... எண்ணிக்கை கூடிக் கொண்டு போகுது.

வேறை.. என்ன, இழவை நான் சொல்ல...

 

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி ...அமைதி ........மணிமேகலை தமிழர் காப்பியம் என்றால் தமிழர்கள் பெளத்தர்களாகவும் வாழ்ந்தர்கள் என்பதுதானே உண்மை.......சிங்களவனுக்கு மட்டும் பெளத்தம் சொந்தமல்ல .... இன்று தமிழர்களில் அந்தோனிப்பிள்ளை இருப்பது போல் சிங்களவர்களில் அன்டன்புள்ளே இருப்பது போல் அன்று தமிழ் பெளத்தரும் சிங்கள பெளத்தரும் வாழ்ந்திருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து....அல்லது எண்ணம்

புத்தன், புத்தமதத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு. முதலாவது மகாயான பௌத்தம்! இரண்டாவது ஹீனயான பௌத்தம்! மகாயானம் மிகவும் கடுமையானது. அது, கிட்டத்தட்ட 'சமண சமயக் கோட்பாடுகள் போன்றது! சமண சமயத்ததுவங்கள் மிகவும் அழகானவை! திருக்குறள் போன்ற காவியங்கள், சமண மதத்திலிருந்து தான் உருவாகின!அதைத் தான், இந்தக் குறுக்கால போன, சம்பந்தர் அழித்து முடித்தார். அவர்களில் பலர் கழுவேற்றிக் கொல்லப்பட்டனர். 'சிலப்பதிகாரம்' ஒரு சமண காவியம்!'இளங்கோவடிகள்'  ஒரு சமணர் ! இதைப் போன்றதே மகாஜான பௌத்தமும்! இந்தியாவில், புத்தமதம் அழிந்து போக, சீனா போன்ற இடங்களிலும் அது முற்றாக அழிந்து போய் விடும் நிலைக்கு வந்தது! அப்போது சில 'தேரவாத புத்தத்தின்' திரிபிடகங்கள் சில இலங்கையில் தப்பிப் பிழைத்தன! இதனையே, இயன் பதூதா' (சரியான பெயரோ தெரியாது)போன்ற சீன யாத்திரிகர்கள் சீனாவுக்குக் கொண்டு சென்று, தேரவாத புத்தத்தைப் பிழைக்க வைத்தார்கள்!தமிழர், கடைப்பிடித்த 'மகாஜான புத்தம்' அழிந்து போய் விட்டது!அதனாலேயே புத்தர் நயினாதீவுக்கு வந்தார். 'மணிமேகலையில், வரும் 'மணிபல்லவம்' என்று குறிப்பிடப்படும் தீவு, தற்போதைய நயினாதீவு என்று கருதப்படுகின்றது! கந்தரோடையில் இருந்த புத்த கோவில்கள், தமிழர்கள் அனுசரித்த புத்த மதத்தைச் சேர்ந்தவை. மகாஜான புத்தர்களின் பாதங்கள், இந்துச் சிலைகள் போல இருக்கும்! தேரவாத, புத்தர்களின் பாதங்கள், கக்கூசுப் படிகள் போல வெட்டப்பட்டிருக்கும்!

 

இதற்கு மேலும், புத்த மதத்தைப்' பற்றி அறிய விரும்பினால், யாழுக்கு ஒரு சின்ன டொனேசன் குடுக்கவேண்டி வரும்! பரவாயில்லையா? :D

சமணமும் தென்இந்தியாவிற்கு இடையில் வந்த மதம் தானே...

எது இலகுவான மதமோ அதை மக்கள் கடைபிடித்தார்கள்

ayya madhathai patri pesadheergal, inathai patri pesungal, athavathu tamil inam

  • தொடங்கியவர்

ஸ்ரீ ராஜ விக்கிர சிங்கன் தமிழன், அவரது கையெழுத்துக்களின் மூலப் பிரதிகள் லண்டன் மியூசியத்தில் இருந்த‌து, நாம் முள்ளி வாய்க்காலில் தோற்ற பின்னர்... தந்திரமாக ஸ்ரீலங்கா அரசு வாங்கிக் கொண்டு போய் விட்டது. இதனைப் பற்றிய பழைய... பதிவு ஒன்றும், யாழ் களத்தில் உள்ளது. எங்கென்று... இப்போது, தேட முடியாது.

