Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் வரலாறு

Featured Replies

2004 டிச.26. பூகம்பத்தாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும், சுனாமி எனப்படும் பேரலைகளால் இந்தியப் பெருங்கடல் பகுதிகளை ஒட்டிய பலநாடுகளின் கடற்கரைப் பிரதேசங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. பேரலைகளால் இத்தகு அழிவைச் சந்திப்பது இந்தியா போன்ற நாடுகளுக்குப் புதிது என்றனர் பலர்.

இத்தகைய சீற்றத்தின்போது மாமல்லபுரத்தில் கடல் சற்றே உள்வாங்கி, பிறகு வழக்கமான நிலைக்கு வந்தது. அப்போது கடலிலிருந்து வெளித் தெரிந்த பாறைகளும் கற்களும் கடல் கொண்ட பழம் நாகரிகத்தைப் பறை சாற்றின. அங்கே ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இத்தகைய கடல் சீற்றத்தை நாம் உணரும் போது, பண்டைய லெமூரியாக் கண்டம் பற்றியும், அது எப்படி கடல்கொண்டு அழிந்து போயிருக்கும் என்பது பற்றியும் உணரத் தலைப்பட்டோம். லெமூரியா உண்மையில் இருந்ததா என்பதில் இருவேறு கருத்துகள் உண்டு. புவியில் ஏற்படும் மாற்றங்கள், கண்டங்கள் நகர்வது ஆகியவற்றை மக்கள் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய மனநிலையோடு இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்குங்கள்...

கி.பி.19 ஆம் நூற்றாண்டின் நடுவில், இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி உறுப்பினர் பி.எல்.ஸ்கிலேட்டர் எனும் உயரியல் அறிஞர், ""கடல் கொண்ட கண்டம் ஒன்று இருந்தது'' என்று தன் கருத்தைக் கூறும் போது, அதற்கு லெமூரியா என்ற பெயரைச் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில் அறிஞர் பலரின் கவனத்திற்கு உட்பட்டு ஆய்வுக்குரிய பொருளானது லெமூரியா. பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்ந்த தாமஸ் ஹக்ஸ்லி (1825 & 1895) மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமாக்கடலில் பாலூட்டிகள் தோன்றி வளர்ந்த "செனாசாயிக்' என்ற காலகட்டத்தின் மூன்றாவது யுகமான "மயேசென்' யுகத்தில் கண்டம் ஒன்று இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார். இயற்கை ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரடு ரசல் வாலஸ் (1823 & 1913) மற்றும் ஏனஸ்ட் ஹென்றிக் ஹெகல் (1834 1919) என்ற ஜெர்மானிய உயிரியல் அறிஞர் ஆகியோர் ஸ்கிலேட்டரின் கருத்தை ஆதரித்தனர்.

"லெமூரியா மனித இனத்தின் தொட்டிலாக இருக்கலாம்; சிம்பன்சி, உராங்குட்டான், கொரில்லா, கப்பன் போன்ற ஆந்திரப்பாய்டு மனிதக் குரங்குகளிலிருந்து மனிதர் முதலில் லெமூரியாவில் உண்டாகி யிருக்கலாம்'' என்பதை ஹெகல் முதலில் கூறினார். லெமூர் என்ற குரங்கிலிருந்து லெமூரியா என்ற பெயர் சூட்டப்பட்டது. சிறு பாலூட்டியான இதற்கு கண்கள் பெரியதாகவும், மூக்கு கூர்மையாகவும், மேனியில் மென்மையான முடிகள் மூடியதாகவும் இருக்கும் இக்குரங்கினம், அதிகமாக ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென்கிழக்குக் கரைக்கு அப்பால் இந்து மாக்கடலில் உள்ள மடகாஸ்கர் தீவில் இருக்கிறது. இது இரவில் நடமாடக் கூடிய விலங்கினம். லெமூர் மற்றும் அதை ஒத்த தொடர்புடைய குரங்கும் உலகின் வடகோளம் முழுவதிலும் வாழ்ந்திருக்கக் கூடும். அவை இன்று ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மலேயா முதலிய நாடுகளை உறைவிடமாகக் கொண்டுள்ளன. எனவே லெமூரியா என்ற நிலப்பரப்பு ஆசியாவின் தென்கரைக்குக் குறுக்கே மலேயா தீவுக் கூட்டங்களிலிருந்து மடகாஸ்கர் தீவு வரை நீண்டு இருந்திருக்கலாம்.

