Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்கு விற்ற முதல் 10 புத்தகங்கள்: உச்சம் தொட்டு நிறைந்தது புத்தகத் திருவிழா:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழக வாசகர்களின் உற்சாக வருடாந்திரத் திருவிழாவான சென்னைப் புத்தகக் காட்சி வாசகர்கள் எண்ணிக்கை, வாங்கப்பட்ட புத்தகங்கள் எண்ணிக்கை, விற்பனையான தொகை என எல்லா விதங்களிலும் இதுவரை இல்லாத புது உச்சத்தைத் தொட்டு புதன்கிழமையோடு நிறைவடைந்தது.

 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 37-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெற்றது. சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் 777 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பிரமாண்ட புத்தகக் காட்சியில் 435 தமிழ்ப் பதிப்பாளர்கள், 263 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 59 ஊடகப் பதிப்பாளர்கள் பங்கேற்றனர். ஏறத்தாழ ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

 

ஒவ்வோர் ஆண்டும் முந்தைய ஆண்டின் விற்பனையைத் தாண்டும் சென்னைப் புத்தகக் காட்சி, சில ஆண்டுகளில் சொதப்புவதும் உண்டு. இந்த ஆண்டோ எதிர்பார்ப்பைத் தாண்டியதுடன் புது உச்சத்தையும் தொட்டது. ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு வந்திருந்தனர்; தோராயமாக, ரூ. 25 கோடி மதிப்புள்ள 25 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்றிருக்கின்றன.

 

“இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு புது வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது; வாசகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப அடுத்த கட்டத்தை நோக்கி இதைச் சங்கம் எடுத்துச் செல்லும்” என்று சங்கத்தின் செயலர் கே.எஸ்.புகழேந்தி ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

இன்னும் பெரிதாகச் சிந்தியுங்கள்

புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் பங்கேற்றது எந்த அளவிற்கு நல்ல செய்தியோ, அதே அளவுக்கு எச்சரிக்கையாக அணுக வேண்டிய செய்தி: இதுவரை இல்லாத அளவுக்கு ஜனவரி 19-ம் தேதி மட்டுமே 1.5 லட்சம் பேர் வந்தனர். உண்மையில், இவ்வளவு பெரிய ஜனத்திரளின் நடுவே ஒரு சின்ன அசாம்பவிதம் நடந்தால் அதை எதிர்கொள்ள இப்போது திட்டமிடும் கட்டமைப்பு காணவே காணாது.

 

வாசகர்கள் அட்சயப்பாத்திரமா?

ஒவ்வொரு ஆண்டும் கேன்டீனில் உணவுப் பண்டங்களின் விலை உயர்ந்துகொண்டேபோவது, வாசகர்களிடம் அதிருப்தியையே உருவாக்கும். நியாயமான உணவு விலையை நிர்ணயுங்கள்.

 

மூச்சு முட்டுகிறது

கூட்டம் அதிகமான நாட்களில் உள்ளே கடுமையான புழுக்கத்தை வாசகர்கள் உணர்ந்தார்கள். பலர் ஓரிரு வரிசையோடு புத்தகக் காட்சியைவிட்டு வெளியேறினர். வளாகத்தை இன்னும் விரிவாக்கி, நான்கு புறங்களும் அருகருகே வாசல்களை அமைத்து, கூடுதல் காற்றோட்டத்துக்கு வழிசெய்யுங்கள்.

 

மாபெரும் சூழல் கேடு

ஆகப் பெரும்பான்மையான பதிப்பகங்கள் இன்னமும் பாலிதீன் பைகளைப் போட்டே புத்தகங்களைக் கொடுக்கின்றன. 12 நாட்களில் 10 லட்சம் வாசகர்கள் கைகளிலும் குறைந்தது ஒரு பாலிதீன் பை என்றால்கூட 10 லட்சம் பாலிதீன் பைகள். எத்தனை பெரிய கேடு? அறிவுசார் துறை என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் என்ன? பாலிதீனுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். நுழைவுச் சீட்டு வழங்கும் இடத்தில் ஏற்பாட்டாளர்களே துணிப்பை வழங்கலாம். பையின் இரு பக்கங்களிலும் விளம்பரம் அச்சிட்டால், இலவசமாகக் கொடுக்கலாம்.

