Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பள்ளிவாசலை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபர்களை மன்னிப்பதற்கு முஸ்லிம் தரப்பினர் இணக்கம் தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி, அம்பதென்னை முல்லேகம மஸ்ஜிதுல் பலா முஸ்லிம் பள்ளிவாசலை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கண்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் மன்னிப்பு வழங்குவதற்கும் அது தொடர்பிலான வழக்கை மீளப் பெற்றுக்கொள்ளவும் முஸ்லிம் தரப்பினால் இணக்கம் காணப்பட்டது.  

 

இச்சம்பவம் தொடர்பில் இருசாரருக்குமடையில் முல்லேகம் பிரியதர்ஸனாராம விஹாரையில்  இடம்பெற்ற  கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

 

இக்கூட்டத்தில் பௌத்த மக்கள் சார்பில் வண, கொண்டதெனியே பியதஸ்ஸீ தேரர், வண.படுகொட சங்கிச்சாயன தேரர், வண, இராஜாங்கனை சோரத தேரர், வண, முல்லேகம பியரத்ன தேரர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், முஸ்லிம்கள் சார்பில் கண்டி நகர  ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மவ்லவி பஸ்லுல் றஹ்மான்,  அக்குறணை  ஜம்மியதுல் உலமா சபையின்   சார்பில் மவ்லவி முஸம்மில்,  அக்குறணை அஸ்னா மத்திய பள்ளியின் நிர்வாக சபையின் தலைவர் சட்டத்தரனி அஸ்மி பாரூக், உட்;பட பலர் கலந்துகொண்டனர்.

 

இக்கூட்டத்தில் பள்ளிவாசலை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் மன்னிப்பளிப்பதென முஸ்லிம் தரப்பினர் அறிவித்தனர்.

 

 இந்த இளைஞர்கள் தமது அறியமை காரணமாக இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்  இப்பிரதேசத்தில் வாழும் எந்த ஒரு சிங்களவரோ, பௌத்த தேரரோ இச்செயலை ஆதரிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.  நூற்றாண்டு காலமாக முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழும் இப்பிரதேசத்தில் இவ்வாறான ஒரு செயல் இடம்பெற்றுள்ளதை வண்மையாக கண்டிக்கின்றோம் என இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பௌத்த தேரர்கள் சுட்டிக்காட்டினர்.

 

நாளை 21 ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளதால் இன்றைய தினம் நீதிமன்றில் சமர்பிப்பதற்காக கடிதம் ஒன்றில் இருசாரரும் கைச்சாத்திட்டனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=3862#sthash.OWissYmV.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

இணக்கம் என்றால் அப்பிடி ஒரு இணக்கம்.. :rolleyes:

"BBS க்கு அறியாமை அதிகம் என்று உலாமாகள் சபை தீர்மானம்" என்றல்வா தலைப்பு வந்திருக்க வேண்டும். :(

  • கருத்துக்கள உறவுகள்

''இன்சா அல்லா.''

மன்னிப்பு கேட்க வைக்கவேண்டியவர்களை மன்னித்து விடுவது உறுத்துகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.