Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்தடுத்து 6 குண்டுகள் வெடிப்பு - 5 பேர் பலி : மன்மோகன்சிங் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாட்னாவில் பல்வேறு இடங்களில் நடந்த 6 வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 5 பேர் பலியாயி னர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

ரயில் நிலையம் அருகிலும், நரேந்திர மோடி பேசிய காந்தி மைதானத்திலும் குண்டு வெடிப்புகள் தொடர்ச்சி யாக நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் காந்தி மைதானமே பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் இது குறித்து மத்திய அரசுக்கு அம்மாநில அரசு அறிக்கை அனுப்ப உள்ளது. 

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=110056

ஆர்எஸ்எஸ் மோடியை, பிரதமராக்க விரும்பவில்லை, பிணமாக்கவே விரும்புகிறது. இது தான் உண்மை.. :(
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடாப்ப உந்த இந்தியா என்ற ஜனநாயக நாட்டில் குண்டு எல்லாம் வெடிக்குதோ  :(

Edited by பையன்26

ஆர்எஸ்எஸ் மோடியை, பிரதமராக்க விரும்பவில்லை, பிணமாக்கவே விரும்புகிறது. இது தான் உண்மை.. :(

ஏன் நாம் காங்கிரஸ் அரசையும் முஸ்லிம் பயங்கரவாதிகளை கூட சந்தேகிக்கலாம் அல்லவா ...!!

ஏன் நாம் காங்கிரஸ் அரசையும் முஸ்லிம் பயங்கரவாதிகளை கூட சந்தேகிக்கலாம் அல்லவா ...!!

இல்லை மோடிக்கு ஒன்று நடந்தா மிகப்பெரிய இந்து முஸ்லிம் கலவரம் நடக்கும் என்பது நன்கு தெரியும் அதனால் முஸ்லிம் இதில் ஈடுபாடு காட்டாது .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ அமெரிக்க கைக்கூலிகளின் வேலையாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது  

இல்லை மோடிக்கு ஒன்று நடந்தா மிகப்பெரிய இந்து முஸ்லிம் கலவரம் நடக்கும் என்பது நன்கு தெரியும் அதனால் முஸ்லிம் இதில் ஈடுபாடு காட்டாது .

ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கைகள் இந்தியன் முஜாஹிதீன் என்னும் முஸ்லிம் பயங்கரவாதிகளின் கை வேலை தான் என்று அல்லவா கூறுகிறது

அவர் பேசிய மேடைக்கு அடியில் இருந்து கூட வெடி குண்டுகளை கண்டுபிடித்துள்ளனர்

மொத்தம் இதுவரை 5 வெடிக்காத குண்டுகளையும் கைப்பற்றி இருக்கிறது தேசிய புலனாய்வு படை

றோ என்ன செய்கிறார்கள்? ஈழத்தில் வந்து சீலை, கருவாடு வித்து மெனக்கிடுவதற்கு சொந்த நாட்டில் போய் துப்பு துலக்கலாம்.

கொங்கிரஸ் எசமானருக்கு விசுவாசமாக இவர்களே செய்தாலும் செய்திருப்பார்கள்.

மோடியை வன்முறையாளாராக காட்டி இராகுல்லை அப்பாவியாகாட்டுவது தான் கொங்கிரஸ் தேர்தல் யுக்தி.

தாஜ் ஹோட்டல் தாக்குதல் குழுவிற்கு இரகசியமாக செல்பேசி கொடுத்தது ஒரு றோ அதிகாரி.

12 மணித்தியாலங்களாக SWAT குழு வரவில்லை. வந்தபின்னும் ஆக்ரோசமாக சண்டை பிடிக்க கூடிய மலையாள வீரரை தாமே சுட்டு பொசுக்கினார்கள்.

இந்த கொடூர நாடகம் கொங்கிரஸ் பாராளுமன்றத்தில் பெரிய ஊழலுக்கு பதில் சொல்லவேண்டிய தருணத்தில் நடந்தது.

ஏற்கனவே அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதையும்  அங்கு தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் ரா ஏற்கனவே அறிவிப்பு கொடுத்திருந்தது .

