Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ விடியலுக்காக மரணித்த மாவீர செல்வங்களின் கோவில்களில் ஒளியேற்றுமா கூட்டமைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1910d.jpgதமிழீழ விடுதலைக்கான போரட்டத்தில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய வீரமறவர்களின்
கல்லறைகளும் நினைவுக்கற்களும் அமையப்பெற்ற புனிதபூமியான மாவீரர் துயிலுமில்லங்கள் இன்று உருத்தெரியாதவகையில் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வீரமறவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட சிங்களம் தடை விதித்துள்ளது.
 
1910b.pngகடந்த மூன்று வருடங்களாக இராணுவத்தின் இரும்புப்பிடிக்குள் சிக்கித்தவித்த மக்கள் தமது பிரதேசங்களின் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக தற்பொழுது மாவீரர் துயிலுமில்லங்களில் அஞ்சலி செலுத்தவேண்டும் என்ற மனஉணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான உரிமைப்போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிகையினை பிரேரணையாக முன்வைத்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் அதனை தீர்மானமாக நிறைவேற்றி நடைமுறைப் படுத்துவதற்கு தமது கட்சியின் அனுமதியை வேண்டியிருந்தனர்.
 
இதேபோல், கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தைத் துப்பரவு செய்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என கரைச்சி பிரதேச சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
kumarappa-pulendran-12-lttes.jpgதமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக்கிணறுகள், பொதுமண்டபங்கள், சுடுகாடுகள், சுடலைகள், மாவீரர் கல்லறைகள், தூபிகள், நினைவுக்கற்கள் போன்ற சிலவற்றையும் போணிப்பராமரிக்க வேண்டிய பொறுப்பு பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
இந்தவகையில், இவ்விரு பிரதேச சபைகளும் முற்போக்காகச் செயற்பட்டு மாவீரர் துயிலுமில்லங்களை புனரமைக்கத் தீர்மானித்துள்ளன. ஏனைய சபைகளும் இதுபோன்ற தீர்மானங்களை விரைவில் எடுக்கும்.
 
இந்நிலையில் சாவகச்சேரிப் பிரதேச சபையில் இப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய உறுப்பினரை சிங்கள இரணுவப் புலனாய்வாளர்கள் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்துவைத்து விசாரித்துள்ளனர். தவிசாளரும் அழைக்கப்பட்டுள்ளார்.
 
கிளி.கனகபுரத்திலும் துயிலுமில்லத்தைச் சூழலில் பலத்தபாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவம் இப்பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்களில் தேடுதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில், மாவீரர் துயிலுமில்லங்களை புனரமக்கின்ற தீர்மானத்திற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்வர்க்கத்தினருக்கும் தொடர்பில்லை எனத் தமிழ்த் தேசிய அரசியல் வாதிகள் காய்நகர்த்தியுள்ளனர்.
 
1910a.jpgஇக்காய் நகர்த்தல் சிங்களத்திடமிருந்து தம்மைப்பாதுகாக்கவா அல்லது மக்களைப் பாதுகாக்கவா என்பது தமிழ் மக்களுக்குத் தெரியாததொன்றல்ல.
 
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் தாமொரு தனித்துவமான இனமென்பதையும் தமக்கும் இந்நாட்டில் அரசியல், பொருளாதார, வாழ்வியல் உரிமைகளை வழங்க வேண்டும் என்பதையும் தெளிவாக சிங்கள தேசத்திற்கு விளக்கியுள்ளனர்.
 
இதேவேளை எமது மக்கள் தேசியக் கூட்டமைப்பினரிடம் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவேண்டிய பொறுப்பினை ஒப்படைத்துள்ளதால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவேண்டிய கடமை கூட்டமைப்பினருக்குண்டு.
 
இந்நிலையில் பிரதேச சபைகள் மக்களின் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கவேண்டும் என்ற நோக்குடன் தமிழ் மக்களின் ஆத்மாக்கள் துயிலுகின்ற கல்லறைகளை சீர்செய்து அஞ்சலி செலுத்த ஏற்பாடுசெய்துகொடுத்து எமது மக்களுக்கு மன நிறைவினைக் பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
 
இதனை நிறைவேற்ற வேண்டியது மாகாண சபைகளின் பொறுப்பாகும். பாரளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு உதவியாக இருக்கவேண்டும். மக்களின் வாக்குப் பலத்துடன் அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் மக்களுக்கு ஏற்படுகின்ற தடைகளை நீக்கி அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்து, அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முற்படவேண்டும்.
 
சிங்கள இராணுவத்திற்குப் பயந்து தமிழ் மக்களுக்கு ஆபத்து என உரிமைகளை கோரிப் பெற்றுக்கொள்ளாது ஒதுங்குவதும் அதனை நியாயப்படுத்துவதற்குக் காரணம் தேடுவதும் மக்கள் பிரதிநிதிகளாகச் செயற்படுகின்றவர்களுக்கு அழகன்று.
 
