Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் 50 தமிழ் குடும்ப பெண்களுக்கு கட்டாயக்கருத்தடை: ம.உ.ஆணைக்குழுவில் முறைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆதவன்
 
கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு D210330340.jpgஉரியவிசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என  யாழ்.சிவில் சமுகப்பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒரவரான  முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆர்.ஆனந்தராஜாவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
 
சிவில் சமுகப்பிரதிநிதிகளுடன் நேற்று யாழ்.கிறின் கிராஸ் ஹோட்டலில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தச் சந்திப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் மொழி உரிமை மீறப்படும் சம்பவங்கள், மீள்குடியேற்றம் தடைப்படுவதற்கான காரணங்கள், இராணுவத்தினரின் அடக்கு முறைகள், சமூக விரோதச்சம்பவங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
 
மேலும் கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு உரிய விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
 
 
இதன்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்;  ஆர்.ஆனந்தராஜா, தமது  ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் முறைப்பாடு வழங்கப்படுமிடத்து  உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
 
வடக்கில் திட்டமிட்ட சமுகப்பிறழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்தக்கட்டாய கருத்தடை மேற்கௌ;ளப்பட்டதா என்ற கேள்வி எழுவதோடு தமிழரின்  விகிதாசாரத்தை குறைக்க கருத்தடை மருந்தை பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
 
அத்தோடு பெண்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்புகளும் சிவில் சமுகப்பிரதிநிதிகளும் இந்த கட்டாய கருத்தடையை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாகயில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினத்தை குறைந்த பட்சநிம்மதியோடை வாழத்தன்னும் வைப்பாங்கள் என்ற நம்பிக்கையில் தான் வாக்கு போட்டது கூட்டமைப்புக்கு இப்ப இருந்ததும் போச்சுடா நொள்ளை கண்ணா நிலைமை 

இந்த விடயத்தின் பாரதூரத்தன்மை மிகவும் குறைவாகவே மதிப்பிடப்படுகின்றது என நினைக்கின்றேன். எம் நிலங்கள் பறிபோவதனை விட இது மிகவும் பாரதூரமானது. புலம்பெயர் அமைப்புகளும் இவ் விடயத்தில் காத்திரமாக செயல்பட வேண்டிய நேரம் இது என நினைக்கின்றேன். உண்மையான மகளிர் அமைப்புகளும் இதில் தங்கள் கவனத்தினை திருப்ப வேண்டும்.

 

சிங்கள அரச சிவில் இயந்திரம் எந்தளவுக்கு இனவாத இயந்திரம் என்பதுக்கும் அது ஒரு செயலை திட்டமிட்டு தன் அனைத்து சக்கரங்களினூடாகவும் இயக்கி தன் இலக்கினை அடையும் என்பதுக்கும் இந்த விடயம் இன்னொரு எடுத்துக்காட்டு. தென் பகுதி ஒரு சிங்கள புத்தி சீவியின் புத்தியில் உதித்த இந்த விடயம், சிங்கள சிவில் சமூகத்தினூடாக கடத்தப்பட்டு (சிவில் சமூகம் என்பது இராணுவ சமூகம் சம்பந்தப் படாதது), சிங்கள மருத்து அதிகாரிகளினூடாக முன்னெடுக்கப்பட்டு, விலை போகும் தமிழ் அதிகாரிகளை கண்டடைந்து அவர்களின் உதவியும் பெறப்பட்டு சிவில் சமூகத்தின் இறுதி ஆணிவரைக்கும் இது எடுத்து வரப்பட்டு இடம்பெற்று இருக்கு. சிங்கள் சிவில் சமூகம் முற்றிலும் இனவாத சமூகம் என்பதும் அதன் பொறிமுறைகளில் இருந்து தமிழர்களுக்கு என்றுமே நிம்மதியான வாழ்க்கை கிடைக்காது என்பதுக்கும் கூட இது இன்னொரு சான்றுதான்.

 

 

 

 

ஒரு இன மக்கள் மேல் செய்யப்படும் அடாத்தான வன்முறை...    நாசிக்கு ஒத்த வேலைகள்  புத்தனின் ஆட்கள் செய்கிறார்கள்.

 

அவுஸ்திரேலியாவில் பழங்குடி இனமக்கள் மேல இவ்வாறான செயற்பாடு செய்யப்பட்டதாக்  கண்டறியப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பத்திரிகைகளில் தகவல் வந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.