Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்லையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

வல்வெட்டித்துறை நகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை அந்நகர மக்கள் இன்று வெற்றி பெற செய்துள்ளனர். கடந்த வாரம் வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது தடவையாக சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஐந்து பேரையும் இன்று பொதுமக்கள் சபைக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தினை வெற்றிபெறச் செய்தனர். 400வாக்கு பெற்ற குலநாயே வி.வி.ரிக்கு தவிசாளரா? தமிழரசுக்கட்சியே தரங்கெட்டவர்களை தூக்கி எறி, பதவி மோகத்தால் நல்லவர்களை பழிவாங்காதே போன்ற வாசகங்களை ஆர்ப்பாட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

இந்த நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் கடந்த 17ஆம் திகதி சபையில் தவிசாளர் என்.அனந்தராஜாவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் சபையிலிருந்த 9 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்கள் எதிராகவும், 2பேர் ஆதரவாக வாக்களித்தமையினால் வரவு – செலவுத் திட்டம் 3 வாக்குகளால் தோல்வியில் முடிவடைந்தது.

தொடர்ந்து மீண்டும் இன்று தவிசாளரினால் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் எதிராக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் ஐந்து உறுப்பினர்களையும் சபை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் சபைக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருந்தனர். குலநாயகம் தலைமையிலான நான்கு பேரையும் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் பதவி ஆசைக்காக வல்வெட்டித்துறை நகரத்தின் நலனை கெடுத்து விடக் கூடாது என வலியுறுத்தினர். குலநாயகம் தலைமையிலான குழுவினருக்கு ஆதரவாக மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அங்கு சமூகமளித்திருந்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை அடித்து துரத்தி விட்டு குலநாயகம் மற்றும் உபதவிசாளர் சதீஸ் ஆகியோரை சபைக்குள் விடுமாறு சிவாஜிலிங்கம் பொலிஸாரை கேட்டுக்கொண்ட போதிலும் பொதுமக்களை விரட்ட வேண்டுமாக இருந்தால் கலகம் அடக்கும் பொலிஸாரை வரவழைக்க வேண்டும் என்றும் அதற்கு மேலிடத்து உத்தரவை பெறுமாறும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை முற்பகல் 10மணியளவில் வரவு செலவு திட்டத்தை நகரசபை தலைவர் அனந்தராஜ் சபையில் சமர்ப்பித்தார். இதன்போது சபையிலிருந்து 4 உறுப்பினர்களும் (தவிசாளர் உட்பட) ஆதரவாக வாக்களிக்க வரவு – செலவுத் திட்டம் நிறைவேறியது. ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒருவர் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. வல்வெட்டித்துறையிலுள்ள 11 அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாகவும் ஆர்ப்பாட்டத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் நகரசபை தலைவர் ந.ஆனந்தராஜ் தெரிவித்தார்.

எனினும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ந.ஆனந்தராஜின் ஆதரவாளர்களே தம்மை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் சதீஸ் தெரிவித்தார். தமக்கான உரிமை மறுக்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸில் தான் முறைப்பாடு செய்ததாகவும், பொலிஸார் அர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டவில்லலை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையால் தாம் வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என அவர் கூறினார்.

VVT-600x400.jpg

VVT-1-600x400.jpg

VVT-2-600x400.jpg

VVT-3-600x449.jpg

VVT-4-600x400.jpg

VVT-5-600x449.jpg

VVT-7-600x400.jpg

VVT-9-600x400.jpg

VVT-10-600x400.jpg

VVT-12-600x400.jpg

VVT-13-600x400.jpg

VVT-14-600x400.jpg

VVT-15-600x400.jpg

VVT-16-600x400.jpg

VVT-17-600x400.jpg

VVT-61-600x400.jpg

VVT-111-600x400.jpg

 

http://www.jvpnews.com/srilanka/56886.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவாக வாக்களித்த அந்த ஒர் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி உறுப்பினருக்கு நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒருவர் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. வல்வெட்டித்துறையிலுள்

எனினும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ந.ஆனந்தராஜின் ஆதரவாளர்களே தம்மை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் சதீஸ் தெரிவித்தார். தமக்கான உரிமை மறுக்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸில் தான் முறைப்பாடு செய்ததாகவும், பொலிஸார் அர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டவில்லலை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையால் தாம் வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என அவர் கூறினார்.

 

 

 

 

 

VVT-5-600x449.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஈபி வோட்பன்னி அனந்தர் வெல்லுமளவிற்க்கு நிலைமை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்தால் யாருமற்ற வல்லை வெளியில் ஆர்ப்பாட்டம் என்று நினைத்தேன்!

வல்வையில் என்ன எங்கும் தமிழர்கள் பதவிக்காக ஊழலிலும் மோசடிகளிலும் ஈடுபடுவார்கள். இதுதான் தமிழர்களுக்குத் தலைமை தாங்க விரும்பும் அரசியல்வாதிகளுக்குத் தெரிந்தது.

மக்கள் உசாராக இல்லாவிட்டால் ஒரு முன்னேற்றமும் அவர்கள் வாழ்வில் வர இந்த அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.