Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறைவா, காட்சி சொல்லும் கதை ஏதடா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதை சொல்லி வைத்தேன்..

இறைவா, காட்சி சொல்லும் கதை ஏதடா..?

 

 

தொடர்ச்சியான தோல்வியின் விளைவுகளால் மனம் நொந்த ஒருவன்,(பாஞ்சு, கவனிக்க - அது நானல்ல! vil-ausoleil.gif) கடவுளிடம் மிகுந்த சலிப்பும் கோபமும் கொண்டு அவரை கூவி அழைத்தான்.

 

அவனின் ஆழ்ந்த கேவல் கண்டு, கடவுளும் அவன் முன் தோன்றி ஏனென்று வினவினார்..

 

 

இனி அவர்களின் உரையாடல்!

 

 

அவன்: கடவுளே, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?

 

கடவுள்: தாராளமா..! என்ன கேள்வி?

 

அவன்: கேட்டால் சிரிக்ககூடாது!

 

கடவுள்: ம்..இல்லை, சொல்லுங்கள்!

 

அவன்: ஏன் இன்று எனக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை...? :huh:

 

கடவுள்: புரியும்படி விளக்கமாக சொல்லவும். :o

 

அவன்: இன்று நான் தாமதமாகவே படுக்கையை விட்டு எழ முடிந்தது..

 

கடவுள்: ஓ..! சரி..

 

அவன்: அலுவலகம் செல்லலாமென்றால், என்னுடைய கார் சீக்கிரம் ஸ்டார்ட் ஆகவே இல்லை..!

 

கடவுள்: ம்..சரி..

 

அவன்: அலுவலக உணவகத்தில் உணவும் சரியாக இல்லை, மாற்று உணவு வரும் வரை நான் பசியுடன் காத்திருக்க வேண்டியதா போச்சுது!

 

கடவுள்: ம்ம்..

 

அவன்: அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வழியில், தொலைபேசியில் வந்த முக்கிய அழைப்பை எடுத்தேன், ஆனால் தொலைபேசி வேலை செய்யாமல் பழுதாகிவிட்டது...!

 

கடவுள்: ஓ..அப்படியா?

 

அவன்: சரி, வீட்டில் வந்து ஓய்வாக உடற்பயிற்சி செய்யாலாமென புதிதாக வாங்கிய ஃபுட் மசாஜ்ஜரை மின்சாரத்தில் பொருத்தினால், அது வேலையே செய்யவில்லை..! இன்று எதுவுமே சரியாக நடக்கவில்லையே? ஏன்..? ஏன் இந்த நிலைமை? ஏன் எனக்கு இப்படி செய்தீர்கள்?

 

கடவுள்: நான் இவற்றிற்கு காரணங்களை சொல்லட்டுமா? இன்று காலை, உன் படுக்கையில் மரண தேவதையின் ஆளுமையில் நீ இருந்தாய்..அவளிடமிருந்து உன்னை காக்கவே என்னிடமிருந்த காக்கும் தேவதையை அனுப்பி அவள் மூலம் உன்னை அதிக நேரம் தூங்க வைத்தேன்.. :)

 

அவன்:  ஆ..!

 

கடவுள்: உனது காரை சரியாக ஸ்டார்ட் செய்யமுடியாமல் தடுத்தேன், ஏனெனில், இன்று நீ செல்லும் சாலையில் குடிபோதையில் ஒருவன் தாறுமாறாக காரை ஓட்டிக்கொண்டு வந்தான்..அவன் உன் காரை இடித்திருக்கலாம்..!

 

அவன்: அப்படியா..? பிழைத்தேன்! :o

 

கடவுள்: உன் அலுவலக உணவகத்தில், முதலில் சாப்பாடு பரிமாறியவருக்கு தொற்று நோய்..ஆகையால் அவர் கையால் பரிமாறிய உணவை நீ உட்கொண்டிருந்தால், அந்நோய் தொற்றி உன்னால் தொடர்ந்து வேலைக்கு செல்ல இயலாதல்லவா..?

 

அவன்: சரி..

 

கடவுள்: உன்னை தொலைபேசியில் அழைத்தவர், நீ அந்த அழைப்பில் சொல்லப்போகும் பேச்சை ஒரு வழக்கில் பொய்யான சாட்சிமாக்க ஏற்பாடு செய்திருந்தார் அதனால் உன் தொலைபேசியை அந்நேரம் செயலிழக்க செய்தேன்..

 

அவன்: ஓ அப்படியா..?