 

புஸ் கார்டுகள்

கூட்டம் அதிகமாகிவிட்டால், ‘கிரெடிட் கார்டுகள்’, ‘டெபிட் கார்டுகள்’ பயனற்றுவிடுகின்றன. ஏ.டி.எம்-கள் எண்ணிக்கை போதவில்லை. கவனம் வேண்டும்.

 

அதிகம் விற்ற 10 புத்தகங்கள்

1. ஆறாம் திணை - கு.சிவராமன் - விகடன் பிரசுரம்

2. அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன் - கண்ணதாசன் பதிப்பகம்

3. கொற்கை - ஜோ டி குரூஸ் - காலச்சுவடு பதிப்பகம்

4. இது யாருடைய வகுப்பறை? - ஆயிஷா நடராஜன் - பாரதி புத்தகாலயம்

5. வெள்ளை யானை - ஜெயமோகன் - எழுத்து பிரசுரம்

6. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி - என்சிபிஹெச்

7. கிமு – கிபி - மதன் - கிழக்குப் பதிப்பகம்

8. பூமித்தாய் - கோ.நம்மாழ்வார் - இயல்வாகை

9. மழைக்காடுகளின் மரணம் - நக்கீரன் - பூவுலகின் நண்பர்கள் வெளியீடு

10. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - எஸ்.ராமகிருஷ்ணன் - க்ரியா பதிப்பகம் 

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/article5607031.ece?homepage=true

ஆகா... கண்ணதாசனுக்கு அழிவில்லை!!

அதிகம் விற்ற புத்தக பட்டியலை பார்க்க ஓரளவு திருப்தியாக இருக்கு .மருத்துவர் கு .சிவராமனின் ஆறாம் திணை இப்பவும் ஆனந்த விகடனில் தொடராக வருகின்றது .இது முதலாம் இடத்தில் வந்தது பெரியவிடயம் .

அடுத்த வருடம் எப்படியும் போகவேண்டும் போலுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
ஒவ்வொரு வருடமும் இந்த புத்தக கண்காட்சி பற்றிய தகவல் வெளிவரும் போது அடுத்த வருடமாவது போக வேண்டும் என்று நினைப்பது,யாழில் இது பற்றி போன வருடமும் எழுதி உள்ளேன்.ஆனால் இன்னும் இதுக்கு போக கொடுத்து வைக்கவில்லை."அர்த்தமுள்ள இந்து மதம்" இப்பவும் விற்பனையில் முன்னுக்கு இருப்பது ஆச்சரியமாக உள்ளது :)
 
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழ்நதி அக்காவிடம் சுட்ட விடையம்..இந்தப் புத்தகங்களை தேடி வாசிக்க வேண்டும் என்ற ஆவல் நிறையவே இருக்கிறது பார்ப்போம்.

 

 

 

ஜனவரி, 2014இல் வாங்கிய நுால்களின் பட்டியல்.....
புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ளத் தவறி, புத்தகக் கடைகளில் வாங்கலாமென்று நினைத்திருப்பவர்களுக்கு இந்தப் பட்டியல் உதவக்கூடும். கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள் என கலந்துகட்டி இருக்கிறது. வளர்ந்த, வளர்ந்துகொண்டிருக்கும், வளரவிருக்கும் எழுத்தாளர்கள் என முன்பின்னாக எவரையும் வரிசைப்படுத்தவில்லை

