Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் வாழ்ந்ததாகக் கூறப்படும் கல்வீடுகளை தகர்க்கலாம் பிரபாகரன் வாழும் மன வீடுகளை அழிக்க முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் வாழ்ந்ததாகக் கூறப்படும் கல்வீடுகளை தகர்க்கலாம் பிரபாகரன் வாழும் மன வீடுகளை அழிக்க முடியுமா?

09 அக்டோபர் 2013

குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்

வன்னியில் வாழ்ந்தவர்களுக்கு அநேகமாக நிரந்தரமாக ஒருவீடு இருந்ததில்லை. இடப் பெயர்வுகளால் அடிக்கடி வீடுகள் மாறிப் போக ஒருகட்டத்தில் வீடு என்பதே இல்லாமல் போய்விட்டது. வீடு அழிக்கப்பட்டு வீட்டை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீடு ஒன்றைப் பற்றிய கனவோடு கடந்த பல வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறோம். புல் வெளிகளும் காடுகளும் மரங்களும் பதுங்கு குழிகளும்தான் எமது வீடுகளாக இருந்திருக்கின்றன. நாளுக்கொரு வீடு காலத்திற்கு காலம் பலவீடுகள் வீட்டுக் கொரு பதுங்குகுழி, ஆளுக்கொரு பதுங்கு குழி என்றுதான் எங்கள் வாழ்க்கை கழிந்திருக்கிறது. எல்லாப் படையெடுப்புக்களும் எங்கள் வீடுகளை அழித்து மண்ணோடு மண்ணாக்கின. மீண்டும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட எல்லா வீடுகளும் மீண்டும் மீண்டும் படையெடுப்புக்களில் அழிக்கப்பட்டன. மீண்டும் மீண்டும் பதுங்கு குழிகளை வெட்டினோம். ஒரு பதுங்குகுழி மூடுண்டு போகும் காலத்தில் மீண்டுமொரு பதுங்கு குழி வெட்டிக் கொண்டோம்.

வீட்டை விட்டு பதுங்கு குழி பின்னர் அதனையும் இழந்து வெறும் வெளிக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். வீட்டை அழித்தல் என்பது வாழ்வை அழித்தல், சுவடுகளை அழித்தல், வரலாற்றை அழித்தல் என்று கனவுகளை நிர்மூலமாகக்கும் அழிப்பு நடவடிக்கையாகவே நிகழ்த்தப்படுகின்றன. இதுநாள் வரையில் நடந்த ஈழப்போரில் படையெடுப்பகளால் பலலட்சம் வீடுகள் அழிந்தன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் அபகரிக்கப்பட்டன. யாரும் திரும்பாத வீடுகள் இன்னமும் இருளும் சூன்யமும் வெறுமையும் நிரம்ப அழிந்து கொண்டிருக்கின்றன. வன்னிப் போரில் பலலட்சம் வீடுகள் அழிக்கப்பட்டன. 2009இற்குப் பின்னர் எஞ்சியிருந்த சில வீடுகளில் பிரபாகரன் வசித்ததாகச் சொல்லப்படும் வீடும் ஒன்று. அதை வீடுஎன்பதை விடவும் ஒரு பதுங்கு குழி என்கிற வித்திலேயே அமைந்திருக்கிறது.

பிரபாகரன் பிறந்தவீடு

யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்த வீடு இருந்தது. ஒருநாள் எனது நண்பன் ஒருவனுடன் வடமராட்சிக்குச் சென்ற பொழுது அவன் பிரபாகரனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அப்பொழுது அந்த வீடு ஒருவியப்பூட்டும் வீடாக சிங்களமக்களால் பார்வையிடப்பட்டது. பிரபாகரனின் வீடு எங்கிருக்கிறது? என்றும் அதைப் பார்க்கவேண்டும் என்றும் முதலில் படை எடுத்தது சிங்கள மக்கள்தான். போர் முடிந்தபின்னர் நாள் தோறும் வடக்கிற்குப் படையெடுக்கும் சிங்களமக்கள் பிரபாகரன் பிறந்தவீட்டைப் பார்க்க திரண்டு கொண்டிருந்தார்கள். ஒருயுகத்தின் முடிவில் அக்காலத்தின் போர் வீரன் ஒருவன் பிறந்தவீட்டைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் அவர்களிடம் மிகுந்திருந்தது.

