Jump to content

நேசக்கரம் கடந்து வந்த 5ஆண்டு பயணம் மீள்பார்வையும் 5ஆண்டு கணக்கறிக்கையும்.

Recommended Posts

பதியப்பட்டது

நேசக்கரம் கடந்து வந்த 5ஆண்டு பயணம் மீள்பார்வையும் 5ஆண்டு கணக்கறிக்கையும்.

2009 யுத்த முடிவின் பின்னர் பதிவு செய்யப்பட்ட உதவியமைப்பாக நேசக்கரம் இயங்கி வருகிறது. எமது அமைப்பானது கடந்த 5வருடங்களில் புலம்பெயர் உறவுகளின் உதவிகளைப் பெற்றும் நேரடியான குடும்ப இணைப்பு , மாணவர்கள் இணைப்பு மூலம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தாயகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

போரின் பின்னரான மக்களின் தேவைகள் , உளவள ஆற்றுப்படுத்தல்கள் , மீள் கட்டுமானங்கள் உட்பட தேவைகள் அதிகமாகவே இருக்கிறது. யானைப்பசிக்கு எங்கள் உதவிகளானது சோளப்பொரியாகவே இருந்திருக்கிறது. எனினும் எங்களால் முடிந்தவரை உதவிகளைக் கொண்டு சேர்த்திருக்கிறோம்.

தொடர்ந்து பணத்தை மட்டும் வழங்கிக் கொண்டிருத்தல் என்பது சமூக மாற்றத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ நோக்கிச் செல்லவோ வழியையோ தராது சோம்பேறித்தனத்தையும் தங்கி வாழும் நிலமையையுமே உருவாக்கும். வீழ்ந்தவர்கள் எழுந்து நிற்க எங்களது உதவி 1சதவீதம் ஆகவும் உரிய சமூகம் 99வீத பங்காளிகளாகவும் ஊக்கம் உள்ளவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களால் எழ முடியும்.

மற்றும் வெளிநாடுகளில் இருந்து செல்கிற உதவிகள் என்பது மரங்களில் இருந்து பணம் பிடுங்கி எடுக்கப்படுவது போன்றதொரு எண்ணப்பாட்டையும் எம்மவர்களில் சிலருக்கு ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் ஒரு இடத்தில் மட்டுமன்றி பல வழிகளில் புலம்பெயர் உறவுகளிடமிருந்து உதவிகளைப் பெற்ற சம்பவங்களும் தாராளமாக நடந்துள்ளது நடந்தும் வருகிறது. உதவி கிடைக்கப்பெறாதவர்கள் இன்னும் அப்படியே இருக்க வெல்லத் தெரிந்தவர்கள் மட்டும் உதவிகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் நிலமையும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

தொடர்ந்து பணமரங்களாக இல்லாமல் அவரவர் தன்னை உணர்ந்து நிமிரக்கூடிய வழிகாட்டிகளாகவும் எமது செயற்பாடுகளும் திட்டங்களும் அமைய வேண்டும் எனும் நோக்கில் 2013ம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து எமது அமைப்பானது உப அமைப்புக்களை உருவாக்கி அதன் ஊடாக திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வியில் பின் தங்கிய கற்க அடிப்படை வசதிகள் அற்ற மாணவர்களை உள்வாங்கிய செயற்பாடுகளை அதிகம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

இதன் தோற்றமாக எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் இது முற்றுமுழுதாக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்கி அவர்களது நெறிப்படுத்தலில் கல்விசார் விடயங்களை கவனிக்கும் பொறுப்பினை மாணவச் சமூகத்திடம் வழங்கியுள்ளோம். கடந்த வருடம் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 10பல்கலைக்கழக மாணவர்கள் (கிழக்கைச் சேர்ந்த மாணவர்கள்) இவர்கள் மருத்துவம், எந்திரவியல் பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்.

குடும்ப வறுமை இம்மாணவர்களை சிறப்புச்சித்தி பெற்ற மருத்துவம் , எந்திரவியல் துறைகளில் நிலைக்க முடியாதிருந்தது. இவர்களை இனங்கண்டு நமது அமைப்பினுள் உள்வாங்கினோம். கடந்த வருடம் க.பொ.த.சாதாரணதரம் , க.போ.த. உயர்தர மாணவர்களுக்கான கற்பித்தலை மேற்படி பல்கலைக்கழக மாணவர்களே செய்திருந்தார்கள். தங்களுக்கு கிடைக்கும் உதவியில் தாங்கள் பயனடைகிற நேரம் தனது சமூகத்துக்கான பணியையும் செய்து இவ்வருடம் 20மாணவர்களை இம்மாணவர்கள் தங்களது துறையில் சிறப்புச் சித்திபெற கற்பித்து உதவியுள்ளார்கள்.

இதேபோல க.போ.த.சாதாரணதர மாணவர்களுக்கும் கிழக்கில் 8நிலையங்களை உருவாக்கி ஒன்றரை மாதம் தொடர் பயிற்சி வகுப்புகளை நடாத்தி மாணவர்களை பரீட்சையில் தேற்ற உதவியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் எமது எண்ணங்களை தங்கள் செயல்மூலம் நிறைவேற்றிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கொள்கிறோம்.

