Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூசை நேரங்களில் நாதசுரம் இசைக்கும் பண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூசை நேரங்களில் நாதசுரம் இசைக்கும் பண்கள்

 
 

நாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில்

நாதசுரம் இசைக்கும் பண்கள்.

 

காலைசந்திஉச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும்பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்டபண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூரதீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும்இசைக்கவும்இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி,நீலாம்பரிகேதாரகெளளைபுன்னாகவராளிபூசை முடிந்துபள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டுஇசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும்பாடலாம்)

காலை 4.00 - 6.00 பூபாளம்பெளளிமலயமாருதம்வலசி,நாதநாமக்கிரியைமாயாமாயகெளளை

காலை 6.00 - 8.00 பிலகரிகேதாரம்கெளளிபந்துஜகன்மோகினி,சுத்த தனயாசி

காலை 8.00 - 10.00 தன்யாசிஅசாவேரிசாவேரிஆரபி,தேவகாந்தாரிதேவமனோகரி

காலை 10.00 - 12.00 சுருட்டிஸ்ரீராகம்மத்தியமாவதிமணிரங்கு,பிருந்தாவன சாரங்காதர்பார்

பகல் 12.00 - 2.00 சுத்த பங்காளாபூர்ண சந்திரிகாகோகில திலகம்,முகாரிகெளடமல்லார்

பகல் 2.00 - 4.00 நாட்டைக்குறிஞ்சிஉசேனிரவிச்சந்திரிகா,வர்த்தனிஅம்சாநந்திமந்தாரி

மாலை 4.00 - 6.00 பூர்வி கல்யாணிபந்துவராளிவசந்தாலலிதா,சரசுவதிசீலாங்கிகல்யாணி

மாலை 6.00 - 8.00 சங்கராபரணம்பைரவிகரகரப்பிரியாபைரவம்,நாராயணிஅம்சதுவனிகெளளை

இரவு 8.00 - 10.00 காம்போதிசண்முகப்பிரியாதோடிநடபைரவி,அரிகாம்போதிகமாசுரஞ்சனி

இரவு 10.00 - 12.00 சிம்மேந்திர மத்யமம்சாருகேசிகீரவாணிரீதிகெளளைஆனந்தபைரவிநீலாம்பரி

. . . . . . . . . . . . . . . . 

யதுகலகாம்போதி

இரவு 12.00 - 2.00 அடாணாகேதார கெளளைபியாகடைசாமா,வராளிதர்மவதி

இரவு 2.00 - 4.00 ஏமாவதிஇந்தோளம்கர்நாடக தேவகாந்தாரி,தசாவளிபாகேசுவரிமோகனம்.

 

விழாக்கால வீதிஉலாக்களில் கோயில் 

உள்ளும் வெளியிலும் இசைக்கவேண்டிய முறைகள்

 

மண்டகப்படி தீபாராதனை.

1. தளிகை எடுத்துவர - மிஸ்ர மல்லாரி

2. தீபாரதனை நேரம் - தேவாரம்திருப்புகழ்

புறப்பாடு

1. புறப்பாடு முன் - நாட்டை

2. புறப்பாடு ஆனதும் - யாகசாலைவரை - திருபுடைதாளமன்னியில் மற்ற தாளங்களில் மல்லரிகள்

யாகசாலை தீபாராதனை நேரம் - ஒத்துநாதசுரம்மிருதங்கம்மாத்திரம்

யாகசாலை முதல் கோபுரவாசல் வரை - திருபுடைதாளமல்லரி

கோபுரவாசல் முதல் தேரடிவரை - இதர மல்லரிகளும்வர்ணமும்

தேரடியிலிருந்து தெற்குரதவீதி பாதி வரை - ராகம்

தெற்குரதவீதி பாதி முதல் மேலரதவீதி பாதி வரை - ராகம்,பல்லவி

மேலைரதவீதி பாதி முதல் ஈசான்ய மூலை வரை -கிர்த்தனைகள்

ஈசான்ய மூலை முதல் தேரடி வரை - தேவாரம்திருப்புகழ்

தேரடி முதல் கோயில் பிரகாரம் வரை - நட்டுமுட்டு,சின்னமேளம் ( அல்லது முகவீணை ) 

கோயிலுக்குள் - துரிதகால திரிபுடைதாள மல்லரிகள்

தட்டு சுற்று நேரம் - தேவாரம்திருப்புகழ்

எதாஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது - எச்சரிக்கை.

 
விழாக்காலங்களில் கொடிஏற்றத்தினன்றும் கொடிஇறக்கத்தினன்றும் நவசந்திகளில் இசைக்க வேண்டியபண் முறைகள் 

 
பிரம சந்தி - மத்தி - பைரவி.

இந்தர சந்தி - கிழக்கு - குர்ஜரீ.

அக்கினி சந்தி - தென்கிழக்கு - நாட்டை

இயம சந்தி - தெற்கு - தசாட்சரீ.

நிருதி சந்தி - தென்மேற்கு - குண்டக்கிரிய.

வருண சந்தி - மேற்கு - வராளி

வாயு சந்தி - வடமேற்கு - வேளாவளி.

குபேர சந்தி - வடக்கு - ராமகலீ

ஈசான சந்தி - வட கிழக்கு - பிலகரி

 
வைணவக்கோயில்களில் தேவாரம் திருப்புகழ்இவைகளுக்கு பதிலாகஅஷ்டபதிதிருப்பாவைமுதலியன இசைக்கலாம். 

 

இந்தப் பண்களைப் பொழுது அறிந்து இசைக்க வேண்டும் என்பர். இரவில் நட பைரவி, காலையில் கரகரப்ரியா, மாலையில் அரிகாம்போதி, முன்னிரவில் தோடி என்ற வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது. ஒவ்வொரு உணர்ச்சி வெளிப்படும் செயலுக்கும் ஒரு பண் என்ற முறை இருந்திருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி  நுணா !

 

நல்லூரில் இரவு பள்ளி அறைப் பூசை  முடிந்ததும் ஒரு மூண்டு சுண்டலும் , துளி பால் தீர்த்தமும் பிரசாதமாய் தருவார்கள் தேவாமிர்தமாய் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி  நுணா !

 

நல்லூரில் இரவு பள்ளி அறைப் பூசை  முடிந்ததும் ஒரு மூண்டு சுண்டலும் , துளி பால் தீர்த்தமும் பிரசாதமாய் தருவார்கள் தேவாமிர்தமாய் இருக்கும்!

 

சுண்டல் மூண்டு தாறதாலதான் அமிர்தமாக இருக்குது. :D

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி  நுணா !

 

நல்லூரில் இரவு பள்ளி அறைப் பூசை  முடிந்ததும் ஒரு மூண்டு சுண்டலும் , துளி பால் தீர்த்தமும் பிரசாதமாய் தருவார்கள் தேவாமிர்தமாய் இருக்கும்!

ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் ஒவ்வொரு கடலையும் குறிக்கின்றன! :D

 

நன்றிகள், நுணா!

  • கருத்துக்கள உறவுகள்

ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் ஒவ்வொரு கடலையும் குறிக்கின்றன! :D

 

நன்றிகள், நுணா!

 

அப்போ... அந்த பால் தீர்த்தம், என்னத்தை குறிக்கின்றது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ... அந்த பால் தீர்த்தம், என்னத்தை குறிக்கின்றது. :rolleyes:

நீரின்றி அமையாது உலகு !

 

என்பதை நினைவு படுத்தத் தான்! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.