பழையதொரு எளிமையான வீடு. நீண்டநாட்கள் ஆட்கள் வசிக்காதிருந்தது. முற்றத்து மரங்கள், கிணற்றடி என்று எல்லாம் ஆட்களின் வாசம் படாமல் தூசு படிந்திருந்தது. சிங்களமக்கள் அந்த வீட்டை ஒரு அதிசயமாக பார்த்ததுடன் பின்னர் பக்தி நிலைக்கும் வந்தார்கள். அந்த வீடு பிரபாகரன் குறித்த சித்திரத்தை அவர்களுக்கு உணர்த்தி இருக்கவேண்டும். அந்த வீட்டிலிருந்து வருபவர்கள் ஒரு பிடி மண்ணை எடுத்துச் சென்றார்கள். அந்தவீட்டின் முன்பாக படம் பிடித்துக் கொண்டார்கள். சிங்கள மக்கள் அந்த இடத்திற்கு நாளும் பொழுதும் திரள்வதால் அந்த இடத்திற்கு இராணுவத்தினர் பாதுகாப்புக் கொடுத்தார்கள். துப்பாக்கி ஏந்திய இராணுவத்திரால்; பாதுகாப்புக் கொடுக்கப்பட்ட அந்த வீடு ஒருநாள் தரைமட்டமாக அழிக்கப்பட்டது. பிரபாகரனின் தயார் காலமாகிய நாளுக்கு சிலநாட்கள் முன்பாக அந்த வீடு தரையோடு சாய்க்கப்பட்டிருந்தது.

பிரபாகனின் வீடு எங்கிருந்தது?

அண்மையில் வன்னியில் புதுக்குடியிருப்பில் பிரபாகரனின் வீடு என்று இலங்கை அரசாங்கம் காட்டிவந்த வீடுதகர்த்து அழித்திருக்கிறது. பாரிய பதுங்கு குழி ஒன்றைக் கொண்ட அந்த வீடு மூன்று மாடிகளால் ஆனது. விடுதலைப் புலிகளின் அடையாளங்கள் இனியும் தேவையில்லை என்றே அந்த வீட்டை தகர்த்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். வீடுகளை தகர்ப்பதில் பெயர் போன இலங்கை இராணுவத்தினர் பிரபாகரனின் வீடு என்ற பெயரில் அந்தவீட்டையும் அழித்துவிட்டனர். வன்னியில் பலவீடுகளின் புலிகளின் வீடுகள் புலிகளின் காணிகள் என்று சில காணிகளையும் வீடுகளையும் இராணுவத்தினர் அபகரித்துள்ளனர். ஆனால் அந்தவீடுகள் மக்களினுடயவை. புலிகள் தங்கியிருந்தார்கள் என்பதற்காக அவற்றை இராணுவத்தினர் தற்பொழுது அனுபவித்து மக்களை தெருவில் விட்டுள்ளனர்.

வன்னிப் போர் நடந்து கொண்டிருந்த பொழுது சில இடங்களைக் கைப்பற்றிய பொழுதும் பிரபாகரனின் வீடு என்றும் பிரபாகரனின் பதுங்கு குழி என்றும் இராணுவத்தினர் தொலைக்காட்சியில் அடையாளம் காட்டினர். பிரபாகரன் சொகுசான வீடொன்றில் வாழ்ந்தார் என்றும் அவர் வாழ்ந்த இடங்களில் மதுப்போத்தல்கள் எல்லாம் இருந்தன என்றும் கூட அவர்கள் சொன்னார்கள். அப்பொழுது பிரபாரகனின் வீடு ஒன்றைக் கைப்பற்றியதாக காட்ட வேண்டிய தேவை இராணுவத்திற்கிருந்தது. அவரது வீட்டில் மதுப்போத்தல்கள் கிடந்தன என்றும் சொல்ல விரும்பினார்கள். புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலுள்ள ஒரு வீட்டை பிரபாகரனின் குடும்பத்தினர் வாழ்ந்த வீடு என்றும் இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.

கொரில்லாக்களின் பதுங்கு குழி

கிளிநொச்சி நகரில் புலிகளால் வீழ்த்தப்பட்ட தண்ணீர் தாங்கிக்குள் பிரபாகரன் பதுங்கியிருந்தார் என அதை ஒரு கண்காட்சிப் பொருளாக மாற்றியிருந்தனர். அதைப் போலவே தற்பொழுது அழிக்கப்பட்ட முல்லைத்தீவு புதுக் குடியிருப்பில் உள்ள பதுங்குழியுடன் அமைந்த அந்த வீட்டையும் இராணுவத்தினர் கண்காட்சிப் பொருளாக மாற்றினர். தமது வெற்றியை களிப்பூட்டும் விடயமாக சிங்கள மக்களுக்கு காட்டுவதற்காக அதைமக்கள் பார்வையிடும் சுற்றுலாத் தளமாக அறிவித்தார்கள். இதனால் நாளும் பொழுதும் இங்கும் மக்கள் குவியத் தொடங்கினார்கள். இறுதியுத்தம் நடந்த முள்ளிவாய்க்காலுக்கு வரும்பொழுதெல்லாம் சிங்களமக்கள் தவறாமல் இந்தவீட்டைப் பார்த்துச் சென்றனர்.