கடந்த வருடம் ஆவணி முதலாம் திகதி தேன்சிட்டு உளவள நிறுவனம் ஒன்றினையும் உருவாக்கியிருந்தோம். போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களின் உளவள மேம்பாட்டினை மேற்கொள்ளும் முயற்சியில் கணிசமான அளவு வெற்றியடைந்துள்ளோம். போரால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் இவ் உளவள அமைப்பின் பணிகள் விரிவடையத் தொடங்கியுள்ளது. இதன் ஆரம்பம் கிழக்கில் மட்டுமே கடந்தவருடம் அமைந்திருந்தது.

இதேபோல அரவணைப்பு என்றொரு அமைப்பினையும் உருவாக்கி குசேலன்மலை , புல்லுமலை பகுதிகளில் அதிகளவான வேலைத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். குசேலன்மலைக் கிராமத்தின் 27குடும்பங்களின் 41பிள்ளைகளுக்கான மாலைநேர , வார இறுதிநாட்களில் வகுப்புகள் உளவள விருத்திக்கான செயற்பாடுகளையும் கடந்த 6மாதங்களாக செய்து வருகிறோம்.

தொடர்ந்து மாதக்கொடுப்பனவில் தங்கியிருப்போரை சுயபொருளாதாரத்தில் முன்னேற்றும் வழிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதோடு தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் வியாபார நிறுவனம் ஒன்றினையும் உருவாக்கியுள்ளோம். எமது நிறுவனத்தின் முதலீட்டாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் இணைந்து முன்னேறத் துடிக்கும் ஊக்கமுள்ளவர்களை உயர்த்தும் நோக்கிலான திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் ஒன்றினை உருவாக்கும் நோக்கில் 2ஏக்கர் நிலமொன்று கருணையாளர் ஒருவரின் உதவியால் வாங்கியுள்ளோம். இந்த நிலத்தில் ஆயுர்வேத மருத்துவ நிலமொன்றை உருவாக்கவுள்ளோம். அருகிவரும் தமிழ் சித்த வைத்தியத்தை ஊக்குவித்து இளைய தலைமுறையை ஆயுர்வேத வைத்தியத்தையும் கற்க வைக்கும் நோக்கில் ஆரம்பித்துள்ளோம். தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் மூலம் மருத்துவத்தை வளர்ப்பதோடு நிரந்தரமான மருத்துவ இல்லத்தையும் உருவாக்கும் நோக்கில் திட்டங்களை வகுத்துள்ளோம்.

நாங்கள் திட்டமிட்டுள்ள எல்லையை அடைய இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். எனினும் பொருளாதார பலம் இல்லாமையால் பல கிராமங்களின் வாழ்வாதார மேம்பாடு தொழில் முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் இயங்காமலேயே இருக்கிறது.

இவ்வருடம் பெண்களுக்கான பிரத்தியேக அமைப்பாக பெண்கள் அமைப்பொன்றினையும் உருவாக்கியுள்ளோம். போரால் பாதிக்கப்பட்ட யுத்த விதவைகள் , ஊனமுற்ற பெண்களை உள்ளடக்கிய அமைப்பாக உருவாக்கம் பெற்றுள்ளது. இவ்வருடத் திட்டத்தில் குறைந்தது 500போர் விதவைகளுக்கான உதவித்திட்டத்தை மேற்கொள்ள வேண்டிய திட்டத்தினை மேற்கொள்ள உதவிகளை வேண்டுகிறோம்.

இதுவரை காலமும் எம்முடன் இணைந்து பணியாற்றிய தாயகத்து உறவுகள் யாவரும் எவ்வித கொடுப்பனவுகளும் இல்லாது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் சேவை அடிப்படையில் தங்கள் ஆதரவைத் தருகிற பணியாளர்களுக்கு போக்குவரத்துக்கான கொடுப்பனவேனும் வழங்க வேண்டும். புலம்பெயர்ந்த உறவகளாகிய உங்களது ஆதரவே தொடர்ந்து முன்னேற எங்களுக்கான வழிகாட்டியாகவும் உதவிகளாகவும் அமைகிறது. உங்கள் ஆதரவினை வழங்கி எமது சேவைகளுக்கான பலத்தைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்.

ஒரு சிலரால் மட்டுமே வழிநடத்தப்பட்ட செயற்படுத்தப்பட்ட அமைப்பானது இன்று 200 வரையிலான பணியாளர்களை உருவாக்கியுள்ளது. நீங்கள் தருகிற உதவிகளை சரியான முறையில் இனங்கண்டு ஒருங்கமைத்து உதவிகளை வழங்கக்கூடிய ஆதரவையும் தரவுகளையும் மேற்படி எமது பணியாளர்கள் செய்து உதவுவார்கள்.

உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு சரியான வழியிலும் தேவைகளுக்கு ஏற்பவும் வழங்கப்பட வேண்டிய ஆய்வுகளையும் எமது ஆய்வுக்குழுவானது சரியான வகையில் செய்து தருவார்கள்.