எனவே, மாவீரர் துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலங்கள் சிங்களத்தால் 1910f.jpgதென்பகுதியினருக்கு பகிர்ந்து கொடுக்கப்படுவதற்கு முன்னராவது, வீரமறவர்கள் உறங்குகின்ற புனித பூமியைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற முற்படவேண்டும் என்பதே சகல தமிழ் மக்களினதும் வேண்டுகோளாகவுள்ளது என்பதை தமிழ்த் தேசியம் பேசுகின்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்திலெடுக்க வேண்டும்.
 
தமிழீழமே எங்களின் உயிர் மூச்சாகவும், அதற்காகவே தங்களின் இன்னுயிர்களை விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய அந்த மாவீர செல்வங்களையும் ,விடுதலை தீயில் 
உரம் சேர்த்த ஈழ மக்களையும் நினைவு கூறும் தேசியநாள் தான் மாவீரர் நாள்.இந்நாளில் ஒவ்வொரு தமிழனும் அந்த ஆன்மாக்களின் உணர்வுடன் சங்கமிப்போம்.
 
இராவணன்
நன்றி - ttnnews.com
.
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை வரைந்தவர் ஊருக்கு போய் முதலாவது விளக்கை ஏற்றுவார். அவரை தொடர்ந்த்ஹு கூட்டமைப்பு விளக்கேத்தும்.

நாங்கள் இங்கே சொகுசா இருந்தபடி, நரம்பில்லாத விசைப்பலகையில் என்ன வேண்டும் எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு விளக்கேத்தணும்

இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

ஆனால் தற்பொழுது ஏற்றணும்

என்று எதிர்பார்ப்பது 

வலியுறுத்துவது சரியா??? :(

வெளியிலிருந்து கொண்டே

யாழ் களத்தில் கூட விளக்கேற்ற பலர் பயப்படுகினம்....... :(

  • கருத்துக்கள உறவுகள்

பனைக்கே பன்னீரா?

விளக்கம் பிளீஸ்?

கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு இருக்க வேண்டிய சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தால் தமிழ் மக்கள் தாங்களே விளக்கேற்றுவார்கள். இதைதான் சென்ற வருட பல்கலைகழக நினைகள் சுட்டி நிற்கின்ற்ன. எனவேசுதந்திரம் இல்லாமல் இளைஞர்களை தூண்டும் செயல்ப்பாடாக இந்த கோரிக்கை வைக்கப்பட தேவை இல்லை. 

இறந்தவர்கள் தமிழர்களின் பிள்ளைகள். அளவான முறையில் எதை செய்ய முடியும் என பரீட்சார்த்தம் பார்க்கும் வகையில் சாவகச்சேரி போன்ற இடங்களில் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளால் சில முயற்சிகள் எடுக்க பட்டிருக்கின்ற்ன. அதன் பின்னர் இதில் கூட்டமைப்பை பிரித்தெடுக்கும் முயற்சி எதற்கு(மாகாண சபை கூட்டமைப்பு- மாநகரசபை கூட்டமைப்பா?). அவர்களே அல்லவா இதை ஆரம்பித்தார்கள்?

மேலும் கூட்டமைப்பு தேர்தலில் நிற்ககூடாது என்று வாதிட்டவர்கள் இந்த கேள்வி கேட்பது  நாகரீக மில்லாதது.

இன்று விளக்கேற்ற சுதந்திரமில்லாதது மட்டும்தான் தமிழர்களின் பிரச்சனையாக காட்ட முயலக்கூடாது. கூட்டமைப்பு சுதந்திரத்தை பெற பாவிக்கும் பிரச்சார ஆயுதமாகவும், மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் உபகரணமாகவும் மாகாணசபையை பாவிக்க வேண்டும். ஆதாவது மாகாணசபை வாளாக மட்டும் இருக்காமல் ஏராகவும் இருக்க வேண்டும்.

மாவீரார்களில் உண்மையில் அக்கறை உள்ளவர்கள் வெளிவேசம் போடாமல் ,மாவீரர் குடும்பங்கள் மற்றவர்களைப் போல வாழ வழிவகைகள் செய்வதுதான் தேசியத் தலைவருக்கும் ,மாவீரர் களுக்கும் போராட்டத்தை நேசிப்பவர்கள் செய்யவேண்டியது .

  • கருத்துக்கள உறவுகள்

என்னது நான் கொங்கிரஸா? எது அந்த இத்தாலியன் மாபியாகாரி, கொலைகாரி சோனியாவின் கொங்கிரஸா ? செம காமடிதான் போங்கள்.

