Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கங்காரு தேசம்.. சிங்களத்தின் கொடுமைகளை எதிர்க்காதாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் அவுஸ்ரேலியா எதிர்க்கும்.

Aus%20prime%20minister002_0.jpg?itok=AEV

 

 

சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குச் சர்வதேச விசாரணை ஒன்று தேவையில்லையென தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம், அமெரிக்காவினால் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 

அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜுலி பிஷோப், சிட்னி மோர்னிங் ஹெரல்ட்  பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வன்னி போரின் போது தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, யுத்த சூனிய வலயத்தின் மீது தாக்குதல் நடத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசு ஏற்கனவே நிராகரித்து விட்டது. இருப்பினும் இருதரப்புக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்ளுரில் விசாரணை ஒன்று இடம்பெற வேண்டுமென்ற விடயத்தில் நாமும் தெளிவாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

 

http://www.eelanatham.net/articles/2014/02/05/australia-not-suppport-to-usa-action-against-srilanka

 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பற்றி ஒருமுறை கந்தப்புவின் திரியிலும் சொல்லியிருந்தேன்., லிபரல் இலங்கை அரசுக்கு ஆதரவான கட்சி. டோனி கொமென்வெல்த் மகாநாட்டுக்கு போனது மட்டுமல்ல இலங்கை கடற்படைக்கு இரண்டு கப்பல்களை வேறு தருவதாக சொல்லிவிட்டு வந்தார். ATC, AFTA கிரீன்ஸ் ஐ மட்டுமே நம்பி இருப்பவர்கள். இவர்கள் எங்கட ஏதாவது நிகழ்வுக்கு வந்து வடை, வாழைப்பழங்களைச் சாப்பிட்டு கொடி ஏத்துவார்கள். அவ்வளவும் தான். அவர்களையும் குறை சொல்லமுடியாது. அவர்களே யாரோ ஒருத்தரில தங்கி இருப்பவர்கள்.  அவர்களிலும் லீ ரியாணன் போல பாராளுமன்றத்தில ஏதாவது ஒன்றைச் சொல்லும் ஒன்று ரெண்டு பேர் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் கிறீன்சும் நல்லாக வாங்கிக் கட்டினார்கள். இன்னும் இரண்டரை வருடத்துக்கு அவுசில ஆணியே புடுங்க முடியாது.

இலங்கைப் பற்றியும் தமிழர்கள் பற்றியும் அவுசுக்கு ஏன் அக்கறை வர வேண்டும்? நாட்டுக்குள்ளேயே Holden 4,000 பேரை நிற்பாட்டப் போவதாக கூறியிருக்கிறார்கள், Ford 2016 ஓட ஆட்டம் குளோஸ், அரசாங்கம் அரச வேலைகளில் இருந்து அதிகமாக பணிக் குறைப்பு செய்கிறார்கள். இப்படி ஊருப்பட்ட தலையிடிகள் இருக்கும் போது பிச்சைக்கார இலங்கை பற்றி இவர்களுக்கு ஏன் கவலை வர வேண்டும்? அவர்களது ஒரே பிரச்சனை அகதிகள். இந்த அகதிகள் பிரச்சனையால் இந்தோனேசியாவுடன் நன்றாக முறுகுப் பட்டுவிட்டார்கள் அதைவிட நவுரு, மனுஸ் தீவுகளுக்கு அனுப்புவதிலும் சில சிக்கல்கள். வந்த சில வள்ளங்களை திருப்பி அனுப்ப அவை தாண்டு விட்டன. வந்த அகதிகள் அரசாங்கத்திடம் இருந்து எவளவு கறக்க முடியுமோ அவளவு கறக்கிறார்கள்.

உதாரணத்திற்கு பேர்த்தில் ஒரு குடும்பம். முதலிலே புருஷன் வந்தார் களவாக, பின்னர் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வந்தார்கள் அதுவும் களவாக, சரி வரட்டுக்கும்..... எண்ணி ஒன்பது மாதத்தில் மனைவி பிள்ளைத்தாச்சி ..... வாவ் ஓகே மே பி எ மிஸ்டேக்.... இன்னும் ஒரு வருஷம் ஓடுது மீண்டும் பிள்ளைத்தாச்சி...... புருஷன் சூப்பர் மார்கெட்டில ற்றொலி தள்ளுற வேலை. எவளவு தள்ளினாலும் வருசத்துக்கு $35,000 தாண்டாது, அதிலயும் கையில காசுவாங்குவதால வரி கட்டுவது இல்லை. அரசாங்கம் என்ன செய்யலாம் எண்டு சொல்லுறியள்? இப்பிடிக் கன பேர்.     

இதனால தான் ஆக்கள் இங்கு வர முதலேயே அதைத் தடுப்பதற்கும், வந்தவர்களை பிளேனிலே எத்தி திருப்பி அனுப்பும் போது அவர்களை ஏற்றுக் கொள்ளுவதட்கும் இலங்கை அரசாங்க ஆதரவு அவுசுக்கு தேவை. இதிலே லேபர் லிபரல் என்று பேதமில்லை.லேபர் கொஞ்சநாளைக்கு உழைக்க விட்டு அனுப்புவார்கள். லிபரல் உடனேயே அனுப்புவார்கள். எதிர்காலத்திலே அகதிகள் சம்பந்தமான சட்டங்கள் இன்னும் இறுக்கமாகப் போகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இது சம்பந்தமாக எங்கள் ஜி தீர்க்கமான முடிவுக்கு வரவேணும் :D

ஆனால் தன்னுடைய  நிரந்தர வதிவிட உரிமையை தூக்கி எரிய

வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டுகிறோம்

 

உங்கள்

அடிப்பொடிகள் :lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.