Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறி வரும் வடக்கு – விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்.

Featured Replies

வட மாகாணத்தில் பாலியல் தொழில் மிகுந்த முனைப்புடன் வளர்ச்சியடைந்துள்ளதாக ஐ.ஆர்.ஐ.என். தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னைய யுத்த வலயத்தின் பெரும்பான்மையான பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றனர்.

யுத்ததினால் கணவனை இழந்த, காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட பல பெண்கள் குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

போதியளவு வாழ்வாதார வழிகள் இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வடக்கில் சுமார் 7000 பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தில் கணவனை இழந்த அல்லது காணாமல் போன பல குடும்பத் தலைவிகள் விருப்பிமின்றியேனும் பாலியல் தொழிலை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

2012ம் ஆண்டு அரசாங்க மதிப்பீடுகளின் அடிப்படையில் வடக்கில் 59000 குடும்பங்களுக்கு பெண்கள் தலைமை தாங்குகின்றனர்.

தங்களது கணவர், சகோதரர், தந்தைமார் சுமந்த பொருளாதாரச் சுமையையே இவர்கள் இவ்வாறு சுமக்கின்றனர்.

வறுமை மற்றும் வாழ்வாதார வழிகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட தன்மை பெண்களை வர்த்தக ரீதியான பாலியல் தொழில் நோக்கி உந்துகின்றது.

வடக்கில் அதிகளவில் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருப்பதும், அபிவிருத்திப் பணிகளுக்காக அதிகளவான தெற்கைச் சேர்ந்த ஆண்கள் வடக்கை நோக்கி நகர்ந்துள்ளதும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட களம் அமைத்துக் கொடுள்ளது என பாலியல் தொழிலாளர் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் தலைவி விசாக தர்மதாச தெரிவித்துள்ளார்.

யுத்த நிறைவைத் தொடர்ந்து அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் வடக்கை நோக்கிச் சென்று தங்களது சொந்தங்களை பார்வையிட்டு வருவதாகவும் இதுவும் வர்த்தக ரீதியான பாலியல் தொழில் சூடுபிடிக்க மற்றுமொரு ஏதுவாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான ஜாதி மற்றும் வகுப்புக் கலாச்சாரத்தை கொண்டமைந்த வடக்கில் பாலியல் தொழில் தீண்டத் தகாத விடயமாக காணப்பட்டு வந்தது.

எனினும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அதிகளவான ஆண்களை குடும்பங்கள் இழக்க நேரிட்டதனால் சமூக கலாச்சார கட்டுப்பாடுகள் களையப்பட்டு, பாலியல் தொழிலை அங்கீகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

கல்வி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை மாறி இன்று பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் இன்னமும் பாலியல் தொழில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை.

பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் விவகாரத்தை சமூக் காரணிகளுக்காக தொடர்ந்தும் மூடி மறைப்பது பொருத்தமாகாது என மன்னார் மகளிர் அபிவிருத்தி மையத்தின் ஸ்தாபகர் செரீன் தாருர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான வருமான வழிகளை அமைத்துக்கொடுப்பதன் மூலம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதனை தடுக்க முடியும் என யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி மையத்தின் தலைவி சரோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வேறும் தொழிலில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு வேறு வழிகிடையாது என தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பாதுகாப்பான பாலுறவு தொடர்பில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என சமூக சேவைகள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97558/language/ta-IN/article.aspx

புலத்தில இருந்து அரசியல் கட்சிகளையும் தேர்தல்களையும் விமர்சித்து எமக்கு விரும்பிய அல்லது சார்புபட்ட கருத்துக்களை மாத்திரம் தூக்கிப்பிடியுங்கோ. அப்ப இதெல்லாம் நல்லா நடக்கும்.

 

நீங்களும் விடுமுரைக்குப்போனால் போய்வர நல்ல இடங்களும் இருக்கும்.

 

அதனால குழப்புங்கோ... 

 

 

இதெல்லாம் அங்கிருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும், அதுக்கு ஒரு கட்டமைப்பு முக்கியம். 

இந்தக்கட்டமைப்பை புலிகள கூட இடைக்கால நிர்வாகமேன்று நினைத்தார்கள் கேட்டார்கள்.

 

இந்த மாகாணசபையை ஏன் அப்படி ஒன்றாக நோக்கமுடியாது? 

 

ஈழம் அழியாக்கனவு அது வரைக்கும் இதுக்குமேல் இழக்க முடியாது. இதுக்குமேல் இழந்தால் ஈழமே இருக்காது.

 

  • கருத்துக்கள உறவுகள்

போர் விட்டுச் செல்லும் ஒரு சமூகத்தினை தக்க முறையில் கையாளத் தெரியாத தமிழர்களின் முட்டாள் தனமே இந்த நிலைக்குக் காரணம். போர் நடந்த போது பெரும் பொருண்மிய நெருக்கடிகள்.. பெரும் இடம்பெயர்கள் இருந்த போது நடக்காத இத்தொழில் இன்று கொடிகட்டுது என்றால்.. அதுவும் சிங்களத்தின் சிவில் நிர்வாகம் உள்ள நிலையில் கொடி கட்டுத்து என்றால் அதற்குக் காரணம்.. சிங்களம் இதனையும் தமிழினத்தை அழிக்க ஒரு கருவியாகப் பாவிப்பதே ஆகும்..!