நான் எங்கே மாவீரர் திரியில் நகல் அடித்தேன்?

"கடலுக்கே உப்பா?" என்றீர்கள் எனக்கு அந்த்ஹ உவமானத்தின் அர்த்தம் புரிந்தது.

பின் " பனை மரத்துக்கே பன்னீரா?" என்றீர்கள், அதன் அர்த்தம் புரியவில்லை. அதுதான் விளக்கம் கேட்டேன். இதில் மாவீரரை எங்கே கேலி செய்தேன்?

முதலில் உங்கள் சிறுதவறுகளிற்க்கும் அவர்களை இழுத்து, அவர்கள் பின்னால் ஒழிந்து கொள்ளும் சின்னத்தனத்தை கைவிடுங்கள்.

பின் முடிந்தால் உங்கள் பனை மர உவமைக்கு விளக்கம் தாருங்கள்.

Gentleman, there is an old English adage, " it is better to keep quiet and be thought a fool; than to speak out and clear all doubts". Hope you are able to comprehend this saying.

மாவீரர்களுக்கு விளக்கேத்தணும்

இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

ஆனால் தற்பொழுது ஏற்றணும்

என்று எதிர்பார்ப்பது 

வலியுறுத்துவது சரியா??? :(

வெளியிலிருந்து கொண்டே

யாழ் களத்தில் கூட விளக்கேற்ற பலர் பயப்படுகினம்....... :(

மிக்க உண்மை. எனது நெருங்கிய உறவினர் குடும்பத்தில் இருவர் மாவீரர். அவர்கள் யாழ்பான முற்றுகைக்குள் அகப்பட்டு அங்கயே இடம்பெயர்த்து வாழ வேண்டி வந்தது. அவர்கள் என்ன செய்தார்கள். தமது செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி அமைதியாக அஞ்சலி செலுத்தி வந்தார்கள். படம் கூட வீட்டில் வைக்கமுடியாத நிலையில் வாழ்ந்தார்கள். இன்றும் அதே நிலை மீண்டும் வந்துள்ளது. அதையும் தாண்டி வெளிச்சம் வரவேண்டிய காலத்தில் வரும். அதுவரை நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கடுரை எழுதி எங்களையே மடயனாக்காமல் இருந்தால் புண்ணியம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் அதே நிலை மீண்டும் வந்துள்ளது. அதையும் தாண்டி வெளிச்சம் வரவேண்டிய காலத்தில் வரும். அதுவரை நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கடுரை எழுதி எங்களையே மடயனாக்காமல் இருந்தால் புண்ணியம்.

நன்றி  தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

போரில் இறந்த படையினரை அரசு நினைவு  கூரும்போது

கூட்டமைப்பினர் மாவீரர்களை நினைவு  கூர்வதில் என்ன தப்பு
 
Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது நான் கொங்கிரஸா? எது அந்த இத்தாலியன் மாபியாகாரி, கொலைகாரி சோனியாவின் கொங்கிரஸா ? செம காமடிதான் போங்கள்.

நான் எங்கே மாவீரர் திரியில் நகல் அடித்தேன்?

"கடலுக்கே உப்பா?" என்றீர்கள் எனக்கு அந்த்ஹ உவமானத்தின் அர்த்தம் புரிந்தது.

பின் " பனை மரத்துக்கே பன்னீரா?" என்றீர்கள், அதன் அர்த்தம் புரியவில்லை. அதுதான் விளக்கம் கேட்டேன். இதில் மாவீரரை எங்கே கேலி செய்தேன்?

முதலில் உங்கள் சிறுதவறுகளிற்க்கும் அவர்களை இழுத்து, அவர்கள் பின்னால் ஒழிந்து கொள்ளும் சின்னத்தனத்தை கைவிடுங்கள்.

பின் முடிந்தால் உங்கள் பனை மர உவமைக்கு விளக்கம் தாருங்கள்.

Gentleman, there is an old English adage, " it is better to keep quiet and be thought a fool; than to speak out and clear all doubts". Hope you are able to comprehend this saying.

 " பனை மரத்துக்கே பன்னீரா?" என்பது காளமேகப் புலவர் ரேஞ்ச் சிலேடை. பாமர மக்களுக்கு புரிவது கஷ்டம். பனை மரத்தில் இருந்து பல வகை நீர்கள் கிடைக்கின்றன. பனங்களி, கள்ளு, கருப்பணி.. ஒரு மரம் இப்படி பலதரப்பட்ட நீராகாரங்களை கொடுக்கிறது. அந்த மரத்துக்கே பன்னீரா (பன்னீர் = பல நீர்) என்று சிலேடையாக கேட்டார் விவசாயி அண்ணன். மரத்தை பற்றி விவசாயி பேசாமல், விஜயகாந்தா பேசுவார்?

