Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்பு

 
 
ravikaran.jpeg
திட்­ட­மிட்ட வகையில் தென்­ப­கு­தி­யி­னரை வடக்கில் குடி­ய­மர்த்­து­வ­தற்­காக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தி­யி­லுள்ள மக்­களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அப­க­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­கரன் குற்றம் சாட்­டி­யுள்ளார்.

 

சம்­பவ இடத்­திற்கு நேர­டி­யாகச் சென்ற அவர் நிலை­மை­க­ளையும் அவ­தா­னித்­துள்ளார். இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,
ஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தியில் செம்­பி­யன்­குளம், கரு­வேப்­ப­மு­றிப்­புக்­குளம் ஆகிய பிர­தே­சங்­களை அண்­டிய வயல் நிலங்­களும் மேட்­டுக்­கா­ணி­யுடன் தோட்டப் பயிர்ச் செய்கை நிலங்­களும் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஒதி­ய­மலை கிரா­மத்தில் திட்­ட­மிட்ட வகையில் தென்­ப­கு­தி­யி­னரைக் குடி­யேற்­று­வதை நாம் பல்­வேறு தடை­க­ளுக்கு மத்­தியில் நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்ளோம்.

 

அப்­ப­கு­தியில் வாழ்ந்த எமது தமிழ் மக்­களின் குடி­யி­ருப்பு வீடுகள் அத்­தி­பா­ரத்­துடன் குழி­தோண்டி எடுக்­கப்­பட்­டுள்­ளது. எமது மக்கள் அங்கு வாழ்ந்­த­தற்­கான சான்­று­க­ளாக கற் கிண­று­க­ளையும் மரத்­தோப்­புக்­க­ளையும் மட்­டுமே நாம் தற்­பொ­ழுது காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. மேலும் அப்­ப­கு­தியில் பழைய பாதை அகற்­றப்­பட்டு தென் பகு­தி­யி­ன­ருக்குக் குடி­யேற்­று­வ­தற்கு வச­தி­யாக குடி­யேற்றக் காணி­க­ளுக்கு இடையே ஒரு பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­கு­தியில் அதி­க­மான எல்லைக் கட்­டை­களும் நாட்­டப்­பட்­டுள்­ளன. இதே­போல்­அப்­ப­கு­தியில் காடுகள் பெரு­ம­ளவில் அழிக்­கப்­பட்டு புதிய சிங்­களக் குடி­யேற்றம் துரி­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

 

ஒதி­ய­மலை கிராம அலு­வலர் பிரி­வுக்­குட்­பட்ட , பழைய கொம்­பனித் தெரு என்ற பகு­தி­நோக்கி செல்­லும்­போது வெலி ஓயா பகு­திக்குள் இடம்­பெறும் சிங்­க­ளக்­குடி திணிப்­புக்கள் போன்று குடி­யேற்­றங்கள் துரி­த­க­தியில் நடை­பெ­று­வ­தைக்­கண்டு அதிர்ச்­சி­யுற்றேன்.அங்கு புதி­தாக பாட­சா­லைகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. புல்­டோசர் மூலம் புதிய பாதைகள் அமைக்­கப்­படும் பணி இடம்­பெ­று­வதை நேரில் கண்டேன். தமிழ்ப்­பெ­யர்கள் மாற்­றப்­பட்டு புதி­தாக சிங்­கள பெயர்ப்­ப­ல­கைகள் வைக்­கப்­பட்­டுள்­ளன .

புதிய வீடுகள் கட்­டப்­ப­டு­வ­தற்­கான அடிக்­கல்­களும் நாட்­டப்­பட்­டுள்­ளன. அது­மட்­டு­மின்றி அப்­ப­கு­தி­க­ளுக்கு மின்­சார வச­தியும் பூர­ண­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது. முதலில் தமி­ழர்கள் பயன்­ப­டுத்­திய சிலோன் தியேட்டர்ஸ் பகு­தியில் தற்­போது சிங்­கள மக்கள் பயன்­ப­டுத்­து­வ­தையும் நேரில் அவ­தா­னித்தேன். ஒதி­ய­மலை வாசி­க­சா­லை­யி­லுள்ள எங்கள் மக்­க­ளிடம் அங்கு இடம்­பெறும் நில, வள அப­க­ரிப்­புக்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன்.

