Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்

Featured Replies

  • தொடங்கியவர்

சிரிப்பு மட்டும் .

ஒரு கர்ப்பிணி பொண்ணு கைரேகை, ஜாதக பொருத்தம் பார்க்கும் சாஸ்த்திரிகிட்ட போச்சு..
.
"..ஏம்மா !! இந்த குழந்தை ஜனிச்சா.. இதோட தப்பனை காவு வாங்கிடும் .. அப்ப்டின்னு ஜாதகம் சொல்லுது..!!
.
"..அப்பாட..!! நான் பயந்துட்டேன்..!! என்புருஷனுக்கு எதுவும் ஆயுடுமோன்னு ..அது போதும் சாமி..!!...
.
"..உன்னையெல்லாம் சுனாமி ஏன் தூக்கலை..!!
.
"கல்யாண பொருத்தம் பார்த்து சாவடிக்கிற உன்னையே சுனாமி தூக்கலை.. எனக்கு அதெல்லாம் ஜுஜுபி..!

  • Replies 199
  • Views 21.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எஃப்.எம் ஏழுமலை அசத்திவிட்டார்.. :D

  • தொடங்கியவர்

மூன்று விஷயங்கள்.....

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை......
நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்.......
நகை
மனைவி
சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.....
புத்தி
கல்வி
நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்......
உண்மை
கடமை
இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை....
வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.......
தாய்
தந்தை
இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது......
சொத்து
ஸ்திரி
உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.....
தாய்
தந்தை
குரு


அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம். 

1. இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் அது உலக அதிசயம்

2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் மு ழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் .

3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம்­ தானே செலுத்தும் காதலி இருந்தால் அது உலக அதிசயம்...

4. மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

6. பேஸ்புக்கில் பெண்கள் சொல்லும் மொக்கைகளுக்கு ஒரு லைக்ஸும் விழாமல் இருந்தால் அது உலக அதிசயம்

7. பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல கருத்துகளுக்கு சில லைக்ஸாவது கிடைத்து இருந்தால் அது உலக அதிசயம்

8. தமிழ் நலனுக்காக உண்மையாக பாடு படும் ஒரு தலைவர் இருந்தால் அது உலக அதிசயம்

9. இங்கிலிஷில் பேசி பீலா விடாத தமிழ் கல்லூரிப் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

10. கல்யாணம் ஆகி குழந்தை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகும் கணவனை குறை சொல்லாமல் நேசிக்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

11. செய்திளை திரிக்காமல் வெளியிடும் பத்திரிக்கைகள் வந்தால் அது உலக மகா அதிசயம்

12. விகடன் குழும பத்திரிக்கைகளில் சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்கள் வராமல் இருந்தால் அது உலக அதிசயம் 

13. ஜெயலலிதா அவர்களின் காலில் விழுந்து வணங்காத அமைச்சர்கள் இருந்தால் அதிசயம்

14. கலைஞர் அறிக்கைகள் விடாமல் இருந்தால் அது உலக அதிசயம்

15. சட்டசபையில் ஜெயலலிதாவும் கலைஞரும் எதிர் எதிராக அமர்ந்து தமிழ் மக்கள் நலனுக்காக ஆரோக்கிய மாக விவாவதித்தால் அது உலக மகா அதிசயம் .

16. கமலஹாசன் ஆங்கில படங்களை தழுவாமல் இப்போது படங்கள் எடுத்தால் இருந்தால் அது உலக அதிசயம்

17. ரஜினிகாந்த வருடத்திற்கு ஒரு முறையாவது வாய்ஸ் கொடுக்காமல் இருந்தால் அது உலக அதிசயம்

18. தீபாவளி , பொங்கல் , புத்தாண்டு தினங்களில் டிவிகளில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் இல்லாமல் இருந்தால் அது உலக அதிசயம

வேறு ஏதாவது அதிசயம் இருக்கலாம்? நீங்கள் சொல்லுங்கள்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சுட்டு .

மனிதனை மயக்கும் முதல் இசை .

அன்னையின் இதய துடிப்பு ..!

  • தொடங்கியவர்

561801_3289899386156_358473318_n.jpg

 

 

554488_3286479740667_1900317712_n.jpg

 

307989_3286408858895_2142644706_n.jpg

 

486821_3289961147700_1277246427_n.jpg

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இலக்கியத்தில் நகைச்சுவை-3

கொஞ்சம் வில்லங்கமான காளமேகப்புலவரின் சிலேடை ஆனால் அசத்தலான வரிகள்.

கட்டித் தழுவுதலால் கால்சேர ஏறுவதால்...
எட்டிப் பன்னாடை இழுத்தலால் - முட்டப்போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும்
வேசையென லாமே விரைந்து



வேசியும் ..பனைமரமும் .

  • கருத்துக்கள உறவுகள்

எப்.எம் ஏழுமலை........ கலக்கல்.

