Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 3 தேவாலயங்கள் மீது தாக்குதல்

Featured Replies

140112145154_lanka_church_tamil_512x288_

 

தாக்கப்பட்ட தேவாலயம் ஒன்று

 

இலங்கையின் தென்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவக் குழுக்கள் கூறியுள்ளன.

எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும், தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த தேவாலயங்களின் குறைந்தது இரண்டின் மீதான தாக்குதலிலாவது கடும்போக்கு பௌத்த மதகுருமாரும் கலந்து கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

இலங்கையின் தெற்கே ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று தேவாலயங்கள் மீதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

குறைந்தபட்சம் 200 பேர் கொண்ட கும்பல் 20க்கும் அதிகமான பௌத்த மதகுருமார் தலைமையில் தமது வழிபாட்டின் போது வந்து, இரு தேவாலயங்களை அடுத்தடுத்து தாக்கியதாக அந்த தேவாலயங்களின் போதகர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

ஜன்னல்கள், இசை உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்களை அவர்கள் அடித்து நொருக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு சம்பவங்களிலும் வழிபாட்டாளர்கள் தப்பிவிட்டார்கள்.

கொலை மிரட்டல்

ஒரு பௌத்த மதகுரு தன்னை இழிவான வார்த்தைகளால் திட்டி, கொன்றுவிடப்போவதாக மிரட்டியதாக அஸம்பிளி ஆஃப் காட் திருச்சபையைச் சேர்ந்த மதபோதகரான பாஸ்டர் சிந்தக பிரசன்ன பிபிசியிடம் கூறினார்.

தம்மீது சனிக்கிழமை இரவே தாக்குதல் நடக்கலாம் என்று பொலிஸார் எச்சரித்திருந்ததாகவும், சம்பவம் நடந்தபோது பொலிஸார் ஸ்தலத்தில் இருந்தாலும், அவர்கள் பௌத்தகுருமாரைத் தடுக்க எதுவும் செய்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

பொலிஸாரின் செயற்படாமையை ஒப்புக்கொண்ட இலங்கை பொலிஸ்தரப்பு பேச்சாளரான அஜித் றோகண அவர்கள், பொலிஸ்குழு மிகவும் சிறியதாக இருந்ததாகவும் கூறினார்.

சம்பவம் குறித்த வீடியோக்கள் ஆராயப்பட்டு சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமது தேவாலயங்களை மூடுமாறு அரசாங்க அதிகாரிகள் தம்மை அண்மையில் கேட்டதாகவும், ஆனால், அது குறித்த சட்ட நடவடிக்கையில் தாம் இருப்பதாகவும் தேவாலய நிர்வாகங்கள் கூறுகின்றன.

தலைநகருக்கு அருகில் உள்ள இன்னுமொரு தேவாலயத்துக்கும் கடந்த இரவு ''தீ'' வைக்கப்பட்டதாகவும், ஆனாலும் ''தீ'' பெரிதாகப் பரவுவதற்கு முன்னதாக அது அணைக்கப்பட்டுவிட்டதாகவும் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கூறுகின்றது.

சிங்கள பௌத்த தேசியவாதம் மீண்டும் தீவிரமாகிவரும் நிலையில், சிறிய, சுயாதீன தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன என்றும் பெரும்பாலும் தேசிய ஊடகங்களில் அவை குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும் எமது செய்தியாளர் கூறுகிறார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/01/140112_churchattack.shtml

இது பெரிய பம்பல் !

இந்த புத்த கும்பலில் தலைமை கிறித்தவ கூட்டம் என்பது தான் கொடுமை.

மகிந்த "பேர்சி" ராஜபக்சே

இவிங்க தானா? 

 

பார்த்தா இதுக்குன்னே திங்கிறாங்க மாதிரில்ல இருக்கு.

இவிங்க தானா?

பார்த்தா இதுக்குன்னே திங்கிறாங்க மாதிரில்ல இருக்கு.

ஒசியென்றால் புண்ணாக்கையும் தின்னுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மல்கம் ரஞ்சித் போன்றவர்கள் இவ்வாறான சம்பங்களை கண்டித்ததே இல்லை. ஆனால் அவர்களை எல்லாம்.. வத்திக்கான்.. மதத் தலைவர்களாக வைச்சிருந்து வடிவு பார்க்கிறது. வத்திக்கானும்.. ஒரு மாதிரி.. அது நியமித்த ஆக்களும் ஒரு மாதிரியான ஆக்கள் தான். :icon_idea:

வழமையில் இவற்றை நடத்தமுதல் அரசு கக்கீம், பேராயர் மல்கம் போன்ற தனது கைகூலிகளுக்கு எல்லாம் தனது ஸ்கிறிப்டுகளை அனுப்பி படிக்க வைத்து, அதை பத்திரிகைகளில் வரவைத்துவிட்டுத்தான் செய்யும். 

 

இந்த கேவலமான படிச்ச விசுவாசிகள் இப்படி இலகுவாக அடிமைகளாக மாறறுவது ஆச்சரியமாக இருக்கு. பொன்னம்பலத்தின் அடிமைத்தனத்தையும் 1958 யையும் இவர்கள் வாசித்தால் தமக்கு விரைவில் வர இருப்பதை உணர்வார்கள்.


அரசு போகிற போக்குக்கு பேராயர் போட்ட குலக்கும், கால்சட்டையும் உருவிக்கொண்டுதான் கலைபட போகிறார். பாவம் கிறிஸ்தவர்கள்!

Edited by மல்லையூரான்

இலங்கையின் தெற்கே ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று தேவாலயங்கள் மீது நேற்று (12) காலை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதில் எண்மர் பௌத்த பிக்குகள் என அவர் குறிப்பிட்டார்.

தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை காலி நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று தேவாலயங்கள் மீது 200 பேர் கொண்ட குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் போது பிக்குகளும் உடனிருந்தனர்.

 

http://tamil.adaderana.lk/news.php?nid=50692

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக் கோவில்கள் தாக்கப்பட்ட போது மெளனம் காத்த பிபிசியும்.. இதனை செய்தி ஆக்கியுள்ளது.

 

Sri Lanka police 'identify church attackers' in Hikkaduwa.

 

_72248104_72248100.jpg
 
 
Windows, doors, musical instruments were smashed when a mob, led by monks, vandalised the churches

Police in Sri Lanka say they have identified and intend to arrest 24 people, including eight Buddhist monks, allegedly involved in attacks on two churches on Sunday.

 

No injuries were reported, but one pastor said he received death threats.

 

Footage from southern Hikkaduwa town showed monks hurling stones and bricks.

 

http://www.bbc.co.uk/news/world-asia-25716456

Edited by nedukkalapoovan

சிங்கள புத்தமதம் மட்டும் தான் இந்த நாட்டில் இருக்கலாம்..மற்றமதங்கள் எல்லாத்திற்கும் தடா.. புத்தமதம் என்றால் கருணை அன்பு... இந்த பிக்குமார்களிடம் அளவுக்கு அதிகமாக கருணை காணப்படுகிறது... பொலிசாரிடம் அதிகமாக ஆயுதமுடன் நடிப்பில்லாமல் கடமையில் சிறப்பாக செய்கிறார்கள்... என்ன அருமையான நாடு.. இதனைபோய்... கூடாத நாடு என கூறலாம?.. இன்னும் தொடரும் கூத்துகள்.. உலகத்திடம் முறையிட்டு... இறைவனிடம் வேண்டி...உருப்படுவோம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.