Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது - தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் .....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.....

 

http://www.puthiyathalaimurai.tv/

காமன்வெல்த் மாநாடு: இலங்கைக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது

 

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானத்தை முன்மொழிந்தார்.
     
தீர்மானம்:

“தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும்;

பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும்; இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும்;

இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”

இந்த தீர்மானத்தை தமிழ் உணர்வாளர்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.

 

http://newsalai.com/details/Tamil-nadu-24-10-2013--commonwealth-resolution-against-sri-lanka-in-TN-assembly.html#sthash.WlgmQG75.dpbs

  • கருத்துக்கள உறவுகள்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!

24 அக்டோபர் 2013


கொமன்வெல்த் மகாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற தீர்மானம் குறித்து இன்று சட்டசபை அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து திமுகஇ காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: தமிழக சட்டசபையில் ஜெயலலிதா ஜெயராம் தீர்மானம்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது, இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கை. இதை ஏற்று தமிழக சட்டசபையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.

அத்தீர்மானத்தில், இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் 15-ந் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இம்மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ள கூடாது. சிங்களருக்கு இணையாக தமிழர்களும் வாழ உரிய நடவடிக்கையை இலங்கை அரசு எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத நிலையில் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தின் மீது சட்டசபை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98063/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சட்டசபைத் தீர்மானம் என்றால்.....

//காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானம்: 

“தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும்; 

பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும்; இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும்; 

இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”//

இலங்கையில் நிகழும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது கூடாது என்பது எந்தவகையிலும் இலங்கையை பாதிக்கப்போவதில்லை, மேலும், தமிழர்களுக்கு நீதியை வழங்கப் போவதில்லை.. காமன்வெல்த்தின் பிற நாடுகள் பங்கெடுத்து ராஜபக்சேவினை காமன்வெல்த்தின் தலைவராக மாற்றுவதை இது தடுக்காது... இந்தியா இலங்கையை இதனால் புறக்கணிக்கிறது என்பதாக அர்த்தப்படுத்த முடியாது.. இந்தியா புறக்கணிப்பதாக முடிவெடுத்தால் அது , இலங்கையின் சந்தைக்கான வர்த்தக ஒப்பந்தமான “செபா -comprehensive economic partnership agreement ) என்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இலங்கை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. 

இதனை செயல்படுத்த நெருக்கடி கொடுக்கவேண்டுமென்றால் இப்புறக்கணிப்பு அரசியலை செய்யும். இதற்கு முன்பு 2010இல் இந்த ஒப்பந்ததினை கொண்டுவர முயன்றபொழுது இலங்கை ஒத்துழைக்காத காரணத்தினாலேயே ‘பாலிவுட் திரைப்பட விழா’ முழுமையாக நடக்காமல் போனது. 2012இல் இதே ஒப்பந்தத்தினை மீண்டும் செயல்படுத்த முயன்றபொழுது ‘டெசோ’வின் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு கோரிக்கையை கைவிட்டு “தமிழீழ வாழ்வுரிமை” என்கிற கோரிக்கையாக சமரசம் செய்து பல்லிளித்தார்கள். அப்போதும் இலங்கை அசரவில்லை.. தற்போது இதே காரணத்திற்காக வேண்டுமென்றால் மீண்டும் புறக்கணிப்பு அரசியலை செய்வார்கள். எனவே இது ஒரு நாடகம். இது நமது கோரிக்கையல்ல.. 

இரண்டாவது, 
// இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை ..// என்கிற வரிகள் ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள்’ தீர்வு என்பதாகவே அர்த்தம் கொண்டுள்ளது. தமிழர்களுக்கு இலங்கை அதிகாரத்தினையும், சம உரிமையையும் வழங்காது. அது ஒரு பொழுதும் ஏற்படாது. மாறாக ஈழம் மூலமாகவே உரிமைகளை பெறமுடியும். இந்த தீர்மானம் தமிழக அரசின் “ பொதுவாக்கெடுப்பு” என்கிற தீர்மானத்திற்கு முரணானது , முற்றிலும் எதிரானது. 

