Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுடெல்லி அனைத்துலக ஊடக கருத்தரங்கில் வெடித்த பாலச்சந்திரன் படுகொலை விவகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லியில், நடந்த ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்தும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

புதுடெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு, ஏஜேகே தொடர்பாடல் ஆய்வு நிலையம், அமைதிக்கும், முரண்பாட்டுத் தீர்வுக்குமான நெல்சன் மண்டேலா நிலையம் என்பன இணைந்து ஊடகவியலாளர்களுக்கான இரண்டுநாள் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தன.

இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, ஈரான், மலேசியா, பங்களாதேஸ், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, பூட்டான், மாலைதீவு, நேபாளம் ஆகிய 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள், இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இதில் கருத்து வெளியிட்ட, உலகளவில் பிரபலமான, தி எக்கனமிஸ்ட் இதழின், தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான, அடம் றொபேட்ஸ் உரையாற்றும் போது, 2009 மே மாதம், போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான, 12 வயதான பாலச்சந்திரனை, சிறிலங்கா இராணுவத்தினரே, படுகொலை செய்ததாக குற்றம்சாட்டினார்.

குற்றவாளிகளான, சிறிலங்காப் படையினர், படுகொலைகளை நிறைவேற்றிய காணொலிக்காட்சிகளை வெளியிடாதிருந்தால், போரின் முடிவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்றும் அடம் றொபேட்ஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியை தளமாக கொண்டு செயற்படும், பிரித்தானிய ஊடகவியலாளரான, அடம் றொபேட்ஸ், அண்மையில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், அழைத்துச் சென்ற இந்திய ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

அவர் அண்மைய வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து, இந்தக் கருத்தரங்கில் குறிப்பிடுகையில், அண்மையில் மாகாணசபைத் தேர்தலை குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த போது, யாழ்ப்பாணத்தில் வாழும் சாதாரண தமிழ்மக்களிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்ததாகவும், அவர்கள் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு குறித்த அச்சத்துடன் வாழ்வதாகவும் தெரிவித்தார்.

சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களை செவ்வி கண்டதன் அடிப்படையில், 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த போதிலும், முரண்பாடுகள் தீரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.worldtamils.com/?p=91200

  • கருத்துக்கள உறவுகள்
, 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த போதிலும், முரண்பாடுகள் தீரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உந்த வெள்ளைகளின் அறிக்கைகளை நாங்கள் கண்டு கொள்ளக்கூடாது ......யாழ்ப்பாணம் அந்தமாதிரி இருக்கு இப்ப... Milk & Honey அந்தமாதிரி ஓடுது :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை அழிப்பதற்கு எங்கே ஒரு துரும்பு கிடைத்தாலும் அதனைத் தூணாக்கிவிடுகிறான் சிங்களவன்.  அழிவிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எங்கே ஒரு தூண் கிடைத்தாலும் அதனைத் துரும்பாக்கிவிடுகிறான் தமிழன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.