Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: மக்கள் கோரிக்கை

Featured Replies

131008100010_mullai_ministry_tna_640x360

கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்கள்

இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று அங்குள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு நடவடிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

முல்லத்தீவு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள், விவசாய, மீன்பிடிதுறை சார்ந்த அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு அரச செயலகத்தின் முன்னால் கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் வீதியோரத்தில் கூடி நின்று தமது கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

சுனாமி பேரலைகளினாலும், யுத்தத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் அமைச்சுப் பொறுப்புக்கள வழங்கப்படாமல் புறகக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், தமது மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள நான்கு மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவருக்கு ஓர் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் மகஜர் மூலம் கோரியுள்ளனர். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காக தமது கோரிக்கைள் அடங்கிய மகஜரை முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களாகிய டாக்டர் சிவமோகன் மற்றும் எம்.ரவிகரன் ஆகியோரிடம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.

நான்கு பேர் அடங்கிய மாகாண சபை அமைச்சரவையை அமைப்பதற்காகப் பல தடவைகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் கூடி பேச்சுக்கள் நடத்தியுள்ள போதிலும், இன்னும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாகாணசபை அமைச்சர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்களை முதலலைச்சர் சி.வி.விக்னேஸ்வன் வெளியிடுவார் என்று எதிர்பாபர்க்கப்படுகின்றது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/10/131008_mullaiministers.shtml

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் பாதிக்கப்பட்ட நகரம்

கோரிக்கையில்  நியாயமிருந்தாலும்

30 பேர்களில் 4 பேரைத்தெரிவு செய்வதென்பது மிகமிக  கடினமானது  தான்.

தெரிவு செய்யப்பட்டவர்களிடம் முறையிட்டு இந்த நகரத்துக்கே முன்னுரிமை கொடுக்க முயற்சிக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

போரின் மொத்த வலுவையும் தாங்கி நின்ற மண்ணும் மக்களும். அவர்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுதல் வேண்டும்..! :icon_idea:

ஏன்? ஏன் ? இது எல்லாம் எதற்கு, ஏனப்பா தமிழனுக்கு இப்படி எல்லாம் நடக்குது?

மாவட்ட அடிப்படையில் அமைச்சு தீர்மானிக்கப்படவில்லை. எனவே தேர்தெடுக்கப்பட்ட எல்லா அமைச்சர்களும் உங்கள் மாவட்டட்த்ுக்கும் உரியவரே. அவர்களோடு உரிமையோடு உங்கள் தேவைகளை பகிரமுடியும். இந்த அமைச்சர்கள் போருக்குப்பினரான தேவைகள் பற்றிதான் அதிக்க முக்கியத்துவம் வழங்கும் வகையில் திடங்கள் வகுப்பார்கள். அதுதான் இந்த அரசுக்கு முன்னால் உள்ள பெரிய பணி. எப்படி சுனாமியின் பின்னர் உங்களை தூக்கிநிறுத்த உழைத்தோமோ அப்படி நாங்கள் இன்னுமோருமுறை செய்யவேண்டும். எங்களுக்கு சவால்கள் நிறைய அரசிடம் இருந்து வரும். ஆனால் தலை நிமிர நாம் செய்ய வேண்டியதை செய்தே ஆகவேண்டும்

  • தொடங்கியவர்

அல்லது துணை அமைச்சர் பதவிகளை உருவாக்கி அதை அவர்களுக்கு கொடுக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு க்கு எல்லாம் அமைச்சு பதவி தேவை இல்லை மக்கள் கூடிய மாவட்டங்களுக்கே அமைச்சு பதவிகள் போய் சேர வேண்டும் முல்லைத்தீவும் வன்னிக்குள் வருவதால் 3 அமைச்சர்கள் அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பிறகு எதற்கு இவைக்கு தனியா ஒண்டு?

