Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவுப் பிரதேச சபை தலைவரை சுட்டவன் பெரிய கெட்டிக்காரன்;புகழாரம் சூட்டினார் எஸ்.எஸ்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவரைச் சுட்டவன் பெரிய கெட்டிக்காரன் என  யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி புகழாரம் சூட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில்  வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனினும் கடந்த 26ஆம் திகதி காலையில் அவர் தனது வீட்டில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் வெளியில் சென்று வந்திருந்தார். அதன்படி தற்போது பொலிஸாரினால் குறித்த நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி மிகவிரைவில் சந்தேக நபர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதேவேளை பிரேத பரிசோதனையினையில் அவரது தலையில் இருந்து 9 எம்.எம் தோட்டா ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் துப்பாக்கிச்சூட்டினை நடாத்தியவர் 5மீற்றர் தூரத்தில் இருந்தே மேற்கொண்டிருக்க வேண்டும் என வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

எனவே தூரத்தில் இருந்து சுட்டதனாலேயே தோட்டா வெளியில் போகாமல் தலையில் இருந்துள்ளது. சுட்டவன் பெரிய கெட்டிக்காரன்  என்று புகழ்ந்தார் எஸ்.எஸ்.பி.

மேலும் தற்போது இராணுவம், பொலிஸாரைத் தவிர மற்றையவர்களிடம் ஆயுதம் இருக்க வாய்ப்பில்லை.  எனவே இச்சம்பவத்துடன் அவர்கள் தொடர்பு பட்டிருக்கவில்லை  எனின் யாழ்ப்பாணத்திலும் சட்டவிரோதமாக ஆயுத குழு ஒன்று இயங்குவதாக கூறுகிறீர்களா என்று கேட்ட போது,

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் ஆயுதங்களை அரச அனுமதியுடன் பலர் வைத்திருக்கின்றார்கள் எனவே இச் சம்பவம் குறித்து தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

இதேவேளை, கடந்த 26ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அதன்படி அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது தலையின் பின்பக்கத்தில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அதனையடுத்து பிரேத பிரிசோதனையிலேயே அவரது தலையில் இருந்து தோட்டா ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. எனினும் பிரதேச சபைக்கு இவர் கடந்த 2 மாதங்களாக செல்லவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதினம் சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=382252477129665308#sthash.HcDhOA69.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போலீஸ் அதிகாரி இப்பிடி பொறுப்பில்லாமல் அந்த ஆட்டோ சாரதியை தேடுவதாக பகிரங்கமா கூறினால் அவன் எஸ்கேப் ஆக மாட்டானா

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் சாவு குறித்து வந்த செய்திகள்...

 

1. குடும்பப் பிரச்சனையால் நஞ்சுண்டு தற்கொலை.

 

2. தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை.

 

3. யாரோ சுட்டுத் தற்கொலை.

 

4. ஆட்டோ ரைவரால் சுட்டு தற்கொலை.

 

(இதே புலிகள் இருந்திருந்தால்.. ஸ்ரெயிட்டா புலிப் பயங்கரவாதிகளால்.. (சிறீலங்கா அரசு இப்படிச் சொல்ல).. புலிப் பாசிசவாதிகளால் (ஈபிடிபி இப்படிச் சொல்லி தியாகி ஆக்கி இருக்கும் இவரை).. சுட்டுக்கொலை என்று வந்திருக்கும்.)

 

நெடுந்தீவில்.. ஆயுதத்தோடு இருக்கிற ஆக்கள்.. யார்..??!

 

1. சிறீலங்கா கடற்படை.

 

2. ஈபிடிபி.

 

முடிவை நீங்களே தீர்மானியுங்கள் மக்களே. மக்கள் பிரதிநிதிகள்.. இச்சம்பவத்தின் பின் கூடிய கவனத்தோடு இருப்பது நல்லம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் சாவு குறித்து வந்த செய்திகள்...

 

1. குடும்பப் பிரச்சனையால் நஞ்சுண்டு தற்கொலை.

 

2. தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை.

 

3. யாரோ சுட்டுத் தற்கொலை.

 

4. ஆட்டோ ரைவரால் சுட்டு தற்கொலை.

 

(இதே புலிகள் இருந்திருந்தால்.. ஸ்ரெயிட்டா புலிப் பயங்கரவாதிகளால்.. (சிறீலங்கா அரசு இப்படிச் சொல்ல).. புலிப் பாசிசவாதிகளால் (ஈபிடிபி இப்படிச் சொல்லி தியாகி ஆக்கி இருக்கும் இவரை).. சுட்டுக்கொலை என்று வந்திருக்கும்.)

 

நெடுந்தீவில்.. ஆயுதத்தோடு இருக்கிற ஆக்கள்.. யார்..??!

 

1. சிறீலங்கா கடற்படை.

 

2. ஈபிடிபி.

 

முடிவை நீங்களே தீர்மானியுங்கள் மக்களே. மக்கள் பிரதிநிதிகள்.. இச்சம்பவத்தின் பின் கூடிய கவனத்தோடு இருப்பது நல்லம்.

 

 

விடுங்க  ராசாக்கள்

நமக்கு ஒரு குண்டு லாபம்.......... :)

விடுங்க  ராசாக்கள்

நமக்கு ஒரு குண்டு லாபம்.......... :)

 

பிரேத பரிசோதனையின் போது இறந்தவரின் உடம்பில் இருந்து எடுத்த குண்ண்டைத்தானே இலாபம் என்று சொல்லுறிங்கள்?  :)

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர் உடம்பில் இருந்து குண்டை எடுத்ததையே சாதனைமாதிரி சொல்லுறார்.. :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.