எதற்கு எடுத்தாலும் இராணுவத்தையோ உளவு துறையையோ குற்றம் கூறாதீர்கள் ..அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

மோடி வருகைக்கு முன்பாக பாட்னாவில் தொடர் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி-70 பேர் காயம்

inReadadsby.png
 
பாட்னா: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாட்னாவுக்கு வருகை தருவதற்கு முன்பு அவர் பேச இருந்த மேடைக்கு அருகே அடுத்தடுத்து 7 குறைந்த சக்தி குண்டுகள் வெடித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர். பாட்னா ரயில் நிலையத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. வெடிக்காத நிலையில், குண்டு ஒன்றை போலீஸார் மீட்டுள்ளனர். மொத்தம் 7 குண்டுகள் வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாட்னாவில் நரேந்திர மோடி உரையாற்றிய நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் பதட்டம் ஏற்பட்டது.

இந்த வெடிகுண்டு விபத்து ஏற்கனவே திட்டமிட்ட சதியா, இதில் யார் யாருக்குத் தொடர்பு என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சேதார விவரம் குறித்து இன்னும் தெளிவான விவரங்கள் தெரிய வரவில்லை.

27-patna-blast-600-jpg.jpg

அறிக்கை கேட்கும் மத்திய அரசு

இந்த குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளது மத்திய அரசு.

இதுகுறித்து எஸ்.பி. மனு மஹராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிளாட்பார்ம் எண் 10ல் குண்டுவெடித்தது. அது ஒரு நாட்டு வெடிகுண்டு. அதில் ஒருவர் காயமடைந்தார் என்றார்.

27-patna-bomb-blast2434-600-jpg.jpg

மோடி கூட்ட அரங்குக்கு அருகே இன்னொரு குண்டுவெடிப்பு

அதேபோல மோடி கூட்டம் நடைபெறும் காந்தி மைதானத்திற்கு அருகே உள்ள எல்பின்ஸ்டன் தியேட்டருக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது.

காந்தி மைதானத்தைச் சுற்றி 4 குண்டுகள் வெடிப்பு

மேலும் காந்தி மைதானத்தைச் சுற்றிலும் 3 முதல் 4 குண்டுகள் வரை வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

27-patna-bomb-blast-600-jpg.jpg

பாதுகாப்பு குறைபாடே காரணம்

மோடி கூட்டத்திற்கு உரிய முறையில் பாதுகாப்பை மாநில காவல்துறை செய்யாமல் போனதே இந்தக் குளறுபடிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

4 பேரிடம் விசாரணை

குண்டுவெடிப்பு தொடர்பாக நான்கு பேரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

27-patna-bomb-blast43-600-jpg.jpg

மாபெரும் உளவுத்துறை தோல்வி

குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இது உளவுத்துறையின் மாபெரும் தோல்வியாகும் என்றார்.

-தற்ஸ் தமிழ்-

ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கைகள் இந்தியன் முஜாஹிதீன் என்னும் முஸ்லிம் பயங்கரவாதிகளின் கை வேலை தான் என்று அல்லவா கூறுகிறது

அவர் பேசிய மேடைக்கு அடியில் இருந்து கூட வெடி குண்டுகளை கண்டுபிடித்துள்ளனர்

மொத்தம் இதுவரை 5 வெடிக்காத குண்டுகளையும் கைப்பற்றி இருக்கிறது தேசிய புலனாய்வு படை

ஏற்கனவே அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதையும்  அங்கு தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் ரா ஏற்கனவே அறிவிப்பு கொடுத்திருந்தது .

எதற்கு எடுத்தாலும் இராணுவத்தையோ உளவு துறையையோ குற்றம் கூறாதீர்கள் ..அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது

இந்தியாக்கு தெரிந்தது முஸ்லிம் அமைப்புகள் மட்டுமே பழிய போட்டு தப்பி கொள்வது மாறி சொன்னா அரசுக்கு சிக்கல் வேறு வழி.

மேடையில் குண்டுவைக்கும் வரை பாதுகாப்பு அப்படி இருந்து இருக்கு முன்கூட்டியே .

இந்தியாக்கு தெரிந்தது முஸ்லிம் அமைப்புகள் மட்டுமே பழிய போட்டு தப்பி கொள்வது மாறி சொன்னா அரசுக்கு சிக்கல் வேறு வழி.