தமிழன், என்ன... சிறப்பு பெற்றிருந்தாலும்... அழிவு தமிழனால்... தான்.

 

உண்மைதான் ஸ்ரீ அண்ணா எமக்கு நாமே எமன். இலங்கை புத்திசாலித்தனமா தமிழனின் கையெழுத்தை வாங்கி இப்போ அழித்திருப்பாங்க

இளங்கோவில் ஆரம்பித்து திருநாவுக்கரசர் வரையில் தமிழ் நாட்டில் சமணம் ஆழுமையில் இருந்திருக்கலாம். இதில் திருவள்ளுவருடனாக இருந்த ஏழு எட்டு ஆனாதை சிறுவர்களும் உள்ளடங்குவர். நாகரீகமோகம் என்பது பலதடவைகளில் கொடுமையானது. இளங்கோ மதம் மாறியது சேரன் செங்குட்டுவனிடம் இருந்த போட்டியால் என்று ஒரு கர்ணபரம்பரைக் கதை உண்டு.  அதை ஏற்கலாம் அல்லது தள்ளிவிடலாம். ஆனால் அரசகுமாரர்களுக்கு அளிக்கபடும் கல்வியின் போது உள்ளுணர்வால் செயல்ப்பட்ட செங்குட்டுவன் தப்பிவிட்டான். ஆனால் அறிவால்ச் செயல்ப்பட்ட இளங்கோ சறுக்கி விழுந்தார் என்பதுதான் ஊக்கிக்க கூடியது.  அன்று பரவிக்கொண்டிருந்த நாகரீகத்தில் இளங்கோ சறுக்கினார் மட்டுமே. ஆனால் திரும்ப வந்து செங்குட்டுவன் சபையில் சைவனாகவே இருந்தார். இனவாதியாக இருந்த செங்குட்டுவன் சமணத்தை தன் அரசபையில் வைத்திருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. எனவே செங்குட்டுவனிடம் இளங்கோ திரும்பிவரும் போது சமணத்தை வெறுத்து, துறவறத்தை வெறுத்து, பள்ளிகளைக் கைவிட்டு அரண்மைக்கு வந்தார் என்பதுதான் உண்மை. அவரின் காவியமும் சைவக் காவியம். (குண்டகேசி சமணமும், மணிமேகலை புத்தமும்.) துறவுச் சமையங்கள் குடும்ப வாழ்கையையோ அல்லது காதல் பற்றி எழுதுவதையோ ஆறவே வெறுத்தால் தமிழ் சங்க பாடல்கள் போன்ற  காதல், வீர கவிதைகளையோ, ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற சமூக கதை காபியங்களுக்கோ சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது. 1000 ஆண்டுகளுக்கு பின்னர் வில்லி புத்தூரர், கம்பர் சமய காப்பியங்கள் இயற்றினார்கள். சமணம் கொடுத்த இயற்கைக்கு மாறான திருப்பம் வெள்ளைக்காரர் வந்து ஆளும் வரை தமிழர்களிடம் ஒட்ட்டிப் போய் இருந்தது.

 

இடைகாலத்தில், திருவள்ளுவர் திருக்குறளை இயற்றும் போது சணப்பள்ளிக் கல்வி கற்றிருந்தார் என்பதில் ஐயம் இல்லை. புத்தத்தை அறிந்திருந்தார். ஒருவேளை யவனர்களிடமிருந்து கிறிஸ்த்தவத்தையும் அறிந்திருந்திருக்கலாம். ஆனால் சைவனாகவே திருக்குறளை வடித்தார். இந்திரனை பற்றிப் பலதடவைபாடும் வள்ளுவர் ஒருதடவை தன்னும் ஒரு தீர்தங்கரைப் பற்றியும் பாடவில்லை.  அதாவது இளங்கோ போலவே இறுதி நாளில் சைவத்திற்கு மீண்டிருந்தார் என்பதுதான் உண்மை.

 

திருநாவுக்கரசர் பற்றிய கதைகள் பல இருக்கு. அவரின் சூலைநோய் பற்றிய கதையின் உண்மைத் தன்மையைப் பற்றி தெரியாது. ஆனால் அவர் சைவத்திற்கு மீண்டார் என்பதும், அதன் பின்னர் சணத்தை எதிர்த்தார் என்பதும், அதை பொறுத்துக்கொள்ள முடியாத  துறவிகள் அவரை சித்திரவதை செய்தார்கள் என்பது ஏற்கப்பட்ட  உண்மைகள்.

