Jump to content

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான பதில் புயல் அவர்களே. வாழ்த்துக்கள்.

மூன்றாம் ஈழ போர்
பேச்சுக்களில் இருந்து விலகுவதாக தேசிய தலைவர் சந்திரிகாவுக்கு அறிவித்த நாள் 18/04/1995. திருமலை துறை முகத்தில் சூர்யா, ரணசுறு பீரங்கி கப்பல்கள் மூழ்கடிப்பு 19/04/1995. யாழ் குடா வான் பரப்பில் 02 அவ்ரோ விமானங்கள் வீழ்த்த பட்டது 29/04/1995

  • Replies 500
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதன் முதலில் தமிழீழத் தேசியக்கொடி மேதகு தலைவர் பிரபாகரனால் அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பட்ட ஆண்டு எது?
 
முடிந்தால் மாதம் திகதி போன்றவற்றையும் எழுதலாம்  (எழுத்துக்கள் நீக்கப்பட்ட கொடி தான் தேசியக்கொடி என்பதை ஞாபகத்தில் வைக்கவும்)

21.11.1990

Posted

21.11.1990

மிகவும் சரியான பதில்
 
வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிங்கள இராணுவத்தால்  கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட

முதல் தமிழ்ப் பெண்மணி யார்? (இவர் சுமார் 20 மாதங்கள் வரையில் சிறையில் இருந்துள்ளார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அராலி கண்ணி வெடி தாக்குதல் (கொப்பெகடுவ) நிகழ்த்த பட்ட ஆண்டு?

Posted

ஜொனி 95 தயாரிக்கப்பட்ட நாடு தமிழீழம் என்ற வாசகம் இருக்கலாம். அஞ்சரனின் முடிவை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

வாழ்க வளமுடன்

அஞ்சரன் இந்தக் கேள்விக்கான பதில் சரியா என்பதை அறியத் தரவில்லை.

வாழ்க வளமுடன்

ஜொனி தகட்டில் எழுதபட்டு இருக்கும் வாசகம் ....நீ ஒரு முட்டாள் ...என்பதே .முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் புயல் .

Posted

சாகரவத்தனா கப்பல் தகர்ப்பில் கைது செய்யப்பட்ட கப்பல் கேப்டனின் பெயர் என்ன இவர் சமாதன காலத்தில் விடுவிக்க பட்டார் .?

Posted

அராலி கண்ணி வெடி தாக்குதல் (கொப்பெகடுவ) நிகழ்த்த பட்ட ஆண்டு?

1992ம் ஆண்டு August மாதம் 08ஆம் நாள். தீவகப் பகுதியிலிருந்து யாழ்நகரைக் கைப்பற்றுவதற்கான இறுதிநேர ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக சிறிலங்காப் படையினரின் அப்போதைய வடமாகாணக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும்யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகிய நட்சத்திரத் தளபதிகளுடன் ஏனைய முக்கியமான தளபதிகளும் வேலணை அராலித்துறைக்கு விஜயம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் நிகழ்த்தப்பட்டவொரு நிலக்கண்ணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் படைநடவடிக்கையும் கைவிடப்பட்டிருந்தது.

Posted

அராலி கண்ணி வெடி தாக்குதல் (கொப்பெகடுவ) நிகழ்த்த பட்ட ஆண்டு?

அராலி கண்ணி வெடித் தாக்குதல் நடைபெற்ற ஆண்டு 08.08.1992

வாழ்க வளமுடன்

Posted

சாகரவத்தனா கப்பல் தகர்ப்பில் கைது செய்யப்பட்ட கப்பல் கேப்டனின் பெயர் என்ன இவர் சமாதன காலத்தில் விடுவிக்க பட்டார் .?

கடற்புலிகளால் கைது செய்யப்பட்ட சாகரவர்த்தனா கப்பலின் கப்டன் கொமாண்டர் பொயாகொட.
 
வாழ்க வளமுடன்
 
சரியா அஞ்சரன்
Posted

வல்வெட்டி அல்லது தொண்டமானாறு சரியா?

வாழ்க வளமுடன்

தலைவர் காலில் காயம் அடைந்த ஊரின் பெயர் " நவிண்டில்" ....

Posted

மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழீழத்திற்கு வெளியே தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக்

கௌரவிக்கப்பட்ட முதல் அயல் நாட்டுக்காரர் யார்?

அவரின் சொந்த நாடு எது? மாமனிதர் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

தலைவர் காலில் காயம் அடைந்த ஊரின் பெயர் " நவிண்டில்" ....

தகவலிற்கு நன்றி தயா
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1452554_407035819423901_1813403994_n.jpg

மேற்படி பசிலன் ஞாபகார்த்த உந்துகணை எக்களத்தில் எப்போது முதன்முதலில் பாவிக்கப்பட்டது..??!