 

பின்னர் ஒதி­ய­ம­லைப்­ப­டு­கொலை இடம்­பெற்ற பகு­திக்கு சென்­ற­போது அச்­சம்­பவம் தொடர்பில் மக்கள் என்­னிடம் வேத­னை­யுடன் விப­ரித்­தனர். அக்­கட்­டடத்­தி­னுள்ளே 28 தமிழ்­மக்கள் சுட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தையும் மேலும் 5 பேர் அரு­கி­லி­ருந்த காட்­டுப்­ப­கு­தியில் டிராக்டர் வண்­டி­யுடன் சேர்த்து எரிக்­கப்­பட்­ட­தையும் அவர்­களின் நினைவு நாளையே அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நினைவு கூர்­வ­தா­கவும் கூறினர். இம்­முறை அந்த நினைவு நாளில் நீங்கள் அவர்­களை நினைவு கூர துணை­யி­ருப்போம் என்றோம்.

 

அதன் பின்னர் ஒதி­ய­மலை பிள்­ளையார் கோயி­லுக்கு வந்து பூஜை­களில் கலந்து கொண்­ட­போது 89 வய­து­டைய நாக­மணி சின்­னத்­தம்­பி­யிடம் சில தர­வு­களை சேக­ரிக்க முடிந்­தது. அங்கு அவர் சுமார் 4 தலை­மு­றைக்கு மேல் வாழ்ந்து வரு­வ­ தா­கவும் ஒதி­ய­மலை தமி­ழரின் பூர்­வி­கக்­கி­ராமம் எனவும் , டொலர் பாம், கென்பாம் ஆகிய பகு­தி­க­ளுக்கு அண்­மித்த நவா­லயம், சிவா­லயம் உள்­ளிட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலம் தமி­ழ­ருக்­கு­ரி­யவை என்றும், தற்­போது பிள்­ளையார் கோயி­லுக்கு அருகில் வரை சிங்­களக் குடி இருப்­புக்கள் வந்­து­விட்­டன என்று வேத­னை­யுடன் விப­ரித்தார்.

 

ஒட்­டு­மொத்­த­மாக மக்­க­ளிடம் தரவுகளை சேக­ரித்த, நான் நேரில் கண்டு கொண்ட தர­வு­க­ளின்­படி இடப்­பெ­யர்­வுக்கு முன் எங்கள் மக்­களின் பாவ­னை­யி­லி­ருந்த சுமார் 700 ஏக்கர் நிலப்­ப­கு­தியும் காடு­க­ளாக இருந்த சுமார் 2 ஆயி­ரத்து 500 ஏக்கர் நிலப்­ப­கு­தியும் இன்று துரி­த­க­தியில் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

 

இவைகள் யாவும் ஒதி­ய­மலை பிர­தேசச் செயலர் பிரிவுக்குட்பட்டவை.
"காரவாய்க்கால் ,வேலங்குளம், நெடுங்கேனியான் முறிப்பு ஆகிய தமிழ்ப்பெயர்கள் ஏதும் இப்போது அங்கே இல்லை. அதாவேடுனுவேவ, கலியானபுர உள்ளிட்ட பல சிங்களப்பெயர்கள் இப்போது போதிதாக முளைத்துள்ளன. மேலும் தற்போது வயல் செய்து கொண்டிருக்கும் பகுதியில் , ஓதியமலைக்குளம் தாண்டி செல்லும்போது ராணுவத்தினர் தம்மை தாக்குவதாகவும் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.

 

அங்கு இடம்பெறும் நில,வள அபகரிப்புக்கள் பற்றி உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் தெரிவித்தேன் என்றுள்ளது.

 


கிளிநொச்சியில் உள்ளவர்கள் தமது காணிகளை கவனமாக பாதுகாத்துகொள்ளுங்கள்: சி.சிறீதரன்
 
இராணுவத்தினரால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் குடியிருப்பு நிலங்களயும் பயிர்ச்செய்கை நிலங்களையும் உரிமையாகக் Sritharan.jpgகொண்டவர்கள் தங்களது நிலங்களை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
கிளிநொச்சி மாவட்டத்தில் குடியிருப்பு நிலங்களையும் பயிர்செய் நிலங்களையும் உரிமையாகக் கொண்ட உறவுகளே!
 
