Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏற்கனவே வெளியிடப்பட்ட வடமாகாண சபை அமைச்சரவை விபரங்களை TNA உறுதி செய்தது.

Featured Replies

 
10 அக்டோபர் 2013
 
lg-share-en.gif
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை இணைக்கப்பட்டு உள்ளது.

 

 

வடமாகாண சபை

அமைச்சர்களும் அமைச்சுக்களும்

எமது உறுப்பினர்களிடம் இருந்து அவர்களின் தகைமைகள,;

அனுபவங்கள், விருப்பங்கள் சம்பந்தமாக தரவுகளைப்

பெறக்கால தாமதம் ஆகிவிட்டதால் எமது அமைச்சர்களையும்

அமைச்சுக்களையும் அடையாளம் காணவுந் தாமதம்

ஏற்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஒருவரின் தரவுகள் இன்னுங் கூட கிடைத்தபாடில்லை! எமது கூட்டமைப்பின் மூன்று கட்சிகள் தமது அமைச்சர் விருப்புகளைத் தெரிவித்திருந்தன. எனினுஞ் சகல உறுப்பினர்களும் ஒரேமாதிரியான தேர்வுக்கே உட்படுத்தப்பட்டனர்.

போருக்குப்பின்னரான சூழலை கருத்திற்க்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள்,

விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றுள்ளது. ஆட்சித்திறனுக்கு அடிகோலுபவை தகைமையும் திறமையும் ஆவன. எமது மக்களின் நம்பிக்கையை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இவற்றையே அத்திவாரமாகக் கொண்டு தேர்வு நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சியாக இதுகாறும் இருந்து தற்போது ஆட்சியில் ஈடுபட அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நாம் எமது நோக்குகளில் அடிப்படை வித்தியாசத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். அத்துடன் மக்கள் எமக்களித்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டையுங் கொண்டுள்ளோம்.

2

எனினும் குறிப்பிட்ட அளவு அமைச்சர்களையே சட்டப்படி நாங்கள் நியமிக்க வேண்டியிருந்தது. பலருக்குத் தகைமையிருந்தும் சிலருக்கே அமைச்சுப் பதவிகள் கொடுக்கக்கூடியதாக இருந்தது. அப்படியிருந்தும் பிரதேச பிரதிநிதித்துவம், கட்சியடிப்படை, நிர்வாகப்பொறுப்புக்களின் அந்நியோன்யம் ஆகியனவுங் கருத்திற்கெடுக்கப்பட்டன. மக்களின் ஆதரவைப்பெற்ற கட்சிகளுக்கு உரிய முன்னுரிமையும் அளிக்கப்பட்டது. இவ்வாறான அடிப்படையிலேயே அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அதே நேரம் எந்த ஒரு உறுப்பினருக்குங் குறிப்பிட்ட அமைச்சுத் துறை சார் பொறுப்புக்கள் கொடுக்கப்படாமல் விடுபடவும் இல்லை. அவர்கள் அந்தந்த அமைச்சின் குறிப்பிட்ட துறைசார் பொறுப்புக்களை ஏற்று அமைச்சர்களின் மேற்பார்வையின் கீழ் செயற்படுவார்கள்.

விடுபட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் அந்தந்த அமைச்சர்களால் நேரடியாகவே கண்காணிக்கப்படுவன.

குறிப்பிட்ட பொறுப்புக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் சில பொது ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டே செயலாற்ற வேண்டியிருக்கும். அவையாவன:-

1. காலத்திற்குக் காலம் பொறுப்புள்ள தலைமை அலுவலருடன் சேர்ந்து குறிப்பிட்ட அமைச்சின் ஊடாக ஆற்றப்படும் காரியங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்தல் வேண்டும்.

