Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுடனான உறவு பாதிக்கப்படும் – சல்மான் குர்ஷித் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SalmanKhurshid.jpg

தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், சிறிலங்காவுடனான உறவு பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித். 

தமிழ்நாட்டு மீனவர்கள், சிறிலங்கா கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவது தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவனயீர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்துக்கு, பதிலளிக்கும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். 

அந்த அறிக்கையில் அவர், “சிறிலங்கா சிறைகளில் தற்போது 106 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். 

இந்தப் பிரச்சினையை சிறிலங்கா அரசு மனிதாபிமான அடிப்படையில் கையாண்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும். 

இந்திய மீனவர்களின் பிரச்சினை உணர்ச்சிபூர்வமானது.  இந்திய அரசியல், சமூகத்துடன் தொடர்புள்ளது என்பதால், மக்கள் இதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். 

எனவே, இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாது போனால், சிறிலங்காவுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படும். 

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றுக்கு இந்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 

மீனவர்களுக்கு எதிராக பலப்பிரயோகம் செய்வதை எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதை இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. 

சிறிலங்கா சிறைகளில் உள்ள 106 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய, மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீதிமன்றம் மூலமும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

ஆனால், வடக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக இவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

பிறநாட்டு மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சிறிலங்கா அரசு நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதே இதற்கு காரணம் என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இந்திய சிறைகளில் சிறிலங்கா மீனவர்கள் ஒருவர் கூட கிடையாது. இதை எமது பலவீனமாக கருதக்கூடாது. 

இந்தியாவின் நேர்மையான நடவடிக்கையாகவும், ஒவ்வொருவரையும் இதுபோல்தான் அரசுகள் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் எடுத்து கொள்ள வேண்டும். 

தனி நபர்களை வைத்து பேரம் பேசக் கூடாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130823108920

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவின் நேர்மையான நடவடிக்கையாகவும், ஒவ்வொருவரையும் இதுபோல்தான் அரசுகள் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் எடுத்து கொள்ள வேண்டும்.
தனி நபர்களை வைத்து பேரம் பேசக் கூடாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜை யின் நல்ல கூற்று
  • கருத்துக்கள உறவுகள்

மீன்பிடிக்கும் சீன நிறுவனங்கள்தான் மறைமுகமான காரணம் என்கிறார்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ அய்யய்யோ இவனுக இம்சை தாங்க முடிய சிறிலங்கா இல்லாமல் வாழ முடியல .......  :icon_idea:

மீன்பிடிக்கும் சீன நிறுவனங்கள்தான் மறைமுகமான காரணம் என்கிறார்..!

"பிறநாட்டு மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சிறிலங்கா அரசு நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதே இதற்கு காரணம் என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது."

 

சல்மான் குர் திஷ் இதை விளக்க கடமைப்பட்டுள்ளார்.

 

என்ன சொல்கிறார் என்பது புரிய வில்லை. தேவானந்தா ஈழத்து மீன்வர்கள் சார்ப்பில் இப்படி நடந்து கொள்கிறார் என்றால் அவர் மன்மோகன் சிங்கை எப்படி சந்தித்தார்? தமிழ் நாட்டு அசியல்வாதிகள் அவரை சந்திக்க விட்டு விட்டு ஏன் உண்ணாவிரதம் இருந்தார்கள். சல்மான் குர்திஸ் அமெரிக்கா போன்று இவருக்கு இனித்தன்னும் வீசா மறுப்பாரா?

குர்ஷித்துக்கு வரவேண்டிய வெட்டு வரவில்லையோ?


ஏன் சும்மா அறிக்கைகளை மட்டும் விடுகிறார்?


தமிழக மீனவர்களில் உண்மையான அக்கறை இருந்தால் ஏன் சும்மா அறிக்கைகளை மட்டும் விடுகிறார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.