Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரனில் துளசி, நூக்கல் செடிகளை வளர்க்க நாசா திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
nasa-291113-150.jpg

நிலாவில் மனிதன் கால் தடம் பதித்ததில் இருந்தே அதில் மனிதன் வாழ முடியுமா என்ற சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் வரும் 2015ஆம் ஆண்டு வாக்கில், நிலாவில் நூக்கல் மற்றும் துளசி செடிகளை வளர்த்து, மனிதன் நிலாவில் வாழ முடியுமா, தொடர்ந்து தங்கியிருக்க முடியுமா என்பது குறித்து சோதனை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இரண்டு ஆண்டுகளில் நிலாவுக்குச் சென்று அங்கு தரைப் பகுதியில் 5 முதல் 10 நாட்களுக்குள் வேகமாக வளரும் செடிகளான துளசி, நூக்கல் விதைகளை மண்ணில் புதைத்து எடுத்துச் சென்று, அதற்கு தினமும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து பரிசோதிக்க உள்ளனர்.

  

இந்த விதைகளை சுற்றி கேமராக்கள், உணர்வறியும் கருவிகள், செடியின் தன்மையை உடனுக்குடன் அளிக்கும் எலக்ட்ரானிக் கருவி போன்றவை வைக்கப்பட்டு, இங்கிருந்து கண்காணிக்கப்பட உள்ளது. இதன் மூலம் செடிகளின் வளரும் தன்மையையும், மனிதன் நிலாவில் வாழ முடியுமா என்பது குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97930&category=WorldNews&language=tamil

சூரியனை நெருங்கி மாயமான ஐசான்; சிதறியதில் சிறு துண்டு தப்பியதாக தகவல்

article-0-19B37F1500000578-373_634x408.j

சூரியனை நோக்கி மிக வேகமாக பாய்ந்துச் சென்ற ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்றிச் சென்ற பின்னர் மாயமாகிவிட்டது. அது சிதறுண்டு ஆவியாகிப் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை நெருங்கிய அடுத்த சில நிமிடங்களில் தென்படாமல் போய்விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி ஆவியாகிப் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதேசமயம், சூரியனை நெருங்கி மாயமான பின்னர் ஐசானின் சிதறல் தப்பிப் பிழைத்துள்ளதாக புதிய செய்தியொன்றும் வெளியாகியுள்ளது. இதனால் ஐசான் முழுமையாக பொசுங்கிப் போய் விட்டதா அல்லது அதன் சிதறலில் சில தப்பிப் பிழைத்ததா என்ற விவாதம் எழுந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர், ஐசான் வால் நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகே போய் அதைக் கடந்து செல்ல முற்பட்டது. ஆனால் சூரியனை கடந்த சில நிமிடங்களிலேயே அதைக் காணவில்லை. மாயமாகி விட்டது.

article-0-19B4107100000578-167_634x631.j

சூரியனைக் கடந்த அடுத்த சில விநாடிகளிலேயே ஐசான் சிதறுண்டு போனதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்துக் கூறுகையில், 'ஐசான் வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்த பின்னர் மீண்டும் காணப்படவில்லை' என்று தெரிவித்துள்ளனர். அனேகமாக அது சிதறுண்டு ஆவியாகியிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஐசான் வால் நட்சத்திரம் முழுமையாக அழிந்து போகவில்லை. அதன் சிதறலின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், ஐசான் முழுமையாக அழியவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது. தப்பிப் பிழைத்த ஐசானின் பகுதியை மீண்டும் காண முடியும் என்ற நம்பிக்கையிலும் இவர்கள் உள்ளனர். இந்த சிதறல் தப்பிப் பிழைத்தது உண்மை என்றால் டிசெம்பர் மாதத்திலும் ஐசானின் ஒரு பகுதியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.

நாசாவின் ஐசான் வால் நட்சத்திரத்தைக் கண்காணிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த கார்ல் பட்டம்ஸ் என்ற விஞ்ஞானியின் புதிய கருத்தும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அவர் தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், பெரிஹீலியனில் நுழைந்து மாயமான ஐசான் முழுமையாக அழியவில்லை. அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளது.

article-2508374-1972F60800000578-604_634

கார்ல் மேலும் கூறுகையில், நாசாவின் சோஹோ தொலைநோக்கியின் லாஸ்கோ சி2 கேமராவின் பதிவின்படி ஐசானின் மிக மிக சிறிய தூசி மண்டலத் துண்டு தப்பியுள்ளதாக நம்புகிறேன். மேலும், லாஸ்கோ சி3 அனுப்பியுள்ள படங்களைப் பார்க்கும்போது மீண்டும் ஒளிப் பிரகாசமான பகுதியைக் காண முடிந்துள்ளது. இது ஐசானின் தப்பிப் பிழைத்த பகுதியாக இருக்கலாம் என்று நம்புகிறேன். நிச்சயம் இது ஐசானின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.

சூரியனை நோக்கி வேகமாக பாய்ந்து வந்த ஐசான், சூரியனின் சுற்று வட்டத்தை நெருங்கியதும் மாயமாகிப் போனது. அதன் மிகப் பெரிய வால் பகுதியைக் காண முடியவில்லை. அது சுருங்கிப் பொசுங்கிப் போயிருக்கக் கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே அதன் ஒரு பகுதியானது மீண்டும் வெளிப்பட்டதை லாஸ்கோ சி2 படம் காட்டுகிறது. எனவே ஐசானின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கிறது. அதாவது, ஐசானின் வால் மற்றும் கோமா பகுதி அழிந்து போயிருக்கலாம். ஆனால் அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கலாம்.