அத்தோடு இவ்வருடம் முதல் நாங்கள் வழங்கும் உதவிகளை பெறுகிறவர்களின் அடையாள அட்டை இலக்கம் முகவரி சுய விபரங்கள் அடங்கிய விபரக்கோர்வையையும் தயார் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம். உதவிகளை செய்யும் இதர நலன்விரும்பிகள் உதவி நிறுவனங்கள் எம்மிடமிருந்து உதவி பெற்றவர்களை அறிந்து கொள்ளக் கூடிய ஒன்லைன் சேவையினையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

எமக்குள்ளான தகவல் பரிமாற்றம் புரிதல் மூலமே எதிர்காலத்தை வழிப்படுத்தவும் செயற்படவும் கூடிய சூழலை உருவாக்க முடியும். எமது இம்முயற்சிக்கு புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தாயகத்துக்கு உதவும் அமைப்புகள் உதவி வழங்கும் தனிநபர்கள் ஆதரவினை வழங்குமாறு வேண்டுகிறோம்.

யுத்தம் முடிந்து 5வருடங்கள் கடக்கப்போகிறது. ஆயினும் அனைத்து நாடுகளில் இருந்தும் பலவகையில் உதவிகள் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரையில் நாம் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எமது மக்களின் வாழ்வில் ஏற்படாதுள்ளது. இதற்கான காரணம் ஒருங்கிணைப்பு தொடர்பாடல் இல்லாமையே.

நேசக்கரம் அமைப்பானது அனைத்து தாயக நலன்விரும்பிகளோடும் இணைந்து செயற்படவும் மக்களுக்கான சேவைகளை வழங்கவும் தயாராக இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். பலம் சேர்ந்தால் அனைத்துச் சவால்களையும் எம்மால் தாண்ட முடியும். அனைவரும் ஒன்றாகி தமிழர் தாயக மக்களின் மறுவாழ்வு மாற்றத்திற்கான உருவாக்கமாக எழுவோம்.

நேசக்கரம் ஆரம்பித்த போது ஒரு சமூகத்தின் பெரும்பணியொன்று எங்கள் தோழில் இருக்கிறது என்ற எண்ணம் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் கால ஓட்டம் எங்கள் மக்களின் முன்னேற்றமே எங்கள் ஒவ்வொருவரின் தோழிலும் கனக்கிறது என்பதனை நாங்கள் கடந்து வந்த பாதையில் புரிந்துள்ளோம்.
இந்தப்பயணத்தில் துரோகம் வஞ்சம் குழிபறிப்பு யாவையும் கடந்தே நேசக்கரம் 5ஆண்டுகளில் நடக்கிறது.

பெயரை மட்டும் தந்துவிட்டு நேசக்கரத்தை தாங்கிய வேர்போல நடித்து நேசக்கரத்தின் வளர்ச்சியை சுய இலாபங்களுக்காக ஏலம் போட்டவரும் , நேசக்கரம் பற்றிய தங்களது காழ்ப்பினை பல வழிகளிலும் தீர்த்துக் கொள்ள துரோக அமைப்பாக பிரகடனம் செய்து தனது வஞ்ச முகத்தைக் காட்டிய பெருமைக்குரியவரையும் இந்நேரம் நன்றியுடன் நினைக்கிறோம். நாங்கள் எழுவதற்கான சவாலோடு வெல்வதற்கான ஓர்மத்தைத் தந்தது உங்கள் குழிபறித்தலே.

உண்மைகள் ஒருபோதும் உறங்காது. பொய் பெருமெடுப்பில் உண்மையை உதைத்துக் கொண்டு வரும் ஆனால் இறுதியில் உண்மையே வெல்லும். நேசக்கரத்திற்கு இடைஞ்சல் தந்து இதோ அழிப்பேன் என்று சவால் செய்த கண்ணின் முன்னேயே நாங்கள் நிமிர்கிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினும் தர்மத்தின் வழியே வெல்லும் என்பதனை அனுபவ ரீதியாக அனுபவித்தவர்கள் நாங்கள்.

நேசக்கரத்தின் உருவாக்கம் ஒரு மாவீரரின் எண்ணம். அந்த வீரனின் எண்ணத்திற்கான செயல் வடிவத்தை காலத்தின் தேவையை இக்காலம் உணர்த்திச் செல்கிறது. இப்பயணத்தில் இரண்டு தம்பிகள் முக்கியமாக தங்கள் ஆதரவை 2009முதல் இன்றுவரை என்னோடு சேர்ந்து சுமக்கிறார்கள். ஜெனன், கண்ணாளன் இதுவரை முகம் முகவரி காட்டாத இவ்விருவரின் ஆதரவுமே இன்றுவரையிலான பலம்.

மேலும் சோர்கிற போதெல்லாம் பலமாக துணையாக இருந்து வருகிற ஜஸ்ரின், சிறி (கனடா) பாலா , சீனிவாசன் (பிரான்ஸ்) மோகன் , ஊர்வசி (சுவிஸ்) ஜெயபாலன் , பூவேந்தன், கிருபா (டென்மார்க்) பிறேம் (நோர்வே) பேரின்பம் ஐயா , அனுராஜ் , கண்ணன் , கலா , மைதிலி , தாசீசியஸ் ஐயா (பிரித்தானியா) மற்றும் பகலவன் ஆகியோருக்கு இதயம் நிறைந்த நன்றிகள். நல்ல நட்பே சிறந்த மருத்துவம் என்ற உண்மையை உங்கள் அனைவரின் நட்பும் தந்து கொண்டிருக்கிறது.

