Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவன்தான் தமிழன் =============

Featured Replies

1005794_562216860504931_1374928389_n.jpg
அவன்தான் தமிழன்

=============

இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றபோது ஒரு நடனக் காட்சியை அமைத்து இருந் தார்கள். இந்த நடனக் காட்சி என்பது பாரதியார் சொல்லுவார். ‘எங்களிடமா இசை இல்லை? எங்கள் சுண்ணம் இடிக்கிற பெண்களின் இசைக்கு நிகர் உல கில் எங்கே இருக்கிறது? என்று சொன்னார் பாரதியார். அதுதான் திருப்பொற் சுண்ணம். அங்கே சுண்ணம் இடிக்கிறார்கள். சுண்ணம் இடிக்கிறபோது, உலக் கையை எடுத்து இங்கே நங்கைகள் இடித்துப் பாடினார்கள். பொற்சுண்ணம் என்பது அதுதான். உலக்கையைக் குத்துகிறபோது, சத்தத்தோடு அந்தப் பாடல் வெளி வரும்.

“முத்தணி கொங்கைகள் ஆட ஆட

மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்

சித்தஞ் சிவனெடும் ஆட ஆடச்

செங்கயற் கண்பனி ஆட ஆடப்

பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்

பிறவி பிறரொடும் ஆட ஆட

அத்தன் கருணை யொடு டாட ஆட

ஆடப் பொற் சுண்ணம் இடித்துநாமே”

இந்தப் பாட்டை ஐந்தாவது பாடலாக வைத்துவிட்டு, கடைசியாக என்ன வைக் கிறார்? அவர்தான் இளையராஜா அவன்தான் தமிழன் எவருக்கும் அஞ்சமாட் டோம். எதற்கும் அஞ்சமாட்டோம். கூற்றுவனே வந்தாலும் அஞ்சமாட்டோம். ஏன் மாணிக்கவாசகர் எழுதினார்? நாவுக்கரசருடைய கருத்து அவர் மனதிலே இருக்கிறது. பல்லவ நாட்டுச் சக்கரவர்த்தியின் மண்டபத்தில் யானையின் காலில் இட்டு உன் தலையை இடறச் செய்வோம் என்றபோதும், சுண்ணாம்புக் காளவாயில் போட்டு உயிரைப் போக்குவோம் என்றபோதும், கல்லைக் கட்டிக் கடலில் தூக்கி எறிவோம் என்றபோதும், கொல்வோம் என்று மன்னன் முடி வெடுத்தபோதும்,

‘நாமார்க்கும் குடியல்லோம்

நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம்

நடலையல்லோம்

ஏமாப்போம் பிணி அறியோம்’

இன்பமே எந்நாளும்

துன்பமில்லை.

என்று முழங்கினாரே நாவுக்கரசர் பெருமான் அதே பாடலை இங்கே மாணிக்க வாசகர் அச்சப்பத்துக்குக் கொண்டு வருகிறார்.

இளையராஜாவும் ஏறக்குறைய அப்படித்தான். எவருக்கும் தலைவணங்க மாட் டார். புகழ்ச்சிக்கும் மயங்க மாட்டார். புகழ் பலரை வீழ்த்திவிடும். பலரை வீழ்த்தி இருக்கிறது. புகழால் வீழ்த்த முடியாதவர்கள்தான் உலகில் உயர்ந்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாமனிதன் எங்கள் தமிழன் - எங்கள் தென் னாட்டுத் தமிழன். அதனால்தான் அச்சப்பத்தில் மாணிக்கவாசகர் சொல்கிறார். இதோ அந்தப் பாடல்.

“புற்றில்வாள் அரவும் அஞ்சேன்

பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்

கற்றைவார் சடைஎம் அண்ணல்

கண்ணுதல் பாதம் நண்ணி

மற்றுமோர் தெய்வந் தன்னை

உண்டென நினைந்தெம் பெம்மான்

கற்றிலா தவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே.”

நெருப்பை உமிழ்கின்ற வேங்கைக்கும் அஞ்சமாட்டேன். கட்டுத்தறியை உடைத்து வருகின்ற யானைக்கும் அஞ்சமாட்டேன். வளைவில்லாமல் நேராகப் பாய்ந்து வருகின்ற அம்புக்கும் அஞ்சமாட்டேன், கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் - உயிர் முடிக்கும் எமனுக்கும் அஞ்சமாட்டேன்.

