Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலை வளாகத்திற்குள் ஆயுதம் தரித்த சீருடையினர்; அச்சத்தில் மாணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

b9130c7108a4803d5f4cbbe82010c96b.jpg

யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வருகைதர மாட்டார்கள் என யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி பல்கலை நிர்வாகத்தினருக்கு உறுதியளித்துள்ள நிலையில் இன்று ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலை வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி இன்று மதியம் 2.30 மணியளவில் ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருகை தந்ததுடன் கைலாசபதி அரங்கத்திற்கு முன்னால் உள்ள நினைவுத்தூபியினையும் சுற்றிப்பார்த்து விட்டு சென்றுள்ளனர். 

சம்பவம் குறித்து உடனடியாக பதிவாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் குறித்த சீருடையிரிடம் வளாகத்திற்குள் ஏன் நுழைந்தீர்கள் என்று கேட்ட போது மேலிடத்து உத்தரவின் பேரிலேயே தாங்கள் வந்ததாக கூறிவிட்டு சென்றனர் என பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும்  கடந்த ஆண்டு நவம்பர் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் மாணவர்களின் விடுதிக்குள்ளும் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் ஆயுதம் தரித்த சீருடையினர் அனுமதியின்றி நுழைந்து தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து யாழ். மாவட்ட இராணுவ தளபதி பதிலளிக்கும்போது, அன்றைய நாட்களில் உள்நுழைய வேண்டிய தேவை ஏற்பட்டதாலேயே இராணுவத்தினர் ஆயுதத்துடன் உள்நுழைந்ததாகவும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள்  இடம்பெறாது என தான் உறுதியளிப்பதாகவும் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் இவ்வாறான செயற்பாடுகளை ஆரம்பத்திலேயே பல்கலைக்கழக நிர்வாகம்  உரியவர்வர்களுடன் பேசி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களது வருகையானது அச்சத்தைத் தோற்றுவிப்பதாகவும் தாங்கள் என்ன நடக்கப்போகின்றதோ என்ற ஒருவித பயத்துடனேயே உள்ளதாகவும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=532592519718183491

இதெல்லாம் மேல்மட்ட மெத்த படித்த சனநாயகத்தில் சகசம் ஐய்யா.

யாழ் பல்கலை வாயில்லா பூச்சி தலைமை வருன்காசை மிச்சம் பிடிச்சு கொழும்பிற்கு அனுப்பி கொமிசன் பார்க்க தான் லாயக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் பல்கலைக்களக மானவர் தலைவராக இருந்த இரண்டரை வருடங்களில் (1976-1978) எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைகளில் ஆயுதப் படையினரை பல்கலைக் களகத்துக்குள் நுழையாமல் தடுப்பதுவும் ஒன்றாக இருந்தது.

நாங்கள் படைகள் பல்கலைக் களகத்துக்குள் நுழைவது மற்றும் மானவர்கலை முகம்களுக்கு அழைப்பது இரண்டையும் எதிர்த்தோம். இன்று தலைமைப் பயிற்சியென பல்கலைக் கலக அனுமதி பெற்றதுமே முகாம்களுக்கு 3 வாரம் அழைக்கிறார்கள். இன்றைய பல்கலைக்கலக மானவர் சங்கம் இதனையும் கவனிக்க வேன்டும். 

 

அன்று இயக்கங்கள் பலமடையாத காலம்.  போராட்டத்தில் மாணவர்கள் முன்னிலைப்பட்டிருந்த அந்த நாட்களில் சிங்கள ஆயுதப்படைகள் யாழ் பல்கலைக் களகத்தை தமக்கு சவாலான எதிர் முகாமாகவே நோக்கினர்.இன்று முள்ளிவாய்க்கலின் பின்னர் இயக்கம் மவுனமானபின் மாணவர்களளை குறிப்பாக பல்கலைக் களகத்தை எதிர் முகாமாகப் பார்க்கும் போக்கு வளர்ந்துள்ளது.

 

இன்று இலங்கை அரசுக்கு  புலம்பெயர்ந்த தமிழ் விடுதலை விரும்பிகள் புதிய எதிர்முகாமாக தெரிகிறார்கள் என்பதை கைதின்போது தெளிவாக உனர்ந்துகொண்டேன். 