எமது பிராந்தியத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற கொடூரமான யுத்தமும், யுத்தத்தால் எழுந்த பேரிடர் நிலைமைகளும் காரணமாக எமது மக்கள் இடம்பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் செல்ல வேண்டிய நெருக்கடி நிலை உருவானது என்பதை நாம் எல்லோரும் உணர்வோம்.
 
அந்த வேளையில் அத்தகைய குடிப் பெயர்வு தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் பல குடும்பங்கள் மீளக் குடியேறியுள்ள போதிலும் சில நூறு குடும்பங்கள் கல்வி, தொழில்வாய்ப்பின்மை, பாதுகாப்பின்மை, நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை காரணமாக மீளக் குடியேறாதிருக்கின்றனர்.
 
இத்தகைய நிலையைத் தனக்குச் சாதகாமாகப் பயன்படுத்தி பல தனியார் காணிகளை இராணுவத்தினர் குறிப்பாகச் சிவில் பாதுகாப்புப் படையினர் அத்துமீறிக் கையகப்படுத்தி வருகின்றனர்.
 
இதனால் பல நூற்றுக் கணக்கானவர்களின் சொந்த நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், தொண்டமான்நகர் பகுதிகளில் பல தனியார் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
 
இது எமது மாவட்டம் முழுவதும் பரவலடையும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த ஆபத்தான நிலைமையை நாம் அவசரமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
 
எனவே எமது மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இலங்கைத் தீவிற்குள்ளோ அல்லது புலம்பெயர் தேசங்களில் எங்கு வாழ்ந்தாலும் உடனடியாக உங்கள் காணி உரித்தினை உறுதிப்படுத்திக் கொள்வதோடு அந் நிலங்களை எவ்வகையிலாயினும் பயன்பாட்டிற்கு உள்ளாக்குமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சிறீதரன் அண்ணா

 

அனைத்து புலம் பெயர் உறவுகளும் விழிப்பாக செயற்படவேண்டிய  காலம் இது

 

அண்மையில் எனது உறவு ஒருவர் தனக்குச்சொந்தமான காணிகளை

அங்குள்ள  ஒருவருக்கு எழுதிக்கொடுத்தார்

இதன் மூலம்

சிங்களவரிடம் போகவேண்டிய பெரும் நிலப்பரப்பு ஒன்று எம்மவர் பார்வைக்கும் தமிழரின் நிலமாக இருக்கவும் வழி  வகுத்தார்.

உறவுகளே

கவனியுங்கள்..........

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சிறீதரன் அண்ணா

 

அனைத்து புலம் பெயர் உறவுகளும் விழிப்பாக செயற்படவேண்டிய  காலம் இது

 

அண்மையில் எனது உறவு ஒருவர் தனக்குச்சொந்தமான காணிகளை

அங்குள்ள  ஒருவருக்கு எழுதிக்கொடுத்தார்

இதன் மூலம்

சிங்களவரிடம் போகவேண்டிய பெரும் நிலப்பரப்பு ஒன்று எம்மவர் பார்வைக்கும் தமிழரின் நிலமாக இருக்கவும் வழி  வகுத்தார்.

உறவுகளே

கவனியுங்கள்..........

 

 