உலகிலுள்ள பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஜிப்ரால்டருக்கு மேற்கே ஒரு பெருந்தீவு (அ) கண்டம் இருந்ததென்று தம் முன்னோர் குறிப்பிட்டிருந்ததைத் தத்துவஞானி பிளாட்டோ (கி.மு.427 & 347) அறிவித்திருந்ததால், அது அறிஞர் பலரின் சிந்தனைக்கு உள்ளாகி, அத்தீவு மெய்யாகவே இருந்ததா? அல்லது, கற்பனையா? என்ற வினாக்களை எழுப்பிப் பல நூல்கள் தோன்றக் காரணமாயிற்று. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா (தென்துருவக் கண்டம்) முதலியன அடங்கிய மிகப்பெரிய கண்டம் ஒன்று 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் தென்பகுதியில் இருந்ததாம். அதனை "கோண்ட்வானா' என்று அறிஞர்கள் குறித்துள்ளனர். அது 180 ,150 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் உடையத் தொடங்கியதாம்.

இருந்தபோதும் இந்தத் தொல்கண்டம் பற்றிய வரலாற்று விஷயங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படாமல் இருக்கின்றன. இந்து மாக்கடல் (அ) அதன் சில பகுதிகளாயினும் கோண்ட்வானா நிலப்பரப்பில் அடங்கியிருந்தனவா? அல்லது, அவை இரண்டும் எப்போதும் தனித்தே இருந்தனவா? இவ்வினாக்களுக்கு விடை உறுதியாகத் தெரியவில்லை. கோண்ட்வானா, இந்து மாக்கடல் ஆகியவற்றின் தோற்றம் பற்றி, கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன என்ற யூகத்தின் அடிப்படையிலேயே புவியியல், கடலியல் அறிஞரிடையே அதிகமாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

ஜெர்மானிய அறிஞர் ஆல்ஃபிரட் வேஜனர், 1915 இல் கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன. தமது "கண்டங்கள் கடற்படுகைகளின் தோற்றம்' எனும் நூலில் எடுத்துரைத்தார். உலகம் பூராவும் ஒரு காலத்தில் ஒரே கண்டமாக இருந்தது; பின்பு கோள்களின் ஈர்ப்பு விசைகள், பூமிக்குள் அதிகமான ஆழத்தில் நிகழ்ந்த செயல்கள் முதலியன அவ்வுலகை இருபெரும் கண்டங்களாக பிரித்தன; ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியாவின் பெரும் பகுதி அடங்கியது வடகோளம், கோண்ட்வானா கொண்டது தென்கோளம் என்பது வேஜனரின் கருத்து.

அறிஞர் ஃபிரான்சிஸ் பேக்கன் (1561 - 1626), ஆப்பிரிக்காவின் திருகு வெட்டு வடிவான மேற்குக் கரையையும், தென்அமெரிக்காவின் கிழக்குக் கரையையும் ஒப்பு நோக்கி, அவை ஒன்றோடு ஒன்று பொருந்தியதைச் சொன்னவர். புவியின் உட்கருவைச் சுற்றியுள்ள திரையின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதன் மேல் கண்டங்கள் நகர்கின்றன என்ற வேஜனரின் கருத்தை அறிஞர் பலர் ஏற்றுக் கொண்ட போதிலும், அறிவியலார் அக்கருத்தை ஏற்க மறுக்கின்றனர். வேஜனரின் கொள்கை எளிதில் ஏற்புடையதாக இருந்த போதிலும், திண்மையான கண்டங்கள் கடலில் மிதந்து இடம் பெயர்வது சாத்தியம் தானா? அப்படி அவை மிதந்து செல்லக் கூடுமாயின், அவற்றை அவ்வாறு இயக்கும் ஆற்றல் எது? இவைபோன்ற வினாக்களுக்கு விஞ்ஞானப்பூர்வ விடை இன்னும் கிடைக்கவில்லை.