இதுதான் அவர் நிறைவாக வைத்த பாடல் இந்த ஆறு பாடல்களோடு நம்மு டைய தமிழ் இசையைக் கொண்டு மேற்கத்திய இசைக்கருவிகளோடு, டான் யூப் நதிக்கரையில் அங்கேரி நாட்டில் புடாபெஸ்ட் நகரத்தில் இசைக்கலைஞர் களோடு - இசைக்கருவிகளோடு ஒலி வடிவங்களை இணைத்து - உலகின் தொன்மையான இசையை இந்த உலகத்தின் எட்டுத் திசைகளுக்கும் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கிறீர்கள். இதைக் கேட்க, கேட்க அவர்களின் நெஞ்சம் கவரக் கவர எவரும் செய்யாத ஒரு பணியைச் செய்து இருக்கிறீர்கள்.

நான் பாராட்ட விரும்புவது ஒரு தாய் பிள்ளையைப் பாராட்டுவதைப் போல - தமிழகமே தாயாகி விட்டது என்று சொன்னார்களே ஆனால் யார் இவரைப் பாராட்டுகிறார்கள் என்று தெரியுமா?ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ் (STEPHEN SCHWARTZ) ஹாலிவுட் திரைப் படங்களில் ஆஸ்கார் விருதுபெற்ற இசை அமைப்பாளர் அவர் இளையராஜாவைப் பாராட்டி எழுதுகிறார். Last night at Sony Studios in New york City I had the pleasure of hearing the almost finished mix of Ilaiyaraj’s amazing work. நான் நேற்று இரவு நியூயார்க் நகரத்தின் சோனி ஸ்டுடியோவில் அநேகமாக முற்றுப் பெற்று விட்ட, இளையராஜா அவர்களின் அற்புதமான இசை ஆல்பத்தைச் செவி கொடுத்துக் கேட்கின்ற மகிழ்ச்சியைப் பெற்றேன். It is unlike anything I have ever heard before a stunning blend of Indian and western music and instruments. I asked Mr Raja, if this was something different for him too, and he said he had never done anything like this piece before. I don’t know if anyone has. இதுவரை இப்படி உலகில் எவரும் படைத்தது இல்லை என்று ஆஸ்கார் பரிசு பெற்ற ஹாலிவுட்டில் இருக்கின்ற அந்த இசை மேதை சொல்லி இருக்கிறார்.

இப்படிப்பட்ட பாராட்டைப் பெற்ற நீங்கள் திருவாசகத்துக்கு சிம்பொனி ஆரடோரியோ இசை அமைத்து இருக்கிறீர்கள். தமிழ் இசை சாதி, மத எல்லை களைக் கடந்து இருக்கின்றது. கத்தோலிக்கப் பாதிரிமார்களும், திருச்சபை பாதிரிமார்களும், தமிழுக்குத் தொண்டு செய்தார்கள் எனில் இங்கே திருவாச கத்தின் பெருமையைத் தருகிறோம் என்கிறபோது, எல்லை களைக் கடந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகத்துக்கு ஒரு காலத்தில் கொள்கை யைத் தந்தோமே, நம்முடைய நாகரிகத்தை - நம்முடைய இசைக்கலையை உலகுக்குத் தருகின்ற இந்தப் பெருமை இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு களுக்கு நிற்கும். காற்றில் ஒலி அலைகள் இருக்கின்ற வரையில் மாணிக்கா வாசகரின் திருவாசகம் இருக்கும். ஒலி அலைகள் இருக்கின்ற வரையில் இளையராஜாவின் படைப்புகள் இருக்கும்.

இந்த ஒலி நாடாவை முறையாக விலை கொடுத்து வாங்கிக் கேளுங்கள். அதில் இவர் சொல்லுகிறார். ஒரே ஒரு இடத்தில்தான் அவர் பேச்சு வருகிறது. முதல் ஐந்து பாடல்களைப் பதிவு செய்து முடித்தபிறகு, இளையராஜா ராக ஆலாபனை செய்கிறார். அந்த ஆலாபனை செய்கிறபோது, இசைக்கருவி களில் இசை வருகிறது. ‘அடடா இதுதான் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவா? எவ்வளவு அருமையாக இருக்கிறது இதில் மாணிக்கவாசகர் பாடலைப் பாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்கு எந்தப் பாட்டு சரியாக வரும்? முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனா என்று சொல்லிவிட்டு, இது வார்த்தை பிரிக்க பிரிக்க வருகிறதே இதற்கு என்ன டியூன் போடுவது? என்று சொல்லியவாறு

‘புற்றில்வாள் அரவும் அஞ்சேன்

பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்’

என்ற அந்த பாட்டைப் போட்டுவிட்டு, கடைசியாக ‘வாதவூர் அடிகள் வாழ்க வாழ்த்துரைக்கும் அடியார் வாழ்க என முடிக்கிறார்.

