Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு படுகொலை - தமிழக சட்டமன்றம் கண்டனம்

Featured Replies

நாகரிகமற்ற- காட்டுமிராண்டித்தனமான - மனிதாபிமானம் - சிறிதுமற்ற - கொடுமை நிறைந்தது இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு படுகொலை என்று தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வான்படை நடத்திய கொடூர வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஆவுடையப்பன் கண்டனத் தீர்மானத்தை வாசித்தார்.

தீர்மான விவரம்:

14.8.2006 அன்று இலங்கையில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனாதைக் குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியதன் காரணமாக 61 மாணவிகள் உயிரிழந்தது குறித்தும் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தது குறித்தும் இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணா துயரமும் கொள்கிறது.

மனிதநேயத்தில் தோய்ந்துள்ள எவராயினும் அவர்களால் மன்னிக்க முடியாத இந்த நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இந்த நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான மனிதாபிமானம் சிறிதும் அற்ற கொடுமை நிறைந்த இலங்கை இராணுவத்தின் இச்செயலை இப்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

நிலையான வாழ்க்கை முறைகளுக்கும் நிலைத்த பாதுகாப்புக்கும் போராடி வரும் இலங்கை வாழ் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வரும் இந்தப் போர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இலங்கை அரசை இந்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமரிடம் வற்புறுத்தி இருக்கிறார்.

இலங்கை இராணுவத்தின் இக்கொடிய கொலைவெறியாட்டத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த இந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.

அதன் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்றி தங்களது அகவணக்கத்தைச் செலுத்தினர்.

நன்றி>புதினம்.

ஆறு கோடி தமிழர் தலைமையகம் ஒண்றரைகோடி சிங்களவனின் பிரதிநிதிகளை கண்டித்து இருக்கிறார்கள்.... நண்றி....!

இந்திய மத்திய அரச மட்டத்தில் கண்டனம் எழவேண்டும் அபோதுதான் உலகின் அழுத்தம் இலங்கை மீது வந்து படுகொலைகளை மட்டுப்படுத்தப்படும்...

இதற்கான அழுத்ததை மத்திய அரசுக்கு தமிழக அரசினால்த்தான் வளங்க முடியும்.... அதுக்காய் அரசாங்க ஆழும் கட்ச்சிக்குள் இருந்து கட்ச்சி உறுப்பினர்கள் தலைம்க்கு வேண்டுகோள் விடுக்கும் பட்ச்சத்தில் தலைமை துணிவாய் காரியத்தில் இறங்கும்....

லக்கி நீங்களும் எங்களுக்காக உங்கள் தலைமையிடம் வலியுறுத்தி ஒரு வேண்டுகோள் விடுப்பீர்களா...???

லக்கி நீங்களும் எங்களுக்காக உங்கள் தலைமையிடம் வலியுறுத்தி ஒரு வேண்டுகோள் விடுப்பீர்களா...???

இது என்ன புதுக்கதை ???

இது என்ன புதுக்கதை ???

அவர் திமுக முக்கிய உறுப்பினர்... (பொதுக்குழு உறுப்பினர்) ...! அதான் வேண்டுகோள் விடுத்தேன்...!

  • தொடங்கியவர்

அவர் திமுக முக்கிய உறுப்பினர்... (பொதுக்குழு உறுப்பினர்) ...! அதான் வேண்டுகோள் விடுத்தேன்...!

யார் சொன்னது தல? ரொம்ப நாளாக இதுபோல சொல்லி வருகிறீர்கள்....?

நான் திமுக தொண்டன் அவ்வளவு தான்.... :lol:

யார் சொன்னது தல? ரொம்ப நாளாக இதுபோல சொல்லி வருகிறீர்கள்....?

நான் திமுக தொண்டன் அவ்வளவு தான்.... :lol:

உங்களை நன்கு அறிந்த உணர்வுகள் ஆனந் எழுதியதாக ஞாபகம்... அவ்வளவுதான்....!