மேடையில் குண்டுவைக்கும் வரை பாதுகாப்பு அப்படி இருந்து இருக்கு முன்கூட்டியே .

http://zeenews.india.com/news/bihar/serial-blasts-rip-through-patna-killing-5-im-hand-suspected_886365.html

நாம் பாதுகாப்பை குறை சொல்ல முடியாது ..இதே கூட்டத்தில் நமது பிரதமர் வந்து பேசியிருந்தால் அதன் பாதுகாப்பு முறைகளை தேசிய புலானய்வு அமைப்பு ஆராயும்

ஆனால் இங்கு மாநில அரசும் பிஜேபி அமைப்பும் மட்டுமே பாதுகாப்பையும் நிகழ்ச்சி அமைப்பையும் பார்த்துக் கொள்ளும் ..இன்னும் சில மாநில பொலிசாரும் ஈடுபடுத்தப்படுவார்

உளவு துறையினதும் இராணுவத்தினதும் கையை யார் கட்டினார்கள்?

கையை கட்டி கொண்டு பாதுகாக்காமல் நிற்பவர்களை குறை கூறாமல் சுண்டல் விற்பவனையா திட்ட முடியும்?

அரசின் அனுமதி இருந்தால் தான் பாதுகாப்புத்துறை சுடும் ..இல்லையெனில் கட்டளைக்காக காத்திருக்கும்

இதை கடந்த நாட்களில் சீனாவின் ஊடுருவல் மூலமே தெரிந்து கொள்ள இயலும் ..

மதிய அரசின் ஒரு அங்கம் தான்  பாதுகாப்புத்துறை என்பதை மறந்து விடக் கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பாதுகாப்பை குறை சொல்ல முடியாது ..இதே கூட்டத்தில் நமது பிரதமர் வந்து பேசியிருந்தால் அதன் பாதுகாப்பு முறைகளை தேசிய புலானய்வு அமைப்பு ஆராயும்

ஆனால் இங்கு மாநில அரசும் பிஜேபி அமைப்பும் மட்டுமே பாதுகாப்பையும் நிகழ்ச்சி அமைப்பையும் பார்த்துக் கொள்ளும் ..இன்னும் சில மாநில பொலிசாரும் ஈடுபடுத்தப்படுவார்

அரசின் அனுமதி இருந்தால் தான் பாதுகாப்புத்துறை சுடும் ..இல்லையெனில் கட்டளைக்காக காத்திருக்கும்

இதை கடந்த நாட்களில் சீனாவின் ஊடுருவல் மூலமே தெரிந்து கொள்ள இயலும் ..

மதிய அரசின் ஒரு அங்கம் தான்  பாதுகாப்புத்துறை என்பதை மறந்து விடக் கூடாது 

மோடி ஒரு மாநில முதல்வர். அத்துடன்... எதிர்வரும் நாடாளுமன்ற பிரதமர் வேட்பாளர்.

அவருக்கு... சிறுபான்மைக் குழுக்களாலும், பாகிஸ்தான் ஊடுருவல் தீவிரவாதிகளாலும்... அச்சுறுத்தல் உள்ளது என்பது... மத்திய அரசுக்கு தெரியாதா? அவருக்குக் கொடுக்க வேண்டிய பாதுகாப்பை... அவர் கேட்காமலே மத்திய அரசு கொடுப்பது தான் முறை. அதனை விடுத்து... எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்ற படியால்... மத்திய அரசும், பாதுகாப்புத்துறையும்... ஏனோ தானோ... என்று இருந்து விட்டு, குண்டு வெடிப்பு நடந்த பின் பிரதமர் மன்மோகன் சிங் குண்டு வெடிப்பை கண்டித்து அறிக்கை விடுவதில் அர்த்தம் இல்லை.

தற்செயலாக... இந்தக் குண்டு வெடிப்பில், மோடி கொல்லப் பட்டிருந்தால்....

ராகுல் காந்தியின் பிரதமர் கனவு இலகுவில் நிறைவேறிவிடும் என்று மத்திய அரசும், பாதுகாப்புத் துறைக்குச் சம்பந்தப் பட்டவர்களும் நினைத்ததாகவே... நாம் கருத வேண்டியுள்ளது.

Edited by தமிழ் சிறி

மோடி ஒரு மாநில முதல்வர். அத்துடன்... எதிர்வரும் நாடாளுமன்ற பிரதமர் வேட்பாளர்.

