Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபயவுக்கே இலங்கையின் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!

Featured Replies

Suprise_CI.jpg

 

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நகரத்தின் முக்கிய பகுதியாக  கொம்பெனித் தெரு அமைந்துள்ளது. அங்கே அரை நூற்றாண்டுக்கு மேல் வாழ்ந்த மக்களை அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தரவிட்டது. அவ்வாறாயின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ள நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு  ஈடான நியாயமான நஷ்டஈடு வழங்கும் புதிய திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நாட்டின் பாதுகாப்புச் செயலரும், ஜனாதிபதியின் சகோதரரும், உச்ச அதிகாரம் படைத்தவருமான கோத்தாபய ராஜபக்சவின் பொறுப்பிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு  இலங்கையின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கொம்பெனித் தெரு பகுதியிலுள்ள ஏழு ஏக்கர் நிலத்தை இந்தியாவின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஆட்சேபனை  தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் 600ற்கும் அதிகமான குடும்பங்கள் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்தபோது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

வெளியேற்றப்படும் குடும்பம் ஒன்றுக்கு 45 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் முன்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. எனினும் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு புதிய தொகையாக 15 லட்சத்தை வழங்க  நகர அபிவிருத்தி அதிகாரசபை  தீர்மானித்துள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்த நஷ்ட ஈடு நியாயமானது அல்ல எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும்  நீதிமன்றத்திடம் தாம் கோரியிருந்ததாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

புதிய நஷ்ட ஈட்டுத் திட்டம் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள் பற்றி எதிர்வரும் 30ம் திகதி அரசாங்கம் நீதிமன்றத்திடம் விபரம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96897/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் சகோதரரும், உச்ச அதிகாரம் படைத்தவருமான கோத்தாபய ராஜபக்சவின் பொறுப்பிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு  இலங்கையின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கொம்பெனித் தெரு பகுதியிலுள்ள ஏழு ஏக்கர் நிலத்தை இந்தியாவின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஆட்சேபனை  தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் 600ற்கும் அதிகமான குடும்பங்கள் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்தபோது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

 

தனது இனத்திற்கு எதிராக  நின்றால் கோத்தா என்னா?அவுக ஆத்தா (பெற்றதாய்) என்னா? என்று செயல்பட்ட அந்த  நீதிபதிக்கு முதற்கண் வாழ்த்துக்கள்

டிஸ்கி

நாளை அந்த நீதிபதி வேறு இடத்திற்கு மாற்றபட்டார் அல்லது நீக்கபட்டார்  என்ற தகவலை கள உறவுகள் தெரியபடுத்துக....

கோத்தபாயாவின் அல்லது ராஜபக்சாவின் அனுமதி இல்லாமல் நீதிமன்றம் இவ்வாறான உத்தரவினைப் பிறப்பித்திருக்க முடியாது. தாங்கள் ஜனநாயகவாதிகள் என்பதைக் காட்டுவதற்காக இவ்வாறான சில்லறை விளையாட்டுகளைக் கோத்தபாயாவே அரங்கேற்றி இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிங்களவர்களாக இருக்க வேண்டும். நட்ஈடு வழங்கப்படுமானால் அரசாங்கம்தான் வழங்கப் போகிறது.

கோத்தபாயாவின் அல்லது ராஜபக்சாவின் அனுமதி இல்லாமல் நீதிமன்றம் இவ்வாறான உத்தரவினைப் பிறப்பித்திருக்க முடியாது. தாங்கள் ஜனநாயகவாதிகள் என்பதைக் காட்டுவதற்காக இவ்வாறான சில்லறை விளையாட்டுகளைக் கோத்தபாயாவே அரங்கேற்றி இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிங்களவர்களாக இருக்க வேண்டும். நட்ஈடு வழங்கப்படுமானால் அரசாங்கம்தான் வழங்கப் போகிறது.

 

கொம்பனி தெருவில் நீண்டகாலமாக வாழ்ந்தவர்கள் இஸ்லாமியர்களும், இந்திய வம்சாவளி தமிழர்களும் தான் அதிகம்...   

 

கூட்டுப்படை தலைமையகமும் இராணுவ தலைமை வைத்திய சாலையும் அருகில் இருப்பதால் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாகவே மக்கள் வெளியேற்ற முனைந்தார்கள்... 

 

இந்த வெற்றி என்பது மனோகணேசன் ஐயாவின் நடவடிக்கையால்,   சர்வதேச தூதர்களை சந்தித்து அவர்கள் மூலம் கொடுத்த அழுத்தம் காரணமாக உருவாக்கப்பட்டது...   

 

சர்வதேச அழுத்ததுக்கு பணியாமல் தனது நீதிமண்றத்துக்கு நீங்கள் சொன்னது போல பணிந்து  இருக்கிறார்கள்... 

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.