உங்கள் கருத்திற்கு நன்றி விசுகு. ஆனால் உங்களிடம் ஒரு சின்னக் கேள்வி, உலக நடப்புப் பகுதியில் கிறீஸ்த்தவர்கள் அரபுநாடுகளிலிருந்து கட்டாயமாக விரட்டப்படுவதற்கெதிராக பாப்பரசர் குரல் கொடுத்ததற்கு நீங்கள் மதவாதம், நவீன காலனித்துவம் என்று விளக்கம் கொடுத்திருந்தீர்கள். இங்கே ஒதியாமலைப்பகுதியில் தமிழரின் காணிகள் அபகரிக்கப்படுவதற்கும், அரபு நாடுகளில் காலம் காலமாக கிறீஸ்த்தவர்கள் வாழ்ந்துவந்த பகுதிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அபகரிக்கப்படுவதற்கும் இடையே என்ன் வேறுபாட்டைக் கண்டீர்கள்? பாதிக்கப்பட்ட கிறீஸ்த்தவர்களுக்காகக் குரல் கொடுப்பது நவீன காலணித்துவம் என்றால், இங்கே தமிழர்களுக்காக குரல் கொடுப்பது எந்தக் காலணித்துவம் என்று சற்று விளக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்திற்கு நன்றி விசுகு. ஆனால் உங்களிடம் ஒரு சின்னக் கேள்வி, உலக நடப்புப் பகுதியில் கிறீஸ்த்தவர்கள் அரபுநாடுகளிலிருந்து கட்டாயமாக விரட்டப்படுவதற்கெதிராக பாப்பரசர் குரல் கொடுத்ததற்கு நீங்கள் மதவாதம், நவீன காலனித்துவம் என்று விளக்கம் கொடுத்திருந்தீர்கள். இங்கே ஒதியாமலைப்பகுதியில் தமிழரின் காணிகள் அபகரிக்கப்படுவதற்கும், அரபு நாடுகளில் காலம் காலமாக கிறீஸ்த்தவர்கள் வாழ்ந்துவந்த பகுதிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அபகரிக்கப்படுவதற்கும் இடையே என்ன் வேறுபாட்டைக் கண்டீர்கள்? பாதிக்கப்பட்ட கிறீஸ்த்தவர்களுக்காகக் குரல் கொடுப்பது நவீன காலணித்துவம் என்றால், இங்கே தமிழர்களுக்காக குரல் கொடுப்பது எந்தக் காலணித்துவம் என்று சற்று விளக்க முடியுமா?

உங்களது  கருத்திலிருந்து தள்ளி  நிற்க  எவருக்கும் முடியாது.

 

ஆனால் இவற்றிற்கெல்லாம் காரணம் இவர்கள் தான்

பகையை  வளர்த்ததும்

ஆயுதங்களை  அள்ளிக்கொடுத்ததும்

பொருளாதாரச்சுரண்டலைச்செய்து

பேதங்களை வளர்த்ததும்  இவர்கள் தான்

அத்துடன் இன்று நினைத்தாலும் 

இவர்களால் இவற்றை சுலபமாக முடிக்கமுடியும்

ஏன் தீர்க்கவில்லை???

சிரியாவில் 11  ஆயிரம் சிறுவர்கள் பலி  என்பதை இவர்கள் தானே  சொல்கிறார்கள்

ஏன் தடுக்காமல் இருக்கிறார்கள்

எவரிடமும் யாசித்து பெறும் நிலையிலா  இவர்களது பலம் உள்ளது???

உலக தாதாக்கள் ஆச்சே.

 

 

அதென்ன மத்திய  கிழக்கில் எம்மவர் இல்லாத பகுதி  இருக்கமுடியாது  என்பது???

அப்படியாயின் யூதக்குடியேற்றங்களைப்பற்றி  வாய்திறக்காதது ஏன்??

என்னைப்பொறுத்தவரை

இவர்

எல்லோருக்கும் பொதுவானவர்

ஒரு மதம் சம்பந்தமாக மட்டும் கதைப்பாராக இருந்தால்

மதவெறி  பிடித்தவர் மட்டுமே.............

 

இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள்

இலங்கைபற்றிய  இவர்களது தீர்வு

சிங்களவர் எல்லா  இடமும் பரந்து

தமிழரது சுயநிர்ணயக்கோட்பாட்டை இல்லாதொழிக்கவேண்டும் என்பதே....................

அப்படியாயின் மத்திய  கிழக்குக்கு மட்டும் ஏன் வேறு சட்டம்??? :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குக் காணி வேண்டாம் என்றால் மலையகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு எழுதிக் கொடுங்கள். அவர்கள் அங்கு வீடு கூட இல்லாமல் வசிக்கின்றார்கள். அப்படி யாரும் மலையகத் தமிழர்கள் வேண்டும் என்றர்ல இணைப்பினை ஏற்படுத்தித் தர முயற்சிக்கின்றேன்... தொடர்பு கொள்ளுங்கள்.

