Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை விட சி.வி. விக்னேஸ்வரன் மிகவும் பயங்கரமான ஆபத்தான நபர் - ஹெல உறுமய :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை விட சி.வி. விக்னேஸ்வரன் மிகவும் பயங்கரமான ஆபத்தான நபர் - ஹெல உறுமய :

27 செப்டம்பர் 2013


வேலுப்பிள்ளை பிரபாகரனை விட சி.வி. விக்னேஸ்வரன் மிகவும் பயங்கரமான ஆபத்தான நபர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிரபாகரனின் போர் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி எனினும் விக்னேஸ்வரனின் ராஜதந்திர முன்னணி கண்ணுக்கு புலப்படாத, மோதலில் ஈடுபடாத முன்னணி. கண்ணுக்கு தெரிவதும், மோதலில் ஈடுபடுவதும் இலகுவானது. எனினும் கண்ணுக்கு தெரியாத முன்னணியுடன் அதற்கு எதிராக செயற்படுவது இலகுவான காரியமல்ல. எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்றவகையில் இலங்கையின் அரசியலையும் அரசாங்கத்தையும் ஆட்டுவிக்க ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது.

நாஷிசவாத அடிப்படைவாத குழுவிற்கு தேர்தலில் வெற்றி கிடைத்திருக்குமானால் அவர்கள் 77 ஆம் ஆண்டு மேற்கொண்ட பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க நினைத்தால் அதனை தோற்கடிக்க எமது கட்சி நடவடிக்கை எடுக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதுள்ள அச்சம் காரணமாக எமது கட்சி இந்த நடவடிக்கையை எடுக்க நினைக்கவில்லை. எதிர்கால சந்ததியை நினைத்து தமிழ் சமூகமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அஞ்ச வேண்டும்.

பயங்கரவாத அரசியல் முன்னணி ஒன்றுக்கு உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறு அரசியல் ரீதியான முன்னோக்கி செல்ல இடமளிக்கப்படவில்லை. யுத்தப் போராட்டத்தை விட ராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் மிகவும் பயங்கரமானது என சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97017/language/ta-IN/article.aspx

                                    இன்றைய நகைச்சுவை நாடகத்தில்

 

காட்சி 1: தேர்தலுக்கு முன் விமல், சம்பிக்க, அமரதாசா, புத்த பல சேனா, ராவண பலய.... . 

 

                                    இடை வேளை 

 

காட்சி 2: தேர்தலுக்கு பின் விமல், சம்பிக்க, அமரதாசா, புத்த பல சேனா, ராவண பலய.........  


நேற்றய நாடகம் போர். அதில் பொன்சேக்கா காதாநாயகனாக நடித்திருந்தார். இன்றைய நாடகம் அமைதி இதில் அவர் வில்லன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.