Jump to content

கறி ரொட்டி


Recommended Posts

கறி ரொட்டி

 

 

 

தேவையான பொருட்கள் மேல் மாவுக்கு

 

1. மைதா மா – 2 கப்

 

2. ஈஸ்ட் – 1 ரீ ஸ்பூன்

 

3. உப்பு சிறிதளவு

 

4. மார்ஜரீன் – 1 டேபிள் ஸ்பூன்

 

கறி தயாரிக்க

 

1. மீன் துண்டுகள் – 1 கப்

 

2. வெங்காயம் – 1

 

3. பூண்டு – 2

 

4. சீரகப் பவுடர் – ½ ரீ ஸ்பூன்

 

5. கடுகு – ¼ ரீ ஸ்பூன்

 

6. மிளகாய்த் தூள் – ரீ ஸ்பூன்

 

7. மஞ்சள் தூள் – ½ ரீ ஸ்பூன்

 

8. கறிவேற்பிலை சிறிதளவு

 

9. உப்பு, புளி தேவையான அளவு

 

10. ஓயில் – 1 டேபிள் ஸ்பூன்

 

 

 

செய்முறை

 

1. தயாரிக்கும் மாவை 5-6 மணித்தியாலங்கள் முன்பு குழைத்து வைத்துவிடுங்கள். மா, ஈஸ்ட், உப்பு, மார்ஜரீன் கலந்து வையுங்கள். தண்ணீரை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி பூரிமா பதத்தில் தயார்த்து வையுங்கள்.

 

2. எண்ணெயில் கடுகு தாளித்து, வெங்காயம், உள்ளி லேசாக வதக்கி கறிவேற்பிலை சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள், சீரகத் தூள் சேர்த்து கரைத்த புளிக் கரைசல் விட்டு மீன் துண்டங்களைப் போட்டு அவித்து எடுத்து, ஆற முள்ளை நீக்கி சற்று மசித்து எடுங்கள்.

 

3. மாவை சிறு பந்து போல எடுத்து, போர்ட்டில் வைத்து ரோலரால் மெல்லியதாக உருட்டி, கறியை வைத்து பார்சல் போல மடித்து வையுங்கள். அதை பேக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

 

4. தோசைக் கல்லிலும் செய்து கொள்ளலாம். தோசைக் கல்லில் செய்வதாக இருந்தால் பூரி போன்று வட்டமாக உருட்டி கறியை வைத்து இன்னொரு பூரியால் மூடி மேலே சற்று உருட்டிவிட்டால் அமர்ந்து வரும். இதை மெல்லிய தீயில் இரு புறமும் விரும்பிய எண்ணையை விட்டு சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

 

5. அவசரத்திற்கு செய்வதாயின் மாவை எடுத்து கிண்ணம் போல செய்து, அதற்குள் கறியை வைத்து மூடி கையால் தட்டியும் செய்து கொள்ளலாம்.

 

6. சதுரம், முக்கோணி, அரை வட்டம் என நாளுக்கு ஒவ்வொன்றாக விரும்பிய வௌ;வேறு கறிவகைகளில் செய்து அசத்துங்கள்.

 
Link to comment
Share on other sites

கிழங்கு றொட்டி செய்திருக்கின்றேன் வீட்டில் அனைவருக்கும் விருப்பம் கறிறொட்டியையும் செய்து பார்ப்போம் 
 
இணைப்புக்கு நன்றி அலைமகள்    
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி அலைமகள்...! :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி சொல்லிறன் .

Link to comment
Share on other sites

  • 4 months later...

எனக்கு மிகவும் பிடித்த உணவு.. பலமுறை சொதப்பி இருக்கிறேன்.. மீண்டும் முயற்சி செய்து பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்து பார்த்தவர்கள் போட்டோ போட்டால் நன்றாக இருக்கும்  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு, நன்றி, அலைமகள்.smilie_haus_004.gif
நான் தேடிய சமையல் குறிப்பில்...smilie_haus_028.gif இதுகும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.smilie_haus_022.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.