Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பாரிய பொறுப்பை மக்கள் ஒப்படைத்துள்ளார்கள்' - விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
c.v.vikneshwaran-seithy-20130903.jpg

வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரான சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, 'இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும், அதேவேளை மக்கள் தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்' என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் அவர்கள், மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள் என்றும், அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள் என்றும், அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம் என்றும் கூறினார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அதிகாலையிலிருந்து மக்கள் வெடி கொழுத்தி தேர்தல் வெற்றியை கொண்டாடுவதை அவதானிக்க முடிகின்றது. ஆனாலும் வெடி கொழுத்தி தேர்தல் வெற்றியை கொண்டாடிய யாழ். பல்கலைக்கழக விடுதிக்குள் இராணுவம் அத்து மீறி புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் பதிவாகியுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=93439&category=TamilNews&language=tamil

வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரான சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.130811180140_vigneswaran_srilanka_304x17

மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, எமது நிருபரிடம் பேசிய அவர், இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும், அதேவேளை மக்கள் தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.

சம்பந்தர் பெருமிதம்

இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன் அவர்கள், மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள் என்றும், அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள் என்றும், அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம் என்றும் கூறினார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள எமது செய்தியாளர், அங்கு தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் நிலைமை ஓரளவு அமைதியாக இருப்பதாகவும், காலையில் எந்தவிதமான ஆரவார தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களையும் காணமுடியவில்லை என்றும் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/09/130921_vigneswaranonresult.shtml

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வெற்றியில் திளைப்பதை விடச் சிங்கள அரசு எதிர்காலத்தில் எவ்வகையான நடவடிக்கைகளை எமக்கெதிராகச் செயற்படுத்தும் என்பதை அவதானிப்பதே நன்று.

எதிர்காலத்தில் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அதிகரிக்கலாம். இது கட்டாயம் மட்டுப்படுத்த வேண்டும். ஆனால் பலர் புலம்பெயர்ந்து விட்டதால், அந்த இடத்தை நிரப்புவது என்பது பிரச்சனை. தமிழர் குழந்தைகள் பெறுவதை அதிகரிக்க வேண்டும். புலம்பெயர்ந்தவர் அம்மக்களுக்கான பொருளாதார வசதிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

இல்லாவிடின், புலத்தில் நிரந்தரமாகக் குடியேறி காணிகளைப் பொறுப்பெடுக்க விரும்பாதவர்கள், அக்காணிகளில் மலையத் தமிழரைக் குடியேற்றலாம். ஏனெனில் அவர்கள் அங்கு பெருங்கொடுமைக்கு ஆளாகப்படுவதோடு, சிங்களவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களையும் காக்க வேண்டியது அவசியமானது.

------ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இந்தத் தேர்தல் வெற்றியில் சிறிலங்கா அரசுக்கும் ஓரளவு வெற்றியைக் கொடுத்துள்ளது. 37 ஆயிரம் பேர் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது சின்ன விடயம் அல்ல.தவிர, வடக்கில் சனநாயகத்தை நிலைநாட்டி விட்டதாக அது வெளியுலகிற்குப் பறைசாற்றக்கூடும். ஆனால் எதிர்காலத்தில் பலவழிகளில் அழுத்தங்கள் கொடுக்கக்கூடும்.செயற்படவிடாமல் செய்ய முயலக்கூடும்.

வடமாகாண சபையின் அதிகராக இணையத்தளம் போன்ற ஒரு ஊடகச் செய்திகளை ஆங்கிலத்தில் தொடங்கப்பட்டு, செய்திகளாக வெளியிட வேண்டும். என்னென்ன பிரச்சனைகளைச் சிங்கள அரசு கொடுக்கின்றன என்பதோடு, பொதுவான செய்திகள் உள்ளடங்கலாக அனைத்து சிங்கள அரசு கொடுக்கும் பிரச்சனைகள் முன்நிறுத்தப்பட வேண்டும்....

அருமை...

தூயவன் வடமாகாணசபையின் அதிகாரபூர்வ இணையத்தளம் ஏற்கனவே உள்ளது.

http://www.np.gov.lk/tamil/

Edited by யாழ்வாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1239805_324757231002785_2033997274_n.jpg

இப்படியான செய்திகள்
இனி எங்கே எம் 
காதுகளை எட்டப் போகின்றன
என்றிருந்தோம்!

எட்டிவிட்டது...!

என்ன சொல்வது?
ஆனந்தம் தாழ முடியவில்லை! 
பொங்கும் மகிழ்ச்சிக்கு 
அளவே இல்லை...!

நீண்ட நாட்களின் 
பின்னர் பாரம் குறைவதாய்
உணர்கிறோம்! 
நெஞ்சின் கனம் எல்லாம்
கரைந்து போனதாய் 
ஒரு உணர்வு...!

