Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்

Featured Replies

கடவுளை கடவுளாகப் பார்த்தால் கடவுள் எங்கும் தெரிவார். கடவுளை கறுமமாகப் பார்த்தால் கறுமம்தான்.

 

இங்கே கடவுள் நம்பிக்கை இல்லாதோரும் ஏதோ தங்களின் மானம் மரியாதை போய்விட்டது போன்ற வறட்டுக் கௌரவ உணர்வில் ஒருவர் மனங்களை மேலோட்டமான வசைகாடல்ளின்மூலம் நோகடிப்பதையே அவதானிக்க முடிகிறது. 

 

மதங்கள் பொதுவாகக் கூறும் மனிதாபிமான உணர்வே பல கருத்தாடல்களில் இல்லாதபோது, இத் திரியை அகற்றுவது இப்படி ஒரு கசப்புணர்வை மறக்க வைக்க உதவும் என நினைக்கிறேன்.

 

மற்றும், காலம் காலமாக பிரிவினைகளை மட்டுமே கட்டிக் காவாந்துபண்ண இடம் பெறும் சாதி, சமயம் சம்பந்தமான கருத்தாடல்களை நிர்வாகம் தடைசெய்வது இக்கள உறுப்பினர்களிடையேயாவது கசப்புணர்வுகளை வளர்க்காமலிருக்க உதவும் என் நினைக்கிறேன். இக் கருத்தை தயவு செய்து நிர்வாகம் கவனத்தில் எடுக்கவும்.

Edited by sOliyAn

  • Replies 254
  • Views 33k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ்சூரியன்
    தமிழ்சூரியன்

    கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

  • சண்டமாருதன்
    சண்டமாருதன்

    நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

  • சண்டமாருதன்
    சண்டமாருதன்

    சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

 

இந்து சமயத்தை அவமதித்து கிறீஸ்தவ ஆதரவாளராக வைக்கப்படும் கருத்துகளுக்கு நீங்கள் எந்தப் பதிலும் வைக்கவில்லை தமிழ்சூரியன்.

 

இங்கே யாரும் இந்து மதத்தை அவமதிக்கவில்லை ..................தமிழன் இரத்தத்தில் ஊறியது சைவமத காலாச்சாரம் ,அவன் மதத்தால் கிறிஸ்தவனாய் இருந்தால் கூட ................கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட விதம் எல்லோரும் அறிந்ததே ..............ஆனாலும் நம் பின்பற்றும் மதத்தோடு ,நாம் வாழும் சமுதாயத்திற்கு ,ஏற்புடையவனாக ,மனிதனாக வாழ்வதே மனிதப்பண்பு ..........அந்த வகையில் ஆரோக்கியமாக விமைசிக்கப்படவெண்டிய விடயங்களை .இப்பிடி மனித மனங்களை புண்படுத்தும் விதமாக விமர்சித்தால் .இறுதியில் மனித மனங்கள் உடைந்து துன்புறும் ...........எம் தமிழீழ விடுதலைபபாதையின் தூரம் அதிகரித்து உள்ள இந்த நேரத்தில் ...நாம் இப்பிடியான அர்த்தமற்ற ,தேவையற்ற விடயங்களை திணிப்பது ..........எம் விடுதலைப்பாதை அண்ட வெளியின் எல்லையை கடந்துவிடும் .....................மீண்டும் சமாதானம் .மனிதர்களாகிய நாம் பலவீனர்கள் .பாவம் செய்வோம் ....மறப்போம் ,மன்னிப்போம் .தொடர்ந்து பயணிப்போம் .......................விடுதலைத்திசை நோக்கி  :)

புயலுக்குப் பின் சமாதானம்.  :D
 
பிற மதங்களை மதிப்போம். நன்றி.
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்மாயில் வைப்பாடிக்குப் பிறக்கவில்லை. அரைகுறையாக பைபிளை விலங்கிக்கொண்டு கற்றுக்குட்டி போல எழுத வெளிக்கிட்டால் இதுதான் பிரச்சினை.

நடந்தது இதுதான், . வயதான ஆபிரகாம் - சாராள் தம்பதிகளுக்கு நெடுநாட்களாக பிள்ளைப்பேறு இருக்கவில்லை. அதனால் கவலையடைந்த ஆபிரகாம் கடவுளிடம் வேண்டினார். பயப்படாதே, உனது சந்ததியைப் பல்கிப் பெருகச் செய்வோம் என்று கடவுள் அவருக்கு உறுதியளித்தார். ஆனாலும் பொறுமையிழந்த ஆபிரகாமின் மனைவி சாராளோ அன்றைய பழக்க வழக்கத்தின்படி தமது வாரிசை உருவாக்கவேண்டும் என்று எண்ணி, தனது வீட்டில் பணிப்பென்னாக இருந்த ஆகாரிடம் தனது கணவனான ஆபிரகாமை உடலுறவுகொண்டாவது பிள்ளையொன்றைப் பெற்றெடுக்க வேண்டுமென்று விரும்பினாள். அதன்பேறாக ஆபிரகாமுக்கும் பணிப்பெண் ஆகாருக்கும் பிறந்த குழந்தைதான் இஸ்மாயில்.

