Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மக்கள் சுய விருப்பின் அடிப்படையில் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லை – சம்பிக்க ரணவக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்கள் சுய விருப்பின் அடிப்படையில் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லை – சம்பிக்க ரணவக்க
27 செப்டம்பர் 2013

வடக்கு மக்கள் சுய விருப்பின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் மக்களின் மெய்யான விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு மக்கள் வாக்களித்துள்னர் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்கள் வடக்கு மக்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு, கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ரொரன்டோ அல்லது பாரிசிலிருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புக்களின் அடிப்படையிலேயே வடக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை ஜனநாயக ரீதியான தெரிவாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் காலத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை சிங்கள மக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் இன வன்முறைகளை தூண்ட இந்தியா முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியினால் நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்தான நிலைமைக்கு அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் ரணவக்க தெரிவிததுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97012/language/ta-IN/article.aspx

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியினால் நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்தான நிலைமைக்கு அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் ரணவக்க தெரிவிததுள்ளார்.

 

இது முறையான கேள்வி. தேர்தலுக்கு முதலிலேயே பதவியை இழக்கத் தொடங்கிய அமைச்சர் என்ற முறையில் அதிகார கஞ்சா வெறி நேரத்திற்கே முறிந்திருந்தது.

 

யாராவது "ஏன் ஆபத்து என்பான்?, கூட்டமைப்பு வென்றால் ஆபத்து எப்படி வருகிறது?" என்று கேட்கலாம். அரசுடன் இருந்த அமைச்சர் என்றபடியால், நம்மை விட சம்பிக்கவுக்கு வெளிநாடுகளின் நிலைப்பாடு நன்றாக விளங்கியிருக்கலாம். புவனேகபாகு அரச பொறுப்பை போத்துக்கீசரிடம் கையளித்துவிட்டு தான் அவர்களிடம் சமபளம் வாங்கியது போல மகிந்த இலங்கையை கை அளிக்க வேண்டிய நேரம் வந்துகொண்டிருக்கிறது.

 

சம்பிக்கவுக்கு சில ஆலோசனைகள்:

 

1). நாட்டை சீனாவிடம் கையளித்துவிட்டு அவர்களிடம் 50% கமிசன் வாங்கலாம்.

 

2).சிவசங்கர் மேன்னனை கூப்பிட்டு சோனியா, மன்மோகன்சிங், சிதம்பரம், அந்தோனி, முகர்ஜி, கருணாநிதி, கிருஸ்ணா..... என்று ஒரு பலர் சேர்ந்த குழுவிடம் "கற் கலெக்கன் போட்டு" தலைக்கு தலா 5% என்று அறவிடலாம்.

 

3). இல்லையேல் பிளேக்கை கூப்பிட்டு அமெரிக்காவிடம், 5%, ஐரோப்பிய நாடுகளிடம் தலா 5% வீதம்,  வாங்கித்தந்தால் போதும் என்று அவரின் கையில் பொறுப்பை கையளிக்கலாம்.  

 

எதையும் செய்யாது இருந்தால் நவிப்பிள்ளை மகிந்தாவின் வில்லனாகி மாறி எல்லா கமிசன்களுக்கும் ஆப்புவைத்துவிடப் போகிறார்.  மகிந்தாவின் மிக அருமையான தோழனாகிய பங்கி மூனுக்கு,, மகிந்தாவிற்குமிடையிலேயே ஆப்பு இறுகப்பட்டுவிட்டதா என்ற சந்தேசகம் இப்போது எழுகிறது. சம்பிக்க தேர்தலை முடிவை கண்டு குழம்புவது 107 மந்திரி அப்புக்கள, ஆச்சிகள் இதுவரையும் கூடிக்குடித்து வந்த கூழுக்கு கூட்டமைப்பு கல்லுக்குத்துகிறார்கள் என்பதை உணர்ந்தே 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.