அவருக்கு... சிறுபான்மைக் குழுக்களாலும், பாகிஸ்தான் ஊடுருவல் தீவிரவாதிகளாலும்... அச்சுறுத்தல் உள்ளது என்பது... மத்திய அரசுக்கு தெரியாதா? அவருக்குக் கொடுக்க வேண்டிய பாதுகாப்பை... அவர் கேட்காமலே மத்திய அரசு கொடுப்பது தான் முறை. அதனை விடுத்து... எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்ற படியால்... மத்திய அரசும், பாதுகாப்புத்துறையும்... ஏனோ தானோ... என்று இருந்து விட்டு, குண்டு வெடிப்பு நடந்த பின் பிரதமர் மன்மோகன் சிங் குண்டு வெடிப்பை கண்டித்து அறிக்கை விடுவதில் அர்த்தம் இல்லை.

நீங்கள் கூறுவது உண்மை தான் ..

மோடிக்கு இதுவரை எந்த வித சிறப்பு பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை ..அவருக்கு ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் z பிரிவு பாதுகாப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது

என்னை பொறுத்தவரை அவருக்கு z + அல்லது SPG அளவில் பாதுகாப்பு கொடுக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
28-patna-blast-12-1600.jpg

பாட்னா தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது, இந்தியன் முஜாஹிதீனின் தெஷீன் அக்தர்?

பாட்னா: குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் பாட்னா பொதுக்கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சதியில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனரான யாசின் பட்கலின் உதவியாளர் முகமது தெஷீன் அக்தருக்கு முக்கிய தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நேற்று பீகார் தலைநகர் பாட்னா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சற்று முன்பாக பாட்னா ரயில்நிலையம் மற்றும் பொதுக்கூட்ட மைதானத்தை சுற்றி 7 இடங்களில் குண்டு வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர். 95 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சதியில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பிருக்கலாம் என்று பீகார் போலீசார் சந்தேகிக்கின்றனர். அத்துடன் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரான யாசின் பட்கலின் உதவியாளர் முகமது தெஷீன் அக்தர்தான் இந்த சதியின் மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்பதும் போலீசாரின் சந்தேகம்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இம்தியாஸ் அன்சாரி, தெஷீன் அக்தரின் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த கிராமம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது. அத்துடன் சிக்கிய மற்றொரு நபரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவன். இந்த இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த கிராமத்தில் ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் பணத்தை ஜார்க்கண்ட் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இருவரிடமும் தெஷீன் அக்தரின் இருப்பிடம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பீகார் டிஜிபி கருத்து.

இதனிடையே இந்த குண்டுவெடிப்பு குறித்து கருத்து தெரிவித்த பீகார் டிஜிபி அபயானந்த், அடுத்த 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்தில் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் குறித்து திட்டவட்டமான தகவல்கள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த குண்டு வெடிப்பில் இறந்த 5 பேரில் மூவரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எஞ்சிய இரு உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்றார்.
 
நன்றி தற்ஸ்தமிழ்.

இனக் கலவரத்தை தூண்டுவதை காங்கிரஸ் தான் அதிக ஆர்வம் காட்டுகிறது, அதிக ஆதாயம் பெறலாம் என்று, ராகுல் காந்தியின் பேச்சும் அதை குறிக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கேன தேசிய கட்சியோ தலைவரும் இல்லை, அதற்கான தேவையும் மிகக் குறைவு, மோடி கொல்ல படுவதால் உள்ள பாதகங்களை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர், அதனால் எற்படக்கூடிய இழப்பு ஈடு செய்ய இயலாதது, அதை அவர்கள் விரும்பவும் இல்லை, முன்னர் போன்று ஒரு அயோத்தி மசூதி இடிப்போ, கோத்ரா ரயில் எரிப்போ இந்துத்துவா தலைவர்கள் விரும்பினாலும் பாஜாகவினால் அல்லது மோடியினாலோ எற்படுத்த முடியாது, பிரிவினைவாதத்தை மையமாக கொண்டு செயல்படும் முஸ்லீம் அமைப்புகளும், பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் தீவிரவாத குழுக்கள் மோடி பிரதமர் ஆக விடக்கூடாது என மிரட்டல் விடுத்தும் வருகின்றன, உயிருக்கு உத்திரவாதம் இல்லை என மேடையில் முழக்கமிடும் ராகுலை விட அதிக ஆபத்து உள்ளது என தெரிந்தும் உரிய பாதுகாப்பு வழங்காமல் உள்ளனர் காங்கிரசார். மோடி பிரதம வேட்பாளராக முன்னிறுத்தியது முதல் எதிர்த்து வந்த பிகார் முதல்வர் நிதிஷ் குமார் அலட்சியமாய் வழங்கிய பாதுகாப்பும் ஒரு காரணமே.