சுமார் 200 மில்லியன் ஆண்டுகள் வரையிலும் பாங்கியா என்ற பெருங்கண்டம் ஒன்று இருந்ததாம். கிரேக்கச் சொல் "பாங்கியா'வுக்கு "அனைத்துலகு' என்று பொருள்.

இந்தப் பாங்கியா, பின்னர் லாரேசியா , கோண்ட்வானா என்ற இரண்டாகப் பிரிந்தது. அவற்றை தேத்திஸ் என்ற கடல் பிரித்தது. லாரேசியாவில் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவும், கோண்ட்வானாவில், தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவையும் அடங்கும். அவை இரண்டும் இன்று நாம் காணும் கண்டங்களாக மீண்டும் பிளவுபட்டன.

இவையனைத்தும் ஒரே காலத்தில் நிகழவில்லை. கடலுக்கடியில் உண்டாகும் சக்திகள் நிலப்பரப்பை மிதந்து மெல்ல இடம் பெயருமாறு செய்கின்றன. இது நீடிக்குமானால், நிலப்பரப்பு ஓர் ஆண்டில் சில மி.மீ.க்கு மேல் செல்லாது. இன்றைய உலகம் இனி 50 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் இப்போது உள்ளது போல் இல்லாமல், அப்போது அட்லாண்டிக் மாக்கடல் விரிந்து காணப்படும்; ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய பிளவு உண்டாகும், ஆசியாவை நோக்கி ஆஸ்திரேலியா நகரத் தொடங்கும் என்றெல்லாம் சொல்கின்றனர் அறிவியலார்.

தென்கிழக்கு ஆசியாவின் கரையோரப் பகுதி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கடலினுள் மூழ்கி வருகிறது என்பதைத் தற்காலத்தில் பெறப்படும் நிலவியல் சான்றுகள் காட்டுகின்றன. இவ்வாறு நிலம் நீரினுள் அமிழும் செயல் முன்னொரு காலத்தில் மிகவும் வேகமாகவும் பரந்த அளவிலும் நடந்திருக்கலாமாம்!

ஆப்பிரிக்காவின் பெரும்பாறை வெடிப்புப் பள்ளத்தாக்கு போன்ற நிலப் பரப்பு பரந்த அளவில் வெடித்துப் பிளந்து போனதைப் பார்க்கும் போது, கண்டம் பிளந்தது என்ற யூகத்தில் நியாயம் உண்டு. ஆனாலும், தனிக் கண்டம் ஏன் உடைந்தது என்பதற்கான காரணம் புலப்படாமல் உள்ளது.

கண்டங்கள் அதிக தூரம் நகர்கின்றன என்ற வேஜனரின் கொள்கையை அறவே மறுப்பவர்கள், கண்டங்களின் ஓரங்களில் காணப்படும் ஒத்த தன்மையை வேஜனர் சுட்டிக் காட்டுகையில், அது தற்செயல் பொருத்தம் என்று கூறி நிராகரித்து விடுகின்றனர்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்த கோண்ட்வானா, சிதறுண்ட பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்கூட இந்து மாக்கடலின் வடமேற்கில் லெமூரியா என்ற பெரிய கண்டம் தொடர்ந்து இருந்து வந்தது என்பார் ஸ்கிலேட்டர்.