இது ‘டெசொ’ குழுவின் கோரிக்கையை உள்ளடக்கி இருக்கிறது. இந்த கோரிக்கையின் மூலம் இலங்கை அரசே தமிழர்களுக்கு தீர்வளிக்கும் என்பதாகவே அர்த்தபடுத்த முடியும். இதன் அரசியல் அர்த்தமும் அதுவே. 

”தமிழர்களுக்கு சம உரிமையை வழங்கும் வரை சர்வதேசம் இலங்கை மீது அழுத்தத்தினை தரவேண்டும் “ என்பது ”இனிமேல் தமிழீழக் கோரிக்கை தேவையற்றது, இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழர்களை சமமாக நடத்தும்” என்கிற வழிமுறையை முன்வைக்கிறது. ஆகவே ”ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வு காண்போம் “ என்கிற வாதத்தினை மிக அழகாக தமிழ்ச் சமூகத்திற்குள் முன்வைக்கிறது அதிமுக-ஜெயலலிதா அரசு. 

தமிழர்களை ஏமாற்றுவதில் அதிமுக- திமுக இரண்டும் கைகோர்த்து செயல்படும் என்பதற்கு இதைத் தவிர வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. இந்த தீர்மானத்தினால் எதுவும் நிகழப்போவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட நூறுமடங்கு உண்மை, ”இந்த தீர்மானம் தமிழீழக் கோரிக்கைக்கு எதிரான தீர்மானம்” என்பதுவும்.

ஆகவே இத்தீர்மானத்தினை திருத்தி, ‘ பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை, தமிழினப் படுகொலை புரிந்த இனப்படுகொலையாளர்கள் தண்டிக்கப்படும் வரை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவேண்டும்” என்பதான தீர்மானமே நேர்மையானதாக அமையும். இதைத் தவிர்த்த எதுவும் தமிழர்களுக்கு விடிவினை தரப்போவதில்லை.

பொருளாதாரத் தடை என்கிற கோரிக்கை தீர்மானம் என்னவாயிற்று?
பொதுவாக்கெடுபு என்கிற தீர்மானத்திற்கு என்ன நடவெடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
போர்க்குற்றவாளி என்கிற தீர்மானத்திற்கு என்னவாயிற்று?
இந்த தீர்மானங்களை நிறைவேற்ற என்னவகையான நெருக்கடிகள் தில்லி ஏகாதிபத்திய இந்திய அரசிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது?
சர்வதேச அளவில் சட்டப்படியான நடவெடிக்கைகளை எடுக்க என்னவகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன?... 

ஏமாற்று தீர்மானங்கள் ஒருவகை, தீர்மானம் நிறைவேற்றி ஏமாற்றுவது மற்றொரு வகை. 

இரண்டும் அதிமுக-திமுகவிற்கு கைவந்த கலை. 

ஏமாறுவது தமிழனுக்கு கைவந்த கலை . 

டெசோவின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றிய அதிமுகவிற்கு கலைஞர் வேண்டுமானால் நன்றி சொல்லட்டும்.

1378739_10202301367079099_1569043431_n.j
 
 

https://www.facebook.com/thirumurugan.gandhi

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

திருமுருகன் காந்தியின் கருத்து வரவேற்கத்தக்கது.. ஆனால் இத்தீர்மானத்தை மேற்குலகிற்கான செய்தியாக மட்டுமே காண்கிறேன்.