முல்லைத்தீவில் சிங்களவர்களால் நில அபகரிப்பு: துரைராசா நேரில் சென்று பார்வை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் உச்சக்கட்ட வேகத்தில் நில அபகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 
IMG_0124.jpg
கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிலிருந்து சுமார் 1.5 கி.மீ.  தூரத்திலேயே இவ்வாறான நிலக்கொள்ளை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதேச மக்களின் தகவலை அடுத்து நேற்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிவிட்டு பிரதேச சபை உறுப்பினர் சிவலோகேஸ்வரன் உள்ளிட்ட மக்களில் சிலருடன் நேற்று மாலை அப்பகுதிக்குச் சென்ற ரவிகரன், அங்கு இடம்பெறும் நில அபகரிப்பை நேரில் அவதானித்தார்.
 
சம்பவ இடத்திற்கு ரவிகரன் சென்றபோது, இரண்டு கொட்டில்களில் இருந்த சிங்களவர்களால் கனரக இயந்திரங்களின் உதவியோடு காடழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இதையடுத்து இக்காடழிப்பு தொடர்பில் அவர்களிடம் நேரில் அவர் விசாரித்தார். இதன் போது அவர்கள்  பயந்த சுபாவத்தோடு , தாங்கள் ஒப்பந்த அடிப்படையில் காடு அழிப்பதாகவும் ,மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது நடைபெறுவதாகவும் இத்திட்டத்தில் 22 சிங்களவர்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் மாங்கன்றுகளை நடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நடவேண்டிய மாங்கன்றுகளை  தாம் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தனர். 
 
தங்களின் முதலாளி வேலைக்கு அமர்த்தியதால் இதைச் செய்கிறோம் என்றும் கூறினார். இதையடுத்து ரவிகரன், காடழிப்பு நடைபெறும் பகுதியை முற்றாக ஆராய்ந்து தகவல்களைச் சேகரித்தார். 
IMG_0161.jpg
இதே வேளை அப்பகுதிக்குச் சென்ற ரவிகரனை இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் பயணம் நெடுகிலும் தொடர்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ரவிகரன் அவரிடம் எதற்காக என்னைப் பின்தொடர்ந்து வருகிரீர்கள்? என்று கேட்டார். ஒருவாறாக சமாளித்துக்கொண்டு தன்னை இராணுவப் புலனாய்வாளர் என அவர் அறிமுகப்படுத்த, பதிலளித்த ரவிகரன் " இங்கு இடம்பெறும் மோசமான நிலக்கொள்ளையை உலகறியச் செய்யவே நான் வந்துள்ளேன். நாளை விபரமாக ஊடகங்களில் இது வெளிவரும். ஆகவே என்னைப்பின்தொடர வேண்டிய அவசியம் உங்களுக்கில்லை" என்று பதிலளித்து விட்டுச் சென்றார்.  
 
பின்னர் இந்த நில அபகரிப்பைப்  பற்றிக் கருத்துத் தெரிவித்த ரவிகரன், 'இங்கு எங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை பறித்துக் கொடுப்பது , ஒரு புறம் நடைபெறுகையில் , மறுபுறம் தோட்டச் செய்கை எனும் பெயரில் தற்போது சுமார் 600 ஏக்கர் நிலம் இப்போது அபகரிக்கப்படுகிறது. 
 
எம் மக்கள் எங்களின் பூர்விக நிலத்தில் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலையில், எங்கள் தாயகத்தில் சிங்களவர்களுக்கு குடியிருப்புக்கள், தோட்டச் செய்கைகள் என்கிற பெயரில் நிலம் வழங்கப்படுகிறது. இது ஒரு திட்டமிட்ட நிலக்கொள்ளையாகும். 
IMG_0201.jpg
தமிழரின் தாயகமான வடகிழக்கை நிரந்தரமாக துண்டாடும் நோக்கிலேயே வடக்கை கிழக்குடன் இணைக்கிற முல்லைத்தீவில் இவ்வாறு நிலம் கொள்ளையடிக்கப்படுகிறது. யார் நிலத்தை யார் , யாருக்கு தாரை வார்ப்பது? இம்மண்ணின் காவலர்கள் இங்கே இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். IMG_0203.jpg