ஹோமோ சேப்பியன் எனும் மனிதன் தற்போது கடலில் மூழ்கிக் கிடக்கும் லெமூரியாவிலிருந்து தோன்றினான் என்றார் ஹக்ஸ்லி. அவரது கொள்கையை ஹெகல் விரிவுபடுத்தினார். இவர்கள் இருவரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே ஃபிரடரிக் எங்கல்ஸ் (1820 & 1895), ""பரிணாம வளர்ச்சி பெற்ற ஆந்திரபாய்ட் என்ற மனிதக் குரங்குகள் இன்னும் இந்து மாக்கடலுள் மூழ்கியுள்ள பெரிய கண்டத்தில் வாழ்ந்திருக்கலாம்'' என்று "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய கட்டத்தில் உழைப்பு ஆற்றிய பங்கு' என்ற நூலில் கூறுகிறார். லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு என்பனவாகத் தமிழ் இலக்கியங்களில் இயம்பப் படுகிறது. இளம்பூரணர் போன்ற ஆசிரியர்களின் உரைகளாலும், இறையனார் களவியல் உரை, அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை போன்ற உரைகளாலும் குமரிக் கண்டம் விளக்கம் பெறுகிறது.

""நெடியோன் குன்றமுந்த தொடியோள் பெüமும்

தமிழ்வரம் பறுத்த தண்டி னன்னாட்டு'' (சில 8:12)

""வடிவே லெறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள'' (சில 11:1:20)

இன்றுள்ள குமரிமுனைக்கு 200 கல் தொலைவில் தெற்கில் குமரிமலையில் தோன்றி கிழக்கு நோக்கிப் பாய்ந்தது குமரியாறு. குமரியாற்றுக்கு சுமார் 700 கல் தெற்கில் பன்மலைத் தொடரில் தோன்றி பஃறுளியாறு (பல்+துளி= பஃறுளி; துளி=சிற்றாறு) என்னும் பேராறு பாய்ந்தது.

ஏழேழு உள்நாடுகளாகப் பிரிவு பட்டிருந்த அந்தப் பெருவள நாடு, இன்றுள்ள தென் கடற்கரையின் தெற்கில் 1500 கல்லுக்கு மேல் பரவியிருந்தது. அதன் வடமேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலைநாடுகளும் காடுகளும் இருந்தன. குமரிமலை, பன்மலைத் தொடர் முதலாக அப்பெருவள நாட்டின் மேற்கில் இருந்த மலைகள் எல்லாம் மேற்கு மலைத் தொடரின் தொடர்ச்சியே ஆகும்.

"தடநீர்க்குமரி' என்பதால் அக்குமரிமலை, மிக்க நீர்வளம் பொருந்தியது என்பது விளங்குகிறது. "நதியும் பதியும்' என்பதால், பஃறுளி அல்லாத வேறு பல ஆறுகளும், பாய்ந்து பேரூர்கள் பல கொண்டு விளங்கியது அப்பெருவள நாடு. ஏறக்குறைய 500 கல் பரப் புடைய நிலம் பஃறுளியாற்றின் தென்பால் இருந்ததால், அந்நிலம் தென்பாலி நாடு எனப் பெயர் பெற்றது. அஃதும் பல உள்நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருக் கலாம். இப்பெருவள நாட்டில் குமரிமலை, பன்மலை தவிர பனிமலை, மணிமலை போன்ற மலைகளும், நாவலந் தண்பொழில் நாடும் இருந்தன. "நீர் மலிவான்' என்பதால் அப்பெரு வளநாடு நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாக மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற நன்னாடாக விளங்கியது. பலமுறை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவை யாவும் கடலுள் மூழ்கிவிட்டன.