குறித்தவீட்டின் கீழ் உள்ள பதுங்குகுழியின் அமைப்பை வைத்து அதன் உருவாக்கம் மிகவும் நுட்பமும் பாதுகாப்பும் கொண்டதொரு அமைப்பு என்று சொல்லப்படுகிறது. அந்த வீடு அமைந்துள்ளமண், சூழவுள்ள காடுகளின் தன்மை, வன்னியில் குறித்த இடத்தின் அமைவு முதலியவற்றைப் வைத்துப் பார்க்கையில் முக்கியமானதொரு பதுங்கு குழியாகவே உள்ளது. கொரில்லாப் போராளிகளின் பாதுகாப்பு மிக்க பதுங்கு குழி என்று சொல்லப்படுகின்றது. புலிகளின் முகாங்கள், பயிற்சிப் பாசறைகள் மட்டுமன்றி அன்றைய காலத்தில் மக்களின் வீடுகள் பலவும் பாதுகாப்பான பதுங்கு குழிகளுடன்தான் இருந்தது. சமாதான காலத்தில் வன்னிக்கு அனுமதிக்கப்பட்ட சீமெந்தினால் பலர் பாதுகாப்பான பதுங்கு குழிகளை நிர்மாணித்தனர்.

 

பிரபாகரனின் முகவரி

பிரபாகரன் எங்குவசித்தார் என்று அறிந்தவர்கள் ஒருசிலரே. ஆனாலும் ஒருகொரில்லாப் போராளி ஒருவீட்டில் வசிக்கக் கூடியவராகவும் அவரது வசிப்பிடம் என்பது ஒருவீடாக இருக்கும் என்றும் குறிப்பிடமுடியாது. 2009இற்கு முன்னரான காலத்தில் ஓமந்தைச் சோதனைச் சாவடியின் ஊடாகவும் முகமாலை சோதனைச் சாவடியின் ஊடாகவும் பயணிக்கும் வன்னிமக்களை இராணுவப் புலனாய்வார்கள் பிரபாகரனின் வீட்டைக் கண்டு பிடிப்பது தொடர்பில் தீவிரமாக விசாரித்தார்கள். வரிசையில் மேசை கதிரை போட்டு, வரும் மக்களை ஒவ்வொருவராக அழைத்து வன்னியில் எங்கு என்ன இருக்கிறது என்று கேட்டபார்கள். அத்துடன் முக்கியமாக பிரபாரகன் வசிக்கும் வீடுதெரியுமா? என்றும் கட்டாயமாகக் கேட்பார்கள். இறுதியுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனிடமும் அவர்கள் பிரபாகரனின் இருப்பிடத்தை கேட்டு சித்திரவதை செயதுள்ளனர்.

அன்றையகாலத்தில் பிரபாகரனுக்கு மக்கள் அறிய ஒருமுகவரி இருந்தது. அது: மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், தேசியத் தலைவர், தலைமைச ;செயலகம், தமிழீழம். இந்த முகவரிக்கு அன்று பலர் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்திற்கு பதில்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் பிரபாகரன் எங்கிருக்கிறார்? அவரது வீடுஎங்குள்ளது? அவருக்கு ஒருவீடு இருந்ததுதானா? என்றெல்லாம் அன்றுமக்கள் சிந்தித்தது இல்லை. வன்னியில் இருக்கிறார் என்று தெரியும். அதைத்தாண்டி பிரபாகரனின் வீடு எங்கிருக்கிறது என்றுவன்னியில் மக்கள் ஆராய்ந்ததும் இல்லை.

நினைவும் அரசியலும்

நினைவுகளையும் தடயங்களையும் அழிப்பது ஆக்கிரமிப்பளர்களின் திட்டமிட்ட செயற்பாடுகள். அதன் மூலம் அரசியல் ரீதியான, பண்பாட்டுரீதியான, வரலாற்றுரீதியான அழிப்பொன்றை அவர்கள் நிகழ்த்துகின்றார்கள். கடந்தகாலங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள், போராளிகளின் நினைவுத்தூபிகள், சிலைகள் எனபலவற்றை இராணுவத்தினர் அழித்துள்ளனர். அந்தக் கல்லறைகளும் நினைவுத்தூபிகளும் சிலைகளும் தமதுபிள்ளைகள் உறவுகள் எனநினைவு கூர்ந்தமக்களின் தீராதசாபத்திற்கு இராணுவமும் அரசும் உள்ளாகியுள்ளது. இப்பொழுது பிரபாகரனின் வீடு எனக் காட்டப்பட்டு ஒருவீட்டை இராணுவத்தினர் அழித்துள்ளதன் மூலம் இன்னமும் தீராத சாபத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமது அரசுக்காக கடுமையாக உழைத்த இராணுவத்தினர் அத் தேர்தலில் தோல்வியடைந்தனர். அந்ததோல்வியின் வெளிப்பாடாகவும் புலிகளின் அடையாளங்கள் தொடர்ந்து கொண்டாடப்படுவதற்கு எதிராகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பிரபாகரன் குறித்தும் புலிகள் குறித்தும் நாள் தோறும் சிங்கள இனவாத தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான சின்னங்களை இராணுவத்தினர் அழித்தல் என்பது சிங்கள இனவாத உளவியலில் உள்ளபயமே இவ்வாறு வெளிப்படுகின்றது.