வேணும் எண்டா முதல் அமைச்சர் தனக்கு கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தை கொண்டு வந்து விஷேட கவனம் செலுத்தலாம்

இந்த யாழ் மேலாதிக்கத்தை  நான் வன்மையா கண்டிக்கிறேன் அப்பிடி எண்டு இப்ப பல கண்டனக் குரல்கள் வரும் கவனம் சுண்டல்  :lol:

அல்லது துணை அமைச்சர் பதவிகளை உருவாக்கி அதை அவர்களுக்கு கொடுக்கலாம் 

நீங்கதான் முந்தி மகிந்தவுக்கும் 'அட்வைசு' கொடுத்தனீங்கள்போல! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கதான் முந்தி மகிந்தவுக்கும் 'அட்வைசு' கொடுத்தனீங்கள்போல! :lol:

இதிலே ஏதோ உள்குத்து இருக்கு............ :lol:  :D

131008100010_mullai_ministry_tna_640x360

கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்கள்

திகதியில் 2010ம் ஆண்டு என்று இருக்கு.. என்னப்பா நடக்குது இங்க?! :)
  • தொடங்கியவர்

முல்லை மக்கள் 3 வருடங்கள் பின் தங்கி உள்ளனர் என்பதை இப்பிடி சிம்பாலிக்கா சொல்லிகினம் 

நீங்கதான் முந்தி மகிந்தவுக்கும் 'அட்வைசு' கொடுத்தனீங்கள்போல! :lol:

டக்லஸ்,கருணா போன்றவர்களுக்கு பிரதி அமைச்சர் கொடுக்க சொல்லியா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதையே முல்லை மக்கள்.. கூட்டமைப்புக்கு வாக்குப் போடாமல்.. மகிந்தவுக்குப் போட்டிருந்தா என்ன சொல்லி இருப்பீங்க..???! பெரும்பான்மையாக உள்ள இடங்களில் இருக்கும் மக்கள் வாக்குப் போட்டால் காணும் என்றா..????!

முல்லையிலும் கிளிநொச்சியிலும் கூட்டமைப்புக்கு வீழ்ந்த வாக்குகள் கிட்டத்தட்ட ஒன்று தான். மன்னாரில் தான் கூட்டமைப்புக்கு குறைவான வீதம் வாக்குப் பதிவானது. அங்கு முஸ்லீம்களின் பெருக்கமும்.. சிங்களக் குடியேற்றங்களும் இதற்கு முக்கிய காரணம். அந்த நிலையை முல்லையில் உருவாக்காமல் விட்டால் நல்லது.

விடுதலைப்புலிகள் அமைப்பு நல்ல வழிகாட்டலை தந்துள்ளது. ஒரு அமைப்பை 35 வருட காலம் கட்டிக்காத்து மக்களின் மனங்கள் கோணாதபடி.. புலிகள் நடந்து காட்டி இருக்கிறார்கள். தமிழீழத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும்.. போராளிகள் முக்கிய பொறுப்புக்களில் இருந்துள்ளனர். அதனைப் பின்பற்றலாமே.. சும்மா கூப்பாடு போட்டு மக்களின் மனங்களை நீங்களும் நோகடிக்காமல்.. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிதானமாக கேட்கவும் பரிசீலிக்கவும் செய்தால் தான் அந்த மக்கள் தலைவர்களுக்கு மதிப்பளிப்பார்கள். இல்ல தூக்கி எறிவார்கள்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கி எறிஞ்சாலும் பெருசா பாதிப்பு வர போறதில்லை....:D

மன்னார் மாவட்டத்தில் குறைந்த அளவு வாக்கு விழுந்தபடியா தான் அந்த மாவட்டத்திற்கு கண்டிப்பா ஒரு அமைச்சு பதவி கொடுக்கப்பட வேண்டி இருக்கு மற்றது மன்னார் என்றது டெலோ வின் ஆதரவாளர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் அதனால் அந்த கட்சிக்கு அது போய்ட்டுது.... முல்லைதீவு மக்களுக்கு தற்பொழுது சம்மந்தனின் இதயத்தில் தான் இடம் அடுத்த வாட்டி பாக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க உதுவும் சொல்வீர்கள்.. இன்னும் சொல்வீர்கள். இறுதிப் போரில் அடைக்கலம் தந்த...மாவீரர்களைத் தந்த பால்ராஜ் போன்ற பெரும் வெற்றித் தளபதிகளைத் தந்த அந்த மக்கள்.. இன்று தங்கள் தேவைகளையும் தீர்க்க... ஒரு அமைச்சுக்கு உங்களை கெஞ்ச வேண்டி இருப்பதே அபந்தம்..! :(:rolleyes:

