Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் சீ கப்பல் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் மர்மமாக மரணம் – கனேடிய நாளிதழ் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சன் சீ கப்பல் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் மர்மமாக மரணம் – கனேடிய நாளிதழ் தகவல்
[ வியாழக்கிழமை, 10 ஒக்ரோபர் 2013, 01:14 GMT ] [ தா.அருணாசலம் ]


கனடாவுக்கு சன் சீ கப்பலில் 492 அகதிகளை ஏற்றி அனுப்ப ஒழுங்கு செய்தவர் என்று சந்தேகிக்கப்படுபவர், யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டு விட்டதாக, கனேடிய நாளிதழான நசனல் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது.

சத்தியபவன் ஆசீர்வாதம் என்ற குறிப்பிட்ட சந்தேக நபர், கடந்த செப்ரெம்பர் 6ம் நாள் யாழ்ப்பாணத்தில் துயரமான சூழலில் இறந்து விட்டதாக, உதயன் நாளிதழில் வெளியான மரண அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

சத்தியபவன் ஆசீர்வாதத்தின் வன்கூவர் சட்டவாளர், கப்ரியேல் சன்ட், இவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் அவர் கொல்லப்பட்டு விட்டதாகவும், எவ்வாறு நடந்தது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சன் சீ கப்பலில் ஆட்களை கனடாவுக்கு கடத்தியது தொடர்பான வழக்கில், ஆசீர்வாதம் உள்ளிட்ட ஆறு பேர் மீது கனேடிய காவல்துறை குற்றம்சாட்டியது.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட முன்னர், சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

இவர் மீது கனடாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய கனேடிய காவல்துறை பேச்சாளர், அவர் இறந்து விட்டார் என்பதை நம்புவதற்கு காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரொறன்ரோ குடிவரவு ஆலோசகரான, நாகேந்திரா செல்லையா, ஆசீர்வாதம் உந்துருளி ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, பாரஊர்தி ஒன்று அவரை மோதிவிட்டு மறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்க எதிர்ப்பாளர்கள் இதுபோன்று மரணமாவது வழக்கத்துக்கு மாறானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது பொதுவானதே. அரசாங்கத்துக்கு எதிராக பேசுவோருக்கு விபத்துகள் நேர்வதும், வாகனங்கள் மோதி மரணமாவதும், சிறிலங்காவில் வழக்கமானது தான்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20131010109228

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் அகதிகள் என்று பெரிய படமே காட்டினார்கள் இங்கு..

அவரது ஆன்மா அமைதி பெறட்டும்..!

சூசையின் சகோதரனின் இறப்பும் மூடி மறைக்கப்பட்ட ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
அவர் உயிரோடு தான் இருப்பார்[இருக்க வேண்டும்].கேசில் இருந்து தப்ப இப்படி எல்லாம் சொல்லத் தானே வேண்டும்.அது ஒன்றும் தப்பில்லை
 
 

 

அவர் உயிரோடு தான் இருப்பார்[இருக்க வேண்டும்].கேசில் இருந்து தப்ப இப்படி எல்லாம் சொல்லத் தானே வேண்டும்.அது ஒன்றும் தப்பில்லை

 

நன்றி! விபரத்தை விளங்கப்படுத்தியதற்கு.

 

எங்கே முள்ளிவாய்க்கால் 150,000 ஒடு. 150,000+1  = 150,001 ஆக்கிகிட்டார்கலோ என்று கவலையாக இருந்த்தது. இப்ப சந்தோசம்.

 

<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.