1. தூக்கிலிடுபவரின் குறிப்புகள் – சசி வாரியர்- ...தமிழாக்கம்: இரா.முருகவேள் – எதிர் வெளியீடு
2. சொல் பொருள் மௌனம் – க.மோகனரங்கன் – யுனைடெட் ரைட்டர்ஸ்
3. எனது நாட்டில் ஒரு துளி நேரம் – ந.மாலதி – விடியல்
4. தவிக்குதே தவிக்குதே… - பாரதி தம்பி – விகடன் பிரசுரம்
5. ஊரும் சேரியும் – சித்தலிங்கையா – விடியல்
6. தமிழகத்தில் தேவதாசிகள் : முனைவர் கே.சதாசிவன் – தமிழில்: கமலாலயன் – அகநி வெளியீடு
7. விடுபூக்கள் – தொ.பரமசிவன் – கயல்கவின்
8. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை – அ.முத்துலிங்கம் – கயல்கவின்
9. இலங்கையின் கொலைக்களம்: ஆவணப்பட சாட்சியம் – யமுனா ராஜேந்திரன் – பேசாமொழி
10. ரித்விக் கட்டக் – சு.கிருஷ்ணமூர்த்தி – பாரதி புத்தகாலயம்
11. கலிலீயோ அறிவியலில் ஒரு புரட்சி – பேரா.வி.முருகன்- பாரதி புத்தகாலயம்
12. அரசும் புரட்சியும் – லெனின் – மொழியாக்கம்: ரா.கிருஷ்ணையா – பாரதி புத்தகாலயம்
13. பெண் வன்முறையற்ற வாழ்வை நோக்கி – உ.வாசுகி – பாரதி புத்தகாலயம்
14. உலகக் கல்வியாளர்கள் – இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம்
15. பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் – கார்ல் மார்க்ஸ் – பாரதி புத்தகாலயம்
16. மார்க்சும் அறிவியலும் – ஜே.டி.பெர்னல் – தமிழில்: சாமி – முகம் பதிப்பகம்
17. ஹிமாலயம் – ஷௌக்கத் – தமிழில்: .கே.வி.ஜெயஶ்ரீ – வம்சி
18. மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக – சாண்ட்ரா போஸ்டல் – வம்சி / பூவுலகின் நண்பர்கள்
19. அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு – பில் பிரைசன் – தமிழில்: ப்ரவாஹன் – பாரதி புத்தகாலயம்
20. துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு – ஜாரெட் டைமண்ட் – தமிழில்: பிரவாஹன் – பாரதி புத்தகாலயம்
21. மரிச்ஜாப்பி: சி.பி.எம்.அரசின் தலித் இனப்படுகொலை – தமிழில்: இனியன் இளங்கோ – தலித் முரசு
22. அடிப்படை வாதங்களின் மோதல் – தாரிக் அலி –தமிழில்: கி.ரமேஷ்
23. மௌனத்தின் அலறல் – ஊர்வசி புட்டாலியா – தமிழில்: கே.ஜி.ஜவர்லால் – கிழக்கு பதிப்பகம்
24. பகத்சிங் சிறைக்குறிப்புகள் – தமிழில்: சா.தேவதாஸ் – பாரதி புத்தகாலயம்
25. காலத்தின் திரைச்சீலை டிராட்ஸ்கி மருது – தொகுப்பு: அ.வெண்ணிலா – அகநி
26. பறவைகள் - ப.ஜேசுதாசன், ஆசை –க்ரியா
27. ‘புதிய அலை’ இயக்குநர்கள் – வெ.ஶ்ரீராம் – க்ரியா
28. சாதியும் நானும்: பதிப்பாசிரியர்: பெருமாள் முருகன் – காலச்சுவடு
29. வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – கிருபாகர், சேனானி - காலச்சுவடு
30. ஏழாம் சுவை – மருத்துவர் கு..சிவராமன் – விகடன் பிரசுரம்
31. முடையும் வாழ்வு – ஊர்மிளா பவார் – போப்பு – விடியல்
32. வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் – அருந்ததி ராய் – தமிழில்: மணி வேலுப்பிள்ளை – காலச்சுவடு
33. காந்தியைக் கடந்த காந்தியம் – பிரேம் – காலச்சுவடு
34. மாய விளக்கு – இங்மர் பெர்க்மன் – தமிழில்: உமர் – நிழல்
35. மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன் – விகடன் பிரசுரம்
36. மேதைகளின் குரல்கள் – உலக இயக்குநர்களின் நேர்காணல்கள் – தமிழில்: ஜா.தீபா – மலைகள்
37. அதனிலும் இனிது அறிவினர் சேர்தல் – இசை – சந்தியா பதிப்பகம்
