Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை எச்சரிக்கிறார் இலங்கைத் தூதுவர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

617f160d7449ec79f4c69e8250066b4c.jpg

பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரித்துள்ளார். 
 
இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என இன்று நடந்த தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகளான தி.மு.க. உள்ளிட்ட தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு வரவேற்றன.
 
இந்த தீர்மானம் குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். இது குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்படும். அவர் வெளிநாட்டு பயணம் முடிந்து வந்த பிறகு முடிவுகள் எடுக்கப்படும். பிரதமர் இது குறித்து நல்ல முடிவு எடுப்பார் என்றார்.
 
இந்த தீர்மானம் குறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் கரியவாசம் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 
 
தமிழக சட்டசபை தீர்மானத்தில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த தீர்மானம் கவலை அளிக்கிறது. தவறான தகவல்கள் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கனடா பிரதமர் மட்டும வரமாட்டோம் என கூறியுள்ளார். ஏனைய நாடுகளுக்கு பிரச்சனை இல்லை.
 
இந்தியா உள்பட 30 நாடுகள் பங்கேற்கின்றன. தற்போது இலங்கையில் தமிழர்கள் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை தமிழக, இந்திய தலைவர்கள் வந்து பார்க்கட்டும். இது தொடர்பாக இவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. 
 
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து அவரிடம் கேட்ட போது ; புலிகள் காரணமாக கடந்த 30 ஆண்டு காலமாக மீன் பிடிக்கவில்லை. தற்போது இலங்கையில் வாழும் தமிழர்கள் தான் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக புகார் கூறுகின்றனர். இதனால் நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும் ?
 
பிரதமர் வருகை குறித்து இந்திய அரசாங்ம் தான் முடிவு செய்யும். பிரதமர் பங்கேற்காமல் தவிர்த்தால், இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்தது பரிசிலீப்போம். மாநாட்டினை தவிர்த்தால் சர்வதேச சமூகத்தில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் இவ்வாறு அவர் கூறினார்.
 

 

http://onlineuthayan.com/News_More.php?id=181902391924375952

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுவிடுமாம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இந்த அச்சுறுத்தல்களில் இருந்து வெளிவரனுன்னா.. இலங்கையில் தனித்தமிழீழம் அமைவதும்.. அது இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக அமைவதும் மட்டுமே நிரந்தரத் தீர்வை இது விடயத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரும்..! இந்திய ஒருமைப்பாடு என்று சிறீலங்காவின் ஒருமைப்பாடு பற்றி பேசிக் கொண்டிருந்தால்.. சிங்களம் இப்படியே அச்சுறுத்தி அச்சுறுத்தியே இந்தியாவை ஒரு வழி பண்ணிடும்..! இந்தியாவை சுத்தி அதன் எதிரிகளை இருத்தி வைக்கும்..! :icon_idea:

இதோடை மன்மோகனுக்கு குலப்பன் காய்ச்சல் வந்திடும்... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.