அதோடு பொறுப்பாளராய் இல்லாமல் தொண்டனாய் இருப்பவர் செய்வதுதான் மக்களின் உணர்வார் மதிக்கப்படும்...! :wink:

  • தொடங்கியவர்

உண்மையே... அதிர்ஷ்டவசமாக எங்கள் தலைமை தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் பிரச்சனை: சட்டப்பேரவையில் ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கு அனுமதி கோரி ஜெயலலிதாவின் அ.தி.மு.க. கடிதம்

[வியாழக்கிழமை, 17 ஓகஸ்ட் 2006, 17:32 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து விவாதிக்க ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க. ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கு அனுமதி கோரியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஈழத் தமிழர் துயரம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம்:

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்:

சிங்கள இராணுவம் கண்மூடித்தனமாக குண்டுமழை பொழிந்து 61 மாணவிகளை படுகொலை செய்துள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தை விட்டு ஒரு லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என்ற துயர செய்திகள் தமிழ்மக்களின் இதயங்களை ஆறாத இரணமாக ஆக்கியுள்ளது.

எனவே இது குறித்து அவையை ஒத்திவைத்து முழுமையாக விவாதிக்க வேண்டுமென்று கடிதம் கொடுத்துள்ளோம். அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்க வேண்டும்.

சபாநாயகர்: அது என் பரிசீலனையில் உள்ளது.

ஜி.கே.மணி (பாட்டாளி மக்கள் கட்சி): இலங்கை அரசின் இந்த செயல் தமிழக தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலிக்கின்ற வகையில் இந்த அவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்ததற்கும், இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்ததற்கும் சபாநாயகருக்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழர்களின் அரசு என்பதற்கு இந்த தீர்மானம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்): இலங்கை இராணுவத்தின் கொடிய செயலை கண்டித்து அவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வருக்கும், இந்த அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மிக முக்கியமான இந்த பிரச்சனை தொடர்பாக இந்திய அரசு ஒரு அமைச்சரை அனுப்பி வைக்காமல் அதிகாரியை அனுப்பி முதல்வருடன் ஆலோசனை நடத்தச் செய்ததற்கும், தொடர்ந்து இந்த பிரச்சனையில் இந்திய அரசு மெளனம் சாதிப்பதற்கும், இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பதையும் நாங்கள் கண்டிக்கிறோம்.

இந்த பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் செயலை கண்டித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினரான ரவிக்குமாரும் வெளிநடப்பு செய்தார்.

கண்ணப்பன் (மறுமலர்ச்சி தி.மு.க.): இலங்கை இராணுவம் தமிழினத்தை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று சபதம் எடுத்து அந்த நாட்டு பிரதமர் ஏவிவிட்டிருக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பாக அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசித்தால் முழு விவரமும் தெரியாது. எனவே இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் சந்தித்து நிலைமைகளை கேட்டறிய வேண்டும். அல்லது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்பிக்களை இலங்கைக்கு அனுப்பி நிலைமையை கண்டறியச் செய்ய வேண்டும். இது தொடர்பாக அதிமுக இந்த அவையிலே கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை நான் வழிமொழிகிறேன்.

வை.சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): இலங்கை அரசை கண்டிக்கும் தீர்மானத்தை வரவேற்கிறேன். இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும். இலங்கையில் நடக்கும் போரை தடுக்க வேண்டும். நமது அண்டை நாடான இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிட்டு சமரசம் காண வேண்டும் என்று தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்.

கோவிந்தசாமி (மார்க்சிய கம்யூனிஸ்ட்): இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். அங்கு அமைதி ஏற்பட மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். 61 குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டி.சுதர்சனம் (காங்கிரஸ்): இலங்கை தமிழ் மக்களும், மாணவிகளும் கொன்று குவிக்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது என்பதில் காங்கிரசுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. ஆனால் இதற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்க முடியாது. இங்கு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் மத்திய அரசை கண்டித்து பேசினார். மத்திய அமைச்சரை அனுப்பாமல் அதிகாரியை அனுப்பி பேசியதாக அவர் கூறினார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பார்த்தசாரதி என்ற உயரதிகாரியை அனுப்பி தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதே போல தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு அதிகாரியான என்.கே.நாராயணனை பிரதமர் அனுப்பி முதல்வருடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். எம்.கே.நாராயணன் ஒரு சிறந்த நிர்வாகி. தமிழ் தெரிந்தவர். இலங்கை பிரச்சனையை நன்கு அறிந்தவர். பிரதமரும், முதல்வரும் இலங்கை பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: அனைத்து கட்சியினரும் இந்த பிரச்சனை தொடர்பாக இங்கே தங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்கு முன்னரே இலங்கை அரசின் அநீதியை, அக்கிரமத்தை கண்டித்து இந்த அவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இலங்கை அரசின் கொடுமையை இங்குள்ள எந்த கட்சியும் ஏற்கவில்லை. திமுகவும், அதனை கடுமையாக கண்டிக்க தயங்கவில்லை. நாம் மட்டுமல்ல உலக நாடுகளே இந்த பிரச்சனையில் அக்கறை செலுத்த உள்ளன. ஐ.நா.சபை இந்த கொடுமையை கண்டித்ததுடன், இலங்கையில் நடைபெறும் சம்பவங்களை கவனிக்க தூதர் ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளது. அதற்காக அரசு பிரதிநிதியை அனுப்பி அறிக்கை கேட்டுள்ளது.

