Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவைக் கவிழ்ப்பதற்கு இலங்கையின் எதிர்க்கட்சிகள் புதிய வியூகம் வகுக்கின்றன!

Featured Replies

Mahinda_Opp.jpgஇலங்கையில் அடுத்து நடத்தப்படும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேக்கா, ஆர்.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து தற்போது திரைமறைவிலான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அரசியல் கூட்டணியில் இணையும் அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடாது புதிய கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பிலான சில சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தப் புதிய கூட்டணியைச் சேர்ந்த ஒருவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுவதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்தப் புதிய கூட்டணியில் இணையவதா? இல்லையா? என்பது பற்றி ஜே.வி.பி இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

http://tamilworldtoday.com/homepage


தேர்தலில் புதிய கூட்டணி குறித்துப் பேச்சு
 
எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் புதிய கூட்டணியொன்றை ranil-wickramasinghe-sarath-fonseka-chanஉருவாக்குவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னால் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கிடையில் இந்த பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
 
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ள போதும் எதுவித முடிவும் இதுவரையில் எடுக்கப்படவி்ல்லை.
 
ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குதல் மற்றும் பொதுத் தேர்தலின் போது பொதுவான ஒரு கொள்கை அடிப்படையில் ஒன்றினைந்து செயற்படுதல் போன்ற விடயங்கள் பற்றி இந்த பேச்சுவார்த்தையின் போது ஆராயப்பட்டுள்ளன.
 
எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனான இந்த சந்திப்பின் போது மக்கள் விடுதலை முன்னணியினர் கலந்துக் கொள்ளவில்லை எனவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின் போது அவர்களும் கலந்து கொள்ளும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தமக்கு அவ்வாறான ஒரு கூட்டணி தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறு ஆரமபித்தால் அதில் இணைவதா?இல்லையா? என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்தனர்.

http://virakesari.lk/?q=node/359564

  • கருத்துக்கள உறவுகள்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்!

 

அப்போது அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, மன்னனே, நான் உன்னிடம் ஒரு கதை கூறுவேன்! அதன் பின்பு நான் கேட்கும் கேள்விக்கு நீ சரியான பதிலைக் கூறவேண்டும்!

 

சரியான பதிலைக் கூறத் தவறினால், உனது தலை வெடித்துச் சுக்கு நூறாகிவிடும்!

 

அப்போது மன்னனின் மௌனம் சற்றுக் கலையவே, வேதாளம் மீண்டும் முருக்கமரத்தில் ஏறிக்கொண்டது! :o

சம்பந்தர் மகிந்தவிற்கு ஆதரவு கொடுப்பதன் மூலம், மகிந்தவை கவிழ்க்கின்ற முயற்சிக்கு துணை புரியலாம்.

சிறிலங்கா என்னும் நாட்டின் பிறப்பும் அதன் வாழ்வும் பவுத்த பேரினவாதமாக இருக்கும் ஒவ்வொரு தருணமும் மகிந்தக்களே ஆட்சியில் இருப்பர் என்பதை, இந்தியாவும் சர்வதேசமும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் மீண்டும் மீண்டும் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். தமிழர்கள் இதில் சம்பந்த்தப்படாமல் இருத்தலே அவர்களுக்கு நன்று.

விவசாயி! இது நடவாது. கிண்டலாகத்தான் எழுதினேன். உண்மையில் இதை நீங்கள் மறுவளமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஏறக்குறைய நாரதர் சொன்னது போன்றதுதான் நான் சொன்னது.

சம்பந்தர் மேற்கண்ட கூட்டணியில் (சந்திரிகா, ரணில், சரத்) சேர்ந்தால், மகிந்த மீண்டும் இலகுவாக வெற்றி பெறுவார்.

சிங்களவர்களுக்கு ராஜபக்ஸ ஆட்சி மீதும், எங்களுக்கு கூட்டமைப்பின் மீதும் ஆயிரம் அதிருப்திகள் உண்டு. ஆனால் வோட்டு போடும் போது, நாமும் சிங்களவர்களும் ஒரே மாதிரித்தான். இனம் சார்ந்த தேசியச் சிந்தனையே இதற்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் மகிந்தவிற்கு ஆதரவு கொடுப்பதன் மூலம், மகிந்தவை கவிழ்க்கின்ற முயற்சிக்கு துணை புரியலாம்.

 

 

நீங்கள் எதற்காக  எழுதினாலும்

மகிந்தவை ஆதரித்தால்

தமிழரது பிரச்சினை...............??? :(

(அதற்காக இந்த  கூட்டு சரி  என  எழுதவில்லை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.