இதில் உள்ளடக்கப்பட்ட செய்தி என்னவென்றால், பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதை தமிழகம் எதிர்க்கிறது என்பதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வரலாற்றில் நம்பமுடியாத சில சம்பவங்கள் நடைபெறுவதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் உதவி என்றும் மறுக்கமுடியாத ,மறக்கமுடியாத உதவியாக இருந்தது அவர் இருந்தபோது தெரிந்ததைக்காட்டிலும் அவர் மறைந்தபின் அவர்செய்த உதவியை தெரிந்துகொண்டது அதிகம் எம்ஜிஆர் க்கு பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் ஆட்சி ஈழத்தமிழர்களுக்கு இருண்டகாலம் என்றே சொல்லலாம் ,அத்தனை அடக்குமுறைகளையும் முதலமைச்சர் ஆனதும் செய்தார் ,அதற்குப்பின் அவர் தோல்வியடைந்தார்,மறுபடியும் அவர் வெற்றிபெற்றவுடன் ,முதலமைச்சர் ஆனவுடன் இன்று பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார *இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கக்கூடாது *இலங்கையின்மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் *இலங்கைத்தமிழரிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் *மூவர் தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்யவேண்டும் *இனப்படுகொலை செய்த இலங்கையை நட்புநாடு என்று சொல்லக்கூடாது என்றும், உலகத்தமிழர்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த,பல்வேறு வடிவங்களில் போராடிக்கொண்டிருந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமரோ ,இந்தியா சார்பில் வேறு எந்த ஒரு நபரும் எந்த வடிவத்திலும் பங்கேற்க்ககூடாது என்று காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்று சொல்லியிருப்பது பாராட்டுதலுக்கும் ,போற்றுதலுக்கும் உரியது இந்த நேரத்தில் தேவை இல்லாத விமர்சனங்களை தவிர்ப்பது ஈழத்தமிழர்களுக்கு நாம் செய்யும் மாபெரும் உதவியாகும் ,அதைவிட்டுவிட்டு தீர்மானத்தால் என்ன நடக்கப்போகிறது என்று நாம் விமர்சனங்களை செய்வது தேவையற்றது *ஒன்று சொல்லுவோம் தமிழக சட்டமன்றத்தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்று என்று இந்திய அரசாங்கத்தை நோக்கி தமிழர்களாகிய நாம் போராட்டத்தை தீவிரபடுத்தலாம்* இவன் -வெள்ளிங்கிரி -பொள்ளாச்சி

http://tamilepaper.blogspot.in/2013/10/24-oct-2013.html

 

16824676.jpg

 

 

 

 BBC NEWS TAMIL :
இலங்கையில் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ( இன்று 24-10-2013 ) வியாழன் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த அத் தீர்மானத்தில் தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டினில் பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது, இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கைக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும்,

மேலும் இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் 2009 ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், இனப்படுகொலை அங்கு நடந்தேறியது என குற்றஞ்சாட்டினார்.


மேலும் 2011 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாளன்று, அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படக் காரணமாயிருந்தவர்கள் போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் அவையில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

'இலங்கை நட்பு நாடு அல்ல'

 

மீண்டும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கையை "நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும், போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை வேண்டும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ”தனி ஈழம்" குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்தோர் மத்தியிலும் பொது வாக்கெடுப்பு கோரி ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானம் கொண்டுவர இந்தியா முன்முயற்சி எடுக்கவேண்டுமென வலியுறுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


ஆனால் இவைகுறித்து இது நாள் வரை இந்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் குறைகூறினார் முதல்வர்.
மேலும் இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்குத் தேவையான மறுவாழ்வுப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்றும், தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவது தொடர்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இப்பின்னணியில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி கடந்த மார்ச் மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக மக்களின் உணர்வுகள் உட்பட, அனைத்து காரணிகளையும் பரிசீலித்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்வது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், பாரதப் பிரதமர் தன்னுடைய பங்கேற்பு பற்றி மட்டும் கருத்து தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளததாகக் கூறினார் ஜெயலலிதா.


இலங்கை காமன்வெல்த் சாசனத்திற்கு முரணாக நடந்துகொள்வதாக சுட்டிக்காட்டி னடா பிரதமரே நவம்பர் மாநாட்டினை புறக்கணிக்கவிருக்கிறார் அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர்கள் மிகக் குறைவாக வசிக்கும் கனடா நாடே இப்படி ஒரு முடிவெடுத்திருக்கும் நிலையில் இந்தியா இந்த மாநாட்டில் பெயரளவிலும் கலந்து கொள்ளாது என்னும் தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்று வருந்தினார் ஜெயலலிதா.

அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.

 

============================================================================================

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.