நெடுநாள் தகித்த 
எரிமலை ஒன்று 
எகிறிப் பிளந்து 
வெடித்தது போல, 
எல்லாமும் கைகளில்
வந்தது போல 
ஒரு எல்லை இல்லாத 
ஆனந்த உணர்வு...!

என்றாலும் 
இந்த மகிழ்ச்சியிலும் 
கண்ணீரே வெள்ளம் போல
வருகிறது..! ஏதோ ஒன்று
எங்கோ தொலைந்ததாய் 
ஒரு வலி..!

ஒருமுறை எல்லா 
உறவுகளும் ஒன்று கூடி 
ஓ என்று ஒப்பாரி வைத்து 
களைப்பாகும் வரை 
கதறி அழ வேண்டும் போல் 
உள்ளது. 

ஏன் அழுகிறோம்?
எதற்காக அழுகிறோம்?
யாரை நினைத்து அழுகிறோம்?
என அனைத்தையும் 
மறைத்து வைத்துவிட்டு
பெரும் வெடிப்பாய் 
அழ வேண்டும்! 

அழுதால் தான்
கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்! 
இந்த வெற்றின் ருசியை
ருசிக்க முன்னர் 
ஒரு முறை அழவேண்டும்!

முதுகிலே தட்டி
“என்னாச்சு?” என்று 
வெள்ளைக்காரன் கேட்பான்! 
அவனுக்கு எதுவுமே
சொல்லக் கூடாது..!
அவன் கிடக்கிறான்
மாங்கா மடையன்..!
அவனுக்கு என்ன 
தெரியும் எங்களைப் பற்றி??

வெள்ளைப் பொங்கல் செய்து 
வெற்றியைக் கொண்டாடுவோம்! 
அதற்கு முன்னர்
விம்மிப் புடைத்து 
அழுவோம் ஒருமுறை...!

எங்கள் கண்ணீர் 
யார் யாருக்கோ 
எல்லாம் கட்டாயம் 
நன்றி சொல்லும்..!

நன்றியை எதிர்பார்ப்பதில்லை
“அவர்கள்”!

என்றாலும்......., 

பெரிதாய், சத்தமாய் 
அழுவோம் ஒருமுறை..!

புரிந்து கொள்வார்கள்
அவர்கள்.......!!!!!

இந்த வெற்றி 
ஓட்டு போட்டு 
வந்தது அல்ல..!

உயிர் போட்டு வந்தது..!!!

தெருவுக்கு கார்ப்பெட்
போட்டவனை விடவும், 
தெருக்கோடி வரை
கரண்ட் போஸ்ட் 
நட்டவனை விடவும்

”உயிர்” கொடுத்து
உழைத்தவனை மட்டுமே
தமிழன் மதிப்பான்...!

உட்கார்ந்து யோசித்தால்
உண்மைகள் புரியும்..!!

Facebook - Rajeevan

தமிழ்தேசிய கூட்டமைப்பின் இன்றைய வெற்றியை நாம் வெடி கொளுத்தி கொண்டாடவில்லை. எமக்கு தெரியும் இதனால் தமிழர்களுக்கு இனவாத சிங்களவன் எதுவும் செய்யப் போவதும் இல்லை என்று .கூட்டமைப்புக்கு வீழ்ந்த ஒவ்வொரு வாக்கும் எம் மக்கள் சுயநலம் இன்றி தலைவர் பிரபாகரன் பெயர் சொல்லியும் விடுதலைக்காக மாண்ட மறவர்களின் கனவு நிறை வேற வேண்டும் என்று சொல்லியுமே போட்டனர் .எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் இதை மறந்து சிங்களத்துக்கு விலை போய் தன்னிச்சையாக செயற்பட்டால் மீண்டும் ஒருமுறை வெல்லலாம் என்று கனவிலும் நினைக்காதீர்கள். இது பலருக்கு நடந்த வரலாற்று பாடம் நினைவிருக்கட்டும் .

Edited by தமிழரசன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெற்றி 
ஓட்டு போட்டு 
வந்தது அல்ல..!

உயிர் போட்டு வந்தது..!!!

தெருவுக்கு கார்ப்பெட்
போட்டவனை விடவும், 
தெருக்கோடி வரை
கரண்ட் போஸ்ட் 
நட்டவனை விடவும்

”உயிர்” கொடுத்து
உழைத்தவனை மட்டுமே
தமிழன் மதிப்பான்...!

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் வடமாகாணசபையின் அதிகாரபூர்வ இணையத்தளம் ஏற்கனவே உள்ளது.

http://www.np.gov.lk/tamil/

அர்த்தம் புரியவில்லை என நினைக்கின்றேன். இது அரசின் புகழ்பாடும் இணையத்தளம்ஆளுனரின் இணையம். ஆனால் இப்போது எங்களுக்குத் தேவை அதுவல்ல. அரசு கொடுக்கும் அழுத்தங்கள், ம்றறும் பிரச்சனைகளை மாகாணசபையில் இருந்து உத்தியோகபூர்வமாகக் கொண்டு வரும் தளம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.