சிறப்பு நன்றிக்குரிய யாழ் இணையத்தின் பங்கானது மிகவும் அளப்பரியது. நேசக்கரத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரை முகப்பில் யாழ் கள அமைப்பாளர்கள் நேசக்கரத்தின் இலச்சினையை இட்டு நிரந்தரமான விளம்பர ஆதரவைத் தருகிறார்கள். அத்தோடு நேசக்கரம் செய்திகளை பகிரக்கூடிய வகையில் துளித்துளியாய் பகுதியில் செய்திகளை பகிரும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளனர். நேசக்கரத்தின் வளர்ச்சியில் யாழ் இணையமும் அதன் அமைப்பாளர்களும் தரும் ஆதரவிற்கு மிக்க நன்றிகள்.

எமது தொடரும் பயணத்தில் தங்கள் உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா , அவுஸ்ரேலியா , தமிழ்நாடு , அரேபிய மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் அனைத்து உதவும் கருணையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சு நிறைந்த நன்றிகள்.

அடுத்த 5வருடத்தில் எங்களது பணிகள் தாயகத்தில் புதிய மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்தும் வகையிலான எங்களது திட்டங்களை முன்னேற்ற நீங்கள் தருகிற ஆதரவுகள் மூலம் நிறைவேற்றுவோம் என்பதனையும் இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம். உங்கள் ஆதரவு மட்டுமே எங்களது வெற்றியும் எங்கள் மக்களின் உயர்ச்சியும் ஆகும்.

இதுவரையில் எமக்கு யூரோவில் பங்களிப்பாக 58.195,72€வும் இலங்கை ரூபாவில் பங்களிப்பைத் தந்தோர்களின் உதவி 10.149.789,17RSவும் வழங்கியுள்ளார்கள்.

58பக்கங்கத்தில் 5ஆண்டு கணக்கறிக்கையையும் அழகாகத் தொகுத்துத் தந்த தம்பி கண்ணாளனுக்கு சிறப்பான நன்றிகள். தனது சுமைகளின் மத்தியிலும் தான்நேசித்தவர்களின் வாழ்வுக்காக தனது உழைப்பையும் வழங்கி நேசக்கரத்தோடு துணைவரும் கண்ணாளனை என்றும் மறவோம்.

ஒற்றைச்செடியாய் துளிர்த்த நேசக்கரத்தினை கற்றை உறுதியாய் மாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

கடந்த 5வருடத்தில் நேசக்கரத்தின் மூலம் கிடைத்த உதவிகளின் மொத்த கணக்கறிக்கையை இத்தோடு இணைக்கிறோம்.

கணக்கறிக்கை PDFவடிவில் இருக்கிறது. கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கைத் தொகுப்பினை பாருங்கள்.

Account_2009_2013_Updated_Tamil (2)

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5%E0%AE%86%E0%AE%A3/

Posted

நேசக்கரத்துக்கும் ,அதனை இயக்குகின்ற சாந்திக்கும் பாராட்டுக்கள் .நான் யாழ் களத்தில் இணைந்ததே நேசக்கரத்திக்கு என்னாலான பங்களிப்பையும் ,ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராட்டுக்கள் சாந்தி...!

Posted

நான் ஏற்கனவே பல திட்டங்கள், சிறையில் வாடும் உறவுகளுக்கு உதவி, ஊர் உறவுகளுக்கு உதவி என்று வருடாந்த கணக்கு போட்டு என்னால் முடிந்தளவு உதவுகிறேன்.

அதனால் வேறு அமைப்புகளுக்கு காசு உதவி செய்வது குறைவு.

ஆனால் நேசகரத்தின் திட்டங்கள், அதை இயக்குவோரின் ஒருங்கமைப்பு நான் உதவும் திட்டங்களுக்குள் ஒன்றாக சேர்க்க வைத்தது.

எம் இனத்தின் பிரச்சினையை தம் பிரச்சினையாக தாங்கி உதவும் உறவுகளுக்கு நன்றி.

  • 2 weeks later...

கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி உங்களது பங்களிப்பும் உதவியும் நிறையவே கிடைக்கிறது. மீண்டும் நன்றிகள்.

பாராட்டுக்கள் சாந்தி...!

 நன்றிகள் சுவியண்ணா.

நான் ஏற்கனவே பல திட்டங்கள், சிறையில் வாடும் உறவுகளுக்கு உதவி, ஊர் உறவுகளுக்கு உதவி என்று வருடாந்த கணக்கு போட்டு என்னால் முடிந்தளவு உதவுகிறேன்.

அதனால் வேறு அமைப்புகளுக்கு காசு உதவி செய்வது குறைவு.

ஆனால் நேசகரத்தின் திட்டங்கள், அதை இயக்குவோரின் ஒருங்கமைப்பு நான் உதவும் திட்டங்களுக்குள் ஒன்றாக சேர்க்க வைத்தது.