38. பஷீர்: தனிவழியிலோர் ஞானி – பேரா.எம்.கே.ஸாநு – தமிழில்: யூமா வாசுகி – பாரதி புத்தகாலயம்
39. என் சக பயணிகள் – ச.தமிழ்ச்செல்வன் – பாரதி புத்தகாலயம்
40. லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன் – வா.மணிகண்டன் – யாவரும்.காம்
41. என் பயணம் – அசோகமித்திரன் – நற்றிணை
42. எரியாத நினைவுகள் – அசோகமித்திரன் – காலச்சுவடு
43. படைப்பாளிகள் உலகம் – அசோகமித்திரன் – நற்றிணை
44. சாமானியனின் முகம் – சுகா – வம்சி
45. சுவரொட்டி – கலாப்ரியா – கயல்கவின்
46. குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை – கீரனூர் ஜாகிர்ராஜா – பாரதி புத்தகாலயம்
47. வெல்லிங்டன் – சுகுமாரன் – காலச்சுவடு
48. கூவாத கோழி கூவியே தீர வேண்டும் – பொய்கையில் அப்பச்சன் – தமிழில்: என்.டி.ராஜ்குமார் – புது எழுத்து
49. பெருங்கடல் போடுகிறேன் – அனார் - காலச்சுவடு
50. தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத்- தமிழில்: கீதா சுகுமாரன் – காலச்சுவடு
51. எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது – தேவதச்சன் – உயிர்மை
52. கருநாவு – ஆழியாள் – மாற்று
53. இனி எனது நாட்களே வரும் – நிலாந்தன் – விடியல்
54. எனது குழந்தை பயங்கரவாதி – தீபச்செல்வன் – விடியல்
55. அன்ன பட்சி – தேனம்மை லெஷ்மணன் – அகநாழிகை பதிப்பகம்
56. நிறைசு+லி – மகுடேசுவரன் – தமிழினி
57. டார்வின் படிக்காத குருவி – உமா மோகன் – முரண்களரி பதிப்பகம்
58. மதுக்குவளை மலர் – வே. பாபு – தக்கை
59. மண்புழுவின் நான்காவது இதயம் – நேசமித்ரன் – வலசை
60. சிநேகத்தின் வாசனை – சக்தி செல்வி – புது எழுத்து
61. சாத்தான்களின் அந்தப்புரம் – நறுமுகை தேவி – புது எழுத்து
62. சொந்த ரயில்காரி – ஜான் சுந்தர் – அகநாழிகை பதிப்பகம்
63. மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் – ரமேஷ் பிரேதன் – புது எழுத்து
64. கவிதையின் கால்தடங்கள் – தொகுப்பு: செல்வராஜ் ஜெகதீசன் –அகநாழிகை பதிப்பகம்
65. காற்றால் நடந்தேன் – சீனு ராமசாமி – உயிர்மை
66. இசைக்காத இசைக்குறிப்பு – வேல்கண்ணன் – வம்சி
67. தெரிவை – பத்மஜா நாராயணன் – டிஸ்கவரி புக் பாலஸ்
68. குரல்வளையில் இறங்கும் ஆறு – அய்யப்ப மாதவன் – சாய் பதிப்பகம்
69. விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம் – சி.மோகன் – சந்தியா பதிப்பகம்
70. முதல் மனிதன் – ஆல்பெர் காம்யு – தமிழில்: வெ.ஶ்ரீராம் – க்ரியா
71. பூக்குழி – பெருமாள் முருகன் – காலச்சுவடு
72. இன்ஸ்பெக்டர் செண்பகராமன் – அசோகமித்திரன் – காலச்சுவடு
73. தனிமையின் நூறு ஆண்டுகள் - காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் – தமிழில்: ஞாலன் சுப்பிரமணியன், சுகுமாரன், காலச்சுவடு
74. ஆட்டம் – சு.வேணுகோபால் – தமிழினி
75. பால்கனிகள் – சு.வேணுகோபால் – தமிழினி
76. உம்மத் – ஸர்மிளா ஸெய்யித் – காலச்சுவடு
77. நள்ளிரவின் குழந்தைகள் – சல்மான் ருஷ்டி – தமிழில்: க.பூரணச்சந்திரன் – எதிர் வெளியீடு
78. காலவெளி – விட்டல்ராவ் – பாதரசம் வெளியீடு
79. மீள முடியுமா? – ழான்-போல் சார்த்ர் – தமிழில்: வெ.ஶ்ரீராம், க்ரியா
80. பெரியார் ரசிகன் –குகன் – உதயகண்ணன் வெளியீடு
81. ஊழிக்காலம் – தமிழ்க் கவி – தமிழினி
82. ஏழு தலைமுறைகள் – அலெக்ஸ் ஹேலி
83. வெண்ணிலை – சு.வேணுகோபால் – தமிழினி