Edited by sabesan36

போரில் இறந்த படையினரை அரசு நினைவு  கூரும்போது

கூட்டமைப்பினர் மாவீரர்களை நினைவு  கூர்வதில் என்ன தப்பு

அதில் எதுவும் தப்பில்லை.

அந்த கோரிக்கையை கூட்டமைப்புக்குள் ஆப்பாக பாவிக்காமல் கூட்டமைப்பு மீது அழுத்தமாக பாவிக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. செய்தி வரையப்பட்டிருக்கும் பாணி, அதில் வேண்டுமென்று கைலைட் பண்ணிய இடங்கள் விரும்பத்தகாத முறையில் இருக்கு.

இதை யெல்லாம் எழுதுபவர்கள் புலம் பெயர் நாட்டு மாவீரர் தின வணகங்களில் தன்னும் பங்கெடுக்க போகிறார்களா என்பதுவே தெரியாது.

விபச்சார ஊடக முறைகள் மூலம் நம்பிக்கையீனத்தை மட்டும் விதைக்கிறார்கள். 

கூட்டமைப்புக்கு வடக்கில் யாரும் ஆப்பு வைக்க முடியாது.. அடுத்த தேர்தலிலும் அவர்கள்தான் வெற்றி.. செய்தி படித்து செயல்படும் அமைப்பல்ல அது.

கூட்டமைப்புக்கு வடக்கில் யாரும் ஆப்பு வைக்க முடியாது.. அடுத்த தேர்தலிலும் அவர்கள்தான் வெற்றி.. செய்தி படித்து செயல்படும் அமைப்பல்ல அது.

உங்கள் எதிர்வு கூறல்களுக்கு நன்றி. அடுத்த உங்களின் தேர்தல் வரைக்கும் காத்திருக்க விரும்பம் இல்லை. 1948ல் SVJ காலதிருந்த தமிழரசுக்கட்சியின் உரிமை போராட்டம் ஓய்வுக்கு வரட்டும். 

அடுத்தது எங்கள் தேர்தல் ஆகட்டும் அதில் காந்தி விரும்பியது போன்று கூட்டமைப்பு தன்னைத்தான் இல்லாமல் செய்து கொள்ள வேண்டும். உரிமைக்கு போராடும்ம் இயக்கம் ஒன்று இனி தேர்தலில் நில்லாமால் வளத்துக்கு, பொருளாதாரத்துக்கு, கல்விக்கு  முன்னெனேற்றதுக்கு போராடும் கட்சிகள் உருவாகட்டும். 

அப்போதான் நீங்களும் உங்கள் தவளைப்பாச்சலில் இருந்து சற்று ஓய்வும் எடுக்கலாம். அரசாங்க ஓய்வு ஊதியத்தில் வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதில் எதுவும் தப்பில்லை.

அந்த கோரிக்கையை கூட்டமைப்புக்குள் ஆப்பாக பாவிக்காமல் கூட்டமைப்பு மீது அழுத்தமாக பாவிக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. செய்தி வரையப்பட்டிருக்கும் பாணி, அதில் வேண்டுமென்று கைலைட் பண்ணிய இடங்கள் விரும்பத்தகாத முறையில் இருக்கு.

இதை யெல்லாம் எழுதுபவர்கள் புலம் பெயர் நாட்டு மாவீரர் தின வணகங்களில் தன்னும் பங்கெடுக்க போகிறார்களா என்பதுவே தெரியாது.

விபச்சார ஊடக முறைகள் மூலம் நம்பிக்கையீனத்தை மட்டும் விதைக்கிறார்கள். 

அதுதுதுதுதுதுதுதுதுது

நானும் சொல்லவந்தது  அதுதான்???

நன்றி ஐயா  நேரத்திற்கு.......

கூட்டமைப்போ கஜேந்திரகுமாரின் கட்சியோ களத்தில் வாழ்கிறார்கள் .அவர்கள் தங்களால் முடிந்ததை செய்யட்டும்.ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைக்கும் சுதந்திரத்திற்கு ஏற்ப மாவீரர்களை நினைவு கூறட்டும்.புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் வெளிப்படையாய் ஒன்றாய் நினைவு கூறுவோம் 

  • கருத்துக்கள உறவுகள்

" பனை மரத்துக்கே பன்னீரா?" என்பது காளமேகப் புலவர் ரேஞ்ச் சிலேடை. பாமர மக்களுக்கு புரிவது கஷ்டம். பனை மரத்தில் இருந்து பல வகை நீர்கள் கிடைக்கின்றன. பனங்களி, கள்ளு, கருப்பணி.. ஒரு மரம் இப்படி பலதரப்பட்ட நீராகாரங்களை கொடுக்கிறது. அந்த மரத்துக்கே பன்னீரா (பன்னீர் = பல நீர்) என்று சிலேடையாக கேட்டார் விவசாயி அண்ணன். மரத்தை பற்றி விவசாயி பேசாமல், விஜயகாந்தா பேசுவார்?