 

கடவுள்: நீ புதிதாக வாங்கியுள்ள ஃபுட் மசாஜ்ஜரில் மின்கசிவு உள்ளது. அதை நீ இயக்கும் பட்சத்தில், மின்சார பழுதால் உன் வீடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் இருந்தது..அதனை தடுக்கவே மசாஜ்ஜரை வேலை செய்ய விடவில்லை. :)

 

அவன்: ஓ..! இப்பொழுது புரிந்தது..உங்களைப் பற்றி தவறாக எண்ணியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

 

கடவுள்: வருந்த வேண்டாம்..கடவுளை நம்ப பழகிக்கொள், எல்லா செயலிலும், நன்மையும், தீமையும் நிச்சயம் காரணத்தோடு இருக்கும்!

 

அவன்: உங்களை நான் இப்பொழுது முழுமையாக நம்புகிறேன்.

 

கடவுள்: ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கும்பொழுது, உன்னுடைய அன்றைய திட்டங்களை விட என்னுடைய செயல்கள் நிச்சயம் நன்மையே பயக்குமென நம்பு.

 

அவன்:  நிச்சயமாக இனி உங்கள் செயல்களை மனமார நம்புகிறேன்.. அனைத்திற்கும் நன்றி, கடவுளே!

 

கடவுள்: வாழ்க வளமுடனும், நலமுடனும்!

 

கடவுளும் மறைந்தார், அவனும் நிம்மதியுற்றான். keumdrapeau.gif

 

 

-மின்னஞ்சலில் வந்ததை, தமிழாக்கம் செய்து பதிந்துள்ளேன்..

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நேரம் இன்று  இரவு 8.00 மணி.

 

 ஆவி ஒன்று கடவுளிடம் பேசுகின்றது.

 

ஆவி : கடவுளே இதென்ன சோதனை இப்பொழுது என்னை ஏன் சாகடித்தீர்கள் !

கடவுள்: உன்னைக் காப்பாற்றவே  உன்னைச் சாகடித்தேன்.!

ஆவி : காப்பாற்றவா , எனக்கு ஒன்றும் விளங்கவில்லை !

கடவுள் : இன்று என்ன நாள் சொல்லு பார்ப்போம் !

ஆவி : பிப்ரவரி  ( கடவுளுக்கு இங்கிலிஸ் தெரியுமோ)  மாசி 14.

கடவுள்: மெத்தச் சரி . இன்று வலன்டைன் டே ( இவனுக்கு ஆங்கிலம் விளங்குமோ) காதலர் தினம் தெரியுமா !

ஆவி: நன்றாகத் தெரியுமே , அதுக்காகத்தானே புது உடுப்புப் போட்டு புது ரோஜாவுடன் காதலியைச் சந்திக்கப் போனேன்,  அதுக்குள்ள சாகடித்திட்டீங்களே !

கடவுள் : ஆம் ! நீ அவளிடம் மலர் கொடுத்து மணமுடித்தால் இன்னும் 50 வருடத்துக்கு நிம்மதி இல்லாமல் அலைவாய் , அதுதான்...!

ஆவி : அதெப்படி ! சுவி ,வன்னியன், குமாரசாமி எல்லாம்....!

கடவுள் : நிறுத்து ! அவர்களுக்கு இன்னும் என் தரிசனம் கிடைக்கவில்லை !

ஆவி :   எனக்கு  ....!

கடவுள்: இன்று காலையிலேயே கிடைத்து விட்டது !

 ஆவி கீழே பார்க்கிறது , அந்தப் பெண்னுடன் சுன்டல்  கடலை போட்டுக்கொண்டு....! :lol::D

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறும்பான கற்பனை நல்லா இருக்கு, சுவி. :)

  • கருத்துக்கள உறவுகள்
மனி அடித்தது. வகுப்பைவிட்டு வெளியே வந்த ராசவன்னியர்.... திடீரென வெயில் பட்டதால் கண்கள் கூசியதோ..! அல்லது முன்னால் நின்ற நங்கையின் ஒளி பட்டுக் கூசியதோ..! வன்னியருக்குத்தான் தெரியும்..!!
 
தங்கை: அண்ணா ராசவன்னியர் என்னைப் பார்த்துக் கண்ணடித்தவர்..!
அண்ணன்: டேய் வன்னியா என் தங்கையைப் பார்த்துக் கண்ணடித்தாயா...??? 
ராசவன்னியர்: வெயில் பட்டுக் கண் கூசியது. உங்கள் தங்கை தவறாக விளங்கிவிட்டார்..!
 