தப்பிப் பிழைத்த ஐசானின் குதியிலிருந்து தொடர்ந்து தூசு வெளிப்பட்டு வருகிறது. மேலும் அது ஒளிரவும் செய்கிறது. வாயுக்களும் வெளிப்பட்டுள்ளது. தப்பிப் பிழைத்த பகுதி குறித்து நமக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும் கூட அரை குறை உயிருடன் ஐசான் இன்னும் இருப்பதாக நாம் சொல்ல முடியும். அதன் நியூக்ளியஸ் பகுதி எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவில்லை.

article-2514897-19B0DC5E00000578-402_634

அதைப் பொறுத்துத்தான் அது தொடர்ந்து உயிர் பிழைத்திருக்குமா என்பதை கணிக்க முடியும். எவ்வளவு காலம் அது நீடித்திருக்கும் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மீண்டும் அதைப் பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை. ஆனால் ஒன்றுமே இல்லை என்று கூறுவதற்குப் பதில், ஏதோ கொஞ்சம் இருக்கிறது என்றுதான் இப்போதைக்கு சொல்ல முடியும். என்று கூறியுள்ளார் கார்ல். நாசாவின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 தொலைநோக்கியானது மொத்தம் 76 படங்களை அனுப்பியுள்ளது.

ஐசான் குறித்த உலகளாவிய பொதுவான கருத்து என்னவென்றால், கடும் வெப்பம் அதாவது கிட்டத்தட்ட 2600 டிகிரி சென்டிகிரேட் மற்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தி ஆகியவற்றின் காரணமாக ஐசான் வால்நட்சத்திரம் சிதறுண்டு போயிருக்கவே அதிகம் வாய்ப்புகள் உள்ளன. பொறுத்திருந்து பார்க்கலாம்.. ஐஸ் துகள்கள் நிரம்பிய ஐசான் மீண்டிருக்குமா.. அல்லது மாண்டிருக்குமா என்பதை.

 
<object id="flashObj" width="480" height="270" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,47,0"><param name="movie" value="http://c.brightcove.com/services/viewer/federated_f9?isVid=1&isUI=1" /><param name="bgcolor" value="#FFFFFF" /><param name="flashVars" value="videoId=2876473435001&linkBaseURL=http%3A%2F%2Fwww.dailymail.co.uk%2Fnews%2Farticle-2515339%2FComet-ISON-destroyed-close-encounter-sun.html&playerID=2730234011001&playerKey=AQ~~,AAAAAFSL1bg~,CmS1EFtcMWF3qCwIkkoMNkVkOrxR00Hs&domain=embed&dynamicStreaming=true" /><param name="base" value="http://admin.brightcove.com" /><param name="seamlesstabbing" value="false" /><param name="allowFullScreen" value="true" /><param name="swLiveConnect" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><embed src="http://c.brightcove.com/services/viewer/federated_f9?isVid=1&isUI=1" bgcolor="#FFFFFF" flashVars="videoId=2876473435001&linkBaseURL=http%3A%2F%2Fwww.dailymail.co.uk%2Fnews%2Farticle-2515339%2FComet-ISON-destroyed-close-encounter-sun.html&playerID=2730234011001&playerKey=AQ~~,AAAAAFSL1bg~,CmS1EFtcMWF3qCwIkkoMNkVkOrxR00Hs&domain=embed&dynamicStreaming=true" base="http://admin.brightcove.com" name="flashObj" width="480" height="270" seamlesstabbing="false" type="application/x-shockwave-flash" allowFullScreen="true" allowScriptAccess="always" swLiveConnect="true" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed></object>

 

http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-18-10-05-32/91364-2013-11-29-06-45-58.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திரனிலை துளசியை கொண்டுபோய் நடேக்கை ஒரு பனங்கொட்டையையும் தாட்டுப்பாருங்கோ.......சிலநேரம் சரிவந்தாலும் சரிவரும்.....என்ரை அறிவுக்கெட்டினதை சொன்னனப்பா.. :(

  • கருத்துக்கள உறவுகள்

பனங்கொட்டையோட மறக்காம ஒரு முட்டியையும் கொண்டு போங்கோ!

 

தண்ணிப் பிரச்சனையும் இல்லை! வெயில் பிரச்னையும் இல்லை! :D

 

நம்ம பெரியவாள் அப்பவே சொல்லியிருக்கா பாருங்கோ!

 

அவாளுக்கெல்லாம் 'துளசி' மகிமை புரிஞ்சிருக்கு பாருங்கோ!

 

சிவபெருமான் தலையில 'சந்திரன்' இருக்கிறதால தான், நம்ம பெரியவா அப்பவே ;துளசி' அபிசேகம் பண்ணிருக்கா! :unsure:

 

நம்ம பெரியவா சொன்னதை, அமெரிக்கனும் பாத்து துளசியையே சந்திரனுக்குத் தூக்கிண்டு போறான்!

  • கருத்துக்கள உறவுகள்

துளசி. பிரான்ஸ்சிலை... இருக்கிறது தான்...நல்லது

சந்திரனில் துளசி என்றதும் நம்ம துளசி சந்திரனுக்குப் போயிட்டா எண்டு ஆவாலாய் ஒடியந்தன். ஏமாத்திப் போட்டாங்கள்! :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.