Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் எந்த சவாலை எதிர்கொள்ளவும் தயார்! - சீனா, ரஷ்யா, கியூபா துணைக்கு இருக்கின்றன என்கிறார் மஹிந்த சமரசிங்க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
samarasinghe-251213-150.jpg

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைப் பேரவையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இலங்கைக்கு எப்போதும் உதவி செய்துவரும் சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகள் இம்முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இடம்பிடிக்கின்றமையின் காரணமாக எமக்கு வலுவான நிலைமை மனித உரிமை பேரவையில் காணப்படுகின்றது என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

  

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் தயார் நிலை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இம்முறை மனித உரிமைப் பேரவை அமர்வில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளமையின் காரணமாக அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகிவருகின்றது. அந்த அறிக்கை எவ்வாறு அமையும் என்று எங்களுக்கு தெரியாது.மனித உரிமைப் பேரவையில் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை பார்த்த பின்னர் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே எமது அறிக்கை அமையும்.யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையை பொறுத்தமட்டில் இலங்கை பல்வேறு வகையான முன்னேற்றங்களை வெளிப்படுத்திவருகின்றது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் செயற்பாட்டில் பாரிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளோம்.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னரும் பாரிய முன்னேற்றங்களை வெளிப்படுத்த எதிர்பார்க்கின்றோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அமுல்படுத்திவருகின்றோம். பாதிக்கப்பட்ட வடக்கு பிரதேசங்களில் முன்னேற்றங்களை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் நாங்கள் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளமையின் காரணமாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எவ்வகையான சவாலையும் எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றோம். இலங்கை தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிப்போம்.

குறிப்பாக இம்முறை மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் இடம்பெற்றுள்ளன. விசேடமாக சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் எமக்கு உதவி செய்யும் நாடுகளாக உள்ளன. எனவே அந்த நாடுகளின் பிரசன்னம் எமக்கு வெகுவான வலுவை மனித உரிமைப் பேரவையில் அளித்துள்ளது.எனவே நாங்கள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடருக்கு தயாராகிவருகின்றோம். எவ்வகையான நிலைமையையும் சவாலையும் எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம். காரணம் பாரியளவில் முன்னேற்றங்களை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.

இம்முறை மனிதஉரிமைப் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கையிலிருந்து பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தலைமையில் அமைச்சர்கள் மட்ட தூதுக்குழு கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அத்துடன் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் 25 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பான தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.நவநீதம் பிள்ளை கடந்த வருடம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மதிப்பீடுகளை மேற்கொண்டிருந்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99857&category=TamilNews&language=tamil

மனித உரிமை மீறலுக்கு பெயர் போன மூன்று தேசத்தையும் அழைக்கிறார்கள். நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அடையாரோட அடிக்கடி கொழுவுறதால அவங்களும் நமக்கு எதிராத்தான் நிக்கப் போறாங்கள் போலயிருக்கு

அடுத்தவருட கூட்ட தொடரில் சுழற்சிமுறையில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இடம்பிடிக்கிறது. இவை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை அரசை காப்பாற்ற முயற்சிக்கும். :(:rolleyes:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவருட கூட்ட தொடரில் சுழற்சிமுறையில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இடம்பிடிக்கிறது. இவை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை அரசை காப்பாற்ற முயற்சிக்கும். :(:rolleyes:

மனித உரிமை அவையில் வீட்டோ அதிகாரங்கள் எதுவும் இல்லை.. பாதுகாப்பு அவையில் மட்டுமே உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

கியூபா

எந்த நேரமும்   கைவிட்டுவிடும்

மிகுதி 2 தான்

 

மனித உரிமை அவையில் வீட்டோ அதிகாரங்கள் எதுவும் இல்லை.. பாதுகாப்பு அவையில் மட்டுமே உள்ளது..

 

நன்றி அண்ணா, இரண்டிலும் நான் அடிக்கடி குழம்புவதுண்டு. :)

 

எப்படி 5 இலட்சம் தமிழரை கொன்றுவிட்டு தப்ப திட்டம் தீட்டுகிறார்கள்.

எப்படி 5 இலட்சம் தமிழரை கொன்றுவிட்டு தப்ப திட்டம் தீட்டுகிறார்கள்.

இவர்களின் திட்டம் வரும் மனிதவுரிமை கூட்டத்தொடரில் பலிக்காமல் போகலாம்.

பிறேரினையும் நிறைவேற்றப்படலாம் ஆனால் பாதுகாப்புச்சபையில் சீனாவும் ருசியாவும் வீட்டோ அதிகாரத்தை வைத்து காப்பாற்றும் என்று நினைக்கிரார்களாக்கும்.

 

தமது சனநாயக்கடைமையை செய்யவே முரண்டு பிடிக்கும் நாடு எப்படி ஒரு சிறுபான்மை இனத்துக்கு உரிமை கொடுக்கும்?

இவர்களின் திட்டம் வரும் மனிதவுரிமை கூட்டத்தொடரில் பலிக்காமல் போகலாம்.

பிறேரினையும் நிறைவேற்றப்படலாம் ஆனால் பாதுகாப்புச்சபையில் சீனாவும் ருசியாவும் வீட்டோ அதிகாரத்தை வைத்து காப்பாற்றும் என்று நினைக்கிரார்களாக்கும்.

தமது சனநாயக்கடைமையை செய்யவே முரண்டு பிடிக்கும் நாடு எப்படி ஒரு சிறுபான்மை இனத்துக்கு உரிமை கொடுக்கும்?

சீனா வேறு சிறி லங்கா மனித உரிமை விடயத்தில் கரணம் அடித்து செய்தி வெளியிட்டது. அழுத்தம் கொடுத்து தமிழர் காணி பிடிக்க திட்டமோ என்னவோ.

ஏன் வெளினாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள்(நாடு கடந்த அரசுக்கள், அமைப்புகள்
இரசியா, சீனா, கியூபா போன்ற நாடுகளுடன்
நேரடியாக அந்த நாடுகளுக்கு சென்று, இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் கடைசியில் நடு
நிலைமை வகிக்க செய்ய முடியாதா?

முயற்சி செய்து பார்த்தால் என்ன? முடியாது என்பது
எப்போதும் இல்லை...
இங்கிலாந்த்தில்  பிரதமர் கமரென் மாறியது எப்படி?

அடிக்கு மேல் அடி அடித்தால்.... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.