  • தொடங்கியவர்

கொதி ஜீவிதப் பாறைப் புனல்
பற்றியெழு 
பவளம் தரிப் பாசிக் கவண்;
திரிபுரத் தீ நடு ஈச நுதல்ச் சாம்பலொடு ஆம்பல்.

 

 

 பாறையை பிளந்து , கொதித்து வெளிவரும் எரிமலை..தன் பாதையில், எதையும் ..எந்த பவள பாறையையும் கூட விட்டுவைக்காது..அதுபோல், என் பார்வை உக்கிரத்தின் முன், துரியோதனா..உன் ஆணவம் எரிந்து சாம்பலாகும்..

  • தொடங்கியவர்

கணவன்:-..".. இன்னிக்கு அலவுதீனின் அற்புதவிளக்கு என் கையில மாட்டிச்சு தெரியுமா.."?
.
மனைவி:- ".. நிஜமாவா!!! ஐயோ.. என்ன தரச்சொல்லி கேட்டீங்க டார்லிங்.."?
.
கணவன்: "..சொன்னா நீ சந்தோஷப் படுவே..!...
.
மனைவி:-"..சீக்கிரம் சொல்லுங்க டார்லிங்..சஸ்பென்ஸ் தாங்கமுடில..!
.
கணவன்: "..உன் மூளையை உனக்கே தெரியாமல் பத்து மடங்கு பெருக்கி அதிகரிக்க சொல்லி கேட்டேன் தெரியுமா..!!
.
மனைவி:- ."வாவ்..!! அப்பிடியா!! ஆனால் ஒன்னும் ஆனமாதிரி தெரிலையே..!!
.
கணவன்:-"..ஆமா..!!பூதத்துக்கே சிரிப்பு வந்திடிச்சு... சைபரை (Zero) எத்தனை மடங்கு பெருக்கினாலும் சைஃபர் (0) தானாம்.."
.

 

  • தொடங்கியவர்

ஒரு நாள் திடீரென்று ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது பேர் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்!

அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் இறந்து விட்டனர் என்று!

அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த நாராயணசாமியை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்....

அதற்கு நாராயணசாமி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.

"அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு நாராயணசாமி சொன்னார்."எல்லோரும் டில்லி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "டில்லி எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார்.

உடனே அனைவரும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.
உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.

அதற்கு நாராயணசாமி "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன். அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?

இலங்கையர்கள்:
1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் கால...ி பண்ணிடுவார்கள்.

2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.

3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.

4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.

5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.

6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.

7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.

8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)

9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.

10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.

11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.

13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.

14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள்.

15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.

16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.

17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.

18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours) எடுப்பார்கள்.

19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.

20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.

21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.

22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.

24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்

25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.

இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில் சந்தேகமே இல்லை.

  • தொடங்கியவர்

செம கவிதை ..

  • தொடங்கியவர்

இனிப்பான முத்தம்? --- தலையில்.

அன்பான முத்தம்? --- கன்னத்தில்.

ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில்....
...
சூடான முத்தம்?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
/

பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???...

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)

  • தொடங்கியவர்

"டாக்டர் என் கணவரின் வாய்க்குள் எலி புகுந்துவிட்டது. உடனே வாங்க?" என்று பதறிய்படி போனில் அழைத்தாள் அவள்.

"ஒரு வடை அல்லது தேங்காய்த்துண்டை உங்கள் கணவரின் வாய்க்...கு நேராகப் பிடித்துக்கொண்டு இருங்கள் வாசனையைப் பிடித்துக்கொண்டு எலி வெளியே வந்துவிடும். நானும் இதோ புற்ப்பட்டு வருகிறேன்" என்றார் டாக்டர்.

டாக்டர் வந்தபோது அந்தப் பெண் கணவனின் வாய்க்கு நேராக மாமிசத்துண்டை பிடித்துக்கொண்டிருந்தாள். "எலிக்கு மாமிசம் பிடிக்காதே அதை ஏன் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்" என்று டாக்டர் கேட்டார்.

இது எலிக்கு இல்லை டாக்டர். எலியைத் துரத்திக்கொண்டு வாய்க்குள் ஒரு பூனையும் நுழைந்துவிட்டது. அதற்காகத்தான் இந்த மாமிசத்துண்டு என்றாளே பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வயசு பையன் அப்பாக்கிட்ட சொன்னானாம்..

"அப்பா உங்களுக்கு ஒரு good news ஒரு bad news சொல்லப் போறேன்"

"சரி முதல்ல bad news சொல்லு"

"பக்கத்து வீட்டு ஆன்டி இனி நம்ம வீட்டுக்கு தண்ணி பிடிக்க வரமாட்டாங்களாம்"

"good news என்னடா?"

"அவங்க பொண்ணுதான் இனிமே வரப் போறாளாம்.. :D

 

  • தொடங்கியவர்

ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.
துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..

அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..
...
அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?

குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..

அதிகாரி ; பணிப் பெண்கள்..?...

குரங்கு ; பெல்ட் போட உதவினார்கள்..

அதிகாரி ; விமானிகள்.. ?

குரங்கு ; விமானத்தை கிளப்பினார்கள்..