பளீர்..! என்று ஒரு மின்னல்..!! ராசவன்னியர் கன்னத்தையும் பொத்த கண்களும் மூடித்திறந்தன.!!
 
அண்ணன்: மன்னிச்சுக்கொள் வன்னியர் வெளிச்சம் பட்டால் உனக்குக் கண்கூசுவது உண்மைதான். தங்கைதான் தவறாக விளங்கிவிட்டார்..!  :D  :lol:  :o
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பளீர்..! என்று ஒரு மின்னல்..!! ராசவன்னியர் கன்னத்தையும் பொத்த கண்களும் மூடித்திறந்தன.!!
 

vil-blagueur.gif  பாஞ்ச்..பாஞ்ச், கதை பெட்டை மாதிரி வடிவாயிருக்கு, ஆனால் வழக்கம் போல 

விளங்கேல்ல!

vilcoca.gif.நேரடியா சொல்லவே மாட்டீங்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

vil-blagueur.gif பாஞ்ச்..பாஞ்ச், கதை பெட்டை மாதிரி வடிவாயிருக்கு, ஆனால் வழக்கம் போல

விளங்கேல்ல!

vilcoca.gif.நேரடியா சொல்லவே மாட்டீங்களா? :D

அண்ணன் பளார் என்று அறைந்துவிட்டாராம்.. ::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் பளார் என்று அறைந்துவிட்டாராம்.. : :D

 

ப்ப்.. பூ...! இவ்வளவுதானா?

இதற்கா இத்தனை பில்டப்பு பாஞ்சு?

 

militaire-love.gif

 

அண்ணன் போன பின், அப்பெண் கொடுத்த அளவில்லா ச்ச்..ச்ச் எமக்கே அமுதமான சொந்தம்..!

காதல்ல இதெல்லாம் சகஜமப்பு..! :)

இதெல்லாம் உங்களுக்கெங்கே தெரியப் போகுது? :wub:

 

barque.gif

 

இப்பொழுது "ஆஹா இன்ப நிலாவினிலே, ஓஹோ ஜெகமே ஆடிடுதே" என அன்பால் எங்கள் வாழ்க்கைப் படகு ஓடிக்கொண்டிருக்கிறது.. :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

கோழியைக் கட்டித்தூக்கி மனோரமா அதனைப் பார்த்துப் பார்த்துக் கோழிக்கறி சாப்பிட்டதும், கமலகாசன் தொடங்கி மோகன்வரை வெறும் தட்டை வைத்து ஆ..... ஊ..... என்று சுவைத்துச் சாப்பிட்ட சினிமாப் படங்களும் எத்தனையோ பார்த்துவிட்டேன் ராசா. ஆனாலும் உங்கள் 'சிமைலி' ஆகா..!. ஓகோ...! அபாரம்...!! அதனைப் பார்க்கவே உங்களோடு விடாமல் மோதுவதற்கு ஆசை வளர்கிறது. :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோழியைக் கட்டித்தூக்கி மனோரமா அதனைப் பார்த்துப் பார்த்துக் கோழிக்கறி சாப்பிட்டதும், கமலகாசன் தொடங்கி மோகன்வரை வெறும் தட்டை வைத்து ஆ..... ஊ..... என்று சுவைத்துச் சாப்பிட்ட சினிமாப் படங்களும் எத்தனையோ பார்த்துவிட்டேன் ராசா. ஆனாலும் உங்கள் 'சிமைலி' ஆகா..!. ஓகோ...! அபாரம்...!! அதனைப் பார்க்கவே உங்களோடு விடாமல் மோதுவதற்கு ஆசை வளர்கிறது. :D :D

 

நன்றி, பாஞ்சு.

 

vil-langue.gif இது 'வஞ்சகப் புகழ்ச்சி' இல்லைதானே? 

 

Let we confine to the topic! tireroreilles.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, பாஞ்சு.

 

vil-langue.gif இது 'வஞ்சகப் புகழ்ச்சி' இல்லைதானே? 

 

Let we confine to the topic! tireroreilles.gif

சத்தியமாக இல்லை. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம்...சந்தோசம்.. எங்கே?

 

ஒரு சிற்றூரில் கிராமத்து கூட்டம் நடந்தது.

 

திடீரென ஒரு முதியவர் (நம்ம 'பாஞ்சு' ன்னு வைத்துக் கொள்ளுங்களேன் :rolleyes: ) எழுந்தார். தன் கையிலுள்ள சிறு பொதியிலிருந்து அனைவருக்கும் ஒரு பலூனும், அதில் எழுத ஒரு பேனாவும் கொடுத்து ஊதச் சொன்னார். பின்னர் அனைத்து பலூன்களிலும் அவரவர் பெயர்களை எழுதச் சொல்லி மொத்தமாக சேகரித்து ஒரு அறைக்குள் போடச் சொல்லி கதவை மூடினார்.