லெமூரியாக் கண்டத்தில் பெரும்பாலும் அழிந்தது போக மீதியாகித் தமிழ்நாட்டுடன் ஒட்டிக் கிடந்த பகுதியே குமரிநாடாயிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகிறார் பன்மொழிப் புலவர் க. அப்பாதுரையார் (குமரிக் கண்டம்). இப்போது இந்துமாக் கடலுள் மூழ்கிக் கிடக்கும் கோண்ட்வானா என்ற பரந்த கண்டத்தின் வடபகுதியே லெமூரியா (எ) குமரி நாடு அல்லது நாவலந்தீவு என நம்புகின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.

http://tamil.sify.com/manjari/feb05/fullst...php?id=13689479

  • 9 months later...

நிறைய விடயங்கள் அறியக்கூடியதாக உள்ளது. நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களை ஒரே தலைப்பின் கீழ் தருவது..... வாசிப்பவர்களுக்கு ஈடுபாடடை தருகின்றது.

வாழ்த்துக்கள்!

மிகச்சிறந்த பதிவு... நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

3700 ஆண்டுகளுக்கு முன் தமிழர் நாகரீகம்

தமிழின் தொன்மை வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது என்கிறார் தொல்லியல் ஆய்வாளரும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான டி.கே.வி.ராஜன். அதற்கான ஆதாரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பண்டைப் பொருட்கள் பற்றிய கண்காட்சி ஒன்றினை நடத்தியிருக்கிறது. அவரால் நிறுவப்பட்டிருக்கும் இந்தியன் சயின்ஸ் மானிட்டர் என்ற அமைப்பு.

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் 24 கி.மீ. தென்கிழக்கில் அமைந்துள்ளது ஆதிச்ச நல்லூர். இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு நடத்திய தொல்லியலாளர் அலெக்சாண்டர்ரீ ஆதிச்சநல்லூர் மனித நாகரீகத்தின் தொட்டில் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்விடத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற அகழவாய்வுகள் அறிவியல் ரீதியில் விளக்கத்தக்க உண்மைகளை உலகுக்குக் காட்டியிருக்கின்றன. ஆதிச்சநல்லூரில் பல முதுமக்கள் தாழிகளும், பானை ஓடுகளும் மண்பானை வகைகளும் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளை, காலத்தைக் கணிக்கும் நவீன அறிவியல் முறையான தெர்மோ லூமினெசன்ஸ் என்ற முறையில் ஆய்வுக்குட்படுத்தினர். இதன் முடிவு பானைகளின் காலம் கி.மு.1700 ஆண்டுகள் என்று கூறுகிறது.

அதாவது 3700 ஆண்டுகளுக்கு முந்தைய ஓடுகள் அவை என்பது உறுதியாகியிருக்கிறது.

இந்தக் காலத்தைக் கணித்த அறிவியலார், இதுவரை கிடைத்த பானை ஓடுகளில் இதுவே மிகப்பழைமையானது என்பதால் மண் பாண்டங்கள் செய்யும் தொழில் முறை தமிழகத்தில் இருந்துதான் உலகுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். கி.மு.1700 என்பது கடைசிகட்ட காலமே! அதற்கு பல நூற்றாண்டுகள், முன்பே இந்தத் தொழில்முறை உருவாகியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

