Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன், விக்னேஸ்வரனை இந்தவாரம் சந்திக்கிறார் மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

M.R-R.S.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளில் மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் குறுக்கீடுகள் அதிகரித்துள்ளது, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனரை மாற்றும்படி வடக்கு மாகாணசபை கோரிய போதிலும் அதற்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. 

இந்தச் சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். 

இந்தநிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

இதில் வடக்குமாகாண சபை மற்றும் வடக்குமாகாண ஆளுநர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cartoon-23-12-2013.jpg

  • கருத்துக்கள உறவுகள்

News : சம்பந்தன், விக்னேஸ்வரனை இந்தவாரம் சந்திக்கிறார் மகிந்த

ஹய்யா ஜாலி இலங்கை அரசாங்கத்தின் செலவில வடையும் tea யும் சாப்பிட்டு வரலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை - செல்வம் சர்­வ­தேச அழுத்­தங்­களின் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி கூட்­ட­மைப்­பிற்கு அழைப்பு விடுத்­துள் ளார். அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளினால் வெளிப்­படைத் தன்­மை­யில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார். தமிழ் மக்­களின் பிரச்சி­னை­க­ளைத்­ தீர்த்து வட­மா­காண சபைக்கு அதி­கா­ரங்­களை வழங்­கும்­வரை அர­சாங்­கத்தை நம்பத் தயா­ரில்லை எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்; இது­வரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கருத்­துக்­க­ளையோ வட மாகாண பிரச்­சி­னைகள் தொடர்­பிலோ எவ்­வித அக்­க­றையும் காட்­டாத அர­சாங்கம் இப்­போது தமிழ்த் தேசி­யக கூட்­டமைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுடன் பேசத் தயா­ரா­கி­யுள்­ள­தென்றால் அதற்கு சர்­வ­தேச அழுத்­தங்­களே கார­ண­மாகும். இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு நடை­பெற்ற இப்­போதும் இடம்­பெற்று வரும் அநீ­திகள் தொடர்பில் இன்று சர்­வ­தேச நாடுகள் அறிந்து கொண்­டுள்­ளன. நாம் அர­சாங்­கத்­திடம் தனி நாட்டுக் கோரிக்­கை­யையோ, தனிப்­பட்ட விசேட உரி­மை­க­ளையோ கோர­வில்லை. எமது மக்­க­ளுக்­கான உரி­மை­க­ளையும், வட மாகா­ணத்­திற்­கான சுதந்­தி­ரத்­தை­யுமே கோரி நிற்­கின்றோம். எனினும் இவ்­வ­ளவு காலமும் விளங்கிக் கொள்­ளாத எமக்கு நிவா­ரணம் வழங்­காத அர­சாங்கம் இப்­போது பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்­பதன் நோக்கம் என்ன? சர்­வ­தே­சத்தின் அழுத்­தமே இதற்குக் காரணம். ஜனா­தி­ப­தியின் பேச்­சிலோ, அர­சாங்­கத்தின் செயற்­பாட்­டிலோ எந்­த­வொரு வெளிப்­ப­டை­யான தன்­மை­யு­மில்லை.ஜனா­தி­ப­தியின் பேச்­சினை நம்பி தமிழ் மக்­களே மேலும் காயப்­ப­டுத்த நாம் தயா­ரா­க­வு­மில்லை. மேலும், வட மாகாண சபை­யினை ஆரம்­பித்து நான்கு மாத கால­மா­கின்­றது.எனினும், இன்று வரையில் வட மாகாண சபை தொடர்­பி­லான பிரச்­சி­னை­களை ஜனா­தி­பதி தீர்க்­க­வில்லை.வட மாகாண தமிழ் மக்­களின் வாழ்க்கை இன்றும் இரா­ணுவ அதி­கா­ரத்தின் கீழேயே காணப்­ப­டு­கி்­ன­றது. அனைத்து மக்­க­ளாலும் ஏக­ம­ன­தாகத் தெரிவு செய்­யப்­பட்ட முத­ல­மைச்­சரை விடவும் எவரும் ஆத­ரிக்­காத ஆளு­ந­ருக்கே அதிக அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளது. வட மாகா­ணத்தில் கோவில்கள், பாட­சா­லைகள் மற்றும் வீடுகள் உடைக்­கப்­ப­டு­கின்­றன. தமிழ் ம்ககளின் காணி­களை இரா­ணு­வத்­தினர் அப­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவை எதையும் இன்­று­வ­ரையில் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ கவ­னத்திற் கொள்­ள­வில்லை.வட மாகாண சபை இப்­போது கேள்­விக்­கு­றி­யா­ன­தொரு நிலையில் உள்­ளது. ஜனா­தி­பதி எம்­முடன் பேச்­சு­வார்த்­தைக்கு தயா­ராக முன்னர் வட மாகா­ணத்தின் பிர­தான பிரச்­சி­னை­களைத் தீர்க்க வேண்டும். வெகு விரைவில் ஆளு­ந­ரையும், இரா­ணு­வத்­தையும் வெளி­யேற்றி வடக்கில் சிவில் ஆட்­சி­யினை அமைக்க வேண்டும். வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கி, சுதந்திரமானதொரு வாழ்க்கையினை ஏற்படுத்தி வட மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்கும் வரையில் நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினை நம்பப் போவதில்லை. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையிலும் எவ்வித நம்பிக்கையுமில்லை என்றார். http://www.sankathi24.com/news/36841/64//d,fullart.aspx

நம்பகமாகப் பேச முன்வந்தால் பேசத் தயார் – சிறிலங்கா அதிபருக்கு சம்பந்தன் பதில்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 டிசெம்பர் 2013, 00:06 GMT ] [ கார்வண்ணன் ]
சிறிலங்கா அரசாங்கம் நம்பகமாகச் செயற்படத் தயாராக இருந்தால், அதனுடன் பேச்சுக்களை நடத்த தாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காண முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம், மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாம் எப்போதுமே பேச்சுக்களுக்கு தயாரில்லை என்று கூறவில்லை.

அர்த்தமுள்ள வகையில் சிறிலங்கா அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு.

சிறிலங்கா அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருதொகுதி யோசனைகளை முன்வைத்திருந்தது.

அதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் பதிலளிக்கவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக, பேசுவதற்கு 2012 ஜனவரி 17, 18, 19ம் நாள்களில் இணக்கம் காணப்பட்டது.

ஆனால் குறித்த நாட்களில் சிறிலங்கா அரச பிரதிநிதிகள் பேச்சுக்கு வரவில்லை.

இந்தப் பேச்சுக்கள் முறிவடைந்தமைக்கு சிறிலங்கா அரசாங்கமே முழுப் பொறுப்பு.

தமிழர் பிரச்சினை விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு வித்தியாசமானது.

அவர்கள், ஏனைய பல்வேறு விடயங்களிலும் கரிசனை கொண்டுள்ளனர்.

எனினும் எமது பிரச்சினையில் அர்த்தமுள்ள தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில், அவர்கள் கரிசனை கொண்டுள்ளனர்.

அனைத்துலக சமூகத்தின் பங்கு தொடர்பாக நாம் குழப்பமடையக் கூடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


News : சம்பந்தன், விக்னேஸ்வரனை இந்தவாரம் சந்திக்கிறார் மகிந்த



ஹய்யா ஜாலி இலங்கை அரசாங்கத்தின் செலவில வடையும் tea யும் சாப்பிட்டு வரலாம்
 



எப்ப போறீங்கள் :D

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.