2. அதேபோல் அவ்வந்த அமைச்சரினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களின் நன்மைதீமைகள், பயன்கள், விளைவுகள் ஆகியன தொடர்ந்தும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

3. இருமாதங்களுக்கு ஒருமுறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்குந் தமது கருத்துக்களை மேற்படி உறுப்பினர்கள் எழுத்து மூலம் தெரியப்படுத்தி வரவேண்டும். இவற்றை விட சில நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டி இருக்கும். அவை பின்னர் அறிவிக்கப்படுவன. அமைச்சர்கள்,

அமைச்சுக்கள், பொறுப்பான விடயங்கள், பொறுப்பானவர்கள் போன்ற விபரங்கள் பின்வருமாறுசபையின்

தவிசாளர்- திரு.சி.வீ.கே.சிவஞானம் அவர்கள்

இ.த.அ.கட்சி யாழ்ப்பாணம்

சபையின் பிரதி தவிசாளர்- திரு.அன்ரன் ஜெயநாதன் அவர்கள் இ.த.அ.கட்சி முல்லைத்தீவு

முதலமைச்சர்- நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பொது வேட்பாளர் யாழ்ப்பாணம்

வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர்-

திரு.பி.ஜங்கரநேசன் அவர்கள் ஈ.பீ.ஆர்.எல்.எஃப் யாழ்ப்பாணம்

கல்வி, கலாச்சார, அமைச்சர்- திரு.தி.குருகுலராஜா அவர்கள்

இ.த.அ.கட்சி கிளிநொச்சி

சுகாதார அமைச்சர்- வைத்திய கலாநிதி.பி.சத்தியலிங்கம் அவர்கள் இ.த.அ.கட்சி வவுனியா

4

மீன்பிடி, போக்குவரத்து, கிராமஅபிவிருத்தி அமைச்சர்- திரு.டெனீஸ்வரன்

அவர்கள் ரெலோ மன்னார்

கட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விபரம்

பின்வருமாறு-

 இலங்கைத்தமிழரசுக்கட்சி -14

 ஈ.பீ.ஆர்.எல்.எஃப் -06

 ரெலோ -05

 புளொட் -02

 ரி.யு.எல்.எஃப் -01

 நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம -01;

 பொது வேட்பாளர் -01

மொத்தம் -30

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாவிடினும் பிரதித் தவிசாளர் பதவியிலிருக்கும் திரு.அன்ரன் ஜெயநாதன் அவர்களுக்கு முக்கியமான துறைப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலதிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.அயுப்அஸ்மீனுக்கும் அப்பொறுப்புக்களில் குறிப்பிட்ட விடயங்களில் பங்கேற்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதலமைச்சருடன் சேர்ந்து கடமையாற்றுவார்கள். முல்லைத்தீவு மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பது கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சுப்பதவிகள் மீள்பரிசீலனை செய்யப்படும் போது முல்லைத்தீவுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படுவதானது முன்னுரிமை பெறும்.

5

அமைச்சர்கள் ஒவ்வொருவரின் கீழும் பிரித்தொதுக்கப்பட்ட துறை சார்ந்த விபரங்கள் கீழே ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. அவற்றைக் குறிப்பிடும் அரசியல் யாப்பு சான்றாதாரமுந் தரப்பட்டுள்ளன. வடமாகாணசபை மற்றைய மாகாண சபைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பது எனது விருப்பம். இனியாவது கட்சி பேதங்களை மறந்து, வன்முறைகளைக் களைந்து, ஜனநாயக அடிப்படையில் பாதிப்புற்றிருக்கும் எம் மக்களின் இடர் களையப் பாடுபடுவோமாக!

 வட மாகாண சபை அமைச்சரவை குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குளோபல் தமிழ்ச் செய்திகளில் வெளியான செய்தி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆயினும் குளோபல் தமிழ்ச் செய்திகள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்ட அமைச்சரவையே தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக வெளியிட்ட அமைச்சரவையும் ஆகும் என்பதனை கீழ் உள்ள முதலம் இணைப்பில் உறுதி செய்து கொள்ள முடியும்.

நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நீண்டநாட்களாக இழுபறியிலிருந்த மேற்படி அமைச்சரவைத் தெரிவு, தற்போது இறுதியான தீர்மானத்திற்கு வந்துள்ளது. 

