Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வொருவரும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி, ஒரு மரத்தையேனும் நாட்ட வேண்டும்! - முதல்வர் விக்னேஸ்வரன் அறிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
cvw-271113-150.jpg

இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத்தில் வடக்கு மாகாணசபையால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நாட்டும் விழா கைவிடப்பட்டது தொடர்பாக வடமாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின் முழுவிபரம்: இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த ஸ்தூபி இருக்கும் சதுக்கத்தில் மரம் நாட்டும் விழா நடத்த எமது வேளாண்மை அமைச்சு உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு என் தலைமைத்துவத்தின் கீழ் அதை நடத்தத் தீர்மானித்திருந்தது.

  

திடீரென்று பொலிசார் தமக்கு ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் எந்த ஒரு விழாவினையும் வடமாகாண மக்கள் இம் மாதம் 26, 27ந் திகதிகளில் நடாத்தப்படாது என்று அதில் கூறப்பட்டிருப்பதாகவும் இன்றைய கூட்டத்திற்குத் தாம் பொலிஸ் பாதுகாப்புத் தந்தால் தம்மிடம் கேள்விகள் கேட்டு தாம் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்றும் எனக்கு அவர்கள் அறிவித்தார்கள். என் மீது மதிப்புக் காட்டுவதால் அந்த அப்பாவிப் பொலிஸார் தண்டனைக்குள்ளாவது எனக்குச் சரியென்று படவில்லை.

எனினும் இந்த நிகழ்வு எமக்குச் சில பாடங்களைப்; புகட்டுகின்றன. ஒன்று இராணுவ பலத்தை வடமாகாணத்தில் போர் முடிந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியுந் தொடர்ந்து வைத்திருப்பதும் இப்பேர்ப்பட்ட ஆணைகளை அரசாங்கம் பிறப்பிப்பதும் அரசாங்கத்தின் பயத்தைப் பிரதி பலிக்கின்றது. அதாவது அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட எமது அரசாங்கத்திற்குப் பீதியை ஏற்படுத்துகின்றன என்று தெரிகிறது.

இல்லையென்றால் நாங்கள் வன்முறையின்றி நல்லெண்ணத்துடன் நடாத்தும் மரம் நாட்டு விழாவைக்கூடத் தடை செய்யும் அளவுக்கு அரசாங்கம் கரிசனை எடுக்கின்றது என்றால் அவர்கள் எந்தளவுக்கு எமது இளைஞர்கள் மீது கரவான மட்டற்ற மரியாதை வைத்துள்ளார்கள் என்று புரிகிறது. இறந்தவர்கள் பேசமாட்டார்கள் என்பது முதுமொழி. இலங்கையில் இறந்தவர்கள் பேசிவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது அரசாங்கத்திற்கு.

எமது மரம் நாட்டு விழா நவம்பர் 27ந் திகதி நடைபெறுவதால் அது எம் இறந்தவர்களை எமது மக்களுக்கு நினைவுறுத்தி விடுமோ என்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பது புலப்படுகிறது. எந்த ஒரு மனிதன் இறந்தால் கூட அவனின் கிட்டிய சொந்தங்கள் அவனின் ஆத்மா சாந்தி அடைய வருடா வருடம் நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம். இது இந்துக்கள், பௌத்தர்கள் ஏன் மற்றைய மதத்தாருக்குக் கூடப் பொருந்தும்.

எல்லாளன் இறந்தவுடன் அவன் ஞாபகார்த்தமாக துட்டகைமுனு ஒரு நினைவு மண்டபம் அமைத்து போவோர் வருவோர் இறந்த அந்த மகா மனிதனுக்கு மரியாதை காட்டவேண்டும் என்றும் அந்த இடத்தில் தமது வணக்கத்தைத் தெரிவித்துப் போக வேண்டும் என்று ஆணையிட்டான். நான் சிறுவனாக அனுராதபுரத்தில் குடியிருந்த போது எங்கள் வதிவிடத்திற்கு அண்மையில் சிற்றம்பலம் டாக்கீஸ் என்ற படமாளிகை அமைந்திருந்த இடத்தில் இருந்து கொஞ்சத் தூரத்தில் தான் எல்லாளன் நினைவிடம் (எலாள சொகன) இருந்தது.

1946 – 1947ம் ஆண்டுகளில் துவிச்சக்கர வண்டிகளில் அவ்வழியே சென்றவர்கள் அந்த நினைவிடத்தில் தரித்து நின்று தொப்பியைக் கழற்றி வணக்கம் தெரிவித்து விட்டு திரும்பவும் ஏறிச் சென்றதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன். ஆனால் அந்த எலாள சொகன இப்பொழுது அழிக்கப் பட்டுள்ளது. அப்பேர்ப்பட்ட துட்டகைமுனுவின் வழியில் வந்ததாகக் கூறிக் கொள்பவர்கள் இன்று இறந்தவர் நினைவாக மரம் நாட்டுவதைக் கூடத் தடைசெய்கின்றார்கள் என்றால் எந்த அளவுக்கு எமது நாட்டு மக்கள் கலாச்சார, சமயப் பின்னடைவு அடைந்துள்ளார்கள் என்பது விளங்கும்.

