Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் கொடுத்த விஷத்தை கொழும்பு பேராயர் பருக்க முயற்சித்து வருகிறார் - விமல் வீரவன்ஸ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
wimal-seithy-150.jpg

கத்தோலிக்க திருச்சபை கொழும்பு போராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்ததை செய்வதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடபூமி என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தமை தொடர்பில் வீரவன்ஸ கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொடுத்த விஷத்தை கொழும்பு பேராயர் பருக்க முயற்சித்து வருகிறார். பேராயர்கள் நாட்டின் நீண்ட காலமாக பொது சமூகத்துடன் வாழ்ந்து வரும் சமய தலைவர்கள் என்ற வகையில் பாரம்பரிய வாழ்விடபூமி என்ற எண்ணக்கரு விஷமானது என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

  

இந்த விஷத்தை நாட்டில் வாழும் பொதுமக்களுக்கு அருந்த கொடுக்கும் தார்மீக உரிமை எம்மில் எவருக்கும் இல்லை. இந்த விஷத்தை பரப்பித்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன் வடக்கில் மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தினார். வாழ்விடபூமி என்ற விஷத்தை கொடுத்து தாயகத்தை ஏற்படுத்துவதே அடுத்த முயற்சியாகும். பேராயர் இதனை கூறும் போது இது விஷமல்ல தேன் சுவை பானம் என சிலர் நினைக்க கூடும். தமிழ் இனவாத பிரிவினைவாதங்களுக்கு சாதகமான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடபூமி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் தமிழ் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ன. இந்த நிலையில் இப்படியான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் நாடு மேலும் நெருக்கடிகளை நோக்கி தள்ளப்படும் என்பதை மிகவும் தாழ்மையுடனும் நினைவூட்ட விரும்புகிறோம் என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98991&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

 

பேராயர்கள் நாட்டின் நீண்ட காலமாக பொது சமூகத்துடன் வாழ்ந்து வரும் சமய தலைவர்கள் என்ற வகையில் பாரம்பரிய வாழ்விடபூமி என்ற எண்ணக்கரு விஷமானது என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

 

 

அது பிக்குகள் செய்யும் போது சரியானதா?

 

இந்த விஷத்தை பரப்பித்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன் வடக்கில் மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தினார். 

 

 

 பிரபாகரன் சொல்லி இருந்தார் ஜே.ஆர் உண்மையான புத்தனாக இருந்திருந்தால்
தான் ஆயுதம் தூக்க வேண்டி இருந்திருக்காது என்று. அது மகிந்தவுக்கும், விமலுக்கும் பொருந்தும்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்ச போன்றவர்களின்... இப்படியான‌ பேச்சுக்கள், வரவேற்கத் தக்கவை.
மா புளிப்பது, அப்பத்துக்கு... நல்லது என்று சொல்வார்கள்.
இவர்களின் உணர்வுகளை பார்க்கும்... சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் தமது நிலையை... உணரக் கூடியதாக இருக்கும்.
பௌத்த சிங்கள இனவெறி.... தமிழனில் தொடங்கி, முஸ்லீமை தொட்டு, சிங்கள கிறிஸ்தவரில் வந்து நிற்பதைப் பார்த்தால்....
எமக்கு விரைவில், நல்ல விடிவு.. கிடைக்கும் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து தமிழரான தடியெடுத்த பிரபாகரனும்

கத்தோலிக்க  அறவழியில் பேசும் சிங்களவரான  பேராயரும்

ஒரு விசயத்தையே பேசுகின்றார்கள் என்றால்

மாறவேண்டியது பௌத்த சிங்களவிசம் தான்....... :(  :(  :(

விமல் விரவன்சாவும், ரோகன விஜேய வீரவும் சிங்கள இளைஞர்களுக்கு  இரண்டு முறை நஞ்சு கொடுத்தார்கள். ஒன்றில் , 20,000 -40,000 கணக்கும் மற்றயதில் 80,000 120-000  கணக்கு வரையும் காவு கொண்டார்கள். எனவே பிரபாகனுக்கும் ஆயருக்கும் விமல் இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அப்போது தான் அவர்கள் விமல் அளவுக்கு வெறு வாய் வெட்டிகளாக மாற முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.