இந்த நிலையில் 

கல்வி அமைச்சராக தம்பிராஜா குருகுலராஜா, 

சுகாதார அமைச்சராக பத்மநாதன் சத்தியலிங்கம், 

விவசாய அமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன், 

உள்ளூராட்சி அமைச்சராக பாலசுப்பிரமணியம் டேனிஸ்வரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், அவைத் தலைவராக கந்தையா சிவஞானம், 

பிரதி அவைத் தலைவராக அன்ரனி ஜெகநாதன் 

ஆகியோர்; தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளாத நிலையில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

globaltamilnews

TNAயின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக் கட்சியின் அமைச்சரவையே- நாளையஅமர்வை ஏனையகட்சிகள் பகிஸ்கரிக்குமா?
10 அக்டோபர் 2013
 
lg-share-en.gif
 
Suresh_Premachandran_CI.jpg

நாளைய அமர்வை ஏனைய கட்சிகள் பகிஸ்கரிக்குமா?

 

 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக்கட்சியின் அமைச்சரவையே. அதனை பங்காளிக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரவை முடிவு தொடர்பாக கூட்டமைப்பின் பேரினி விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பொய்யானது. அது வெறுமனே சிலவேளைகளில் தமிழரசுக்கட்சியினது அமைச்சரவையாக இருக்கலாம் எனவும் இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார். 
 
இதனிடையே நாளைய அமைச்சரவை பதவியேற்பு மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வுகளை தங்கள் கட்சி பகிஸ்கரிக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இன்றிரவு தமது கட்சியின் மத்திய குழு ஒன்று கூடி முடிவெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
 
அதே வேளை தங்கள் சகோதரர் சர்வேஸ்வரனிற்கு அமைச்சு கோருவதாக வெளியிடப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த அவர் அதற்காக சர்வேஸ்வரன் தகுதிகளை கொண்டிருக்கவில்லை என அர்த்தப்படாதெனவும் தெரிவித்தார். தங்கள் கட்சியின் நிலைப்பாடாக முல்லைத்;தீவில் தொடரும் நில ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்ற திட்டங்கள் தொடர்பாக பேசுவதற்கு ஏதுவாக தமது கட்சிக்கு அமைச்சரவை வழங்கப்பட்டால் அது முல்லைதீவில் தெரிவானவர்களிற்கே வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே சம்பந்தனிடம் தெரிவித்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதனிடையே தமது கட்சியை சேர்ந்த பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுப்பதான அறிவிப்பு வெளியிலிருந்து கட்சிகளை உடைக்குமொரு தமிழரசுக்கட்சியின் சதியே எனவும் அவர் தெரிவித்தார்.
 
வடமாகாண சபை அமைச்சரவை விபரம் எனக்கூறி பட்டியலொன்று நேற்று மாலையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. அதில் பொன்னுத்துரை ஜங்கரநேசன் விவசாய அமைச்சராகத் தெரிவு செய்யப்படடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் 'ஐங்கரநேசன் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டது தமிழரசுக் கட்சியின் முடிவு மட்டுமே என்பதுடன், அது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சம்மதத்துடன் நடைபெறவில்லை' எனவும் சுரேஸ் மேலும் தெரிவித்தார்

globaltamilnews

Edited by Gari

ஆமா ஐங்கரநேசனுக்கு  பதவி கொடுக்காமல் எனுடைய சகோதிரருக்கு குடுக்கவேண்டும். இல்லாவிடில் நான் உங்களை சர்வாதிகாரிகள் என்று வர்ணிப்பேன். நான் மண்டையன் குழுவின் தலைவராக இருந்து போதித்த ஜனநாயகம் பற்றி இந்த சர்வாதிகார கூட்டமைப்புக்கு என்ன தெரியும்.

 

நீஙககளும் செல்வினும் சர்வசேவரணை போட பாட்டபாடு எங்களுக்கு நல்ல தெரியும். சும்மா புளுடா விதத்தையுங்கோ. எத்தனை வருசத்துக்கு எங்களை ஏமாற்றிக்கொண்டு நீங்கள் இருக்கலாம். 

இவரை நம்பக்கூடாது .  இந்திய கூலிப்படையின் காலத்தை நினைவு படுத்துகிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒன்றுமில்லாத அமைச்சரவைக்கு இந்தளவு இழுபறி
இத்தனை நீளமான அறிக்கை
நிலைமை கவலைக்கிடம் ஆனால் கூட்டமைப்புத்  தேறிவிடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.