விடுதலைப்புலிகள் அமைப்பு நல்ல வழிகாட்டலை தந்துள்ளது. ஒரு அமைப்பை 35 வருட காலம் கட்டிக்காத்து மக்களின் மனங்கள் கோணாதபடி.. புலிகள் நடந்து காட்டி இருக்கிறார்கள். தமிழீழத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும்.. போராளிகள் முக்கிய பொறுப்புக்களில் இருந்துள்ளனர். அதனைப் பின்பற்றலாமே.. சும்மா கூப்பாடு போட்டு மக்களின் மனங்களை நீங்களும் நோகடிக்காமல்.. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிதானமாக கேட்கவும் பரிசீலிக்கவும் செய்தால் தான் அந்த மக்கள் தலைவர்களுக்கு மதிப்பளிப்பார்கள். இல்ல தூக்கி எறிவார்கள்..! :icon_idea::)

சும்மா பிரிவினைவாதிகளுக்கு கொள்ளி எடுத்துக் கொடுத்துகொண்டு திரியாமல் கொஞ்சம் ஆறுதல் எடுங்கள். திரும்பத்தொடரும்போது மாகாண சபையில் ஏதாவது தொழில்பாடுகள் ஆரம்பித்துவிடும்; அதைபற்றி எழுதலாம்.

நீங்களே அதிகாரம் இல்லாத சபை என்ற என்று அதைக் கூறிவிட்டு முடிந்து போவிட்ட மந்திரி சபை நியமனங்களில் பிரிவினைகளுக்கு வெடிப்புகள் ஏன் கண்டுபிடித்துகொண்டிருப்பான்?

ஆயுதப் போராளிகளாக இருந்து புலிகள் நடத்திய ஆட்சியை மகிந்தாவின் கையில் இருக்கும் வடமாகாண சபை எப்படி நிகர்க்கும்?

இப்போது நீங்கள் எழுதுவது வேறுமனே பழம் புராணம் பாடுவது போல உங்களுக்கு படவில்லையா?

புதிய மாகாண சபைக்கு புதிய ஐடியாகளை எழுதுங்கள். அதிகாரம், சுயாதினம் என்பன கைக்கு வந்தபின்னர் புலிகளின் அமைப்பைவிட எவ்வளவு வினைத்திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை அந்த நேரம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இனி ஜனநாயக கட்சிகள் பதவியேற்கும் போது அது அருகில் தென்கிழக்கசியாவின் அரசுகளின் உதாரணங்களாக விளங்கும் இலங்கை, இந்திய அரசுகளைவிட நன்றாக இருந்தால் அதையே வைத்து சந்தோசம் அடைய வேண்டும்வரும்.

நமது கண்கள் சுதந்திரத்தை நோக்கி இருக்க வேண்டும். இப்படி பிரிவினைகள் பொதுவாக்கெடுப்பு ஒன்று வரும் போது மக்களை ஒன்றிணைப்பதை கடிணமாகிவிட்டும். கவனமாக நடந்து கொள்ள்வதும் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்டர் போன்ற தளபதிகளை தந்தது மன்னார் அவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்கிறீர்கள்..... இப்பிடி எல்லாம் பாக்க முடியாது முல்லைத்தீவு மற்ற மாவட்டங்களை விட மக்கள் தொகையில் சிறியது அதனால மனதில இடம் அமைச்சரவையில் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாவட்டத்திற்கு கொடுக்க வேண்டாம் என்று கூறவில்லையே. எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்பட முடியாதது. மன்னார் மாவட்டத்தின் கதி.. முல்லைக்கும் வர வேண்டாம் என்று தான் கூறி இருக்கிறோம். :icon_idea:

யாழ் மாவட்ட அமைச்சை முல்லைக்கு சுழற்சி முறையில்.. பகிர்ந்தளிக்கலாம். முல்லை விவசாயம்.. மீன் பிடியை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாவட்டம். மேலும் முஸ்லீம்களை.. சிங்களவர்களை... அதிகளவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்டம். அங்குள்ள மக்கள் போரால் பாதிக்கப்பட்டு மிகச் சமீபத்தில் தான்.. மீள் வாழ்வாதாரக் கட்டமைப்பை நோக்கி நடைபோடுகிறார்கள். யாழ் மாவட்டம் 1995 இல் இருந்து இதனைச் செய்கிறது. எனவே.. முல்லை மாவட்டத்திற்கு.. கூடிய கவனம் செலுத்தப்படுவது அவசியம்.. என்பதே எங்கள் கருத்து. அந்த மக்களின் எண்ணமும் அதுவே..!! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Well முல்லை மாவட்டத்திற்கு வேறு வளங்களை திருப்பி விடலாம் உப அமைச்சு பதவிகள் அல்லது அது சார்ந்த உப குழுக்கள் etc etc

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பிரிவினைவாதிகளுக்கு கொள்ளி எடுத்துக் கொடுத்துகொண்டு திரியாமல் கொஞ்சம் ஆறுதல் எடுங்கள். திரும்பத்தொடரும்போது மாகாண சபையில் ஏதாவது தொழில்பாடுகள் ஆரம்பித்துவிடும்; அதைபற்றி எழுதலாம்.