 

தமிழ் உலகம் அதன் பின்னர் என்றுமே காணாத மூன்று தலை சிறந்த பண்டிதர்களை மூவரும் மதம் மாற்றம் நிகழ்ந்த கர்ணபரம்பரை கதைகள் பிள்ளைத் திருட்டை பற்றித்தான் சொல்கிறது. ஆனால் மூவரும் சமணத்தின் வெற்றுத்தன்மையை கண்டு சைவைத்திற்கு மீண்டார்கள். திருநாவுக்கரசர் சமணர்களால் திருடப்பட்ட கடைசிச் சிறுவனாக இருக்கலாம்.  

 

திருஞான சம்பந்தர் 16 வயதுவரை மட்டுமே வாழ்ந்த ஒரு பிராமணச்சிறுவன். திருநாவுக்கரசர் சமணத்தை எதிர்த்து வந்ததை பார்த்ததாலாக இருக்கலாம், தான் சமணத்தையும் புத்தத்தையும் சேர்த்து எதிர்க்கும் நடவடிக்கையில் இறங்கியிருந்தான் சிறுவன்.  "ஆனைமாமலை ஆதியாய இடங்களில் பல இன்னல்சேர்" என்று பாடியிருப்பதை பார்த்தால் சம்பந்தர் போகாத இடங்களிலும் சமயக்கலவரங்கள், இந்துக்களுக்கும் மற்றய சமையங்களுக்கும் இடையில் ஏற்பட்டுவிட்டது என்பது புலனாகிறது. பல்லவ அரசனை திருநாவுக்கரசர் சமயம் மாற்றியதில் இருந்து பல்லவ ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் இந்துக்களின் பாதுகாப்பு திருநாவுக்கரசருக்கு இருந்தது போல் ஆபத்தானதாக இருக்கவில்லை. ஆனால் பாண்டி நாட்டில் மங்கையற்கரசி, சைவ அரச குமாரி என்பதால் ஒதுக்கப்பட்டிருந்தாள். வெறும் பிராமணச் சிறுவன் மட்டும்தான் என்றாலும் சிறுவயதில் பாண்டியத்தியங்களை பெற்றிருந்தவன் என்ற முறையில் பாண்டிமாதேவி உதவிக்கு அழைத்தாள். சம்பந்தனின் பலம், அவனைச் சூழ்ந்திருந்த அடியார் கூட்டத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அரண்மனைக்குள் தனியாக நுளைய நேர்ந்த போது பாண்டிமாதேவிக்கு, சூழ்சி மிக்க துறவிகள் திருநாவுக்கரசரை படுத்திய பாடு நினவுக்கு வந்து தன் தவற்றை உணர்ந்து பயந்தாள். சூழ்ச்சிகளை அறிய முடியாத சிறுவனாக இருந்தாலும், திட்டத்துடன் வந்திருந்த்தால் அரசியை, ஆனைமாமலை போன்ற இடமெல்லாவற்றிலும் சமய கலவரங்களில் சைவர் வென்றிருப்பதாக கூறி சமாதனப்படுத்தி, பேச்சுக்களால் அரசனை கவர்ந்து, வாதுக்களுக்கு சமணரை அழைத்துத் தோற்கடித்தான். அரச கட்டளைப்படி சமண நூல்கள், அரண்மணையிலிலும் மற்றும்  பல இடங்களில் இருந்து அழிக்கப்பட்டன. ஆனால் அவற்றுள் கவிதைகள், கதைகள், காப்பியங்கள் இருந்திருக்க முடியாது. நாலடியார் போன்ற பதிணென் கணக்கு நூல்களாகத்தான் இருந்திருக்கலாம். ஆனால் அழிவு வீடுகளுக்கு செல்ல வில்லை. வீடுகள் சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறும் போது தாமாகக் குப்பைகளில் போட்டார்கள். இது இரண்டு நூற்றாண்டுகளாக சமண நூல்கள் கைவிடப்படும் சம்பிரதாயம் நடந்தது.  அரசன் மதம் மாறியதை எதிர்த்த துறவிகள் அரசனால் அரண்மனையை விட்டுத் துரத்தப்பட்டார்கள். பிராமணச்சிறுவனுக்கு அதை செய்யும் அதிகாரம் இருக்கவில்லை. ஆனால் அரசனை நேரே எதிர்த்து ஆபத்தில் மாட்ட்டிய துறவிகள் தொடர்ந்து சூழ்சிகளில் இறங்கி வந்தார்கள். சம்பந்தனை மட்டும் அல்ல அவனின் அடியார் கூட்டத்தையே கோண்டோடு அழித்தால் தான் இனி தாங்கள் தலை எடுக்கலாம் என்று நினைத்தார்கள்.  முதிர்ச்சி உள்ள்ள துறவிகள் தக்க நேரத்துக்கு காவல் இருந்தார்கள். 