அதிகாரி ; நீ என்ன செய்தாய்..?

குரங்கு ; வேடிக்கை பார்த்தேன்..

அதிகாரி; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?

குரங்கு ; பயணிகள் தூங்கினார்கள்..பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன்பேசிக்கொண்டிருந்தார்கள்..

அதிகாரி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

குரங்கு ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்....!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.

துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..

அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..

...

அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?

குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..

அதிகாரி ; பணிப் பெண்கள்..?...

குரங்கு ; பெல்ட் போட உதவினார்கள்..

அதிகாரி ; விமானிகள்.. ?

குரங்கு ; விமானத்தை கிளப்பினார்கள்..

அதிகாரி ; நீ என்ன செய்தாய்..?

குரங்கு ; வேடிக்கை பார்த்தேன்..

அதிகாரி; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?

குரங்கு ; பயணிகள் தூங்கினார்கள்..பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன்பேசிக்கொண்டிருந்தார்கள்..

அதிகாரி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

குரங்கு ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்....!

 

அட மாயமான விமானத்தையும் இந்தக் குரங்குதான் ஓட்டிக்கொண்டு போயிருக்குமோ!

 

  • தொடங்கியவர்

நந்தன் :என்னடா சுண்டல் கடலை பார்த்த படி நிக்கிற ...

சுண்டல் :இல்லண்ணே அந்த பிளேட் எங்க பக்கம்தான் விழுந்ததாம் அதுதான் பார்க்கிறன்..

நந்தன் :ஒரு வழி இருக்கு கண்டுபிடிக்க ..

சுண்டல் :என்ன வழி ??? என்ன வழி?? சொல்லுங்க அண்ணே ..

நந்தன் :நீ கடலில் குதி தண்ணி எல்லாம் தரைக்கு வரும் அப்போ பிளேன் எங்க கிடக்கு என்று தெரியும் ..

சுண்டல் :%µ£¨%%%¨£µ00%ம%...!!!
 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித...்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!

  • தொடங்கியவர்

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குத் தண்டனைக் கைதிகள் இருந்தனர்.

தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு முன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.

முதல் கைதியி...ன் ஆசை:
1- நல்ல பெண்
2- நல்ல மது
3- லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.

மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது கைதியின் ஆசைகள் ;
1- நல்ல பெண்
2- நல்ல உணவு
3- ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.

அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.

மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக

1- மாம்பழம் கேட்டான்.

அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.

2- செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.

அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,

3- ''என் உடல் இங்கிருக்கும் நீதவானின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.

''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,

''என்ன சொல்கிறாய்,நீ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!

''கைதி அமைதியாகச் சொன்னான்,

''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.''

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குத் தண்டனைக் கைதிகள் இருந்தனர்.

தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு முன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.

முதல் கைதியி...ன் ஆசை:

1- நல்ல பெண்

2- நல்ல மது

3- லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.

மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது கைதியின் ஆசைகள் ;

1- நல்ல பெண்

2- நல்ல உணவு

3- ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.

அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.

மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக

1- மாம்பழம் கேட்டான்.

அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.

2- செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.

அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,

3- ''என் உடல் இங்கிருக்கும் நீதவானின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.

''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,

''என்ன சொல்கிறாய்,நீ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!

''கைதி அமைதியாகச் சொன்னான்,

''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.''

 

நம்ம ஆள் தமிழனா?  :o

  • தொடங்கியவர்

நம்ம ஆள் தமிழனா?  :o

 

அப்படிதான் நானும் யோசிச்சன் அண்ணே :)

  • தொடங்கியவர்

குச்சி ஐஸ் குடிக்கும் பொழுது ..
முடிவில் ஆசையாய் இருக்கும் ..
ஒரு சிறு துண்டு கரைந்ததபடி ..
ஆர்வமா வாய் அருகில் போக ....
இரண்டா உடைத்து விழுவது போல் ....
வாழ்க்கையில் சில ஏமாற்றம் ...
முழுவதும் அனுபவிக்கவில்லை என்பதே ..!

  • தொடங்கியவர்

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன்
கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?
1 ஏங்க எங்க போறீங்க?
2 யார்கூடப் போறீங்க?
3 ஏன் போறீங்க?...
4 எப்படி போறீங்க?
5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?
6 ஏன் நீங்கமட்டும் போறீங்க?
7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?
8 நானும் உங்ககூட வரட்டுமா?
9 எப்ப திரும்ப வருவீங்க?
10 எங்க சாப்பிடுவீஙக?
11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம
எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?
14 பதில் சொல்லுங்க ஏன்?
15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய்
விடுவீங்களா?
17 நான் அனி திரும்ப வரமாட.டேன்
18 ஏன் பேசாம இருக்கீங்க ?
19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?
20 இதுக்முன்னாடியும் எனக்குத்தெரியாம
இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா?
21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன்
மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?
22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???
இதுக்கு அப்புறமும் அவர்
அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பா
ருன்னு நினைக்கிறீங்களா?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.