 

வடமாகாண அரசு செயற்படத் தொடங்கியதும் இது மீட்டுத்தரப்படணும், அன்றேல் அரசெதற்க்கு...? :rolleyes:

அகழ்வராய்ச்சி என்ற போர்வையில் வாவெட்டி, கொடிதூக்கி மலைகள் உடைத்தழிப்பு; ரவிகரன்

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாவெட்டி, கொடிதூக்கி மலைகளும் ஆகியவற்றின் சுற்றுப்புற பிரதேசங்களிலுள்ள சிறு மலைகளும் உடைக்கப்பட்டு வளங்கள் சூறையாடப்படுகின்றன. இதனால் அப்பகுதியின் இயற்கைச் சமநிலை மோசமாகப் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், விவசாய அமைப்புப் பிரதிநிதிகள், மற்றும் பொது மக்களின் தகவலையடுத்து நேற்று அப்பகுதிக்குச் சென்ற ரவிகரனுக்கு முதலில் அங்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் சிறிது நேர வாக்குவாதத்தின் பின்னர் உள்ளே சென்ற அவர் குறிப்பிட்ட சம்பவங்களை நேரில் கண்டு ஆராய்ந்தார்.

Untitled-2_0.jpg

அங்குள்ள மலைகளின் பாறைகள் உடைக்கப்பட்டு மிக வேகமாக வளங்கள் அகற்றப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். அவற்றுள் இரு வேறு இடங்களில் , அனுமதிக்கப்பட்டதை விட மிக ஆழத்திற்கு மோசமாக நில வளம் சுரண்டப்படுவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாவெட்டி, கொடிதூக்கி மலைகள் உடைக்கப்பட்டு அகழ்வாராய்ச்சி என்னும் பெயரில் அகற்றப்படுகின்றன. இவ்வாறான நில அகழ்வால் அருகிலுள்ள தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் கிணறுகளில் வெடிப்புக்கள் ஏற்படுகிறது.இதனால் அப்பகுதியில் மக்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படமுடியாத சூழ்நிலை நிலவுகிறன. சில நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு, ஒப்பந்தக் காலம் முடிவடையும் போது, திரும்பவும் அனுமதிகள் புதிப்பிக்கப்பட்டு, தாராளமாக இந்த மண்ணின் வளங்கள் அள்ளப்படுகின்றன. எங்கள் வளங்கள் பறிபோவதை நேரில் கண்ட நான் அதிர்ச்சியுற்றேன்.

கல்குவாரியைப் பொறுத்தவரை, நிலமட்டத்திற்கு கீழாக 8 மீற்றர் (சுமார் 25 அடி )வரையே அகழ அனுமதி இருக்கும் நிலையில், அங்கே ஓரிடத்தில் நிலமட்டத்திற்கு கீழாக சுமார் 100 அடிக்கும் மேல் அகழ்வு இடம்பெறுகிறது. இன்னோரிடத்தில் சுமார் 75 அடிக்கும்மேல் அகழப்படுகின்றது. இப்படி சட்டவிரோதமான முறையில் அகழ்வு இடம்பெறுவதால் வரலாற்றுச் சிறப்பு மிக்க, இப்பிரதேசத்தின் இயற்கைச் சமநிலை பாதிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக நடந்து வரும் இந்த நில அகழ்வை, கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் இதனால் கண்டுகொள்ளாதது ஏன்--? மண் வளத்தைச் சுரண்டி, இயற்கையை அழிக்கும் இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.இது குறித்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தேன் என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.வேதநாயகனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, வள ஆய்வுகள், ஆராய்ச்சியாளர்களுக்கான அனுமதியினை கனியவளத் துறை வழங்குகின்றது. இவ்வாறான அகழ்வுகளின் போது நிலங்களை அகழ்ந்த பின்னர் அதனை மீள் நிரப்பு-ச் செய்ய வேண்டும். இந்த நிபந்தனையுடனேயே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. அகழ்வின் பின்னர் மீள்நிரப்புச் செய்யாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு நடந்தால் அது தொடர்பாக எம்மால் முறைப்பாடு செய்யமுடியும் என்றார்.