ஒரு போராளியின் வாழ்க்கையில் இயல்பான வீடு ஒன்று இருக்க சாத்தியமில்லை. போராளிகள் வீடுகளை விட்டு களத்திற்குச் செல்கின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதில்லை. ஆனாலும் அவர்களுக்காக பலவீடுகள் திறந்தேயிருந்தன. எல்லாவீடுகளும் அவர்களுடைய வீடுகளாயிருந்தன. பிரபாகரனின் இருப்பிடம் நிரந்தரமாக இருந்தததில்லை என்றும் அது காலத்திற்கு காலம் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தது என்றும் போராளிகள் குறிப்பிடுகின்றார்கள். வன்னிப் பெருங்காடுகள்தான் பிரபாகரன் வசித்தவீடுகள். அவைதான் அவரது பதுங்குகுழிகள். பல்வேறு வாதப் பிரதிவாதங்கள், விமர்சனங்களுக்கு அப்பால், விரும்பியோ விரும்பாமலோ லட்சக்கணக்கான மக்களின் மன வீடுகளில் பிரபாகரனும், தாங்கள் வரித்துக் கொண்ட இலட்சியத்திற்காக உயிர் துறந்த ஆயிரக்கணக்கான போராளிகளும் வசித்தனர், வசித்துக்கொண்டு இருக்கின்றனர்.அந்த மன வீடுகளை அடையாளம் காணவும் முடியாது. அழிக்கவும் முடியாது.

தற்பொழுது அழிக்கப்பட்டது பிரபாகரன் வாழ்ந்த வீடுகளில் நிலத்தின் கீழாக அமைந்த 3 அடுக்கு வீடுதான் அது கற்களாலும், சீமெந்தினாலும் தளபாடங்களினாலும் ஆன ஒரு வீடுதான். அந்த வீட்டை அல்லது பிரபாகரன் பிறந்து, வாழ்ந்த வல்வெட்டித்துறை வீட்டை, அல்லது பிரபாகரன் நடமாடிய, வாழ்ந்த வீடுகள் என அடையாளப்படுத்தி இன்னும் பல வீடுகளை இராணுவத்தினர் அழிக்கலாம். மாவீரர் துயிலும் இல்லங்களை அழிக்கலாம், இன்னும் புலிகளின் அனைத்து நினைவுச் சின்னங்களையும் தேடி அழிக்கலாம். ஆனாலும் இந்த நூற்றாண்டில் வாழும் லட்சக்கணக்கான தமிழ்மக்களின் மனவீடுகளில் இருந்து பிரபாகரனினதும்,விடுதலைப் போரில் உயிர் நீத்த ஆயிரமாயிரம் போராளிகளினதும் அந்த நினைவுகளை அழிக்க முடியுமா?

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97463/language/ta-IN/article.aspx

Edited by கிருபன்

முடியுமா?முடியுமா?

பிரபாகரன் என்பது சிந்தனை செயல்வடிவம் என்பதை விட அது ஒரு ஆற்றல்... அவரின் ஆற்றலை மற்றவர்கள் உடலுக்குள்ளும் புகுத்தி விடும் அந்த ஆற்றல் எண்றும் மறக்கவோ மறக்கடிக்கவோ பட மாட்டாது...

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தி, உலகத்தில் ஒரு மகானாகப் பலரால் கருதப்படுபவர்!

 

அவரது 'மூக்குக் கண்ணாடியும், செருப்பும்' ஏலத்துக்கு வந்தபோது, இந்தியர்களிடம் கூட இருந்து பெறுமதியான கேள்விகள் வரவில்லை!

 

எனவே 'கண்ணாடி' என்பது முக்கியமல்ல! 

 

அந்தக் கண்ணாடியை அணிந்தவர் செய்த செயல்களே மக்கள் மனதில் வாழ்கின்றன!