பாருங்களேன் சபேசன், ஒரு மலையாளி எவ்வளவு தமிழ் படித்தாலும் இப்படிப்பட்ட சிலேடைகளில் சறுக்கி விடுகிறேன். அத்தோடு நான் ஒரு சிறீலங்கன் வேறு, கஸ்டம்தான்.

பனைமரதுக்கே பன்னீரா என்பது என் சிற்ற்றிவுக்கு " விளக்குமாத்துக்கேன் பட்டு குஞ்சம்" என்பது போல ஒரு நேர்மறை உவமானமாகவே பட்டது. விவசாயி மாவீரரை பற்றி இப்படி சொல்ல மாட்டார், அதுதான் குழம்பீட்டன்.

இப்பதானே புரியுது இது காளமேகம் ரேஞ்ச் உவமான உவமேயம் என்பது.

மற்றும்படி பனா பனை - பனா - பன்னீர் என்று தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் போல அர்தமில்லாமல் எதுகை மோனையாக யாரும் சப்பை கட்டு கட்டவில்லை என்பது இப்போதான் எண் மரமண்டைக்குப் புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டைகேனா குப்பத்தில எங்க பனை மரம் இருக்கு?

பதநீர் என்ற வார்த்தையை எங்கட சிந்தனை சிங்கங்கள் கேள்விபட்டதில்லையாக்கும்? மரமண்டைகளுக்கே மரத்தை பற்றி தெரியவில்லை.

Sri Lankan slum dog Shakespeare might understand it in English.

Pathaneer and nongu are fast catching up with the city people. Many kiosks, including government-run ones, have sprung up along the main roads. It tastes good and is light on the pocket. Nutritional value: Kal nongus (ripe fruits) and pathaneer are rich in carbohydrate and moisture content. They provide plenty of minerals such as calcium, phosphorous and iron, along with fibres and proteins to the body. The fruit contains Vitamins A, B and C in the form of ascorbic acid. It is perfect for the figure-conscious as it contains zero fat.

Health benefits: The pulp is highly nutritious and the fibrous outer layer mitigates body heat. Application of pathaneer on the body cures boils, rashes and dermatitis.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/palmyra-fruit-nongu-and-pathaneer/article3402344.ece

முதலாவதாக எனக்கும் கொட்டஹேனவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

ஆனால் என் ஊரான யாழில் நிறைய பனைமரம் இருக்கு.

இரண்டாவது பதநீர் அல்லது உடன்கள்ளு என்பது பனயில் இருந்து வடிக்கப்படும் பானம், இது புளித்தால் வருவது தான் கள்ளு. ஆனால் நீங்கள் சொன்னது பன்னீர். பன்னீர் என்றால் ஒரு வகை வாசனைதிரவியம். பதநீரை பன்னீர் என்று யாரும் அழைப்பதில்லை, க்ரியாவின் அகராதி பார்த்து விட்டுத்தான் எழுதுகிறேன்.

தட்டச்சு பிழை என்றால் அதை டீசண்டாக ஒத்துக்கொண்டிருக்கலாம், தேவையில்லாமல் மாவீரரை இழுத்து, அவர்களை அடி க்கப்படுத்தியிருக்க தேவையில்லை.

மூன்றாவதும் மிகமுக்கியமானதும் நீங்கள் கொழும்பு/மேலக தமிழர் மீது அள்ளிகொட்டியிருக்கும் கீழ்த்தரமான சாதி/வர்க்க/பிரதேச அடிப்படையிலான வசவுகள்.

யாரைப்பார்த்து கொட்டஹேன குப்பத்தான் என்கிறீர்கள்? ஒரு சக தமிழனை.

யாரைப்பார்த்து சேரி-நாய்-ஷேக்ஸ்பியர் (slum dog Shakespeare ) என்கிறீர்கள்? ஒரு சகதமிழனை.

நீங்கள்தான் தேசியத்தின் பாதுகாவலர்கள். நீங்கள்தான் நாம் தமிழ்நாட்டின் தமிழர்களை புறம்தள்ளுகிறோம் என்று துள்ளி குதிப்பவர்.

மனோ கணேசன் என்ற ஒரு கொட்டஹேன குப்பத்தான் உங்களுக்கு குரல் கொடுத்தபோது அவர் slum dog Shakespeare என்பது தெரியவில்லையோ?

எங்கே போனார்கள் உங்கள் தேசிய சகபாடிகள்? ஒரு கூட்டமாக ஒருவர் பின் ஒருவராக வந்து தமிழ் தேசியம், தேசியம் என்று மாரடீபவர்கள்.