தமிழக அரசை பொறுத்தவரை எந்த அரசானாலும் இந்திய வெளியுறவு கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், அங்குள்ள தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளாகக்கூடிய அளவுக்கு நாம் கருத்துக்களை தெரிவித்து விடக்கூடாது. அங்கு அமைதி ஏற்பட தமிழக முதல்வர் தொடர்ந்து இந்திய பிரதமரை வலியுறுத்தி வருகிறார்.

கண்ணப்பன் (மதிமுக): எம்.கே.நாராயணன் ஒரு சிறந்த அதிகாரிதான். அதில் கருத்து வேறுபாடு கிடையாது. அவர் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தி, மத்திய அரசிடம் சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தெரியப்படுத்துவது நல்லது. நாம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தான் இங்கு பேசி வருகிறோம். இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: எம்.கே.நாராயணன், முதலமைச்சரை சந்தித்து பேசியது வெளிநாட்டு தொடர்புடைய பிரச்சனை. அது ஒரு இரகசியம். அதை வெளியிடுவது நாட்டுக்கும் நல்லதல்ல் இலங்கை தமிழர்களுக்கும் நல்லதல்ல என்றார் ஆர்க்காடு வீராசாமி.

http://www.eelampage.com/?cn=28264

  • தொடங்கியவர்

ஜெயலலிதா செஞ்சோலை படுகொலைகளுக்கு ஒரு கண்டன அறிக்கையாவது விடமாட்டாரா என அதிமுக தொண்டர்களே ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்....

அவர் திமுக முக்கிய உறுப்பினர்... (பொதுக்குழு உறுப்பினர்) ...!

அண்ணன் லக்கிலூக் வாழ்க வாழ்க! :lol::lol:

(குதிரை எங்கே? :wink: )

  • கருத்துக்கள உறவுகள்

அவர் திமுக முக்கிய உறுப்பினர்... (பொதுக்குழு உறுப்பினர்) ...! அதான் வேண்டுகோள் விடுத்தேன்...!

வழ்த்துக்கள் லக்கி வெகுவிரைவில் முதல் அமைச்சரகவோ அல்லது பிரதமர் அகவோ எனது வழ்த்துக்கள்

:lol:

அன்புடன்

ஈழவன்

  • தொடங்கியவர்

வழ்த்துக்கள் லக்கி வெகுவிரைவில் முதல் அமைச்சரகவோ அல்லது பிரதமர் அகவோ எனது வழ்த்துக்கள்

:D

அன்புடன்

ஈழவன்

முதல்வர் ஆக கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது.... ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் எல்லாம் ஆகவில்லையா? :lol::lol::lol:

முதல்வர் ஆக கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது.... ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் எல்லாம் ஆகவில்லையா? :lol::lol::lol:

ஆகினா எனக்கு என்ன பதவி தருவீங்க நல்லா சம்பாதிக்ககூடியதாய் பார்த்து

:D:D:D

அன்புடன்

ஈழவன்

இலங்கை படுகொலை: தமிழக சட்டமன்றத்தில் கண்டனக் குரல்.