 

http://virakesari.lk/?q=node/359554

 

 

தமிழனை தமிழன் ஆளும் வரை இதுவும் நடக்கும்......எல்லாம் கடந்து போகும்

முல்லைத்தீவில் தென்னை பயிர்ச்செய்கை என்ற போர்வையில் காணி அபகரிப்பு.
முல்லைத்தீவு மல்லாவியில் தென்னைப்பயிர்ச் செய்கை என்கிற பெயரில் சுமார் 1000 ஏக்கர் நிலம் அபகரிக்கப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 
singala.jpg
குறித்த இடத்திற்கு பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
மல்லாவி சிவன் கோயில் முன்றலில் குறைகேள் மக்கள் சந்திப்பை நடத்திய துரைராசா ரவிகரன், அங்கு கோயில் நிர்வாகம், வர்த்தகர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக திரளான மக்களிடம் குறைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார். 
 
இதன் போது மக்கள் துணுக்காய் பகுதியின் பின்தங்கிய நிலை பற்றி பலவேறு உதாரணங்கள் ஊடாக ரவிகரனிடம் சுட்டிக்காட்டினர். 
 
அத்தோடு 'பசுமையை நோக்கி"  என்கிற திட்டம் பற்றியும் அதன்  செயலற்ற நிலை குறித்தும் ரவிகரனிடம் எடுத்துக்கூறினர்.
 
இதையடுத்து ரவிகரன், மக்களின் குறைகளுக்கான தகுந்த விளக்கங்களை அளித்ததுடன் சில குறைகளை உரியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் கூறினார். 
 
இதையடுத்து, 'பசுமையை நோக்கி"எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் இடத்திற்கு, துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் வி. யோகலிங்கம்,புகழேந்தி நகர் பிரதிநிதி தயாளன் ஆகியோருடன் சென்று பார்வையிட்டார்.
 
அங்கு சுமார் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட காடுகளை அழித்து, சேவா லங்கா நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட 'பசுமையை நோக்கி" திட்டம், இன்று அவ்விடத்தில் யாருமின்றி கைவிடப்பட்டுள்ளதை  நேரில் பார்த்து உறுதிப்படுத்தினார். 
 
அத்திட்டமானது நல்லினமாடுகளை செயற்கை முறையில் சினைப்படுத்தி நல்லினப்பசுக்களைப் பெறுவதன் மூலம், பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பளிக்கும் நோக்கில்  ஆரம்பிக்கப்பட்டதாகவும் இன்று செயலற்று கைவிடப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் யோகலிங்கம், மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தார். 
 
இதை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்த ரவிகரன், அப்பிரதேசத்திற்கு அருகில் கனரக இயந்திரங்களின் உதவியோடு காடழிக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்றார்.
 
அங்கு நின்ற சிங்கள ஊழியரிடம் விசாரித்தபோது தென்னைப்பயிர்ச் செய்கைக்காக 250 ஏக்கர் காடு அழிக்கப்படுவதாகவும் தாங்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்வதாகவும் தெரிவித்தனர். 
 
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ரவிகரன், 
 
இங்கு நுட்பமான முறையில் நில அபகரிப்பு இடம்பெறுவது தெரிகிறது. நான் அப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்த போது சுமார் 1000 ஏக்கர் அளவிற்கு காடழிப்பு இடம்பெறுகிறது. ஒரு பக்கம் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு என்று நிலம் அபகரிக்கப்பட, இன்னொரு பக்கம் பயிர்ச் செய்கைகள் என்கிற பெயரில் காடழிக்கப்பட்டு நுட்பமான முறையில் நிலம் அபகரிக்கப்படுகிறது. 
 
இதே வேளை 'பசுமையை நோக்கி" என்ற திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதனருகில் மேற்கொள்ளப்படும் காடழிக்கப்படும் நடவடிக்கையைப்பார்க்கையில், இரண்டிற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் சந்தேகம் எழுகிறது. இது பற்றி உரியோரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களுக்கு தெரிவித்தேன். என்றார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.