 

ஆனா புத்தன் மட்டும், இந்த நியதிக்கு விதிவிலக்கு! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் அண்ணா, தலைப்பில் எழுத்துப்பிழை இருக்கு முடிந்தால் திருத்தி விடுங்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா, தலைப்பில் எழுத்துப்பிழை இருக்கு முடிந்தால் திருத்தி விடுங்கள். :)

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. தலைப்பு நீளமாக இருந்ததால் முழுமையாக வாசிக்கவில்லை! ஆனால் ஆக்கத்தைப் படித்திருந்தேன் :)
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அடிக்கடி சொய்யனும்.. அப்ப தான் தலைவரை மறக்க நினைக்கிறவங்களைக் கூட நினைக்க வைக்க முடியும். நன்றி சிங்களவா.! தமிழர்கள் கைவிட்டாலும்.. நீங்க தலைவரை கைவிடவே போறதில்லை..! :)

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் வீடு

தீபச்செல்வன்

deep3.jpg

வன்னியில் வாழ்ந்தவர்களுக்கு அநேகமாக நிரந்தரமான ஒரு வீடு இருந்ததில்லை. இடப் பெயர்வுகளால் அடிக்கடி வீடுகள் மாறிக் கொண்டேயிருந்தன. கொடும் யுத்தத்தின் தொடர் இடப் பெயர்வுகளால் ஒரு கட்டத்தில் வீடு என்பதே இல்லாமல் போய்விட்டது. வீடு அழிக்கப்பட்டு வீட்டை இழந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீடு ஒன்றைப் பற்றிய கனவோடு கடந்த பல வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறேன். யுத்த காலத்தில் புல்வெளிகளும் காடுகளும் மரங்களும் பதுங்குகுழிகளும்தான் எமது வீடுகளாக இருந்திருக்கின்றன. நாளுக்கொரு வீடு. காலத்திற்குக் காலம் பல வீடுகள். வீட்டுக்கொரு பதுங்குகுழி, ஆளுக்கொரு பதுங்குகுழி என்றுதான் எங்கள் வாழ்க்கை கழிந்திருக்கிறது. எல்லாப் படையெடுப்புகளும் எங்கள் வீடுகளை அழித்து மண்ணோடு மண்ணாக்கின. மீண்டும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட எல்லா வீடுகளும் மீண்டும் மீண்டும் படையெடுப்புகளில் அழிக்கப்பட்டன. மீண்டும் மீண்டும் பதுங்குகுழிகளை வெட்டினோம். ஒரு பதுங்குகுழி மூடுண்டுபோகும் காலத்தில் மீண்டுமொரு பதுங்குகுழி வெட்டிக்கொண்டோம். காடுகள் புல்வெளிகளுடன் பதுங்குகுழிகளும் அழிக்கப்பட்டன.

வீட்டை விட்டுப் பதுங்குகுழி, பின்னர் அதனையும் இழந்து இப்பொழுது வெறும் வெளிக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வீட்டை அழித்தல் என்பது வாழ்வை அழித்தல், சுவடுகளை அழித்தல், வரலாற்றை அழித்தல், வாழ்வின் கனவுகளை அழித்தல் என்று எல்லாவற்றையும் நிர்மூலமாக்கும் அழிப்பு நடவடிக்கையாகவே நிகழ்த்தப்படுகின்றன. இதுநாள் வரையில் நடந்த ஈழப்போரில் படையெடுப்புகளால் பல லட்சம் வீடுகள் அழிந்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் அபகரிக்கப்பட்டன. ஆட்கள் யாரும் திரும்பாத வீடுகள் இன்னமும் இருளும் சூன்யமும் வெறுமையும் நிரம்ப அழிந்து கொண்டிருக்கின்றன. வன்னிப் போரில் மாத்திரம் பல லட்சம் வீடுகள் அழிக்கப்பட்டன. 2009க்குப் பின்னர் எஞ்சியிருந்த சில வீடுகளில் தலைவர் பிரபாகரன் வசித்ததாகச் சொல்லப்படும் வீடும் ஒன்று. அதை வீடு என்பதைவிடவும் ஒரு பதுங்குகுழி என்றே சொல்ல வேண்டும்.