மேலும், இங்குக் கிடைத்திருக்கும் வெண்கல பாண்டங்களை ஆய்வு செய்யும் போது, உலோகங்களை உருவாக்க அடிப்படையான ஆர்சனிக்கைப் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. இந்த முறையை மொகஞ்சதாரோ ஹரப்பா மக்களும் பயன்படுத்தியிருக்கின்றனர். எனவே, கால அளவில் ஆதிச்சநல்லூரும், ஹரப்பாவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்கிறார் ராஜன். சிந்து சமவெளி நாகரீகம் என்பது திராவிடர் நாகரீகமே என்ற கருத்தை மறுக்க, மாற்றியெழுதத் துடிக்கும் பார்ப்பன ஆய்வாளர்களுக்கு சரியான பதிலடியாக இது அமைந்திருக்கிறது. சிந்து நாகரிகத்தில் கிடைத்த ஓவியங்களில் காளையைக் குதிரையாக்கி அதை ஆரிய நாகரிகமென்று நிறுவத்துடிப்போருக்கும் இத்தகைய ஆதாரங்கள் பதில் தருகின்றன.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்பானை ஓடுகளின் மீதான ஓவியம் தான் இதுவரை இந்தியாவில் கிடைத்துள்ள ஓவியங்களில் மிகப் புராதனமானது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஆதிச்ச நல்லூர் ஒரு பெரிய வியாபார ஸ்தலமாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அதேபோல இந்த ஓவியங்களில் இருக்கும் பொருள் சங்க இலக்கியமான பரிபாடலின் கருத்தை ஒட்டிவருகிறது. எனவே, 3700 ஆண்டுகளுக்கு முந்தையதாக சங்க இலக்கியத்தின் காலமும் இருந்திருக்க வேண்டும். எனவே, கடைச்சங்கம் என்பதை கி.மு.3ஆம் நூற்றாண்டு என்பதாக நாம் இப்போது தவறாகக் கணித்து வருகிறோம் என்று பொருள். எனவே, அதற்கு முந்தைய முதற்சங்கம், இடைச்சங்கம் என்பதன் காலமெல்லாம் திருத்தி யெழுதப்பட வேண்டியவையே. அவை இன்னும் பழங்காலத்தவையே என்ற வரலாற்றுண்மையை அறிவியல் முடிவுகளோடு நாம் உலகுக்கு சொல்ல வேண்டிய காலகட்டம் இது என்று மீண்டும் எடுத்துரைக்கிறார் அவர்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்பாண்ட, வெண்கலப் பானைகளைக் கொண்டு 100 ஆண்டுகளுக்கு முன் தன் ஆய்வின் நிறைவில் அய்ரோப்பாவில் கண்காட்சியாக வைத்தாராம் அலெக்சாண்டர்ரீ. அப்போது, கருப்பர் நாட்டில் இத்தனை ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு வளர்ச்சியா என்று வெள்ளையர்கள் வியந்தனராம்.

மேலும், அங்குக் கிடைத்த எலும்புத்துண்டுகள் மண்டை ஓடுகள் இவற்றைக் கொண்டு பார்க்கும் போது ஆதிச்ச நல்லூரில் வாழ்ந்த ஆண்கள் சுமார் 6 அடி உயரத்துடனும், பெண்கள் 5 அடி 4 அங்குலம் வரையிலும் இருந்திருக்கிறார்கள். நல்ல உறுதியான உடல் வளத்துடன் தான் தமிழனும், தமிழச்சியும் இருந்திருக்கிறார்கள் என்பதை இவற்றைக் கொண்டு உறுதி செய்ய முடிகிறது.

அங்குக் கிடைத்த மண்டை ஓட்டில் துளை ஒன்று இருக்கிறது என்று அதைச் சுட்டிக்காட்டிய திரு.ராஜன் அது நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் அந்த எலும்புக் கூட்டின் வயது 65 ஆண்டுகள். நோயிருந்தால் அவ்வளவு காலம் வாழ்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகம். அதனால் அது மூன்றாவது கண்ணாக இருக்குமோ என்றும் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள். உடனே நீங்கள் திருவிளையாடல் சிவனுக்குப் போய் விடாதீர்கள். இது அறிவியலால் நிரூபிக்கவிடவில்லை. அதுவரை இது ஒரு சுகமான கற்பனையே! ஆனால் அவர்களால் காதுகளை தன்னிச்சையாக ஆட்ட முடியுமாம். அதற்கான உடற்கூறு இருப்பதை அறிவியல் உறுதி செய்கிறது. ஆதிச்சநல்லூரின் அழிவு எதனால் நிகழ்ந்ததென்று தெரியவில்லை. அவர்களுடைய எலும்புகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருக்கின்றன. கடும் போர் கூட அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட திரு.ராஜன் ஆதிச்சநல்லூரின் மக்களின் உடற்கூறுகளையும், லெமூரியாக் கண்டத்தின் மக்கள் இப்படி இருக்கக்கூடும் என்று நம்பிய உடற்கூறுகளும் ஒத்துப் போகிறது என்ற கூடுதல் தகவல்களையும் சொன்னார்.