எம் இனத்தின் பிரச்சினையை தம் பிரச்சினையாக தாங்கி உதவும் உறவுகளுக்கு நன்றி.

உங்கள் நம்பிக்கைக்கும் உதவிகளுக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேசக்கரத்துக்கு பாராட்டுகள் .

Posted

நன்றிகள் கறுப்பி.

  • 3 weeks later...
Posted

நன்றியும் பாராட்டுகளும் அக்கா!

Posted

நன்றியும் பாராட்டுகளும் அக்கா!

வணக்கம் கொக்குவிலான் உங்கள் பங்களிப்புமே எங்கள் பணிகளில் ஆதரவாய் அமைந்தது. உங்கள் உதவிகளுக்கும் நன்றிகள்.

  • 2 weeks later...
Posted

நேசக்கரம் கடந்து வந்த 5ஆண்டு பயணம் மீள்பார்வையும் 5ஆண்டு கணக்கறிக்கையும்.

2009 யுத்த முடிவின் பின்னர் பதிவு செய்யப்பட்ட உதவியமைப்பாக நேசக்கரம் இயங்கி வருகிறது. எமது அமைப்பானது கடந்த 5வருடங்களில் புலம்பெயர் உறவுகளின் உதவிகளைப் பெற்றும் நேரடியான குடும்ப இணைப்பு , மாணவர்கள் இணைப்பு மூலம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தாயகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

போரின் பின்னரான மக்களின் தேவைகள் , உளவள ஆற்றுப்படுத்தல்கள் , மீள் கட்டுமானங்கள் உட்பட தேவைகள் அதிகமாகவே இருக்கிறது. யானைப்பசிக்கு எங்கள் உதவிகளானது சோளப்பொரியாகவே இருந்திருக்கிறது. எனினும் எங்களால் முடிந்தவரை உதவிகளைக் கொண்டு சேர்த்திருக்கிறோம்.

தொடர்ந்து பணத்தை மட்டும் வழங்கிக் கொண்டிருத்தல் என்பது சமூக மாற்றத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ நோக்கிச் செல்லவோ வழியையோ தராது சோம்பேறித்தனத்தையும் தங்கி வாழும் நிலமையையுமே உருவாக்கும். வீழ்ந்தவர்கள் எழுந்து நிற்க எங்களது உதவி 1சதவீதம் ஆகவும் உரிய சமூகம் 99வீத பங்காளிகளாகவும் ஊக்கம் உள்ளவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களால் எழ முடியும்.

மற்றும் வெளிநாடுகளில் இருந்து செல்கிற உதவிகள் என்பது மரங்களில் இருந்து பணம் பிடுங்கி எடுக்கப்படுவது போன்றதொரு எண்ணப்பாட்டையும் எம்மவர்களில் சிலருக்கு ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் ஒரு இடத்தில் மட்டுமன்றி பல வழிகளில் புலம்பெயர் உறவுகளிடமிருந்து உதவிகளைப் பெற்ற சம்பவங்களும் தாராளமாக நடந்துள்ளது நடந்தும் வருகிறது. உதவி கிடைக்கப்பெறாதவர்கள் இன்னும் அப்படியே இருக்க வெல்லத் தெரிந்தவர்கள் மட்டும் உதவிகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் நிலமையும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

தொடர்ந்து பணமரங்களாக இல்லாமல் அவரவர் தன்னை உணர்ந்து நிமிரக்கூடிய வழிகாட்டிகளாகவும் எமது செயற்பாடுகளும் திட்டங்களும் அமைய வேண்டும் எனும் நோக்கில் 2013ம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து எமது அமைப்பானது உப அமைப்புக்களை உருவாக்கி அதன் ஊடாக திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வியில் பின் தங்கிய கற்க அடிப்படை வசதிகள் அற்ற மாணவர்களை உள்வாங்கிய செயற்பாடுகளை அதிகம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

இதன் தோற்றமாக எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் இது முற்றுமுழுதாக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்கி அவர்களது நெறிப்படுத்தலில் கல்விசார் விடயங்களை கவனிக்கும் பொறுப்பினை மாணவச் சமூகத்திடம் வழங்கியுள்ளோம். கடந்த வருடம் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 10பல்கலைக்கழக மாணவர்கள் (கிழக்கைச் சேர்ந்த மாணவர்கள்) இவர்கள் மருத்துவம், எந்திரவியல் பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்.

குடும்ப வறுமை இம்மாணவர்களை சிறப்புச்சித்தி பெற்ற மருத்துவம் , எந்திரவியல் துறைகளில் நிலைக்க முடியாதிருந்தது. இவர்களை இனங்கண்டு நமது அமைப்பினுள் உள்வாங்கினோம். கடந்த வருடம் க.பொ.த.சாதாரணதரம் , க.போ.த. உயர்தர மாணவர்களுக்கான கற்பித்தலை மேற்படி பல்கலைக்கழக மாணவர்களே செய்திருந்தார்கள். தங்களுக்கு கிடைக்கும் உதவியில் தாங்கள் பயனடைகிற நேரம் தனது சமூகத்துக்கான பணியையும் செய்து இவ்வருடம் 20மாணவர்களை இம்மாணவர்கள் தங்களது துறையில் சிறப்புச் சித்திபெற கற்பித்து உதவியுள்ளார்கள்.