பிரபாகரன் பிறந்த வீடு

யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரன் பிறந்த வீடு இருந்தது. ஒருநாள் எனது நண்பன் ஒருவனுடன் வடமராட்சிக்குச் சென்றபொழுது அவன் தலைவர் பிரபாகரனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அப்பொழுது அந்த வீடு ஒரு வியப்பூட்டும் வீடாக சிங்கள மக்களால் பார்வையிடப்பட்டது. பிரபாகரனின் வீடு எங்கிருக்கிறது என்றும் அதைப் பார்க்க வேண்டும் என்றும் முதலில் படையெடுத்தது சிங்கள மக்கள்தான். போர் முடிந்த பின்னர் நாள் தோறும் வடக்கிற்குப் படையெடுக்கும் சிங்கள மக்கள் பிரபாகரன் பிறந்த வீட்டைப் பார்க்க திரண்டு கொண்டிருந்தார்கள். ஒரு யுகத்தின் முடிவில் அக்காலத்தின் போர்வீரன் ஒருவன் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அவர்களிடம் ஏற்பட்டது. பழையதொரு எளிமையான வீடு. நீண்ட நாட்கள் ஆட்கள் வசிக்காதிருந்தமையால் முற்றத்து மரங்கள், கிணற்றடி என்று எல்லாம் ஆட்களின் வாசம் படாமல் தூசு படிந்திருந்தது. சிங்கள மக்கள் அந்த வீட்டை ஒரு அதிசயமாகப் பார்த்ததுடன் பின்னர் பக்தி நிலைக்கும் வந்தார்கள். அந்த வீடு பிரபாகரன் குறித்து அவர்களுக்கு இருந்த எண்ணத்தை உணர்த்தியதாகவே தெரிந்தது. அந்த வீட்டிலிருந்து வருபவர்கள் ஒரு பிடி மண்ணை எடுத்துச் சென்றார்கள். வீட்டின் முன்பாகப் படம் பிடித்துக்கொண்டார்கள். சிங்கள மக்கள் அந்த இடத்திற்கு நாளும் பொழுதும் திரள்வதால் அந்த இடத்திற்கு இராணுவத்தினர் பாதுகாப்புக் கொடுத்தார்கள். துப்பாக்கி ஏந்திய இராணுவத்திரால், பாதுகாப்புக் கொடுக்கப்பட்ட அந்த வீடு ஒருநாள் தரைமட்டமாக அழிக்கப்பட்டது. பிரபாகரனின் தாயார் காலமாகிய நாளுக்கு சில நாட்கள் முன்பாக அந்த வீடு தரையோடு சாய்க்கப்பட்டிருந்தது. பிரபாகரனின் சடலத்தை மயானத்திற்குச் கொண்டு செல்லும்பொழுது அந்த வீடு தரையோடு அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.

பிரபாகனின் வீடு எங்கிருந்தது?

அண்மையில் வன்னியில் புதுக்குடியிருப்பில் பிரபாகரனின் வீடு என்று இலங்கை அரசாங்கம் காட்டி வந்த வீட்டைத் தகர்த்து அழித்திருக்கிறது. பாரிய பதுங்குகுழி ஒன்றைக் கொண்ட அந்த வீடு மூன்று மாடி களால் ஆனது. விடுதலைப்புலிகளின் அடையாளங்கள் இனியும் தேவையில்லை என்றே அந்த வீட்டைத் தகர்த்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரி வித்திருந்தார். வீடுகளைத் தகர்ப்பதில் பெயர்போன இலங்கை இராணுவத்தினர் பிரபாகரனின் வீடு என்ற பெயரில் அந்த வீட்டையும் அழித்துவிட்டனர். வன்னியில் புலிகளின் வீடுகள், புலிகளின் காணிகள் என்று சில காணிகளையும் வீடுகளையும் இராணுவத்தினர் அபகரித்துள்ளனர். ஆனால் அந்த வீடுகள் மக்களினுடையவை. புலிகள் தங்கியிருந்தார்கள் என்பதற்காக அவற்றை இராணுவத்தினர் தற்பொழுது அனுபவித்து மக்களைத் தெருவில் விட்டுள்ளனர்.

அதைப்போலவே இந்த வீடும் பிரபாகரனின் வீடுதானா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. வன்னிப் போர் நடந்து கொண்டிருந்தபொழுது சில இடங்களைக் கைப்பற்றிய பொழுதும் பிரபாகரனின் வீடு என்றும் பிரபாகரனின் பதுங்குகுழி என்றும் இராணுவத்தினர் தொலைக்காட்சியில் அடையாளம் காட்டினர். பிரபாகரன் சொகுசான வீடொன்றில் வாழ்ந்தார் என்றும் அவர் வாழ்ந்த இடங்களில் மதுப்போத்தல்கள் எல்லாம் இருந்தன என்றும்கூட அவர்கள் சொன்னார்கள். அப்பொழுது பிரபாகரனின் வீடு ஒன்றைக் கைப்பற்றியதாகக் காட்ட வேண்டிய தேவை இராணுவத்திற்கிருந்தது. அவரது வீட்டில் மதுப்போத்தல்கள் கிடந்தன என்று சொல்லவும் இராணுவத்தினர் விரும்பினார்கள். புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலுள்ள ஒரு வீட்டை பிரபாகரனின் குடும்பத்தினர் வாழ்ந்த வீடு என்றும் இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.