மத்திய உளவுத்துறை நேரடியாக கடிதம் அனுப்பி மாநில பொலிசாரை பாதுகாப்பு கொடுக்க கூறியும் மாநில அரசு கண்டு கொள்ளாதது வருத்திற்கு உரியது

இதுவரை இரண்டு முஸ்லிம் பயங்கரவாதிகள் கைது செய்யபட்டுள்ளார்கள்  அவர்களிடமிருந்து பல ஆயுதங்களும் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது

இன்னொரு நாட்டு இராணுவத்துடன் மோதுவதற்கு முன் கட்டளை பெறுவது சரி.

ஆனால் உள்ளூர் நிகழ்வின் பாதுகாப்பிறகு ஏன் இராணுவம்?

மக்கள் காவல்துறை அமைப்புகள் ஒரு நிகழ்விற்கு பாதுகாப்பு கொடுக்கு முன் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆராய்வு (Threat Risk Analysis) செய்திருக்கவேண்டும். பின் அதில் உள்ள அச்சுறுத்தலை தணிக்கும் திட்டம் தயாரிதிருக்கவேண்டும்(Threat Mitigation Plan). அந்த திட்டத்தில் கட்டுகடங்கா கூட்டத்தை அடக்குதல், ஆபாத்தன பயங்கரவாதியை சுட்டு பிடித்தல் போன்றவை அடங்கும்.

யாராவது பயங்கரவாதி மக்களை சுட்டு பொசுக்க கள்ள காசு எண்ணுவதில் பிசியா இருக்கும் மத்திய அரசிடம் அனுமதி பெறுவது என்பது ஆபத்தான முடிவு.

இந்திய உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒன்று பயிற்சி காணாது மற்றது சோம்பேறி தனம் தான் பிரச்சினைகள்.

உள்நாட்டு பாதுகாப்பில் எந்த ஒரு சிவில் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இந்த மாதிரி சுடும் உத்தரவு முன் கூடியே வழங்கப்படுவது இல்லை ..அவரின் மெய் காவலர்களுக்கு மட்டுமே அந்த உத்தரவு வழங்கபட்டுள்ளது

மேலும் உளவுத்துறையின் எச்சரிக்கை அசட்டை செய்த மாநில காவல்துறை கண்டிக்கதக்கது

உளவுத் துறை எச்சரித்துக்கொண்டே இருக்கும்,

குண்டுகள் வெடித்துக்கொண்டே இருக்கும்,

பிரதமர் கண்டனம் தெரிக்கொண்டே இருப்பார்,

இழப்பிடுகள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்,

எல்லையில் தாக்கப் பட்டுக் கொண்டே இருக்கும்,

பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருப்பார்,

நாராயணசாமி மைக்கை கண்ட இடங்களில் எல்லாம் பிரதமர் உரிய நேரத்தில் சரியான முடிவெடுப்பார் என்டு மழுப்பிக் கொண்டே இருப்பார், நாமும் ஜிங்கை கிழித்துக் கொண்டே இருப்போம் :D

(பொறுங்கள் உறவுகளே சச்சின் தன் கிரிக்கேட் சாகப்தத்தை முடிக்கும் நாளில் சிங் தன் திருவாய் மலர்ந்து உலக தமிழர்கள் எதிர்பார்க்கும் முடிவை அறிவிப்பார், இந்தியா முழுவதும் அனுதாப அலையும், ஊடகங்கள் தன் பங்கிற்கு பின்னி பிரித்து எடுப்பார்கள் :P)

  • கருத்துக்கள உறவுகள்

28-patna-blast-12-1600.jpg

27-patna-bomb-blast-600-jpg.jpg

வலியை  உணர்கிறீர்களா  மக்களே

இப்படித்தான்

பக்கத்தில்

உங்கள் அரசு எம்மை வலித்தது

கண் மூடி 

வாய் பேசாது

மௌனமாக அனுமதித்தீர்களே........... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கும், அதிகாரத்துக்கும் சம்பந்தமில்லைதானே விசுகு அண்ணா.. வாக்குச் செலுத்தும் குற்றம் ஒன்று மட்டுமே இவர்களுடையது.. அதுவும் விளைவுகளை அறியாது செய்து தொலைப்பது..