உங்களின் இந்த கருத்தை பற்றி என்ன சொல்லப்போகிறார்கள். ஆவலோடு இருக்கிறேன்.

தமிழ் தேசியத்தை மதிக்கும், நேசிக்கும் எவரும் இந்த கருத்தை கண்டிக்காமல் இருக்க முடியாது.

இதைதானே அவர்கள் "பற தெமிலோ" என்றும் " வாளி தூக்கி" என்றும் சொல்கிறார்கள்? உங்கள் சேரி-நாய் என்ர வசவுக்கு, பற தெமிலோ எவ்வளவோ பரவாயில்லை.

இப்படிப்பட்ட கீழ்த்தர சிந்தனை உடையவர்களும் நான் பிறந்த யாழ் மண்ணில் பிறந்த்ஹார்களே என்று எண்ணித்தலை குனிகிறேன்.

தலைப்பு ........................................அதை செய்யுமா கூட்டணி ..............அது கேள்வி .......................
 
அவற்றிற்கு பதில் எழுதுவதை விட்டு .சும்மா புசத்தக்கூடாது .....................ஏனனில் எந்த மக்களின் வாக்குரிமையுடன் அதே மக்களின் பிரதிநிதியாக வந்தவர்களிடம் அதே மக்களின் விடிவிற்காய் தம் உயிர் ,உணர்வு ,உழைப்பு அனைத்தையும் ஈகம் செய்தவர்களை பற்றி கேட்கப்படும் ஆணித்தரமான கேள்வி ...இதற்கு யதார்த்தமான பதில் கெடைக்குமா ...............இதுதான் விடயம் ..............................அதைவிட்டு யாரும் வாலாட்டி குலைக்காதீங்கப்பா.............

Edited by தமிழ்சூரியன்

ஐயா.. இதுக்கெல்லாம் கருத்து கூற யாரும் வரமாட்டார்கள்.. உங்களுக்கு ஒரு சிம்பிள் ‘கள விதி’ புரிந்தால் நீங்களும் எங்களிடம் அதிகம் எதிர்பார்க்க மாட்டீர்கள். எங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நாங்கள் மலையாளி என்பதில் இருந்து மாடு மேய்ப்பவன் வரை சொல்வோம். உங்களை கொஞ்சம் ஓவராக பிடிக்கவில்லை அண்ணனுக்கு.

புல்லுருவி, பூங்குருவி, ஒட்டுண்ணி, எலும்பு சூப்பி எல்லாம் இப்ப அலுத்துவிட்டது. அண்ணைக்கு சேக்ஸ்பியரையும் தெரியும். ஷேக் பண்ணாத பியரையும் தெரியும். ஆறிவாளிங்க.. அறிவாளி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் எதிர்வு கூறல்களுக்கு நன்றி. அடுத்த உங்களின் தேர்தல் வரைக்கும் காத்திருக்க விரும்பம் இல்லை. 1948ல் SVJ காலதிருந்த தமிழரசுக்கட்சியின் உரிமை போராட்டம் ஓய்வுக்கு வரட்டும். 

அடுத்தது எங்கள் தேர்தல் ஆகட்டும் அதில் காந்தி விரும்பியது போன்று கூட்டமைப்பு தன்னைத்தான் இல்லாமல் செய்து கொள்ள வேண்டும். உரிமைக்கு போராடும்ம் இயக்கம் ஒன்று இனி தேர்தலில் நில்லாமால் வளத்துக்கு, பொருளாதாரத்துக்கு, கல்விக்கு  முன்னெனேற்றதுக்கு போராடும் கட்சிகள் உருவாகட்டும். 

அப்போதான் நீங்களும் உங்கள் தவளைப்பாச்சலில் இருந்து சற்று ஓய்வும் எடுக்கலாம். அரசாங்க ஓய்வு ஊதியத்தில் வாழலாம்.

கூட்டமைப்பு பற்றி நல்லா சொன்னதற்கு கிடைப்பது எந்த அரசாங்கம் ஓய்வு ஊதியம் அண்ணை? ஒருவேளை வடக்கு மாகாணசபை அரசாங்கமோ.. இல்லாட்டி சிங்கள ஏகாதிபத்திய அரசாங்கமோ..? அல்லது ரெண்டும் ஒன்றுதானோ..

நீங்களும் உங்கள் தவளைப்பாச்சலில் இருந்து சற்று ஓய்வும் எடுக்கலாம்...” குறும்புக்கார அண்ணை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா,

இந்த சிறி லங்கன் 4 தகர டப்பாக்களே இவ்வளவு சத்தம் போடுகின்றன.

அவர்களுக்கு பதநீர் என்ற வார்த்தை நான்பதியுமட்டும் தெரிந்திருக்கவில்லை.