நீங்களே அதிகாரம் இல்லாத சபை என்ற என்று அதைக் கூறிவிட்டு முடிந்து போவிட்ட மந்திரி சபை நியமனங்களில் பிரிவினைகளுக்கு வெடிப்புகள் ஏன் கண்டுபிடித்துகொண்டிருப்பான்?

ஆயுதப் போராளிகளாக இருந்து புலிகள் நடத்திய ஆட்சியை மகிந்தாவின் கையில் இருக்கும் வடமாகாண சபை எப்படி நிகர்க்கும்?

இப்போது நீங்கள் எழுதுவது வேறுமனே பழம் புராணம் பாடுவது போல உங்களுக்கு படவில்லையா?

புதிய மாகாண சபைக்கு புதிய ஐடியாகளை எழுதுங்கள். அதிகாரம், சுயாதினம் என்பன கைக்கு வந்தபின்னர் புலிகளின் அமைப்பைவிட எவ்வளவு வினைத்திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை அந்த நேரம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இனி ஜனநாயக கட்சிகள் பதவியேற்கும் போது அது அருகில் தென்கிழக்கசியாவின் அரசுகளின் உதாரணங்களாக விளங்கும் இலங்கை, இந்திய அரசுகளைவிட நன்றாக இருந்தால் அதையே வைத்து சந்தோசம் அடைய வேண்டும்வரும்.

நமது கண்கள் சுதந்திரத்தை நோக்கி இருக்க வேண்டும். இப்படி பிரிவினைகள் பொதுவாக்கெடுப்பு ஒன்று வரும் போது மக்களை ஒன்றிணைப்பதை கடிணமாகிவிட்டும். கவனமாக நடந்து கொள்ள்வதும் அவசியம்.

போரின் பெரும் வடுவை வலியைச்  சுமக்கும் மக்கள் மீது காட்டும் அக்கறையை பிரிவினை என்பதும்.... ஆயுதப் போராளிகள்.. என்ற பதமும் உங்களைச் சந்தேகிக்க வைக்கிறது.

புலிகளை விட கூடிய ஆயுத பலத்தோடு நிற்பவர் மகிந்த. அவர் செய்யாத ஆயுத அச்சுறுத்தல்களும் இல்லை..! அதற்குள் இருந்து தான் மக்கள் இந்த வாக்குகளை அளித்துள்ளனர்..!

மேலும்.. போரால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமன்றி.. சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்கள் முல்லை மக்கள். அவர்களுக்கே.. ஒரு பிடி கீரைக் கட்டுக் கிடைத்தால் கூட அதிகம் பகிர்ந்தளிக்கப்படனும்.

மாகாண சபையை வைச்சு வெளிநாட்டு ஆதரவோடு.. வெட்டிப்புடுங்கப் போறம் என்று படம் காட்டின படியால் தானே மக்கள் எதிர்பார்க்கினம்..! அதற்கு ஏன் மக்கள் மீது பாய்கிறீர்கள். படம் காட்டினவையைப் போய் கேள்வி கேட்கிறது..???! அதைச் செய்யாதேங்கோ. அவையை சுற்றி ஒரு போலிப் போர்வையைப் போர்க்கிறதை விட்டிட்டு.. கேள்வி கேளுங்கோ. அப்பதான் அவை விடுற தவறுகள் அவைக்கே தெரிய வரும்..! திருந்த.. திருத்த வழி பிறக்கும். :icon_idea::)