84. மனச்சாட்சியின் குரல்- லியோ டால்ஸ்டாய் – தமிழில்: பொன்.சின்னத்தம்பி முருகேசன் – முகம்
85. அத்தாங்கு – மெலிஞ்சிமுத்தன் – கருப்புப் பிரதிகள்
86. அஞ்சாங்கல் காலம் – உமா மகேஸ்வரி – வம்சி
87. ராஜீவ்காந்தி சாலை – விநாயக முருகன் – உயிர்மை
88. நிமித்தம் – எஸ். ராமகிருஷ்ணன் – உயிர்மை
89. சுமித்ரா – கல்பட்டா நாராயணன் – தமிழில்: கே.வி.ஷைலஜா – வம்சி
90. நாடோடித் தடம் – ராஜ சுந்தரராஜன் – தமிழினி
91. உப்பு நாய்கள் – லஷ்மி சரவணகுமார் – விதை
92. ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு – அம்பை - காலச்சுவடு
93. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் – மாரி செல்வராஜ் – வம்சி
94. பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் – அ.வெண்ணிலா – விகடன் பிரசுரம்
95. பெத்தவன் –இமயம்- பாரதி புத்தகாலயம்
96. ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும் – தமயந்தி – கருப்புப் பிரதிகள்
97. முதல் தனிமை – ஜே.பி.சாணக்யா – காலச்சுவடு
98. ஜின்னாவின் டைரி – கீரனூர் ஜாகிர்ராஜா – எதிர் வெளியீடு
99. வெண்கடல் – ஜெயமோகன் – வம்சி
100. ஆயுத வரி – அ.இரவி – காலச்சுவடு
101. கூந்தப்பனை – சு. வேணுகோபால் – தமிழினி
102. மனைப் பாம்பு – கி.நடராசன் – முரண்களரி படைப்பகம்
103. டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் – ஜி.நாகராஜன் – காலச்சுவடு
104. வீடென்ப… - தேவிபாரதி – காலச்சுவடு
105. குதிரைக்காரன் –அ.முத்துலிங்கம் – காலச்சுவடு
106. துரோகத்தின் நிழல் – அ.வெண்ணிலா – அகநி வெளியீடு
107. வாழ்விலே ஒருமுறை – அசோகமித்திரன் – காலச்சுவடு
108. கொழுத்தாடு பிடிப்பேன் – அ.முத்துலிங்கம் - காலச்சுவடு
109. யானை காணாமலாகிறது – தொகுப்பாசிரியர்: சிபிச்செல்வன் –மலைகள்
110. அறைகள் நிறைய உள்ள வீடு – குட்டி ரேவதி – பாதரசம் வெளியீடு
111. வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு – ரேமண்ட் கார்வர்- மொழியாக்கம்: செங்கதிர், எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், விஜயராகவன் – காலச்சுவடு
112. திரிவேணி – தூரன் குணா – பாதரசம் வெளியீடு
113. வேட்டைத் தோப்பு – கருணாகரன் – கயல் கவின்
114. தொடர்பு எல்லைக்கு அப்பால் – தாமிரா – நாளந்தா பதிப்பகம்
115. பைத்திய ருசி – கணேசகுமாரன் – தக்கை
116. தம்பான் தோது – இளஞ்சேரல் – அகத்துறவு
117. அடை மழை – ராமலஷ்மி – அகநாழிகை பதிப்பகம்
118. நீல நாயின் கண்கள் – மொழிபெயர்ப்பு: அசதா – நாதன் பதிப்பகம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய கணனி உலகில்... குறிபிட்ட ஒரு சில நாட்களில், 25 லட்சம் தமிழ்ப் புத்தகங்கள் விற்றிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
மக்களிடம் வாசிப்புப் பழக்கம் இல்லாமல் போய் விட்டது என்று சொல்லும் கருத்தை... பொய்யாக்கி விட்டது, இந்தப் புத்த‌கக் கண்காட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒவ்வொரு வருடமும் இந்த புத்தக கண்காட்சி பற்றிய தகவல் வெளிவரும் போது அடுத்த வருடமாவது போக வேண்டும் என்று நினைப்பது,யாழில் இது பற்றி போன வருடமும் எழுதி உள்ளேன்.ஆனால் இன்னும் இதுக்கு போக கொடுத்து வைக்கவில்லை."அர்த்தமுள்ள இந்து மதம்" இப்பவும் விற்பனையில் முன்னுக்கு இருப்பது ஆச்சரியமாக உள்ளது :)