பண்டைய தமிழ் புலவர்களை எல்லாம் இழுத்தார்கள். ஆனால் கொட்டைகேன சிறி லன்கனுகளுக்கு பதநீர் என்ற வார்த்தை தெரியாது.

இந்த நாடு சொல்ல பயப்படும் நாலு டம்மி பீசுகளுகள் குலைப்பதற்கு நாங்கள் எப்படி பயப்படுவது?

சிறி லங்கன் 4 தகர டப்பாக்கள் சத்தம் போடுறதோட நின்று விடுவதில்லை என்கிறதுதான் சிக்கலே.. இல்லாவிட்டால் நாங்கள் ஏன் இன்னும் புலம்பிக்கொண்டு இருக்கப்போறம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“பதிலளித்து நசிஞ்ச தகர டப்பாக்களில் ஒன்று என்று காட்டியதற்கு நன்றி. ”

(உங்கள் நினைப்பில்) நசிஞ்ச தகர டப்பாவாக இருப்பதில் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. தங்கமான கருத்துக்களை எழுதும் நீங்கள் எனக்கு எப்போதும் தங்கக் குவளைதான்! அதில் மாற்றமில்லை அண்ணே...

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் புலம்பெயர்நாடுகளில் இருந்து பிரச்சனைகளை உருவாக்குகின்ற வேலைகளைப் பார்க்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன். ஏதோ ஒரு நாட்டில் வாழ்கின்றவர்கள், அங்கே கூட்டமைப்புக்கோ, அல்லது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் என்னெ;ன பிரச்சகைள் ஆகும் எ;பது பற்றிச் சிந்திப்பதற்குத் தயாராக இல்லை என்பது வருத்ததிற்குரியது. சென்ற தடவை யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேத்திக் கடைசியில் அவர்களைச் சிங்கள அரசு பிடித்துக் கொண்டு போன பிற்பாடு இதே குரல் இட்டவர்கள் என்ன செய்தார்கள்? ஏதாவது காப்பாற்ற முயற்சி??? சிங்கள அரசு ஒருவகையில் புலிகளின் பெயரைச் சொல்லித் தமிழ் மக்களை ஒடுக்கவே இப்போதும் முயற்சிக்கின்றது. ஒரு தோல்வி வந்த பிற்பாடு எம் மக்களை கொஞ்சமாவது அடுத்த நிலைக்குப் போவதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.

ஓயாத அலைகள் 3 இல் பெருவெற்றி பெற்றவுடன் இயக்கமே போர்நிறுத்தம் அறிவித்தது. ஆனால் அதற்குப் பிற்பாடு சிங்கள அரசு தீச்சுவாலையை ஆரம்பித்தது. இயக்கம் ஏன் போர்நிறுத்தம் செய்தது என்றால், அத்கு நிறையக் காரணிகள், இழப்புக்கள், வெற்றிகள், அதன் பிற்பாடு செய்யப்படுகின்ற தயார்படுத்தல்கள் எனக் கால இடைவெளி தேவை.

விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட முடிவுக்குப் பின்னால் எவ்வகையான செயற்பாடுகளை நாம் செய்தோம். எந்த மக்கள் பற்றியும் கவலைப்படவில்லை. அவர்களுக்கு பொருளாதர, கல்வி வசதிகள் பற்றிச் சிந்திக்கவுமில்லை. ஆனால் பல்கலைக்கழகமும், கூட்டமைப்பும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் போதுமென நினைக்கின்றோம். இதற்காகவா இத்தனை போராட்டம்? ஆனால் அதில் கூட நியாமில்லை. எப்படியாவது கூட்டமைப்பினைப் பிரச்சனைக்குள் மாட்டி விட வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டுமே மிச்சமாக உள்ளது.

மகிந்த அரசு, அபிவித்தி என் பெயரில் தமிழ் மக்கள் நன்மையடைவதைத் தடுக்க நினைக்கின்றது. அது செய்கின்ற வீதி அபிவிருத்தி, தொடக்கம், கட்டுகின்ற ஒவ்வொன்றுமே பொதுவான மக்களோ, சிங்கள இராணுவமோ பலனடைகின்றதாகவே இருக்கின்றதே தவிர, அடிப்படைத் தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் இல்லை.

தலைப்பு ........................................அதை செய்யுமா கூட்டணி ..............அது கேள்வி .......................
 
அவற்றிற்கு பதில் எழுதுவதை விட்டு .சும்மா புசத்தக்கூடாது .....................ஏனனில் எந்த மக்களின் வாக்குரிமையுடன் அதே மக்களின் பிரதிநிதியாக வந்தவர்களிடம் அதே மக்களின் விடிவிற்காய் தம் உயிர் ,உணர்வு ,உழைப்பு அனைத்தையும் ஈகம் செய்தவர்களை பற்றி கேட்கப்படும் ஆணித்தரமான கேள்வி ...இதற்கு யதார்த்தமான பதில் கெடைக்குமா ...............இதுதான் விடயம் ..............................அதைவிட்டு யாரும் வாலாட்டி குலைக்காதீங்கப்பா.............