 

திருமண சந்தடி போய்கொண்டிருந்த நேரம். உள்ளாளும் கள்ளாளுமாக சமணர்கள் தங்கள் திட்டத்துடன் உலாவியதை சம்பந்தனின் அடிவர்கள் கவனிக்கவில்லை. தாலிகட்டும் நேரம். யாரிடமும் ஒரு சின்னக் கத்தி கூட கையில் இல்லை. தமது பள்ளி ஒன்றில் இரகசியமாக திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த சமணர் கூட்டம் கோவில் கொண்டாட்டம், ஊர்வலம் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கான தீவர்த்திகளுடன் வந்து மணப்பந்தலை தீக்கிரையாக்கினர்.  தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து கொழுந்து வீட்டெரிந்த சுவாலைக்குள் போட்டு பொசுக்கினார்கள்.  சம்பந்தன் என்ற பிராம்ணச்சிறுவனின் திருமணவீட்டுக்கு சென்ற அன்பர்களில்,மணமக்கள் உள்ளடங்கலாக ஒருவர் தன்னும் வீட்டுக்குத்திரும்பவில்லை. 8000 சமணத் துறவிகள் கழுவேற்றபட்டது இதன் பின்னர் நிகழ்ந்தாகதான் இருக்க முடியும். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோவில் ஆரம்பித்து திருநாவுக்கரசர் வரையில் தமிழ் நாட்டில் சமணம் ஆழுமையில் இருந்திருக்கலாம். இதில் திருவள்ளுவருடனாக இருந்த ஏழு எட்டு ஆனாதை சிறுவர்களும் உள்ளடங்குவர். நாகரீகமோகம் என்பது பலதடவைகளில் கொடுமையானது. இளங்கோ மதம் மாறியது சேரன் செங்குட்டுவனிடம் இடுந்த போட்டியால் என்று ஒரு கரண்பரம்பரை கதை உண்டு.  அதை ஏற்கலாம் அல்லது தள்ளிவிடலாம். ஆனால் அரசகுமாரர்களுக்கு அளிக்கபடும் கல்வியின் போது உள்ளுணர்வால் செயல்ப்பட்ட செங்குட்டுவன் தப்பிவிட்டான். ஆனால் அறிவால் செயல் பட்ட இளங்கோ சறுக்கி விழுந்தார் என்பதுதான் ஊக்கிக்க கூடியது.  அன்று பரவிக்கொண்டிருந்த நாகரீகத்தில்  இளங்கோ சறுக்கினார் மட்டுமே. ஆனால் திரும்ப செங்குட்டுவன் சபையில் சைனாகவே இருந்தார். இனவாதியாக இருந்த அவன் சமணத்தை தன் அரசபையில் வைத்திருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. என்வே செங்குட்டுவனிடம் இளங்கோ திரும்பிவரும் போது சணத்தை வெறுத்து, துற்வறத்தை வெறுத்து, பள்ளிகளை கைவிட்டு அரண்மைக்கு வந்தார் என்பதுதான் உண்மை. காவியமும் சைவ காவியம். (குண்டகேசி சமணமும், மணிமேகலை புத்தமும்.) துறவு சமையங்கள் குடும்ப வாழ்கையையோ அல்லது காதல் பற்றி எழுதுவதையோ ஆறவே வெறுத்தால் தமிழ் சங்க பாடல்கள் போன்ற  காதல், வீர கவிதைகளையோ, ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற காபியங்களுக்கோ சாவு மணி அடிபட்டுவிட்டது. 1000 ஆண்டுகளுக்கு பின்னர் வில்லி புத்தூரர், கம்பர் சமய காப்பியங்கள் இயற்றினார்கள். சமணம் கொடுத்த இயற்கைக்கு மாறான திருப்பம் வெள்ளைக்காரர் வந்து ஆளும் வரை தமிழர்களிடம் ஒட்ட்டிப் போய் இருந்தது.

