Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் : வரலாற்றில் முதன்முறையாக ஈழத்து கலைஞர்களின் முழுநீளத் திரைப்படங்களின் பெருவிழா !

Featured Replies

பிரான்ஸ் : வரலாற்றில் முதன்முறையாக ஈழத்து கலைஞர்களின் முழுநீளத் திரைப்படங்களின் பெருவிழா யாழ்பாணத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படமொன்றும் பங்கெடுப்பு !! புலம்பெயர் தமிழ்ச் சூழலில் முதன்முறையாக ஈழத்து திரைக்கலைஞர்களின் முயற்ச்சியில் உருவாகிய முழுநீளத் திரைப்படங்களின் பெருவிழாவொன்று பிரென்சு மண்ணில் இடம்பெறுகின்றது.

பரிஸ் தமிழ்த்திரை விழா எனும் முழக்கத்துடன் தலைநகர் பாரிசில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படமொன்றும் பங்கெடுத்துக் கொள்கின்றமை சிறப்பான விடயமாக அமைகின்றது.

புலம்பெயர் தேசங்களில் வளர்ந்து வரும் இளங்கலைஞர்களினால் உருவாக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கும் குறும்படங்கள் பலவுமi; புகலிட சினிமாவுக்கான நம்பிக்கையினை கவனத்தினையும் சமீபத்திய காலங்களில் ஏற்படுத்தி வரும் நிலையில் அதன் அடுத்ததொரு பாய்ச்சலாக வராலாற்றில் முதன்முறையாக நீள்படங்களில் திரைவிழாவாக இது இடம்பெறுகின்றது.

கனடா - சுவிஸ் - அவுஸ்றேலியா - ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட உறவு - இனியவளே காத்திருப்பேன் - சில்லு - இருமுகம் - சகாராப் பூக்கள் - என்னுள் என்ன மாற்றமோ - ஸ்ரார் 67 என்ற ஏழு நீள்படங்கள் இத்திரைவிழாவில் காண்பிக்கப்படவிருக்கின்றன.

எதிர்வரும் ஓகஸ்ற் 23ம் நாள் முதல் மூன்று நாள் நிகழ்வாக இடம்பெறும் இத்திரைவிழா 2 bis Passage Ruelle, paris 18 - Metro : La Chapelleஎனும் முகவரியில் உள்ள திரையரங்கில் இடம்பெறுகின்றது.

மூன்று நாள் நிகழ்விலும் திரையிடலுக்கு பின்னர் புகலிட தமிழ்சினிமா தொடர்பிலான கருத்தாடல்களும் இடம்பெறவிருக்கின்றமை இந்நிகழ்வின் சிறப்பானதொரு விடயமாக அமையவுள்ளது.

நாடுகளைக் கடந்து வாழுகின்ற ஈழத் தமிழினம் பல்வேறு துறைகளிலும் தன்னை அடையாளப்படுத்தி வலுப்படுத்திக் கொள்வதன் ஊடாக பலம்மிக்கதொரு இனமாக உலகப்பரப்பில் மிளிர்தோடு அதுவே எமது இலட்சியத்தினை வென்றடைவதற்கான வலுவானதொரு புறச்சூழலாக அமையும் என்பது உறுதியானதொன்றாக அமைகின்றது.

இந்நிலையில் புலம்பெயர் தமிழ்ச்சூழலில் புகலிட தமிழ்சினிமாவினை வளர்தெடுக்க ஆர்வமுள்ள அனைத்து உறவுகளையும் இந்நிகழ்வில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்புரிமையோடு இப்பெருவிழாவின் ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.

http://www.sankathi24.com/news/32403/64//d,fullart.aspx

 

நாடுகளைக் கடந்து வாழுகின்ற ஈழத் தமிழினம் பல்வேறு துறைகளிலும் தன்னை அடையாளப்படுத்தி வலுப்படுத்திக் கொள்வதன் ஊடாக பலம்மிக்கதொரு இனமாக உலகப்பரப்பில் மிளிர்தோடு அதுவே எமது இலட்சியத்தினை வென்றடைவதற்கான வலுவானதொரு புறச்சூழலாக அமையும் என்பது உறுதியானதொன்றாக அமைகின்றது.

 

இவர்கள் தமிழினப் படுகொலைகளில் இந்திய, சிங்கள அரசுகளின் பங்கை முன்வைத்து படம் எடுத்தால் Madras Cafe போன்ற குப்பைப் படங்களுக்கு பதில் சொல்வதாக அமையும்.

காலத்தின் தேவையை கலைஞர்கள் உணர வேண்டும்!

 

ஆங்கிலத்திலும், தமிழிலும் எடுத்தால் இன்னும் நல்லது.

 

  • தொடங்கியவர்

இவர்கள் தமிழினப் படுகொலைகளில் இந்திய, சிங்கள அரசுகளின் பங்கை முன்வைத்து படம் எடுத்தால் Madras Cafe போன்ற குப்பைப் படங்களுக்கு பதில் சொல்வதாக அமையும்.

காலத்தின் தேவையை கலைஞர்கள் உணர வேண்டும்!

 

ஆங்கிலத்திலும், தமிழிலும் எடுத்தால் இன்னும் நல்லது.

 

நிதர்சனமான உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் உலகப் படத்தில் இடம்பெற நிச்சயமாக நமது கலைப் படைப்புகள் பெருமளவு பங்களிப்புச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. என் அன்பு தோழன் கவிஞர் சேரனுக்கு புகழ்மிக்க பென் விருது கிடைத்த சேதி கேழ்விப்பட்டேன். இது தமிழுக்கு பெருமை சேர்க்கும் சாதனையாகும். கவிஞர் சேரனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

 

(Cheran's magnificent and poignant collection, charting the civil war in Sri Lanka of more than three decades, won an English PEN award this year. It is released today for your Amazon Kindle - including the original poems in the beautiful Tamil script.)

 

இதுபோலவே ஈழத்து குறும்படங்களும் திரைப்படங்களும் சர்வதேச விருதுகளுக்கு பரிந்துரைக்கப் படுவது மகிழ்ச்சி தருகிறது. நாம் ஒரு புதிய காலக் கட்டத்துக்குள் நுழைந்துள்ளோம் என்பதி எந்த சந்தேகமுமில்லை. இந்த மாற்றங்களின் இயந்திரமாக (engine) புலம் பெயர் சமூக சக்திகள் செயல்படுகிறார்கள். அத்தகைய ஒரு மாற்றத்தின் இயந்திரமாகவே பரிஸ் தமிழ்த்திரை நிகழ்வை நான் பார்க்கிறேன்

 

மிக மகிழ்ச்சி

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.