லெமூரியா என்பது லெமூர் என்ற விலங்கின் பெயரைக் கொண்டு உருவானது. லெமூர் என்பது நம்மூரில் இப்போது மிகவும் குறைந்துவிட்ட தேவாங்கு எனப்படும் விலங்கைப் போன்றது. இந்தத் தேவாங்கு விலங்கினம், தமிழகத்தில் இருக்கிறது. அதே போல மடகாஸ்கரில் இருக்கிறது. இடையில் எங்கும் இல்லை. இவ்வளவு கடற்பரப்பை நீந்தியா கடந்திருக்க முடியும்? என்ற கேள்வியின் அடிப்படையில் தான் லெமூரியா என்ற சிந்தனை பிறந்தது. ஆனால் நம் பழந்தமிழ் இலக்கியங்களில் அழிந்துவிட்ட கபாட புரமும், தென்மதுரையும், பஃருளியாலும் பரவிக்கிடக்கின்றன.

லெமூரியா என்பது கற்பனை என்று வாதிடுவோரும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், கன்னியாகுமரிக்கும், மடகாஸ்கருக்கும் நடுவே பயணம் செய்த கப்பல் ஒன்று. கடலுக்கடியில் நிறைய புவியியல் இடையூறுகள் (னுளைவரசயெஉநள) இருப்பதை உணர்ந்து சொல்லியிருக்கிறது. முறையான கடலாய்வு மேற்கொண்டால் அது பற்றிய தகவல்கள் நிறையக் கிடைக்கக்கூடும். இன்றும் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆய்வை பலர் மேற்கொண்டு வருகிறார்கள். இன்றைய அறிவியல் வளர்ச்சியில் லெமூரியா எனப்படும் குமரிக்கண்ட ஆய்வு சாத்தியப்படக் கூடிய ஒன்று தான்.

அண்மைக் காலத்தில் சங்க காலத்து அரசர்களின் இலச்சினை மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. சேரன், செங்குட்டுவனின் அரிய காசு ஒன்றை நாணயவியல் ஆய்வாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் ரோமானியர் வருகைக்குப்பின் தான் நாணயப் புழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பு பண்டமாற்று முறைதான் இருந்தது என்று நாம் நினைத்திருந்த வரலாறு மாறுகிறது. அதைத் திருத்தி எழுத வேண்டியதன் அவசியமும் வலுப்படுகிறது என்கிறார் உறுதியாக! வடநாட்டு ஆய்வாளர்களும், இந்தியத் தொல்லியல் துறையும் தென்னாட்டின் அகழாய்வில் விருப்பம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. சமஸ்கிருதத்தையும், வேத நாகரிகத்தையும் முன்னிறுத்தக்கூடிய வடநாட்டு முயற்சிகளுக்கு சரியான பதிலடியும், உண்மையான வரலாற்றை எடுத்துரைப்பதும் விரிவான அகழாய்வுகளை தமிழ்நாட்டில் நடத்துவதன் மூலமே சாத்தியப்படும்.

உலகின் முன் தோன்றிய மூத்த குடி என்று வெறும் சங்க இலக்கியங்களில் பெருமை கொள்வதல்லாமல், அறிவியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் அதை நிறுவுவதே அறிவார்ந்த செயலாகும்.

சோர்ஸ் - உண்மை இதழ்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் தொகுத்து ஒரே புத்தகமாக வெளிட்டால் பலருக்கு பலன் உள்ளதாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.