 

 பல்கலைக் களக மானவ மாணவிகளை அனுராதபுரம்போன்ற இனக்கொலை/ பலியல் வன்முறையின் மையமாக இருந்த முகாம்களுக்கு 3 வார பயிற்சிக்கு அழைப்பது உண்மையில் யதமிழ் முஸ்லிம் பல்கலைக் களக மாணவர்களை பாதுகாப்புப் படைகளிடம் சரணகதிக்கு நிர்பந்திக்கும்  முயற்சிதான். இதுதொடர்பாக தமிழ் மாணவிகள் பெற்றோர்கள் கலக்கத்துடன் இருப்பதை நான் அவதானித்தேன். இப்பிரச்சினை தொடர்பாக பல்கலைக் களக மாணவர் ஒன்றியமும் தமிழர் கூட்டமைப்பும் புலம்பெயர் அமைப்புகளும் கரிசனை எடுக்க வேண்டும்.

.

பாதுகாப்புப் படைகளை யாழ்பல்கலைக் களகத்துக்கு வெளியில் வைதிருப்பது முன்னுரிமையுள்ள விடயம். இது தொடற்சியான போராட்டம். தொடர்ந்து விழிப்போடு இருந்து எதிர் நடவடிக்கைகலை தளரவிடாது செயல்படுவதன்மூலம் மட்டுமே நிலமையை தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள் வைதிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் பல்கலைக்கக மாவர் தலைவராக இருந்த இரண்டரை வருடங்களில் (1976-1978) எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைகளில் ஆயுதப் படையினரை பல்கலைக் ககத்துக்குள் நுழையாமல் தடுப்பதுவும் ஒன்றாக இருந்தது.

நாங்கள் படைகள் பல்கலைக் ககத்துக்குள் நுழைவது மற்றும் மாவர்கலை மும்களுக்கு அழைப்பது இரண்டையும் எதிர்த்தோம். இன்று தலைமைப் பயிற்சியென பல்கலைக் கக அனுமதி பெற்றதுமே முகாம்களுக்கு 3 வாரம் அழைக்கிறார்கள். இன்றைய பல்கலைக்கக மாவர் சங்கம் இதனையும் கவனிக்க வேன்டும். 

 

அன்று இயக்கங்கள் பலமடையாத காலம்.  போராட்டத்தில் மாணவர்கள் முன்னிலைப்பட்டிருந்த அந்த நாட்களில் சிங்கள ஆயுதப்படைகள் யாழ் பல்கலைக் ககத்தை தமக்கு சவாலான எதிர் முகாமாகவே நோக்கினர்.இன்று முள்ளிவாய்க்லின் பின்னர் இயக்கம் மவுனமானபின் மாணவர்களளை குறிப்பாக பல்கலைக் ககத்தை எதிர் முகாமாகப் பார்க்கும் போக்கு வளர்ந்துள்ளது.

 

இன்று இலங்கை அரசுக்கு  புலம்பெயர்ந்த தமிழ் விடுதலை விரும்பிகள் புதிய எதிர்முகாமாக தெரிகிறார்கள் என்பதை கைதின்போது தெளிவாக உனர்ந்துகொண்டேன். 

 

 பல்கலைக் கக மாவ மாணவிகளை அனுராதபுரம்போன்ற இனக்கொலை/ லியல் வன்முறையின் மையமாக இருந்த முகாம்களுக்கு 3 வார பயிற்சிக்கு அழைப்பது உண்மையில் யதமிழ் முஸ்லிம் பல்கலைக் கக மாணவர்களை பாதுகாப்புப் படைகளிடம் சரகதிக்கு நிர்பந்திக்கும்  முயற்சிதான். இதுதொடர்பாக தமிழ் மாணவிகள் பெற்றோர்கள் கலக்கத்துடன் இருப்பதை நான் அவதானித்தேன். இப்பிரச்சினை தொடர்பாக பல்கலைக் கக மாணவர் ஒன்றியமும் தமிழர் கூட்டமைப்பும் புலம்பெயர் அமைப்புகளும் கரிசனை எடுக்க வேண்டும்.

.