தமிழக எம்பிக்கள் இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை

இலங்கையின் முல்லைத்தீவில் 61 மாணவிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்து அதை விவாதிக்கவேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் அதன் தோழமை கட்சியான மதிமுகவும் நேற்று குரல் எழுப்பின.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்திற்குப்பின் இந்தப் பிரச்னையை அதிமுகவின் துணைத் தலைவர் ஒ பன்னீர்செல்வம் கிளப்பினார். இலங்கையில் ஏதுமறியா அப்பாவி மாணவிகளை ராணுவம் கொன்றுகுவித்தது பற்றி விவாதிக்க வேண்டும். ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்ய மன்றநாயகர் அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டார்.

அதேவேளையில் எழுந்து பேசிய மதிமுக உறுப் பினர் எம் கண்ணப்பன், விரிவான விவாதம் தேவை என்றார்.

“இலங்கை தமிழ் எம்பிக்களைச் சந்தித்து உண்மையிலேயே நடந்தது என்ன என்பதை அவர் களிடமிருந்து நான் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குப் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டு எம்பிக்கள் குழு இலங்கை செல்ல அனுமதிக்கவேண்டும்” என்று கண்ணப்பன் கேட்டார்.

இவ்வேளையில் இலங்கைக்கு உதவும் இந்தியா இந்த கொலையில் மட்டும் மவுனம் சாதிப்பது ஏன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் உறுப்பினர் பேசுகையில் இலங்கை பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என கூறினார். இதே கருத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

அந்தப் படுபாதகக் கொலை செய்தியைக் கேட்டு உலகத் தமிழ் மக்கள் எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டனர் என்று பாமக தலைவர் மணி சொன்னார்.

என்றாலும் தமிழ்நாட்டுச் சட்டமன்றம் இதன் தொடர்பில் ஏற்கனவே ஒரு மசோதாவை நிறைவேற்றி இருப்பதால் இதற்காகத் தனி விவாதம் தேவையில்லை என்று தமிழக அமைச்சர் வீராசாமி கூறினார்.

இலங்கை படுகொலைக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இவ்வேளையில் இலங்கையின் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் புதன்கிழமை இரவு புதிய தாக்குதலைத் தொடங்கியதாக ராணுவம் நேற்று அறிவித்தது.

அதே சூழலில் நாட்டில் படுமோசமாகி வரும் சூழல் பற்றி பேசுவதற்காக அமெரிக்காவின் பேராளர் ஒருவர் இலங்கைக்குச் சென்று இருக்கிறார்.

யாழ்ப்பாண போர் முனையின் மேற்கு முனையில் அமைந்து இருக்கும் கிளாலியைச் சுற்றிலும் புலிகள் தாக்குதல் தொடங்கியதாக ராணுவம் குறிப்பிட்டது.

புலிகள் மேற்கொண்ட தாக்குதலை நாங்கள் முறி யடித்துவிட்டோம். அதில் குறைந்தது 50 போராளிகள் மரணமடைந்தனர் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித் தது. ராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டதாக வும் 60 பேர் காயம் அடைந்ததாகவும் அது கூறியது.

இதற்கிடையே இலங்கை இராணுவத்தின் பலவந்த தாக்குதலுக்கு எதிராக ராணுவ முன்னரண் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் செறிவான தாக்குதலை நடத்தி படைத்தரப்புக்கு இழப்புக்களை ஏற்படுத்தி யுள்ளனர் என்று அவர்களின் இணையத்தளம் குறிப் பிட்டது. கிளாலி முதல் முகமாலை வரையான முன்னரண் பகுதிகளில் ராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

இதில் ராணுவத் தரப்பில் 70-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 120-க்கும் அதிகமான ராணுவத் தினர் காயமடைந்துள்ளனர் என்று புலிகள் அமைப்பு தெரிவிக்கிறது.

இவ்வேளையில் யாழ்ப்பாணத்தைப் பிடிக்க புலிகள் எண்ணினால் நாம் அதற்கு இடமளிக்க மாட்டோம். புலிகளின் அத்தகைய எண்ணம் ஈடேற அரச படைகள் விடமாட்டா'' என்று கூறினார் இலங்கை அதிபர் ராஜபக்சே கொழும்பில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது குறிப்பிட்டார்.

TAMILMURASU-SINGAPORE

இலங்கையில் அப்பாவி தமிழர் பலியை

நிறுத்தி அமைதிப் பேச்சுக்கு நெருக்குக.

----------------------------------

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல் லப்படுதைத் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு காணும்படி இலங்கையை நெருக்குமாறு இந்தியப் பிரதமருக்குத் தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தி இருக்கிறார்.