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கும், அதிகாரத்துக்கும் சம்பந்தமில்லைதானே விசுகு அண்ணா.. வாக்குச் செலுத்தும் குற்றம் ஒன்று மட்டுமே இவர்களுடையது.. அதுவும் விளைவுகளை அறியாது செய்து தொலைப்பது..

ஆனால் தமக்கு வலித்தால்

வாள் கத்திவரை எடுக்கிறார்களே

எமக்காக ஒரு சொல்....... :(

(நான் இப்படி எழுதுவதும் பிழைதான். என்ன  செய்வது கொடுத்தவிலை  வந்து கண்ணுக்குள் நிற்குது.  இந்தியா தொடர்ந்து செய்யும் வஞ்சகம் எழுதத்தூண்டுது :(  :(  :( )

27-patna-bomb-blast-600-jpg.jpg

வலியை  உணர்கிறீர்களா  மக்களே

இப்படித்தான்

பக்கத்தில்

உங்கள் அரசு எம்மை வலித்தது

கண் மூடி 

வாய் பேசாது

மௌனமாக அனுமதித்தீர்களே........... :(  :(  :(

ஒன்றும் தெரியாத அப்பாவிகள் ..இவர்களை நாம் ஏன் குறை சொல்ல வேண்டும்

அரசியல் தலைவர்களை கூறுங்கள் ...!!

உங்கள் பதில்களுக்கு நன்றி.

அரசியல்வாதிகளை காட்டி கொடுத்து திருத்தும் தொழில் ஒரு சனநாயக நாட்டின் ஊடகங்களிடம் தான் இருக்கிறது.

ஆனால் தனியார் குடும்ப ஊடகங்களால் அப்படி செய்ய முடியாது. முக்கியமாக கட்சிகளிடம் காசு வாங்கி குடும்ப புராணம் பாடுவது தான் நடந்துவருகிறது.

இந்தியா எங்கேயோ இருக்கவேண்டியது. நேரு குடும்பத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டது.

They cite at the comment of the new Editor-in-Chief, Ravi, on the tendency in The Hindu before his takeover that the “news desk was given standing instructions not to take any stories on Narendra Modi on page one.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131201#entry950883

இந்தியாவில் உள்ள எல்லா ஊடகங்களுமே ஏதாவது ஒரு முறையில் ஒரு கட்சி சார்ந்ததாகவே இருக்கிறது ..இதில் எங்கு போய் நியாயம் தர்மம் இவற்றை தேட

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை தர்மம் என்று... ஒன்றுள்ளது.
அது, அதனைச் சார்ந்த மக்களூக்காக... நடத்தப் படுவது.
இந்தியாவில்.... "த ஹிந்து" போன்ற பத்திரிகைகள் அகில உலக, பிரசித்தி பெற்றாலும்... அதன் பின் உள்ள இயக்குனர்களின்... வேசித்தனத்தை... தமிழ் உலகு அறியும். இதற்கு மேலாக.... ஆனந்த விகடன், குமுதம் போன்ற பிரபல்ய பத்திரிகைளின் பங்களிப்பு மறக்க முடியாதது.

என்ன... எதுவாக, இருந்தாலூம்..... தமிழக அரசியல் சூழ்நிலையை.... மிஞ்சி அவர்களால்... எதுவும் செய்ய முடியாது.
முடிவில்.... குற்றவாளிக் கூண்டில்... நிற்பவர்கள், அண்மைக்காலத்தில்.... முதலமைச்சமாராக இருந்த காருணாநிதியிம், ஜெயலலிதாவும்.
இவர்கள் உண்மையான தமிழர்களாக இருந்தால்... ஒரு நேர் கோட்டில்... பயணித்திருப்பார்கள்.
எமக்கு... மட்டுமல்ல, தமிழகத் தமிழனுக்கும்.... அந்தக் கொடுப்பினை இல்லை, என்பதே.... யதார்த்தம். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.