கொரில்லாக்களின் பதுங்குகுழி

 

deep2.jpg

கிளிநொச்சி நகரில் புலிகளால் வீழ்த்தப்பட்ட தண்ணீர் தாங்கிக்குள் பிரபாகரன் பதுங்கியிருந்தார் என அதை ஒரு கண்காட்சிப் பொருளாக மாற்றியிருந்தனர். அதைப்போலவே தற்பொழுது அழிக்கப்பட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள பதுங்குகுழியுடன் அமைந்த அந்த வீட்டையும் இராணுவத்தினர் கண்காட்சிப் பொருளாக மாற்றினர். தமது வெற்றியைக் களிப்பூட்டும் விடயமாக சிங்கள மக்களுக்குக் காட்டுவதற்காக அதை மக்கள் பார்வையிடும் சுற்றுலாத் தளமாக அறிவித்தார்கள். ஆனால் அந்த வீடோ புலிகளை நினைவுகூரும் இடமாக மாறியது.

இதனால் நாளும் பொழுதும் இங்கும் மக்கள் குவியத் தொடங்கினார்கள். இலங்கையின் அரசியல் நிலவரத்தால் மிகப் பெரும் இனப்படுகொலையின் பின்னரும் தொடர்ந்தும் புலிகள் நினைவுகூரப்படுவதும் அவர்கள் உன்னதப் போராளிகளாகவே கொண்டாடப்படுவதுமான நிலை தொடர்கிறது. அந்த நினைவுகள் பிரபாகரன் வசித்ததாகச் சொல்லப்படும் இந்த வீட்டிலும் இருந்தது. தமது வீரத்தின் அடையாளமாக காட்சிப் பொருளாக்கப் பட்ட வீடு புலிகளின் உன்னத இடமாக மாறியதன் காரணமாக அந்த வீட்டை அழித்துவிடவேண்டிய வெறியை இலங்கைப் படையினர் அடைந்தனர். குறித்த வீட்டின்கீழ் உள்ள பதுங்குகுழியின் அமைப்பை வைத்து அதன் உருவாக்கம் மிகவும் நுட்பமும் பாதுகாப்பும் கொண்டதொரு அமைப்பு என்று சொல்லப்படுகிறது. அந்த வீடு அமைந்துள்ள மண், சூழவுள்ள காடுகளின் தன்மை, வன்னியில் குறித்த இடத்தின் அமைவு முதலியவற்றைப் வைத்துப் பார்க்கையில் முக்கியமான தொரு பதுங்குகுழியாகவே உள்ளது. கொரில்லாப் போராளிகளின் பாதுகாப்பு மிக்க பதுங்குகுழி என்று சொல்லப்படுகின்றது. புலிகளின் முகாம்கள், பயிற்சிப் பாசறைகள் மட்டுமன்றி அன்றைய காலத்தில் மக்களின் வீடுகள் பலவும் பாதுகாப்பான பதுங்கு குழிகளுடன்தான் இருந்தது. சமாதான காலத்தில் வன்னிக்கு அனுமதிக்கப் பட்ட சீமெந்தினால் பலர் பாதுகாப்பான பதுங்குகுழிகளை நிர்மாணித்தனர்.

பிரபாகரனின் முகவரி

தலைவர் பிரபாகரன் எங்கு வசித்தார் என்று அறிந்தவர்கள் ஒரு சிலரே. ஆனாலும் ஒரு கொரில்லாப் போராளி ஒரு வீட்டில் வசிக்கக்கூடியவராகவும் அவரது வசிப்பிடம் என்பது ஒரு வீடாக இருக்கும் என்றும் குறிப்பிட முடியாது. 2009க்கு முன்னரான காலத்தில் ஓமந்தை சோதனைச்சாவடியின் ஊடாகவும் முகமாலை சோதனைச்சாவடியின் ஊடாகவும் பயணிக்கும் வன்னி மக்களை இராணுவப் புலனாய்வாளர்கள் பிரபாகரனின் வீட்டைக் கண்டுபிடிப்பது தொடர்பில் தீவிரமாக விசாரித்தார்கள். வரிசையில் மேசை கதிரை போட்டு வரும் மக்களை ஒவ்வொருவராக அழைத்து வன்னியில் எங்கு என்ன இருக்கிறது என்று கேட்பார்கள். அத்துடன் முக்கியமாக பிரபாகரன் வசிக்கும் வீடு தெரியுமா என்றும் கட்டாயமாகக் கேட்பார்கள். இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனிடமும் அவர்கள் பிரபாகரனின் இருப்பிடத்தைக் கேட்டு சித்ரவதை செய்த பின்னரே கொலை செய்தனர். அன்றைய காலத்தில் தலைவர் பிரபாகரனுக்கு மக்கள் அறிய ஒரு முகவரி இருந்தது. அது: மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், தேசியத் தலைவர், தலைமைச்செயலகம், தமிழீழம். இந்த முகவரிக்கு அன்று பலர் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்திற்கு பதில்கள் கிடைத்திருக்கின்றன. அதைத்தவிர பிரபாகரன் எங்கிருக்கிறார்? அவரது வீடு எங்குள்ளது? அவருக்கு ஒரு வீடு இருந்ததுதானா? என்றெல்லாம் அன்று மக்கள் சிந்தித்தது இல்லை. வன்னியில் இருக்கிறார் என்று தெரியும். எங்களுடன் இருக்கிறார் என்று தெரியும். அதைத்தாண்டி பிரபாகர னின் வீடு எங்கிருக்கிறது என்று வன்னியில் மக்கள் ஆராய்ந்தது இல்லை. அதுதான் மக்களைக் காக்கப் போராடும் ஒரு போராளிக்கு மக்கள் வழங்கிய பாதுகாப்பு.