ஆனால், சில வருடங்களிலேயே ஆபிரகாமின் மனைவி சாராளும் கர்ப்பமடைந்து ஆபிராகமின் உண்மையான வாரிசான ஈசாக்கைப் பெற்றெடுத்தாள்.

பிள்ளைகள் இருவரும் ஒரேவிட்டில் வளர்ந்து வந்துகொண்டிருக்க மூத்தவனான இஸ்மாயில் தனது மகனான ஈசாக்கை அடிப்பதைப் பொறுக்கமுடியாத ஆபிரகாமின் மனைவி சாராள், தனது கணனவனைக் கட்டாயப்படுத்தி பணிப்பெண் சாராளையும், அவளது குழந்தை இஸ்மாயிலையும் வீட்டை விட்டே துரத்துகிறாள். ஆபிரகாமிற்குப் பிறந்ததால், இஸ்மாயிலின் வம்சத்தையும் தான் ஆசீர்வதிப்பதாக கடவுள் ஆபிரகாமுக்கு உறுதியளித்தார்.

ஆனாலும் கூட இந்த இரு ஆபிரகாமின் பிள்ளைகளின் வம்சங்களுக்கு இடையே தீராத பகை இருக்கும் என்று எச்சரித்த கடவுள், இஸ்மாயிலின் வம்சம் உலகத்துக்கு எதிராகத் திரும்பும் என்றும், முழு உலகும் அந்த வம்சத்துக்கு எதிராகப் போர்தொடுக்கும் என்றும் அன்றே கூறியிருந்தார்.

இன்றைக்கு யூதர் என்று அழைக்கப்படுமபீனம் ஆபிரகாமின் மனைவிக்குப் பிறந்த ஈசாக்கின் வம்சம். அதேபோல இன்று முஸ்லீம்கள் என்று அழைக்கப்படும் இனம், ஆபிரகாமிற்கு அவரது வீட்டுப் பணிப்பெண்ணான ஆகாரின் மூலம் பிறந்த இஸ்மாயிலின் வம்சம்.

பைபிளில் சொல்லப்பட்டதுபோல யூதர்களுக்கும் - இஸ்லாமியருக்குமான போர்தான் இன்று முழு உலகத்திலும் நடந்துவருகிறது.ஆகார் - ஆபிரகாமின் வைப்பாட்டியில்லை. பைபிளில் அப்படியிருக்கிறது, இப்படியிருக்கிறது என்று ஏன் சகட்டுமேனிக்குச் சொல்கிறீர்கள். புரியாவிட்டால் படித்துப்பாருங்கள், அல்லது தெரிந்தவர்களைக் கேளுங்கள்.

உங்கள் மதம் உயர்வானதாக இருக்கலாம் உங்கள் மதத்தில் உள்ள கொள்கைகள் மேன்மையானதாக இருக்கலாம் அதற்காக எங்கள் மதம் இழிவானது என்று அர்த்தம் அல்லவே

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மதம் உயர்வானதாக இருக்கலாம் உங்கள் மதத்தில் உள்ள கொள்கைகள் மேன்மையானதாக இருக்கலாம் அதற்காக எங்கள் மதம் இழிவானது என்று அர்த்தம் அல்லவே

 

சுண்டல்,

 

நான் எனது மதம் மேலானது என்று எங்கும் சொல்லவில்லையே. உண்மையாகவே இந்துக்களை பலாத்காரப்படுத்தித்தான் போர்த்துக்கேயரால் கிறீஸ்த்தவம் இலங்கையில் பரப்பப் பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

 

நீங்கள் மேலே மேற்கோள் காட்டியிருக்கும் என்னால் எழுதப்பட்ட பகுதி கிறீஸ்த்தவம் மேலானது என்று காட்ட எழுதப்படவில்லை. தூயவன் பைபிளில் உள்ளதென்று ஒரு கருத்தை எழுதியிருந்தார். அது தவறென்று தெரிந்ததால்த்தான் பைபிளில் உண்மையாக எழுதியிருப்பதை எழுதியிருந்தேன். அதற்காக எனது மதம் இந்து மதத்திலும் மேலானதென்று நான் ஒருபோதும் நினைக்கவோ, எழுதவோ இல்லையே. அடுத்ததாக, பைபிளில் சில இடங்களில் (குறிப்பாக ஆதியாகமத்தில்) சொல்லப்பட்டுள்ள விடயங்கள் பாதிக் கற்பனை என்றும் எழுதியிருக்கிறேன். அப்படியிருக்க, நான் எனது மதம் இந்து மதத்திலும் மேலானதென்று எப்படிச் சொல்ல முடியும் ? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.