அண்மையில் இலங்கையில் விடுதலைப் புலிகள் வசம் இருக்கும் முல்லைத்தீவில் 61 மாணவிகள் கொல்லப்பட்டதை மனிதாபி மானமற்ற செயல் என்று அவர் கண்டித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றம் அந்தக் கொலை யைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை நிறை வேற்றியது. முல்லைத்தீவில் செஞ்சோலை வளாகம் மீது இலங்கை விமானப்படை நடத் திய குண்டு வீச்சை, மனிதாபிமானம் சிறிதும் அற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் என்று வர்ணித்திருக்கும் தமிழகச் சட்டப் பேரவை அந்தக் கொடூர சம்பவத்துக்குக் கடும் கண்டனமும் தெரிவித்தது.

தமிழகச் சட்டப் பேரவையில் சபாநாயகர் ஆவுடையப்பன் கண்டன அறிக்கையை வாசித்தார். அதன் பின்னர் உயிரிழந்த பள்ளிச் சிறுமிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்துவதற் காக உறுப்பினர்கள் அனைவரும் இரு நிமிடங்களுக்கு எழுந்து நின்றனர்.

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனாதைக் குழந்தைகள் காப்பகத்தின் மீது இம்மாதம் 14ம்_தி இலங்கை ராணுவத் தினர் சரமாரியாகக் குண்டுகளை வீசித் தாக் கியதன் காரணமாக 61 மாணவிகள் உயிரிழந் தது குறித்தும் 150 பேருக்கும் மேற்பட்ட மாணவி கள் படுகாயமடைந்தமை குறித்தும் இப் பேரவை அதிர்ச்சியும், ஆற்றொ ணாத் துயர மும் கொள்கிறது.

மனித நேயத்தில் தோய்ந்துள்ள எவராயி னும் அவர்களால் மன்னிக்க முடியாத இந்த நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

இந்த நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தன மான மனிதாபிமானம் சிறிதும் அற்ற கொடுமை நிறைந்த இலங்கை இராணுவத்தின் இச்செயலை இப்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த அறிக்கை கூறியது.

இதற்கிடையே சேலத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கொடும்பாவியை எரித்த சுமார் 30 பேர் கைதாகி பின்னர் விடுவிக்கப் பட்டனர்.

இதற்கிடையே முல்லைத் தீவில் 61 பாட சாலை சிறுமிகள் படுகொலை செய்யப் பட்டமைக்குத் தமிழ்நாடு முன்னாள் முதல் வரும் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செய லாளருமான ëஜயலலிதா வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில் மோதலை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சில் ஈடுபடுமாறு அரசாங்கத் தையும் புலிகள் தரப்பையும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டது.

என்றாலும் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் மோதல் நின்றதாகத் தெரியவில்லை. இரு தரப்பிலும் பெருத்த உயிருடற்சேதம் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் கடுமை யான எறிபடைத் தாக்குதல்களை நடத்தி படை முகாமை அழித்து வருவதாகச் செய்தி கள் தெரிவிக்கின்றன.

இவ்வேளையில் அமைதியை நிலைநிறுத் தும் முகமாக கொழும்பில் ஏற்பாடு செய்யப் பட்ட பேரணி அடிதடியில் முடிந்தது.

போருக்கு எதிரான தேசிய முன்னணி எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பேரணியில் அத்துமீறி உள்நுழைந்த ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆதரவாளர் களும் புத்த பிக்குகளும் பேரணியைக் குழப்பும் வகையில் அடிதடியில் ஈடுபட்டதாகத் தெரி விக்கப்பட்டது.

கொழும்பில் கூடிய மக்கள் ஒரு பேரணி யாக நடந்து சென்றனர். பேரணியில் உள்நுழைந்து ஜேவிபி மற்றும் ஹெல உறுமய தரப்பினர் கூக்குரலிட்டுப் பேரணியைக் குழப் பியதோடு அங்கிருந்தவர்கள் மீது தாக்கியதாக வும் பின்னர் ஹெல உறுமய பிக்குகளும் ஜேவிபியினரும் மேடையை நோக்கி கற்களை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இலங்கை படையினரின் வலிந்த தாக்குதல்களை அடுத்து திருகோண மலையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMILMURASU-SINGAPORE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.