நினைவும் அரசியலும்

 

deep1.jpg

 

நினைவுகளையும் தடயங்களையும் அழிப்பது ஆக்கிரமிப்பாளர்களின் திட்டமிட்ட செயற்பாடுகள். அதன்மூலம் அரசியல் ரீதியான பண்பாட்டு ரீதியான, வரலாற்று ரீதியான அழிப்பொன்றை அவர்கள் நிகழ்த்துகின்றார்கள். கடந்த காலங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள், போராளிகளின் நினைவுத்தூபிகள், சிலைகள் என பலவற்றை இராணுவத்தினர் அழித்துள் ளனர். அந்தக் கல்லறைகளும் நினைவுத்தூபிகளும் சிலைகளும் தமது பிள்ளைகள், உறவுகள் என நினைவுகூர்ந்த மக்களின் தீராத சாபத்திற்கு இராணுவமும் அரசும் உள்ளாகியுள்ளது. இப்பொழுது பிரபாகரனின் வீடு எனக் காட்டப்பட்டு, ஒரு வீட்டை இராணுவத்தினர் அழித்துள்ளதன் மூலம் இன்னமும் தீராத சாபத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது அரசுக்காகக் கடுமையாக உழைத்த இராணுவத்தினர் அத் தேர்தலில் தோல்வியடைந்தனர். அந்தத் தோல்வியின் வெளிப்பாடாகவும் புலிகளின் அடையாளங்கள் தொடர்ந்து கொண்டாடப்படுவதற்கு எதிராகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பிரபாகரன் குறித்தும் புலிகள் குறித்தும் நாள்தோறும் சிங்கள இனவாதத் தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான சின்னங்களை இராணுவத்தினர் அழித்தல் என்பது சிங்கள இனவாத உளவியலில் உள்ள பயத்தையே வெளிப்படுத்துகின்றது.

தற்பொழுது அழிக்கப்பட்டது பிரபாகரனின் வீடு தானா என்பதை இன்றும் இலங்கை அரசப் படைகளால் நிரூபிக்க முடியவில்லை. ஒரு போராளியின் வாழ்க்கையில் இயல்பான வீடு ஒன்று இருக்க சாத்தியமில்லை. போராளிகள் வீடுகளை விட்டுக் களத்திற்குச் செல்கின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வ தில்லை. ஆனாலும் அவர்களுக்காகப் பல வீடுகள் திறந்தேயிருந்தன. எல்லா வீடுகளும் அவர்களுடைய வீடுகளாயிருந்தன. பிரபாகரனின் இருப்பிடம் நிரந்தரமாக இருந்ததில்லை என்றும் அது மிக மிக எளிமையானது என்றும் போராளிகள் குறிப்பிடுகின்றார்கள். வன்னிப் பெருங்காடுகள்தான் பிரபாகரன் வசித்த வீடு. அவை தான் அவரது பதுங்குகுழி. பிரபாகரனின் வீட்டை அடை யாளம் காணவும் முடியாது, அழிக்கவும் முடியாது.

இலங்கையின் அரசியல் நிலவரங்களும் வடக்கு- கிழக்கில் மேற்கொள்ளப்படும் ராஜபக்சே அரசின் நடவடிக்கைகளும் மீண்டும் மீண்டும் பிரபாகரன்களை உருவாக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழினத்திற்காக ஆயுதம் ஏந்திய பிரபாகரனின் நினைவுகளை எப்படி அழிக்க முடியும்? தொடர்ந்தும் ஈழ மண்ணில் ஒடுக்குமுறைகள் தொடர்கையில் அந்த நினைவுகள் இன்னும் கிளர்ந்தெழுமே தவிர, ஒருபொழுதும் பிரபாகரன் வசிக்கும் மன வீடுகளை அழிக்க முடியாது.

http://www.uyirmmai.com/Contentdetails.aspx?cid=6408

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.