வாக்குப் போட்ட மக்கள் மாவீரர் தினத்துக்கு கூட்டமைப்பு ஒளியேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் வாக்குப் போட்டார்கள் எனில், அத்தனை மக்களும் கூட்டபை;போடு சேர்ந்து நின்று பொதுவான இடத்தில் ஒளியேற்றத் தயாராக இருப்பார்கள் எனில் கூட்டமைப்பினைப் பார்த்து இக்கேள்வி கேட்பதில் தவறில்லை. ஒவ்வொரு பிரச்சனைகளையும் உருவாக்கும்போது எவ்வகையான பிரச்சனைகள் உருவாகின்றன என்பது பற்றியும் சிந்திப்பது நன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் புலம்பெயர்நாடுகளில் இருந்து பிரச்சனைகளை உருவாக்குகின்ற வேலைகளைப் பார்க்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன். ஏதோ ஒரு நாட்டில் வாழ்கின்றவர்கள், அங்கே கூட்டமைப்புக்கோ, அல்லது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் என்னெ;ன பிரச்சகைள் ஆகும் எ;பது பற்றிச் சிந்திப்பதற்குத் தயாராக இல்லை என்பது வருத்ததிற்குரியது. சென்ற தடவை யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேத்திக் கடைசியில் அவர்களைச் சிங்கள அரசு பிடித்துக் கொண்டு போன பிற்பாடு இதே குரல் இட்டவர்கள் என்ன செய்தார்கள்? ஏதாவது காப்பாற்ற முயற்சி??? சிங்கள அரசு ஒருவகையில் புலிகளின் பெயரைச் சொல்லித் தமிழ் மக்களை ஒடுக்கவே இப்போதும் முயற்சிக்கின்றது. ஒரு தோல்வி வந்த பிற்பாடு எம் மக்களை கொஞ்சமாவது அடுத்த நிலைக்குப் போவதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.

ஓயாத அலைகள் 3 இல் பெருவெற்றி பெற்றவுடன் இயக்கமே போர்நிறுத்தம் அறிவித்தது. ஆனால் அதற்குப் பிற்பாடு சிங்கள அரசு தீச்சுவாலையை ஆரம்பித்தது. இயக்கம் ஏன் போர்நிறுத்தம் செய்தது என்றால், அத்கு நிறையக் காரணிகள், இழப்புக்கள், வெற்றிகள், அதன் பிற்பாடு செய்யப்படுகின்ற தயார்படுத்தல்கள் எனக் கால இடைவெளி தேவை.

விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட முடிவுக்குப் பின்னால் எவ்வகையான செயற்பாடுகளை நாம் செய்தோம். எந்த மக்கள் பற்றியும் கவலைப்படவில்லை. அவர்களுக்கு பொருளாதர, கல்வி வசதிகள் பற்றிச் சிந்திக்கவுமில்லை. ஆனால் பல்கலைக்கழகமும், கூட்டமைப்பும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் போதுமென நினைக்கின்றோம். இதற்காகவா இத்தனை போராட்டம்? ஆனால் அதில் கூட நியாமில்லை. எப்படியாவது கூட்டமைப்பினைப் பிரச்சனைக்குள் மாட்டி விட வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டுமே மிச்சமாக உள்ளது.

மகிந்த அரசு, அபிவித்தி என் பெயரில் தமிழ் மக்கள் நன்மையடைவதைத் தடுக்க நினைக்கின்றது. அது செய்கின்ற வீதி அபிவிருத்தி, தொடக்கம், கட்டுகின்ற ஒவ்வொன்றுமே பொதுவான மக்களோ, சிங்கள இராணுவமோ பலனடைகின்றதாகவே இருக்கின்றதே தவிர, அடிப்படைத் தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் இல்லை.

வாக்குப் போட்ட மக்கள் மாவீரர் தினத்துக்கு கூட்டமைப்பு ஒளியேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் வாக்குப் போட்டார்கள் எனில், அத்தனை மக்களும் கூட்டபை;போடு சேர்ந்து நின்று பொதுவான இடத்தில் ஒளியேற்றத் தயாராக இருப்பார்கள் எனில் கூட்டமைப்பினைப் பார்த்து இக்கேள்வி கேட்பதில் தவறில்லை. ஒவ்வொரு பிரச்சனைகளையும் உருவாக்கும்போது எவ்வகையான பிரச்சனைகள் உருவாகின்றன என்பது பற்றியும் சிந்திப்பது நன்று.

நல்ல கருத்து. உண்மையும்கூட.. ஆனால், இங்கே பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.