 

வடக்குக் கிழக்குக் கல்விச் சமூகமும்.. புலம்பெயர் சமூகம் கூட்டுச் சேர்ந்து ஒரு பொது அமைப்பை உருவாக்கி அதன் கீழ் உதிரிகளாகச் செயற்படும் எல்லோரையும் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து.... போரால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான சமூக வாழ்வுக்குள் கொண்டு வர சர்வதேச அமைப்புக்களோடு இணைந்து பணியாற்றினால் அன்றி.. இதற்கு முடிவு கட்டுவது அவ்வளவு இலகு அல்ல.

 

குடும்பத் தலைவனை இழந்த.. அல்லது குடும்பத் தலைவன் காணாமல் போகடிக்கப்பட்ட.. போரால் தனித்து விடப்பட்ட பெண்கள் மீது விசேட அக்கறையும்.. கவனிப்பும் வந்தால் அன்றி.. அவர்களின் இந்த அவல வாழ்வு தொடர்வதோடு.. இது ஒட்டுமொத்த தமிழினத்தையும் சீரழிக்கும் கைங்கரியமாகவும் மாறும்.. அல்லது சிங்களப் பேரினவெறியர்களால்.. மாற்றப்படும்.

 

மேலும் தாயகம் செல்லும் புலம்பெயர் ஆட்கள் குறித்தும் ஒரு கண்காணிப்பு அவசியம். தாயகம் வரும் சிங்கள ஆண்கள்.. இராணுவத்தினர்.. மற்றும் தொழிலாளர்கள் மீது கடும் கண்காணிப்பு அவசியம். அனைத்து உல்லாச விடுதிகளுக்கும் கடும் சட்டதிட்டத்தை அமுல்படுத்த கோருவதோடு.. கடும் கண்காணிப்பு அவர்களை நோக்கிச் செய்யப்படனும்.

 

அமைந்துள்ள வடக்கு மாகாண சபையாவது இதைச் செய்ய முன்வரனும். பதவிக்கு.. அங்கத்துவத்திற்கு அடிபடும் நிலையை தவிர்க்கனும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

 

வடக்குக் கிழக்குக் கல்விச் சமூகமும்.. புலம்பெயர் சமூகம் கூட்டுச் சேர்ந்து ஒரு பொது அமைப்பை உருவாக்கி அதன் கீழ் உதிரிகளாகச் செயற்படும் எல்லோரையும் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து.... போரால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான சமூக வாழ்வுக்குள் கொண்டு வர சர்வதேச அமைப்புக்களோடு இணைந்து பணியாற்றினால் அன்றி.. இதற்கு முடிவு கட்டுவது அவ்வளவு இலகு அல்ல.

 

 

அமைந்துள்ள வடக்கு மாகாண சபையாவது இதைச் செய்ய முன்வரனும். பதவிக்கு.. அங்கத்துவத்திற்கு அடிபடும் நிலையை தவிர்க்கனும்..! :icon_idea:

நல்லது நெடுக்கு.

 

நீங்கள் எப்பவுமே எதிர் கருத்து எழுதுபவர் என்றொரு அபிப்பிராயம் இங்கு யாழில் அதிகள் இருக்கு.

 

உங்கள் கருத்துக்கும் எதிராக இந்த மாகாணசபை கட்டமைப்பை பயன்படுத்தி என்று நீங்கள் அவர்களையும் உள்வாங்கி ஒரு கருத்தை சொன்னிர்கள்.

 

மாகான சபை கட்டமைப்பு இப்போது ஒரு முக்கிய கட்டமைப்பு இதை சரிவர பயன் படுத்தாமல் போனால்.

 

வியட்னாம், மற்றும் கம்போடியா போன்ற ஒரு அவலத்தை கலாச்சார சீரழிவை தமிழ் சமூகம் சந்திப்பதை தவிர்க்க முடியாது. 

 

எது எப்படியோ யார் குத்திஎண்டா என்ன யாழில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும். அதில் இருந்து பல படிகள் மேலே போகவேண்டி இருந்தாலும் இது முதல் படி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின் ஆங்கில மூலம் என்ன? இணைப்புக் கிடைக்குமா?

 

கேந்திர நிலையம் என்றால் என்ன? Strategic Location தானே. பாலியல் தொழிலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேந்திர நிலையம்,Strategic Location என்றெல்லாம் குழப்பக்கூடாது. இதெல்லாம் சிங்கள ஏகாதிபத்தியம், மற்றும் அடிவருடிக் கும்பலால் ஏற்பட்ட விளைவுகள். நாடு கடந்த தமிழீழ அரசின் பொருண்மிய மேலாண்மைத்துறை அமைச்சரின் கவனம் இந்த விஷயத்தில் சென்றுள்ளது. அமைச்சர் அவர்கள் விரைவில் ஆவன செய்வார். அதுவரை பொறுமை காக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.