முல்லைதீவிலிருந்து கூட்டமைப்புக்கு எதிராக நடந்த பல ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் யாழில் பதியப்பட்டிருந்தன. அவற்றின் அடிப்படைகளை ஆராய்ந்த போது மக்கள் ஏமாற்றப்படிருந்தது யாழில் பலதடவைகள் வெளிவந்த உண்மை. இதில் கொடி பிடிக்கும் மக்கள் ப்லர் தாம் அங்கே ஏன் கூட்டிவரப்பாட்டர்கள் என்பதைக் கூட தெரிந்திருக்கமாட்டர்கள். அதை போய் நீங்கள் எதோ நான் மக்களின் போராட்டா உரிமையை பறித்தெடுக்க முயல்வதாகவும் ஆகவே நானும் துரோகிகள் பக்கம் இருந்து வருகிறனோ என்று சந்தேகப்படுவதாகவும் எழுதுகிறீர்கள். கூட்டமைப்பு பதிப்பிரமாணம் கூட செய்ய முதல் இவ்வளவு அவசரம் எதற்கு?

கூட்டமைப்பை அரசுக்கு எதிராக பதவியில் அமர்த்தவேண்டும். ஆட்சி அமைக்கும்வரை பொறுமை காக்க வேண்டும். தொழில் பட இடம் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் முல்லை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டால் கேள்வி கேடக வேண்டும்.

ஒருதடவை ஒரு குரு தனது சீடனிடம் பானையைகொடுத்து ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வா என்றாராம். அதன் பின்னர் அவன் தலையில் பல குட்டுகள் இறுக்கிப் போட்டாராம். அவன் எதற்கு என்று கேட்டதற்கு வழியில் நீ பானை உடைத்துவிட்டாலும் என்பதற்கா என்றாராம். 

மற்றய தகுதிகளும் அவர்களிடம் காணப்படும் இடத்தில், கல்விக்கு கல்வித்துறையை சேர்ந்தவரை, விவசாயத்துக்கு அந்த துறையை சேர்ந்தவரை அந்த  மந்திரியாக்குவதுதான் சரி.  ஆனால் நடைமுறையில் இருக்கும்  இந்திய, இலங்கை அரசுகளின் இன்றைய பண்பாடான ஒருவரை மந்திரியாக்கினால் அவர் தனது குடும்பம், தனது உறவினர் தனது கிராமம் என்று கவனித்துக்கொள்ளும் கொள்ளை கூட்ட அரசியலுக்கு பழகப்பட்டுவிட்டதால் முல்லைதீவுக்கு மந்திரி இல்லாவிட்டால் எப்படி முல்லைத் தீவை கவனிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அது தவிர முல்லைத்தீவை முன்னேற்ற மந்திரிப்பதவி இல்லாவிட்டால் நடக்காது என்பது உண்மை அல்ல.  முல்லைதீவுக்கும் கல்வி, விவசாயம், சுகாதாரம், உள்ளூர் கட்டுமானங்கள் எல்லாம் வந்து சேர வேண்டும்.  அந்த நிலையில் அங்கே ஒரு மந்திரியை போட்டால் எப்படி முல்லைத்தீவு முன்னேறும்? ஒரு மந்திரி தனது வளங்களை, ஆலது சக மந்திர்களின் வளங்களை அங்கே முடக்கி எடுக்க முடியாதா என்பதா பதில்? இதை விட வித்தியாசமான ஆட்சியா முன்னேற்றம் இல்லாத இடமாக கூறிக்கொண்டு அம்பாந்தோட்டையை நோக்கி வழங்கள் திருப்பப்பட்டமை? 

மந்திரிகளானவர்கள் மக்களின் தேவைகளைப் பட்டியல் இட்டு மக்களை கவனிக்க வேண்டும். அதை செய்யாவிட்டால் கண்டிக்க வேண்டுமே அல்லாமல் மந்திரி பதவியை முல்லைத்தீவுக்கு கொடுக்க வில்லை என்று கூக்குரல் போடுவது திருட்டுத்தனதை வெளிப்படையாக எற்று அதை தட்டி வளர்ப்பத்தாகத்தான் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ நிர்வாக முறையின் கீழும்.. பினந்தங்கிய இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.  குறிப்பாக கடற்புலிகளின் மக்கள் சேவைப் பிரிவினரால் முல்லை மற்றும் வடமராட்சி கிழக்கு மக்களின் பிந்தங்கிய நிலை கருதி.. கூடிய உதவிகள் கொண்டு செல்லப்பட்டன. அது ஒரு சரியான நிர்வாக முறைமைக்குள்ள நேர்த்தியைக் காட்டுகிறது.

