Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரங்கள் மக்களுக்குரிய இறைமையின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்! - சம்பந்தன் வலியுறுத்து!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரங்கள் மக்களுக்குரிய இறைமையின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்! - சம்பந்தன் வலியுறுத்து!!

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு மிகவும் தெளிவாக வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய இலங்கைக்குள் பாதுகாப்பாகவும், சுயமரியாதை மற்றும் கௌரவத்துடன் போதிய சுயாட்சியினை தமிழர்கள் பெறுவதுடன், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாஷைகளை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், தமிழ் மக்களுக்கு பல்வேறுபட்ட துன்புறுத்தல்கள் இழைக்கப்பட்ட போதும் மிகவும் தெளிவாகவும் துணிவுடனும் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எனவே மக்களுடைய இந்த ஜனநாயகத் தீர்ப்பிற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்திய சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் கூட்டமைப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

 

யாழ்.நகர விடுதி ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

 

'வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் போட்டியிட்டு, நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னெப்போதும் ஒருவரும் அடையாத அளவுக்கு அமோக வெற்றியீட்டியுள்ளது. வடமாகாணத்தில் ஏறத்தாழ 80 சதவீதமான ஆசனங்களையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏறத்தாழ 90 சதவீதமான ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

 

மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு மிகவும் தெளிவானதாக உள்ளது. ஐக்கியமான, பிளவுபடாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும், சுயமரியாதையோடும், கௌரவமாகவும், போதிய சுய ஆட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, அபிலாசைகளை அடைய தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.

 

தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவின் மூலம் பெறப்பட்டுள்ள வடமாகாணசபையின் ஆட்சியை நடத்துவதற்கு, எமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று நிர்வாக மற்றும் நீதி அதிகாரங்கள் அனைத்தும் மக்களுக்குரிய இறைமையின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

 

வடக்கில் தற்போது சிறிலங்கா படைத்தரப்பின் தலையீடுகள் காணப்படுகின்றன. சிறிலங்கா படை தமக்குரிய பணிகளுக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. இது தொடர்ந்து இடம்பெற நாங்கள் அனுமதிக்கமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த தீர்ப்பை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வடமாகாணசபையைப் பொறுப்பேற்கும் போது, அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பாக, முதலமைச்சர் ஊடகங்களுக்கு அறிவிப்பார்.

 

13வது திருத்தச் சட்டமூலம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இத்திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டும், நீடித்து நிலைத்திருக்கக் கூடிய, தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செயற்படும் அதேவேளையில், இதற்கு சிறிலங்கா அரசாங்கமும் அதனது பங்களிப்பை முழுமையாகச் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தத் தேர்தலின் பெறுபேறுகள் அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றன. இந்தத் தேர்தலில் தாம் சந்திக்க நேர்ந்த பலவிதமான துன்புறுத்தல்களின் மத்தியிலும் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் தெளிவாகவும், துணிவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென நாம் வற்புறுத்திக் கேட்கிறோம். எமது மக்கள் முழுமையாக எம்மை ஆதரித்ததற்காக எங்கள் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், அவர்கள் தமது அபிலாசைகளை அடைவதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்' என சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=e6f261c3-1e43-49ce-86eb-6bb580527988

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது நான் சிங்கக்கொடியை மீண்டும் தூக்கிப் பிடிப்பேன் என்கிறார்.அதென்ன பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்பதை ஒவ்வொரு சந்தர்பத்திலும் நினiவூட்டுகிறார்.தமிழ்மக்கள் ஆதரவளித்தது 13வது திருத்தச் சட்ட மூலத்திற்கு அல்ல.துரோகிகள் பதவிக்கு வருவதைத் தடுப்பதற்காகவும் தமிழ்த்தேசியத்துக்குமே என்பதை சம்பந்தருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 
 அர்த்தமுள்ள அதிகார பகிர்வுக்கு ஆதரவு – த.தே.கூ printb.png

அர்த்தமுள்ள அதிகார பகிர்வுக்கு அரசாங்கம் இணக்கப்பாட்டிற்கு வருமாயின், தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண அமைக்கப்பட்டுள்ள நாடாளுடன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு கூட்டமைப்பு இணக்கம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கதிற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, 13 வது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கல் ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மத்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய சட்டரீதியாக செயற்படும் பொறுப்பு ஏனைய மாகாண சபைகளைப் போன்றே வடமாகாணத்திற்கும் உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அதிகார கொண்ட கட்சியாக கருதியே மக்கள் வாக்களித்துள்ளனர். வடமாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அமையவே சட்ட ரீதியாக செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அடிப்படை சட்ட விதிகளை அறிந்து, ஏனைய மாகாண சபைகளை போல் செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வந்தால், அந்த கட்சியால் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற முடியும்.

http://www.hirunews.lk/tamil/67787

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.