 

இடைகாலத்தில், திருவள்ளுவர் திருக்குறளை இயற்றும் போது சணப்பள்ளிக் கல்வி கற்றிருந்தார் என்பதில் ஐயம் இல்லை. புத்ததை அறிந்திருந்தார். ஒருவேளை யவனர்களிடமிருந்து கிறிஸ்த்தவத்தையும் அறிந்திருந்திருக்கலாம். ஆனால் சைவனாகவே திருக்குறளை வடித்தார்.  இந்திரனை பற்றிப் பலதடவைபாடும் வள்ளுவர் ஒருதடவை தன்னும் ஒரு தீர்தங்கரைப் பற்றிப் பற்றியும்பாடவில்லை.  அதாவது இளங்கோ போலவே இறுதி நாளில் சைவத்திற்கு மீண்டிருந்தார் என்பதுதான் உண்மை.

 

திருநாவுக்கரசர் பற்றிய கதைகள் பல இருக்கு. அவரின் சூலைநோய் பற்றிய கதையின் உண்மைத் தன்மைப் பற்றி தெரியாது. ஆனால் அவர் சைவத்திற்கு மீண்டார் என்பதும், அதன் பின்னர் சணத்தை எதிர்த்தார் என்பதும், அதை பொறுத்துக்கொள்ள முடியாத  துறவிகள் அவரை சித்திரவதை செய்தார்கள் என்பது ஏற்கப்பட்ட  உண்மைகள்.

 

தமிழ் உலகம் அதன் பின்னர் என்றுமே காணாத மூன்று தலை சிறந்த பண்டிதர்களை மூவரும் மதம் மாற்றம் நிகழ்ந்த கர்ணபரம்பரை கதைகள் பிள்ளைத் திருட்டை பற்றித்தான் சொல்கிறது. ஆனால் மூவரும் சமணத்தின் வெற்றுத்தன்மையை கண்டு சைவைத்திற்கு மீண்டார்கள். திருநாவுக்கரசர் சமணர்களால் திருடப்பட்ட கடைசிச் சிறுவனாக இருக்கலாம்.  

 