Posted

பசிலன் மோட்டார் யாழ் கோட்டை முற்றுகையின் போது தான் பாவிக்கப்பட்டது...

கோட்டையை போராளிகளை விட பசிலன் தான் பிடித்து தந்தது எண்டு பகிடியாக சொல்வார்கள்... பெரிய சுவர்களால் சுற்றப்பட்டு இருந்த கோட்டைக்குள் விழுந்த பசிலன் ஏற்படுத்திய சேதத்தை விட அதன் வெடியோசையால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம்... கோட்டைக்கு அருகில் இருந்த முனியப்பர் கோயில் காவல் அரணில் இருந்த போராளிகளின் காதுகள் கூட பாதிப்படைந்ததாக சொல்வார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1990 இல் யாழ் கோட்டை முற்றுகைச் சமரில் பசிலன் முதன்முதலில் பாவிக்கப்பட்டது என்பது தான் சரி. பாராட்டுக்கள் தயாண்ணா. இந்த விடையில் தவறிருந்தால் உறவுகள் சுட்டிக்காட்டலாம். நன்றி.

Posted

ஓயாத அலை நடவடிக்கை 1 இன் போது அளம்பில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட சீனாவின் "சங்காய்" வகை கட்டளை கப்பல் எது...?? மூழ்கடிப்புக்காய் தம்முயிர் தந்த கரும்புலிகள் எத்தினைபேர்...??

Posted

கடற்புலிகளால் கைது செய்யப்பட்ட சாகரவர்த்தனா கப்பலின் கப்டன் கொமாண்டர் பொயாகொட.
 
வாழ்க வளமுடன்
 
சரியா அஞ்சரன்

அஜித் பொயாகொட  சரியான பதில் வாழ்த்துக்கள் புயல் .

Posted

ஓயாத அலை நடவடிக்கை 1 இன் போது அளம்பில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட சீனாவின் "சங்காய்" வகை கட்டளை கப்பல் எது...?? மூழ்கடிப்புக்காய் தம்முயிர் தந்த கரும்புலிகள் எத்தினைபேர்...??

“ரணவிரு” என்ற பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் மேஜர் செல்லப்பிள்ளை, மேஜர் பார்த்தீபன், மேஜர் கண்ணபிரான், மேஜர் பதுமன், மேஜர் சுரரொளி ஆகியோரால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

Posted

முதன் முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிங்கள இராணுவத்தால்  கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட

முதல் தமிழ்ப் பெண்மணி யார்? (இவர் சுமார் 20 மாதங்கள் வரையில் சிறையில் இருந்துள்ளார்?

உறவுகள் அனைவரும் கவனிக்கவும் எனது இரு கேள்விகள் தொக்கி நிற்கின்றபடியால் அவற்றை மீண்டும் இந்தப்

பக்கத்திற்குக் கொண்டுவருகின்றேன்

மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழீழத்திற்கு வெளியே தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக்

கௌரவிக்கப்பட்ட முதல் அயல் நாட்டுக்காரர் யார்?

அவரின் சொந்த நாடு எது? மாமனிதர் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

தகவலிற்கு நன்றி தயா
 
வாழ்க வளமுடன்

Posted

“ரணவிரு” என்ற பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் மேஜர் செல்லப்பிள்ளை, மேஜர் பார்த்தீபன், மேஜர் கண்ணபிரான், மேஜர் பதுமன், மேஜர் சுரரொளி ஆகியோரால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

சரியான விடை அஞ்சரன்... 

உறவுகள் அனைவரும் கவனிக்கவும் எனது இரு கேள்விகள் தொக்கி நிற்கின்றபடியால் அவற்றை மீண்டும் இந்தப்

பக்கத்திற்குக் கொண்டுவருகின்றேன்

எனக்கு விடை தெரியவில்லை அண்ணை...   நீங்களாக விடையை சொன்னால் மகிழ்ச்சி...  :)

Posted

மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழீழத்திற்கு வெளியே தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக்

கௌரவிக்கப்பட்ட முதல் அயல் நாட்டுக்காரர் யார்?

அவரின் சொந்த நாடு எது? மாமனிதர் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 1918 - மார்ச் 10, 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.

அவுஸ்ரேலியா .

அஞ்சரனுக்குச் சிறப்பான வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

மாமனிதர் விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது என்பதற்கான பதிலையும் எதிர்பார்க்கின்றேன்.

Posted

சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலில் பங்குபற்றியவர்களுக்கு உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாதத் தடைச்

சட்டத்தின் கீழ் கெது செய்யப்பட்டவர்

நிர்மலா நித்தியானந்தன்

Posted

பலாலி பெருந்தளத்தின் மையத்தில் பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்று, பவள் கவச வாகனம் ஒன்று,ம்

அழிக்கப்பட்ட தாக்குதலில் காவியமான கரும்புலிகள் எத்தனை பேர்?

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.