இப்பொழுது பெயர் எழுதியவர்களை அழைத்து, உங்கள் பெயர் எழுதின பலூனை ஐந்து நிமிடத்திற்குள் கண்டுபிடித்து எடுத்துவரவேண்டுமென கூறினார்.

எல்லோரும் தங்கள் பலூனை குறிப்பிட்ட நேரத்திற்குள் தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில், ஒருத்தரையொருத்தர் முண்டியடித்துக்கொண்டும், தள்ளிவிட்டும், முட்டி மோதி தேடியதில் ஒரே குழப்பமாய் அந்த அறையே அல்லோகலப்பட்டது.

ஐந்து நிமிட முடிவில் யாருமே தங்களின் பலூனை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதைக்கண்ட முதியவர் அனவரையும் பார்த்து, 'உங்கள் கைகளில் கிட்டும் பலூனை எடுத்து அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர்கொண்டவரிடம் அந்த பலூனை ஒப்படையுங்கள்' என கூறினார்.

ஒரே நிமிடத்தில் அனைவருக்கும் அவரவரின் பலூன் கிட்டியது.

(பாஞ்சு) முதியவர் பேச ஆரம்பித்தார்.

"எல்லோரும் வாழ்க்கையின் சந்தோசத்தை அது எங்கிருக்கிறதென தெரியாமலே முட்டிமோதி தேடியலைகிறீர்கள். நமது சந்தோசம் அடுத்தவர்களின் சந்தோசத்திலேயே தங்கியுள்ளது. நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சந்தோசத்தினால் உங்களின் சந்தோசத்தை திரும்பப் பெறுவீர்கள், அதுவே வாழ்க்கை" என்றார்.

 

 

சரிதானே பாஞ்சு? :)

 

 

-படித்தது

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது..!  ஆனால் பலூனை எடுத்துக் கொடுப்பவர் நகத்தால்  ஓட்டை போட்டுட்டுக் கொடுக்கக் கூடாது சொல்லீட்டன்...! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

 

சந்தோசம்...சந்தோசம்.. எங்கே?

 

(பாஞ்சு) முதியவர் பேச ஆரம்பித்தார்.

"எல்லோரும் வாழ்க்கையின் சந்தோசத்தை அது எங்கிருக்கிறதென தெரியாமலே முட்டிமோதி தேடியலைகிறீர்கள். நமது சந்தோசம் அடுத்தவர்களின் சந்தோசத்திலேயே தங்கியுள்ளது. நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சந்தோசத்தினால் உங்களின் சந்தோசத்தை திரும்பப் பெறுவீர்கள், அதுவே வாழ்க்கை" என்றார்.

 

 

சரிதானே பாஞ்சு? :)

 

 

சரிதான் வன்னி ராசாவே..!! எனக்கு முதுமையை நீங்கள் தந்ததினால்..... அந்த முதுமையைத் திரும்ப நீங்களே பெற்றுவிடக் கூடாது என்பதுதான் என் கவலை!!! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது..!  ஆனால் பலூனை எடுத்துக் கொடுப்பவர் நகத்தால்  ஓட்டை போட்டுட்டுக் கொடுக்கக் கூடாது சொல்லீட்டன்...! :lol::D

நன்றி.

நீங்கள் 'ஈழத்து நாகேஷின்' சிஷ்யரா சுவி?  eventail.gif

இந்த மாதிரி நாசூக்காக ஓட்டை போடும் 'ட்ரிக்'கெல்லாம் தெரிந்து வைத்துள்ளீர்களே? :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரிதான் வன்னி ராசாவே..!! எனக்கு முதுமையை நீங்கள் தந்ததினால்..... அந்த முதுமையைத் திரும்ப நீங்களே பெற்றுவிடக் கூடாது என்பதுதான் என் கவலை!!! :o

 

நான் எங்கே தந்தேன்? blabla.gif

 

அது நீங்களே உங்கள் விவரணையில் (Profile) போட்டுக்கொண்டதுதானே பாஞ்சு?   chicken.gif

 

vil2_anglais3.gif  நான் 'இளமை'யில் பேரனை பார்த்தாச்சுதே !

 

நீங்கள் சற்றே வெளியே வந்து அருள் வாக்குகளை  வீசுங்கோ!! :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.