திருஞான சம்பந்தர் 16 வயதுவரை மட்டுமே வாழ்ந்த ஒரு பிராமணச்சிறுவன். திருநாவுக்கரசர் சமணத்தை எதிர்த்து வந்ததை பார்த்ததாலாக இருக்கலாம், தான் சமணத்தையும் புத்தத்தையும் சேர்த்து எதிர்க்கும் நடவடிக்கையில் இறங்கியிருந்தான் சிறுவன்.  "ஆனைமாமலை ஆதியாய இடங்களில் பல இன்னல்சேர்" என்று பாடியிருப்பதை பார்த்தால் சம்பந்தர் போகாத இடங்களிலும் சமயக்கலவரங்கள், இந்துக்களுக்கும் மற்றய சமையங்களுக்கும் இடையில் ஏற்பட்டுவிட்டது என்பது புலனாகிறது. பல்லவ அரசனை திருநாவுக்கரசர் சமயம் மாற்றியதில் இருந்து பல்லவ ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் இந்துக்களின் பாதுகாப்பு திருநாவுக்கரசருக்கு இருந்தது போல் ஆபத்தானதாக இருக்கவில்லை. ஆனால் பாண்டி நாட்டில் மங்கையற்கரசி, சைவ அரச குமாரி என்பதால் ஒதுக்கப்பட்டிருந்தாள். வெறும் பிராமணச் சிறுவன் மட்டும்தான் என்றாலும் சிறுவயதில் பாண்டியத்தியங்களை பெற்றிருந்தவன் என்ற முறையில் பாண்டிமாதேவி உதவிக்கு அழைத்தாள். சம்பந்தனின் பலம், அவனைச் சூழ்ந்திருந்த அடியார் கூட்டத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அரண்மனைக்குள் தனியாக நுளைய நேர்ந்த போது பாண்டிமாதேவிக்கு, சூழ்சி மிக்க துறவிகள் திருநாவுக்கரசரை படுத்திய பாடு நினவுக்கு வந்து தன் தவற்றை உணர்ந்து பயந்தாள். சூழ்ச்சிகளை அறிய முடியாத சிறுவனாக இருந்தாலும், திட்டத்துடன் வந்திருந்த்தால் அரசியை, ஆனைமாமலை போன்ற இடமெல்லாவற்றிலும் சமய கலவரங்களில் சைவர் வென்றிருப்பதாக கூறி சமாதனப்படுத்தி, பேச்சுக்களால் அரசனை கவர்ந்து, வாதுக்களுக்கு சமணரை அழைத்துத் தோற்கடித்தான். அரச கட்டளைப்படி சமண நூல்கள், அரண்மணையிலிலும் மற்றும்  பல இடங்களில் இருந்து அழிக்கப்பட்டன. ஆனால் அவற்றுள் கவிதைகள், கதைகள், காப்பியங்கள் இருந்திருக்க முடியாது. நாலடியார் போன்ற பதிணென் கணக்கு நூல்களாகத்தான் இருந்திருக்கலாம். ஆனால் அழிவு வீடுகளுக்கு செல்ல வில்லை. வீடுகள் சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறும் போது தாமாகக் குப்பைகளில் போட்டார்கள். இது இரண்டு நூற்றாண்டுகளாக சமண நூல்கள் கைவிடப்படும் சம்பிரதாயம் நடந்தது.  அரசன் மதம் மாறியதை எதிர்த்த துறவிகள் அரசனால் அரண்மனையை விட்டுத் துரத்தப்பட்டார்கள். பிராமணச்சிறுவனுக்கு அதை செய்யும் அதிகாரம் இருக்கவில்லை. ஆனால் அரசனை நேரெ எதிர்த்து ஆபத்தில் மாட்ட்டிய துறவிகள் தொடர்ந்து சூழ்சிகளில் இறங்கி வந்தார்கள். சம்பந்தனை மட்டும் அல்ல அவனின் அடியார் கூட்டத்தையே அழித்தால் தான் இனி தாங்கள் தலை எடுக்கலாம் என்று நினைத்தார்கள்.  முதிர்ச்சி உள்ள்ள துறவிகள் தக்க நேரத்துக்கு காவல் இருந்தார்கள். 

 

திருமண சந்தடி போய்கொண்டிருந்த நேரம். உள்ளாளும் கள்ளாலுமாக சமணர்கள் தங்கள் திட்டத்துடன் உலாவியதை சம்பந்தனின் அடிவர்கள் கவனிக்கவில்லை. தாலிகட்டும் நேரம். யாரிடமும் ஒரு சின்னக் கத்தி கூட கையில் இல்லை. தமது பள்ளி ஒன்றில் இரகசியமாக திட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த சமணர் கூட்டம் கோவில் கொண்டாட்டம், ஊர்வலம் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கான தீவர்த்திகளுடன் வந்து மணபந்தலை தீக்கிரையாக்கினர்.  தப்ப ஓட முயன்றவர்களை பிடித்து கொழுந்து வீட்டெரிந்த சுவாலைக்குள் போட்டு பொசுக்கினார்கள்.  சம்பந்தன் என்ற பிராம்ணச்சிறுவனின் திருமணவீட்டுக்கு சென்ற அன்பர்களில் ஒருவர் தன்னும் வீட்டுக்குத்திரும்பவில்லை. 8000 சமணத் துறவிகள் கழுவேற்றபட்டது இதன் பின்னர் நிகழ்ந்தாகதான் இருக்க முடியும். 

 

தமிழர் பெளத்த மதத்தை பின்பற்றியிருந்தார்களா ?இல்லையா? மல்லை................ இன்று தமிழர்கள் இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம் மதங்களை பின்பற்றுவது போல் அன்று தமிழர்கள் சமணம்,வைணவம்,பெளத்தம்,இன்னும்பல மதங்களை பின்பற்றியிருக்கலாம்.....வீகிதாசாரம் வேறுபட்டிருக்கலாம்........சிங்களவர்கள் சைவத்தை பின்பற்றியிருக்கிறார்கள் என்பதும் உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.