இது பற்றி பொலிசார் அறிவித்ததும் திரு ஐங்கரநேசனை அழைத்து இது பற்றிப் பேசி சட்டத்திற்குப் புறம்பாக நாம் நடந்து கொள்ளத் தேவையில்லை. என்றாலும் இறந்த எமது மக்களின் நினைவாக ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் விளக்குகளைக் கொழுத்தி ஒரு மரத்தையேனும் நாட்ட வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அறிவுறுத்தினேன். இப்பேர்ப்பட்ட ஆணைகள் எமது உறவுகளின் நினைவை மீண்டும் வலியுறுத்தவே உதவுவன. அழிக்க முடியாது. இயற்கையோடு ஒன்றிய கலாச்சாரம் எமது தமிழர் கலாச்சாரம்.

கார்த்திகைப் பூக்கள் வருடத்திற்கு ஒரு முறை மகிழ்வுடன் கார்த்திகையில்பூக்கும். அதே காலகட்டத்தில் தான் எமது இறந்தவர்களை நினைவுறுத்தும் அந்தச் சோக நாட்களும் கார்த்திகையில் வருகின்றன. நாம் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் கெடுபிடியின் மத்தியில் இறந்து போன எமது சொந்த பந்தங்களை மனதில் நினைத்து விளக்கேற்றி சமாதான முறையில் இன்று அவர்கள் நினைவாக வீட்டுக்கொரு மரம் நடுவோமாக!

சமாதானம், சட்டம் ஆகியன கருதி தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நாட்டும் விழா கைவிடப்பட்டுள்ளது என்று இத்தால் வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்.

 

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணசபை

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97753&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தடைகளை மீறி யாழில் மரம் நாட்டினார்கள் சி.வியும் ஐங்கரநேசனும்- 2ஆம் இணைப்பு:-

wicki_CI.jpg


தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் இலங்கை அரசு அடக்குமுறைகளைக்  கட்டவிழ்த்து விடுமானால் அது பாரிய பின் விழைவுகளை தோற்றுவிக்கும் என வடக்கு முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு இடமபெற்ற மரநடுகை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வெச்சரிக்கையினை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக யாழநகரின் தந்தை செல்வா தூபிப்பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மரநடுகையினை மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் அறிவித்திருந்தார். எனினும் அவரிற்கு வீடு தேடி சென்ற இலங்கைப்படையினர் பகிரங்கமாகவே கொலை அச்சுறுத்தல்களை விடுத்ததையடுத்து அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் திட்டம் மாற்றஞ் செய்யப்பட்டு கல்வியங்காடு ஆடியபாதம் வீதியினிலுள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாவின் அலுவலக வளவில் மர நடுகை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அமைச்சர்களான குருகுலராஜா ஜங்கரநேசன் ஆகியோருடன் உறுப்பினர்களான கஜதீபன் ஆனால்ட் சிவயோகன் ஆகியோர் இணைந்து மரநடுகையினை முன்னெடுத்திருந்தனர்.
படைப்புலனாய்வுப் பிரிவின் கண்களில் மண்ணினை தூவிவிட்டு முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவு மரநடுகை நிகழ்வில் மேலும் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்கள் நினைவாக தமிழ் மக்கள் தத்தமது வீடுகளினில் மரங்களை நடுகை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99565/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20131127-vigneswaran-tree-seithy-1-150.j

யாழ்.குடாநாட்டில் மாவீரர் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை இன்றும் நாட்டியுள்ளதுடன், இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு மரக்கன்று நாட்டியுள்ளார். குடாநாடு முழுவதும் படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றைய தினம் செய்யப்பட்டிருந்ததுடன், இளைஞர்களின் நடமாட்டமும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கும் கடுமையான பாதுகாப்பு, ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதேபோன்றே யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த மரக்கன்றுகள் நடும் திட்டம் கைவிடப்பட்டதாக முதலமைச்சர் நேற்று மாலை தெரிவித்திருந்தார்.

  

இந்நிலையில் இன்று மாலை திடீர் ஏற்பாட்டில் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடன் இணைந்து, முதலமைச்சர் வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தில் மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டிவைத்தார். நிகழ்வில் கல்வி அமைச்சர் த. குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் வே.சிவயோகன், பா.கஜதீபன், இ.ஆனல்ட் ஆகியோரும் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

 

20131127-vigneswaran-tree-seithy-1-403.j

 

 

20131127-vigneswaran-tree-seithy-2-403.j

 

 

20131127-vigneswaran-tree-seithy-3-403.j

 

 

20131127-vigneswaran-tree-seithy-4-403.j

 

 

20131127-vigneswaran-tree-seithy-5-403.j

 

 

20131127-vigneswaran-tree-seithy-6-403.j

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97801&category=TamilNews&language=tamil

இதை ஏன் தமிழர் தினமாக பிரகணப்படுத்த கூடாது?

முதலில உங்கட வீட்டில நடுவுங்கோ......

திரு விக்னேஸ்வரன் அவர்கள் பாடசாலை சிரமதான நிகழ்வுகளில் மரம் நாட்டும் நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியுள்ளார் 

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.