Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மேற்குலக நாடுகள் ஏன் தடை செய்யவில்லை? இராணுவ மேஜர் உதய பெரேரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
uthaya_perera-seithy-150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மேற்குலக நாடுகளில் இயங்குவதற்கு அனுமதித்திருப்பதானது, பயங்கரவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடென இலங்கையின் இராணுவ மேஜர் ஜெனரல் உதய பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்கள் எதிர்கொள்கின்ற பாலியல் அச்சுறுத்தல்களுக்கு இலங்கை இராணுவத்தினரே காரணமாக அமைகின்றனர் என்ற குற்றச்சாட்டொன்றுக்கு பதில் அளிக்கும் பொழுதே இக்கருத்தினை இராணுவ மேஜர் வெளிப்படுத்தியுள்ளார். தமிழர் பகுதிகளில் இடம்பெறும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை அங்குள்ள சமூக விரோதிகளே மேற்கொள்கிறார்கள் என்றும் அதனை சாதகமாக வைத்து இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளும், புலம்பெயர் தமிழ் பிரிவினை சக்திகளும் பிரச்சாரம் செய்கின்றனவெனவும் இராணுவ மேஜர் நியாயப்படுத்தியுள்ளார்.

  

பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் மூலம் நேரடி ஆயுத வன்முறையை நாம் ஒழித்துக் கட்டிவிட்டோம். ஆயினும் பிரிவினைவாத சித்தாந்தம் இன்றும் வடபகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாகும் எனத் தெரிவித்துள்ள இலங்கையின் இராணுவ மேஜர் ஜெனரல் உதய பெரேரா, மேற்குலகில் இயங்கி வருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்ட ஆலோசகர் வி.உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இலங்கையின் இறையாண்மைக்கு சவாலான பிரதான அமைப்பெனத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்துள்ள மேற்குலக நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னணியில் உருவான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தடை செய்யாதது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ள இலங்கையின் இராணுவ மேஜர், இது மேற்குலகின் அரசியல் உள்நோக்கத்தினை வெளிக்காட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் பட்டியல் வெளிவந்துள்ள நிலையில் இலங்கையின் இக்கருத்து வெளிவந்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=95549&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வாயில்லா புள்ளை பூச்சியைக் கூட விடமாட்டாங்கள் போல இருக்கே  :(

இதுகும் அரச சார்பு தானே அதையேன் தடைபண்ண சொல்லுறன் இந்த பக்கி .

 

 

அரசியல் ஆய்வாளர்கள் விளக்கம் தரவும் .

  • கருத்துக்கள உறவுகள்

இதுகும் அரச சார்பு தானே அதையேன் தடைபண்ண சொல்லுறன் இந்த பக்கி .

 

 

அரசியல் ஆய்வாளர்கள் விளக்கம் தரவும் .

ஏன் தம்பி வேலியில போறத வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடுரியல்  :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைப்புக்கு யாழிலையே தடை செய்ய பலர் காத்திருக்கின்றார்கள் என்பது இந்த ஜென்மத்துக்கு தெரியாது போல .....

ஏன் தம்பி வேலியில போறத வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடுரியல்  :o

 

இப்படி சொன்ன ராணுவ தளபதிக்கு பாராட்டு விழா ஏதாவது வைபங்க என்று நினைக்கிறன் :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையாகச் செயற்படவேண்டும் என்பதற்காக தேர்தலை நிறுத்தியிருக்கினம் எண்டது உவருக்குத் தெரியாதாக்கும்! :D

புலிகளை தடை செய்வித்தது மேஜர் ஜெனரல் உதய பெரேரா அல்ல, கதிர்காமரின் ராஜதந்திரம்.

 

வேலையில் மாற்றம் வந்தாலும் சம்பளம் இன்னமும் மாறவில்லை போலிருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

கைபுள்ளயின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஏன் தடைசெய்யப்படவில்லையோ, அதே காரணத்துக்காகதான் நட்டு கழண்டோர் அரசும் தடைசெய்யப்படவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிரிக்கெட்டில் ரன் எடுக்காத எதிரணி பட்ஸ்மேனை அவுட் ஆக்கக்கூடாது. நீண்ட நேரம் விளையாட விடவேண்டும். அப்பதான் ஈஸியாக வெல்லலாம். அந்த வகையில் தமிழ் மக்களின் ஆதரவு நாடுகடந்த அரசுக்கு இருக்கிறதோ, இல்லையோ... இலங்கை அரசின் ஆதரவு இருக்கிறது.

 

நாடுகடந்த அரசு பற்றி கருத்தை சொல்லிவிட்டு, உதய பெரேரா விழுந்து விழுந்து சிரித்திருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.