இங்கே அற்புதமாகப் பாடிய கல்லூரி நங்கைகள் அதைப் பாடலில் சேர்த்து இருந்தார்கள். வாதவூர் அடிகள் திருவாசகத்தின் மூலமாகத் தமிழ் இருக்கும் வரை வாழ்வார் - எங்கள் இளையராஜா இந்த இசைப் படைப்பால் வாழ்வார் - தமிழகம் அவருக்கு நன்றிக் கடன் பட்டு இருக்கிறது.

இயற்கைத் தாய் உங்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலும் வாழுகின்ற ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் கொடுத்து, இந்தத் தமிழகத்துக்கும், தமிழ் இசைக்கும் நீங்கள் பெரும் சேவை செய்ய வேண்டும் என்று சொல்லி, எளியேனாகிய எனக்கு இந்த அருமையான வாய்ப்பைத் தந்த உங்களுக்கு எந்நாளும் மறவாத நன்றி.

வைகோ இவ்வாறு உரை யாற்றினார்.

திருவாசக உரை முழுவதும் படிக்க .... 

http://mdmkfriends.blogspot.com/search/label/இலக்கியம்

 

அவன் தான்  தமிழன்!

  • கருத்துக்கள உறவுகள்

 

 
அவன்தான் தமிழன்

=============

‘நாமார்க்கும் குடியல்லோம்

நமனை அஞ்சோம்

 

யாழ்களத்தின் முகப்பு வாசகமும் இதுவே...

தமிழன் என்றால்... இப்படித்தான் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

திருவாசகம் இசைத்தொகுப்பில் புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்.. இந்தப் பாடலை எத்தனை தரம் வேண்டுமானாலும் கேட்பேன். பூவேறுகோனும், பூவார் சென்னி மன்னன் போன்ற பாடல்களும் திகட்டாதவை..!

  • கருத்துக்கள உறவுகள்

திருவாசகம் எங்கே கிடைக்கும் ??

  • கருத்துக்கள உறவுகள்

திருவாசகம் எங்கே கிடைக்கும

http://tamiltunes.com/devotional-songs/

 

இந்த இணைப்பில கிடக்குது, ரகுநாதன்!

 

காலமை, வேலைக்குப் போற நேரம், ஐபொட்டில தரவிறக்கிக் கேட்டுப்பாருங்கோ, அந்த மாதிரி மனம் சந்தோசமா இருக்கும்! :icon_idea:

 

அதோட சேர்த்துத் திருவெம்பாவையும் கேட்க, 'நாதம்' பேசும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

http://tamiltunes.com/thiruvasagam-padalgal.html

 

இந்த இணைப்பு நேரடியாகத் திருவாசகத்திற்குப் போகின்றது! 

  • தொடங்கியவர்

http://tamiltunes.com/devotional-songs/

 

இந்த இணைப்பில கிடக்குது, ரகுநாதன்!

 

காலமை, வேலைக்குப் போற நேரம், ஐபொட்டில தரவிறக்கிக் கேட்டுப்பாருங்கோ, அந்த மாதிரி மனம் சந்தோசமா இருக்கும்! :icon_idea:

 

அதோட சேர்த்துத் திருவெம்பாவையும் கேட்க, 'நாதம்' பேசும்! :D

இதோடை இப்பிடியே நீங்க மினைக்கெட்டா உங்க மனைவி உங்களைப் பேசுவாங்க புங்கை அண்ணா  :D

  • கருத்துக்கள உறவுகள்

இதோடை இப்பிடியே நீங்க மினைக்கெட்டா உங்க மனைவி உங்களைப் பேசுவாங்க புங்கை அண்ணா  :D

 

இப்ப

ஏதோ வீட்டுக்குள்ள  வைச்சிருப்பது   போலிருக்கு உங்கள்  எழுத்து..... :lol:  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.