 

 

இதில் இருக்கும் எல்லா புத்தகமும் இணையத்தில் கிடைக்கின்றது.....
 
உங்களின் கருத்து மேலுள்ள கருத்து போல் சும்மா பில்டப் மாதிரி இருக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

 

இதில் இருக்கும் எல்லா புத்தகமும் இணையத்தில் கிடைக்கின்றது.....
 
உங்களின் கருத்து மேலுள்ள கருத்து போல் சும்மா பில்டப் மாதிரி இருக்கு.

 

 
புத்தக கடையில் போய் புத்தகத்தைப் பார்த்து தெரிந்தெடுத்து வாங்குவதற்கும்,புத்தகத்தைப் பற்றி தெரியாமல் ஒன்லைனில் வாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது.அது வாசிப்பில் ரசனை உள்ளவர்களுக்கு மட்டும் தான் விளங்கும்.

இதற்க்கு கீழுள்ள திரியை பார்க்கவும் .

நிதான வாசிப்பு . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

 

 
புத்தக கடையில் போய் புத்தகத்தைப் பார்த்து தெரிந்தெடுத்து வாங்குவதற்கும்,புத்தகத்தைப் பற்றி தெரியாமல் ஒன்லைனில் வாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது.அது வாசிப்பில் ரசனை உள்ளவர்களுக்கு மட்டும் தான் விளங்கும்.

 

 

அதுதான் எனக்கு விளங்காமல் போய்விட்டது .......
 
கேட்கிறேன் என்று குறை நினைக்காதீர்கள் புத்தக ரசனை விளங்காததுபோல் .....
இந்த பூதாரமும் எனக்கு விளங்கவில்லை. 
புத்தக கடையில் போய்  பார்ப்பதற்கும் ....
இணையத்தில் பார்பதற்கும் .....
என்ன வித்தியாசம் ? 
இணையத்தில் புத்தகத்தை பற்றிய எல்லா விடயமும் இருக்கிறது கூடவே அதை ஏற்கனவே படித்தவர்களின் மீள்பார்வை அல்லது review வேற கூடுதலா இருக்கிறது.
 
ஒரே ஒரு வித்தியாசம் .... இணையத்தில் வாங்கி படித்தால் அது எஅன்க்கு மட்டுமே தெரியும்.
அதுவே புத்தக கடையில் போய் வாங்கினால்.............
போவதற்கு முன்பே ஒரு நாலு பேருக்கு ................ நான் புத்தக கடைக்கு போகிறேன் என்று சொல்லி ரசிக்கலாம்.
பின்பு புத்த கடையில் போய் அங்கு நிற்கும் நாலு பேருக்கு புத்தகம் படிக்கவே பிறந்ததுபோல் ஒரு பில்டப்பு கொடுத்து ரசிக்கலாம் . அப்படியே ஒரு இரண்டு புத்தகத்தை வாங்கி விட்டால் வரும் வழி  முழுதும் .... பெரிய புத்தக  பிரியர் போல ஒரு சீனை போட்டு ரசிக்கலாம்.
அப்படியே புத்தக ரசனை ஜாஸ்த்தியாகிடும்.
 
இதை தவிர வேறு ஏதும் இருந்தால் தெரிந்து கொள்ள ஆவல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.