Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விடயத்தில் கெமரூன் மாதிரி நாம் நடந்துகொள்ள மாட்டோம் - இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
india-vs-sl-seithy-150.jpg

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையில் யுத்தக் குற்றத்தை கையாண்ட முறையை கேள்விக்கு உள்ளாக்கியதுடன் இவ்வாறான முறை தீங்கானது எனவும் இந்தியா கூறியுள்ளது. சாதாரண மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சுயாதீனமான ஒரு செயன்முறையை அமைக்க இலங்கைக்கு 4 மாத அவகாசம் வழங்கி இது நடைபெறாதுவிடின் இலங்கை ஐ.நா ஆதரவுடனான ஒரு சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்குமென கமரூன் கூறியிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு பதிலளிக்கும் வகையில் 'கண்ணாடி வீட்டிலிருப்போர் கல்லெறியக் கூடாது' என கூறினார். 'இலங்கை இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க தேவையெனக் கருதும் காலத்தை எடுக்கும்' எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

  

டெல்லியிலுள்ள அரசாங்க வட்டாரங்கள் கெமரூனின் அணுகுமுறையை நிராகரித்தன. 'கெமரூன் மாதிரி நாம் நடந்துகொள்ள மாட்டோம்' என அவர்கள் கூறினர். வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாய தலைவர்கள் உச்சிமாநாட்டுக்கு சென்றமை இலங்கை பற்றிய இந்தியாவின் அக்கறையின் வெளிப்பாடாகும் எனவும் இந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97410&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாய தலைவர்கள் உச்சிமாநாட்டுக்கு சென்றமை இலங்கை பற்றிய இந்தியாவின் அக்கறையின் வெளிப்பாடாகும் 

 

 

அங்காலை தமிழ் நாட்டை சமாளிக்கினமாம்.இங்காலை சிங்களவனை சமாளீக்கினமாம்.

 

4 மாத அவகாசம் வழங்கி இது நடைபெறாதுவிடின் இலங்கை ஐ.நா ஆதரவுடனான ஒரு சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்குமென கமரூன் கூறியிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு பதிலளிக்கும் வகையில் 'கண்ணாடி வீட்டிலிருப்போர் கல்லெறியக் கூடாது' என கூறினார்.

 

 

40 வருடம் போனாப்பிறகும் இது தான் இந்தியாவின் டயலாக்.

கமருன் நாங்கு மாதம் தான் வழங்கினார். அது ஐ.நா.விட வேறுபட்டத்தல்ல. கமருன் வழங்கிய நான்கு மாதமும், ஐ.நா.வழங்கிய 2009 ல் வழங்கிய கால அவகாசமும் மார்ச்/2014 ல் சந்திக்கின்ற்ன. 

 

கமருன் எதையும் புதித்தாக ஆரம்பித்து 4 மாதம் வழங்கவில்லை. சர்வதேச விவகாரங்களில் அவருக்கு அப்படியான இல்லாத அதிகாரத்தை அவர் இலங்கை மீது திணிக்கவில்லை. அவர் பேசும் சமாசாரம் நவிபிள்ளை இலங்கை வர முதல் கலவதியாகிய ஐ.நா கொடுத்த காலகெடு. சென்ற மார்சிலிருந்து 6 மாதத்திற்குள் இலங்கை விசாரணைகளை தொடங்கி அதைபற்றி நவிப்பிள்ளை இடைக்கால வாய்மொழி அறிக்கை கொடுத்திருக்க வேண்டும்.

 

இலங்கை விசாரணையை தொடக்காமல், செய்த வேலை நவிப்பிள்ளைக்கு திருமணம் பேசிவிட்டு, மகிந்தா அவ செல்லும் போது "உனது அறிக்கை நீ இலங்கை வர முதல் தாரிக்கபட்டது தானே" என்று சொல்லி வழி அனுப்பிவிட்டார். அதன் மற்றய கலக்கெடு 2014 மார்ச். அதிலிலும் இலங்கை ஒன்றும் செய்யாவிட்டால் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நாள் மேலும் பின்னால் போய்ச்சேர்ந்து விடுகிறது.

திருட்டு பசங்க நீங்க எப்படி கமரூன் மாதிரி நேர்மையாக நடந்து கொள்வார்கள். அப்படி கமரூன் மாதிரி நேர்மையுடன் நடப்பீர்கள் என்று உங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்.

நான்கு மாதங்கள் போதாது என்று தங்களின் கொலைகார பங்காளர்களுக்காக முக்கால் அழுகிறன இந்திய பண்டாரங்கள். ஏற்கனவே நான் கு ஆண்டுகள் போய்விட்டன. ஊழலும், திருட்டுத் தொழிலும் செய்யும் இந்திய அரசாங்கம் காலத்தை கடத்துவதற்கு மூலம் தங்கள் ஊழல் வழக்குகளை நீர்த்து போக செய்வது போல. தமிழின் படு கொலையையும் மறைக்கலாம் என்று கனவு கண்ட நிலையில் வெளிவரும் புதிய ஆதாரங்கள் கண்டு ஓலமிடுகின்றது.

இந்தியா வந்த கமரூன் பெட்டிக் கடையில் சாதாரண மக்களைப் போல் உணவு உண்டார். உங்கள் நாட்டில் ஒரு நகராட்சி தலைவரானாலே தலை கால் தெரியாமல் பறப்பீர்கள்.

உலகில் பொறுக்கிகளையும் திருடர்களையும் பிரதமராகவும், அமைச்சரகளாகவும் கொண்ட நாடு எது என்று கேட்டால் இந்தியா என்று இலகுவாக பதில் கூறிவிடலாம்

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.