பாதுகாப்புப் படைகளை யாழ்பல்கலைக் ககத்துக்கு வெளியில் வைதிருப்பது முன்னுரிமையுள்ள விடயம். இது தொடற்சியான போராட்டம். தொடர்ந்து விழிப்போடு இருந்து எதிர் நடவடிக்கைகலை தளரவிடாது செயல்படுவதன்மூலம் மட்டுமே நிலமையை தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள் வைதிருக்கலாம்.

 

தொடர்ச்சியான தமிழ்க்கொலை. மொழியைச் சரியாக நேசிக்காமல் இனம்  மீது பற்று வைத்திருக்க முடியாது. (தலைப்புக்குச் சிறிதும் தொடர்பில்லாதது, தனி மனிதத் தாக்குதல் என நிர்வாகம் கருதுமாயின் நீக்கிவிடவும்.)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாழ்வாலி, இது ஒருபோதும் தனிமனித தாக்குதல் இல்லை.

மன்னிக்கவும் யாழ்வாலி, ஈகலப்பையில் நேரமின்மையால் அசுர வேகத்தில் ரைப் பண்ணுகிறேன் பிழைகள் வந்துவிடுகிறது. திரும்ப வாசிக்கவும் நேரமின்மை.ஈகலப்பையைவிட நல்ல யூனிக்கோட் எழுதுரு இருந்தால் அனுப்பி உதவுங்கள்.

அதுவரை யாழுக்கு எழுத வேண்டாம் எனில் நிறுத்திவிடுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாழ்வாலி, இது ஒருபோதும் தனிமனித தாக்குதல் இல்லை.

மன்னிக்கவும் யாழ்வாலி, ஈகலப்பையில் நேரமின்மையால் அசுர வேகத்தில் ரைப் பண்ணுகிறேன் பிழைகள் வந்துவிடுகிறது. திரும்ப வாசிக்கவும் நேரமின்மை.ஈகலப்பையைவிட நல்ல யூனிக்கோட் எழுதுரு இருந்தால் அனுப்பி உதவுங்கள்.

அதுவரை யாழுக்கு எழுத வேண்டாம் எனில் நிறுத்திவிடுகிறேன். 

 

உண்மையில் உங்களுடன் எனக்கு எவ்விதப் பகை உணர்வும் இல்லை. உங்களின் படைப்புக்களை விமர்சனம் செய்வதற்குக் கூட எனக்குத் தகுதியில்லை. ஆனால் கருத்துக் களத்தில் நீங்கள் எழுதும்போது ஏனோதானோவென்று சரிபார்க்காமல் பதிவிடுகிறீர்கள். அதுதான் குறையாகப்படுகிறது. உங்களிடமிருந்து அதிகம் இளையவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். காயப்படுத்தும் நோக்கில் எதையும் எழுதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்,

உலக மட்டதிலேயே அதிகம் எழுதும் சிலருக்கு எழுத்துப்பிழை கவனிக்காமை ஒரு கோளாறாகவே இருக்கிறதை 

Dyslexia என அடையாளப் படுத்தியிருக்கிறார்கள்.எனக்கு அந்த சிக்கல் இருக்கலாம்.  நல்ல யூனிகோட் எழுதுரு இன்மை என் பிரச்சினையை அதிகரிக்கிறது,. வளமையாக பதிப்பகங்களில் இணைய தளங்களில் என் எழுத்துக்களை என் நேசர்கள் யாராவது திருத்துவார்கள். யாழில் எனக்கு யாரும் இல்லைப்போலும்.

Edited by poet

நன்றி யாழ்வாலி, இது ஒருபோதும் தனிமனித தாக்குதல் இல்லை.

மன்னிக்கவும் யாழ்வாலி, ஈகலப்பையில் நேரமின்மையால் அசுர வேகத்தில் ரைப் பண்ணுகிறேன் பிழைகள் வந்துவிடுகிறது. திரும்ப வாசிக்கவும் நேரமின்மை.ஈகலப்பையைவிட நல்ல யூனிக்கோட் எழுதுரு இருந்தால் அனுப்பி உதவுங்கள்.

அதுவரை யாழுக்கு எழுத வேண்டாம் எனில் நிறுத்திவிடுகிறேன்.

அண்ணா, எனக்கும் இதே பிரச்சினை தான். கூகிளில் தட்டி ஒட்டும்போது பல பிரச்சினைகள்.

நீங்கள் பாதுகாப்பாக திரும்பியதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விவசாயி விக். மிகவும் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.