இதேபோல க.போ.த.சாதாரணதர மாணவர்களுக்கும் கிழக்கில் 8நிலையங்களை உருவாக்கி ஒன்றரை மாதம் தொடர் பயிற்சி வகுப்புகளை நடாத்தி மாணவர்களை பரீட்சையில் தேற்ற உதவியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் எமது எண்ணங்களை தங்கள் செயல்மூலம் நிறைவேற்றிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கொள்கிறோம்.

கடந்த வருடம் ஆவணி முதலாம் திகதி தேன்சிட்டு உளவள நிறுவனம் ஒன்றினையும் உருவாக்கியிருந்தோம். போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களின் உளவள மேம்பாட்டினை மேற்கொள்ளும் முயற்சியில் கணிசமான அளவு வெற்றியடைந்துள்ளோம். போரால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் இவ் உளவள அமைப்பின் பணிகள் விரிவடையத் தொடங்கியுள்ளது. இதன் ஆரம்பம் கிழக்கில் மட்டுமே கடந்தவருடம் அமைந்திருந்தது.

இதேபோல அரவணைப்பு என்றொரு அமைப்பினையும் உருவாக்கி குசேலன்மலை , புல்லுமலை பகுதிகளில் அதிகளவான வேலைத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். குசேலன்மலைக் கிராமத்தின் 27குடும்பங்களின் 41பிள்ளைகளுக்கான மாலைநேர , வார இறுதிநாட்களில் வகுப்புகள் உளவள விருத்திக்கான செயற்பாடுகளையும் கடந்த 6மாதங்களாக செய்து வருகிறோம்.

தொடர்ந்து மாதக்கொடுப்பனவில் தங்கியிருப்போரை சுயபொருளாதாரத்தில் முன்னேற்றும் வழிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதோடு தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் வியாபார நிறுவனம் ஒன்றினையும் உருவாக்கியுள்ளோம். எமது நிறுவனத்தின் முதலீட்டாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் இணைந்து முன்னேறத் துடிக்கும் ஊக்கமுள்ளவர்களை உயர்த்தும் நோக்கிலான திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் ஒன்றினை உருவாக்கும் நோக்கில் 2ஏக்கர் நிலமொன்று கருணையாளர் ஒருவரின் உதவியால் வாங்கியுள்ளோம். இந்த நிலத்தில் ஆயுர்வேத மருத்துவ நிலமொன்றை உருவாக்கவுள்ளோம். அருகிவரும் தமிழ் சித்த வைத்தியத்தை ஊக்குவித்து இளைய தலைமுறையை ஆயுர்வேத வைத்தியத்தையும் கற்க வைக்கும் நோக்கில் ஆரம்பித்துள்ளோம். தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் மூலம் மருத்துவத்தை வளர்ப்பதோடு நிரந்தரமான மருத்துவ இல்லத்தையும் உருவாக்கும் நோக்கில் திட்டங்களை வகுத்துள்ளோம்.

நாங்கள் திட்டமிட்டுள்ள எல்லையை அடைய இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். எனினும் பொருளாதார பலம் இல்லாமையால் பல கிராமங்களின் வாழ்வாதார மேம்பாடு தொழில் முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் இயங்காமலேயே இருக்கிறது.

இவ்வருடம் பெண்களுக்கான பிரத்தியேக அமைப்பாக பெண்கள் அமைப்பொன்றினையும் உருவாக்கியுள்ளோம். போரால் பாதிக்கப்பட்ட யுத்த விதவைகள் , ஊனமுற்ற பெண்களை உள்ளடக்கிய அமைப்பாக உருவாக்கம் பெற்றுள்ளது. இவ்வருடத் திட்டத்தில் குறைந்தது 500போர் விதவைகளுக்கான உதவித்திட்டத்தை மேற்கொள்ள வேண்டிய திட்டத்தினை மேற்கொள்ள உதவிகளை வேண்டுகிறோம்.

இதுவரை காலமும் எம்முடன் இணைந்து பணியாற்றிய தாயகத்து உறவுகள் யாவரும் எவ்வித கொடுப்பனவுகளும் இல்லாது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் சேவை அடிப்படையில் தங்கள் ஆதரவைத் தருகிற பணியாளர்களுக்கு போக்குவரத்துக்கான கொடுப்பனவேனும் வழங்க வேண்டும். புலம்பெயர்ந்த உறவகளாகிய உங்களது ஆதரவே தொடர்ந்து முன்னேற எங்களுக்கான வழிகாட்டியாகவும் உதவிகளாகவும் அமைகிறது. உங்கள் ஆதரவினை வழங்கி எமது சேவைகளுக்கான பலத்தைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்.

ஒரு சிலரால் மட்டுமே வழிநடத்தப்பட்ட செயற்படுத்தப்பட்ட அமைப்பானது இன்று 200 வரையிலான பணியாளர்களை உருவாக்கியுள்ளது. நீங்கள் தருகிற உதவிகளை சரியான முறையில் இனங்கண்டு ஒருங்கமைத்து உதவிகளை வழங்கக்கூடிய ஆதரவையும் தரவுகளையும் மேற்படி எமது பணியாளர்கள் செய்து உதவுவார்கள்.

உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு சரியான வழியிலும் தேவைகளுக்கு ஏற்பவும் வழங்கப்பட வேண்டிய ஆய்வுகளையும் எமது ஆய்வுக்குழுவானது சரியான வகையில் செய்து தருவார்கள்.

அத்தோடு இவ்வருடம் முதல் நாங்கள் வழங்கும் உதவிகளை பெறுகிறவர்களின் அடையாள அட்டை இலக்கம் முகவரி சுய விபரங்கள் அடங்கிய விபரக்கோர்வையையும் தயார் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம். உதவிகளை செய்யும் இதர நலன்விரும்பிகள் உதவி நிறுவனங்கள் எம்மிடமிருந்து உதவி பெற்றவர்களை அறிந்து கொள்ளக் கூடிய ஒன்லைன் சேவையினையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

எமக்குள்ளான தகவல் பரிமாற்றம் புரிதல் மூலமே எதிர்காலத்தை வழிப்படுத்தவும் செயற்படவும் கூடிய சூழலை உருவாக்க முடியும். எமது இம்முயற்சிக்கு புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தாயகத்துக்கு உதவும் அமைப்புகள் உதவி வழங்கும் தனிநபர்கள் ஆதரவினை வழங்குமாறு வேண்டுகிறோம்.

யுத்தம் முடிந்து 5வருடங்கள் கடக்கப்போகிறது. ஆயினும் அனைத்து நாடுகளில் இருந்தும் பலவகையில் உதவிகள் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரையில் நாம் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எமது மக்களின் வாழ்வில் ஏற்படாதுள்ளது. இதற்கான காரணம் ஒருங்கிணைப்பு தொடர்பாடல் இல்லாமையே.

நேசக்கரம் அமைப்பானது அனைத்து தாயக நலன்விரும்பிகளோடும் இணைந்து செயற்படவும் மக்களுக்கான சேவைகளை வழங்கவும் தயாராக இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். பலம் சேர்ந்தால் அனைத்துச் சவால்களையும் எம்மால் தாண்ட முடியும். அனைவரும் ஒன்றாகி தமிழர் தாயக மக்களின் மறுவாழ்வு மாற்றத்திற்கான உருவாக்கமாக எழுவோம்.

நேசக்கரம் ஆரம்பித்த போது ஒரு சமூகத்தின் பெரும்பணியொன்று எங்கள் தோழில் இருக்கிறது என்ற எண்ணம் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் கால ஓட்டம் எங்கள் மக்களின் முன்னேற்றமே எங்கள் ஒவ்வொருவரின் தோழிலும் கனக்கிறது என்பதனை நாங்கள் கடந்து வந்த பாதையில் புரிந்துள்ளோம்.

இந்தப்பயணத்தில் துரோகம் வஞ்சம் குழிபறிப்பு யாவையும் கடந்தே நேசக்கரம் 5ஆண்டுகளில் நடக்கிறது.

பெயரை மட்டும் தந்துவிட்டு நேசக்கரத்தை தாங்கிய வேர்போல நடித்து நேசக்கரத்தின் வளர்ச்சியை சுய இலாபங்களுக்காக ஏலம் போட்டவரும் , நேசக்கரம் பற்றிய தங்களது காழ்ப்பினை பல வழிகளிலும் தீர்த்துக் கொள்ள துரோக அமைப்பாக பிரகடனம் செய்து தனது வஞ்ச முகத்தைக் காட்டிய பெருமைக்குரியவரையும் இந்நேரம் நன்றியுடன் நினைக்கிறோம். நாங்கள் எழுவதற்கான சவாலோடு வெல்வதற்கான ஓர்மத்தைத் தந்தது உங்கள் குழிபறித்தலே.

உண்மைகள் ஒருபோதும் உறங்காது. பொய் பெருமெடுப்பில் உண்மையை உதைத்துக் கொண்டு வரும் ஆனால் இறுதியில் உண்மையே வெல்லும். நேசக்கரத்திற்கு இடைஞ்சல் தந்து இதோ அழிப்பேன் என்று சவால் செய்த கண்ணின் முன்னேயே நாங்கள் நிமிர்கிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினும் தர்மத்தின் வழியே வெல்லும் என்பதனை அனுபவ ரீதியாக அனுபவித்தவர்கள் நாங்கள்.

நேசக்கரத்தின் உருவாக்கம் ஒரு மாவீரரின் எண்ணம். அந்த வீரனின் எண்ணத்திற்கான செயல் வடிவத்தை காலத்தின் தேவையை இக்காலம் உணர்த்திச் செல்கிறது. இப்பயணத்தில் இரண்டு தம்பிகள் முக்கியமாக தங்கள் ஆதரவை 2009முதல் இன்றுவரை என்னோடு சேர்ந்து சுமக்கிறார்கள். ஜெனன், கண்ணாளன் இதுவரை முகம் முகவரி காட்டாத இவ்விருவரின் ஆதரவுமே இன்றுவரையிலான பலம்.