அந்த வகையில் முல்லை மக்கள் மீது பெரும் போர்  அழிவு சுமையாகி உள்ள நிலையில்.. பெரும்.. முஸ்லீம் சிங்களக் குடியேற்றங்கள் அச்சுறுத்தல்களாகி உள்ள நிலையில்.. அவர்கள் தங்களின் நிலையை காக்க.. தக்க வைக்க தமக்கொரு அமைச்சு வேண்டும் என்று கோருவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. அதனை வேறு எந்த வியாக்கியானப்படுத்தலாலும் சரிக்கட்டி விட முடியாது.

இந்த நிலையில்.. அந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதை விடுத்து.. அவர்களைத் தட்டிக்கழிக்க முனைவது.. ஒரு சீரிய நிர்வாக முறைமைக்கு உகந்த பரிந்துரையாகத் தெரியவில்லை..! அது என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும்..! :icon_idea:

அது வடமாகாண சபையில் நடக்காது என்று கூறுவது அவரசர நடத்தை.

அந்த வகையில் முல்லை மக்கள் மீது பெரும் போர்  அழிவு சுமையாகி உள்ள நிலையில்.. பெரும்.. முஸ்லீம் சிங்களக் குடியேற்றங்கள் அச்சுறுத்தல்களாகி உள்ள நிலையில்.. அவர்கள் தங்களின் நிலையை காக்க.. தக்க வைக்க தமக்கொரு அமைச்சு வேண்டும் என்று கோருவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. அதனை வேறு எந்த வியாக்கியானப்படுத்தலாலும் சரிக்கட்டி விட முடியாது.

அதில் அறியாத புதியது ஒன்றும் இல்லை. மெலும் இது முல்லைமாவட்டத்தில் மட்டும் காண்ப்படும் பிரச்சனை என்பதும் சரி அல்ல. முல்லைமாவட்டம் போரின் வடுக்களை தாங்கிய பின்தங்கிய மாவட்டம் என்பதுதான் சரி. இதை எந்த மாகாண சபை மந்திரியும் இன்றைய காலகட்டத்தில் சரி செய்ய முடியாது. முழு மாகாண சபையும் உரிமைக்காக தொடந்தும் குரல் எழுப்ப வேண்டும்.

இந்த நிலையில்.. அந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதை விடுத்து.. அவர்களைத் தட்டிக்கழிக்க முனைவது.. ஒரு சீரிய நிர்வாக முறைமைக்கு உகந்த பரிந்துரையாகத் தெரியவில்லை..! அது என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும்..! :icon_idea:

அமோக ஆதரவுடன் மக்கள் தெரிந்தெடுத்த கூட்டமைப்பு பதவியை ஏற்கமுதல் எதிரிகளுக்கு இடமளிக்கத்தக்கதாக அதில் பிழை கண்டுபிடிப்பது அவசர நடத்தை.  ஒரு கிழமைக்கு முதல் 80% வீதம் கூட்டமைப்பை ஆதரித்து வாக்கு போட்டு முடிய இன்று முல்லை மாவட்டம் 100% கூட்டமைப்புக்கு எதிராக கொடிபிடிக்கிறது என்று விளங்கவைக்க முயல்வது அளவுக்கு அதிகமாக கூடிப்போய்விடும். சிலவற்றையும் அவர்கள் செய்தால்தான் எப்படியான மந்திரிசபை என்றதை பற்றி மனத்திருப்த்தியான க்ருத்து வைக்க முடியும்.

Edited by மல்லையூரான்

மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி

கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி

வீருப்பு வாக்குகளை அதிகம் பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி

பெண்களுக்கு அமைச்சர் பதவி

இனி சாதீ அடிப்படையில் அமைச்சர பதவி

கல்வித் தகுதீ கூடியவர்களுக்கு அமைச்சர் பதவி

அப்பாடா! இருக்கிற 4 அமைச்சர் பதவியை விக்கி எப்படித் தான் பிரிக்கிறது..

கிடைச்சிருக்கிற குறைஞ்ச அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபையை வைச்சு சாதி இன மத மாவட்ட கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தமீழர் எண்ட ஒரே நோக்கத்தோடை செயற்படுறதை விட்டுப் போட்டு படற பாட்டைப் பாக்கச் சத்தி வருகுது.....

தமிழேண்டா தம்பி

தமிழண்டா.... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.