மேலும் சோர்கிற போதெல்லாம் பலமாக துணையாக இருந்து வருகிற ஜஸ்ரின், சிறி (கனடா) பாலா , சீனிவாசன் (பிரான்ஸ்) மோகன் , ஊர்வசி (சுவிஸ்) ஜெயபாலன் , பூவேந்தன், கிருபா (டென்மார்க்) பிறேம் (நோர்வே) பேரின்பம் ஐயா , அனுராஜ் , கண்ணன் , கலா , மைதிலி , தாசீசியஸ் ஐயா (பிரித்தானியா) மற்றும் பகலவன் ஆகியோருக்கு இதயம் நிறைந்த நன்றிகள். நல்ல நட்பே சிறந்த மருத்துவம் என்ற உண்மையை உங்கள் அனைவரின் நட்பும் தந்து கொண்டிருக்கிறது.

எமது தொடரும் பயணத்தில் தங்கள் உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா , அவுஸ்ரேலியா , தமிழ்நாடு , அரேபிய மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் அனைத்து உதவும் கருணையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சு நிறைந்த நன்றிகள்.

அடுத்த 5வருடத்தில் எங்களது பணிகள் தாயகத்தில் புதிய மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்தும் வகையிலான எங்களது திட்டங்களை முன்னேற்ற நீங்கள் தருகிற ஆதரவுகள் மூலம் நிறைவேற்றுவோம் என்பதனையும் இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம். உங்கள் ஆதரவு மட்டுமே எங்களது வெற்றியும் எங்கள் மக்களின் உயர்ச்சியும் ஆகும்.

இதுவரையில் எமக்கு யூரோவில் பங்களிப்பாக 58.195,72€வும் இலங்கை ரூபாவில் பங்களிப்பைத் தந்தோர்களின் உதவி 10.149.789,17RSவும் வழங்கியுள்ளார்கள்.

58பக்கங்கத்தில் 5ஆண்டு கணக்கறிக்கையையும் அழகாகத் தொகுத்துத் தந்த தம்பி கண்ணாளனுக்கு சிறப்பான நன்றிகள். தனது சுமைகளின் மத்தியிலும் தான்நேசித்தவர்களின் வாழ்வுக்காக தனது உழைப்பையும் வழங்கி நேசக்கரத்தோடு துணைவரும் கண்ணாளனை என்றும் மறவோம்.

ஒற்றைச்செடியாய் துளிர்த்த நேசக்கரத்தினை கற்றை உறுதியாய் மாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

கடந்த 5வருடத்தில் நேசக்கரத்தின் மூலம் கிடைத்த உதவிகளின் மொத்த கணக்கறிக்கையை இத்தோடு இணைக்கிறோம்.

கணக்கறிக்கை PDFவடிவில் இருக்கிறது. கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கைத் தொகுப்பினை பாருங்கள்.

Account_2009_2013_Updated_Tamil (2)

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5%E0%AE%86%E0%AE%A3/

இதில் எந்த இடத்திலும் யாழ் இணையத்தினைப் பற்றிய ஒரு சிறு சொல் தானும் இல்லை சாந்தி.

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை லைக் செய்தோரை மறந்த மகர்க்கு.

நன்றிகள் நிழலி யாழுக்கு நன்றி சொல்லப்படாததை சுட்டிக்காட்டியமைக்கு. 09.01.2014அன்று இச்செய்தி இங்கும் முகநூல், நேசக்கரம் இணையத்திலும் செய்தியை பகிர்ந்திருந்தேன். இதவரையில் இச்செய்தியில் இத்தகையதொரு நன்றி மறக்கப்பட்டிருக்கு என்பதனை ஏனோ இதுவரை சுட்டிக்காட்ட உங்களுக்கு மறந்து போனதோ தெரியேல்ல. 
 
நீங்கள் இதை சொல்லும் வரை இவ்விடயம் பற்றி நான் இதுவொரு பெரும் குறையாக உங்களை உறுத்திக் கொண்டிருந்ததை நினைத்திருக்கவேயில்லை. எனினும் நன்றிகள். தவறுகள் திருத்தப்பட வேண்டியவை. தண்டனைக்குரியவையில்லை. இல்லை ஏதும் தண்டனை உங்களால் தரப்படுமானாலும் அதனையும் தாருங்கள் நன்றியோடு ஏற்றுக் கொள்வேன்.
 
நன்றி மறப்பது மட்டும் நன்றல்ல. தவறுகளை உரிய நேரத்தில் சுட்டிக்காட்டுவது கூட அந்த நன்றி மறவாமையின் நன்றி தான். 
 
இச்செய்தியில் பலதடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டது. இந்த அமைப்பில் தங்கள் முகங்களை மறைத்து ஆதரவு தருகிறவர்கள் சொல்லி பல விடயங்கள் திருத்தியிருக்கிறேன். இன்று உங்கள் இக்கருத்தை பார்த்துவிட்டு செய்தியை பலமுறை திருத்தங்கள் சொன்னவரும் தனது வருத்தத்தினை உங்களுக்குத் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார். அவர் இக்களத்தின் வாசகர் மட்டுமே. ஆக கருத்தில் நிழலியிடம் மன்னிப்பு கோரமுடியாமையால் அவரது வருத்தத்தையும் இங்கு தெரிவிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.