Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிசில் உள்ள எட்டப்பர் சிலரின் தமிழீழ விடுதலைக்கு எதிராண தி

Featured Replies

சுவிசில் உள்ள எட்டப்பர் சிலரின் தமிழீழ விடுதலைக்கு எதிராண திட்டமிட்ட பிரச்சாரம்.

http://www.sf.tv/var/videoplayer.php?catid...0%3A18%3A32.549

  • Replies 50
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விது!

இங்கு பேசுவதை மொழிபெயர்த்தோ, அல்லது குறிப்புக்களையோ தாறிங்களா?

ஆமாம் எமக்கு எதுவும் புரியவ்வில்லை.ஆனால் அந்த ஈழத்து நாய் எதோ புலிகளை பற்றி குறைகூறுகின்றது என தெரிகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப்பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=13584

ஆனால் எது எட்டப்பர்களின் வேலையாக இருந்தாலும் இதில் அவர்கள் புலிகளின் முக்கிற உறுப்பினர்களையும் பேட்டி காண்கிறார்கள். அவரின் பதில் முட்டள் தனமானதாக உள்ளது. காசு தர இயலாதவர்களிடம் தாங்கள் கடனாக பெற்றுத்தரும்படி கேட்கிறார்களாம். இது கிட்டத்தட்ட வற்புறுத்தல் என்பதை அவர் உணரவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று பொறுங்கள் நான் வெளியில் போய்ட்டு வந்து இதனை மொழி பெயர்த்து தருகிறேன்.

எடுத்தவுடனேயே ஏதோ எட்டப்பர் வேலை என்று குற்றஞ்சாட்டுவதில் பயனில்லை. சென்றவருடம் இங்கு புலிகள் இங்குள்ள தமிழர்களுக்கு கொடுத்த அடையாள அட்டை விண்ணப்பப்படிபமே இவ்வளவு பிரைச்சினைகளுக்கும் காரணம். அந்தப்படிவம் பற்றி பொலிஸ் திணைக்களம் மற்றும் ஊடகங்கள் இங்குள்ள தமிழர்களை பேட்டி எடுத்து அவற்றை வெளியிடுகின்றார்கள். அதன் தொடர்ச்சியாகவே சுவிஸ் அரசாங்க ஜேர்மன்மொழித் தொலைக்காட்சி இதனைச் செய்துள்ளது.

அப்படிச் சொல்லுங்கோ வசம்பு சங்கதியை..சும்மா உதுகள் கிளறுப்படாது. கிளறிபடியாத்தான் சனம் உள்ளத்தைத் திறக்குது போல..! இது என்னடா என்றால்.. தங்களுக்கு ஏற்றாப் போல சொல்லாட்டி..எட்டப்பர் என்று சொல்லி உண்மைகளையும் மக்களின் எண்ணங்களையும் மறைச்சிட்டே இருந்தா சனமும் எத்தினை நாளைக்குத்தான் பொறுக்குங்கள். இதாலதான் பிரச்சனைகள் இவ்வளவுக்கு பாரதூரமா போயிட்டு இருக்குது. மக்களுடைய அபிப்பிராயம் எதுவென்றாலும்..அதை கேட்டு..அதன்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தா..ஏன் மக்கள் எதிரா கதைக்கப் போகினம்..! அவைக்கென்ன ஆசையே..எதிராக் கதைக்க. மக்கள் எவரும் போராட்டத்தை எதிர்க்கல்ல. போராட்டத்தை நடத்திற சில பேரின்ர போக்குகள் மக்கள் விரோதமா இருக்கிற போது.. மக்களின்ர எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது அதுகள் எதிராத்தான் நிற்குங்கள். அது ஜனநாயகத்தை மதிக்கிற இடத்தில உள்ள மக்களின் உரிமை...! இது என்னடா என்றால் மக்களின் ஒரு பக்கக் குரலை நசிச்சு வைச்சிட்டு இருந்தா...அது வசதி கிடைக்கேக்க இப்படி வீறிட்டு எழத்தான் செய்யும்..! அப்புறம் அதை மறைக்க எட்டப்பர்..ஒட்டுக்குழு..துரோக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை விடுவிப்பதற்காக சிறீலங்கா அரசாங்கம் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

புலிகள் ஒரு தனிநாட்டிற்காக போராடுகிறார்கள்.

சுவிசில் 30 ஆயிரத்திற்கும் மேலான தமிழர்கள் வாழ்கிறார்கள். இதில் அநேகமானோர் ஒரு தனிநாட்டை விரும்பினாலும் ஒரு சிலர் புலிகளின் நிலைப்பாட்டை எதிர்கிறார்கள். புலிகள் தற்பொழுது போராட ஆரம்பித்து விட்டதால் அவர்களிற்கு பணம் தேவைப்படுகிறது. எனவே இங்குள்ளவர்களிடம் பணம் சேர்க்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தேவையேற்படின் வன்முறையாலும் பணம் சேர்கலாம்.

சுவிஸ் காவல்துறையை சேர்ந்தவர் புலிகளின் நிதி சேகரிப்பு கடந்த மாதங்களில் அதிகரித்திருப்பதாக உறுதியளிக்கிறார்.

இங்கே காட்டப்படும் விண்ணப்பப்படிவம் புலிகளால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இங்கு வாழும் தமிழர்களிடம் கொடுக்கப்பட்டது. இதை நிறப்புபவரிற்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். அதனை வைத்துக்கொண்டு அவர் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிற்குள் பயணிக்கலாம். இப் படிவத்தில் சொந்த விடயங்கள் அதிகமாக கேட்கப்படுகின்றன. எவ்வளவு சம்பளம் எடுக்கிறார்கள். புலிகளிற்கு எவ்வளவு கொடுக்கிறார்கள் போன்ற தகவல்கள் இப்படிவத்தில் அடங்கும். இப் படிவம் சிறீலங்காவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

nஜகன் பெரியதம்பி என்பவர் சுரிச் மாநிலத்தில் தமிழர்களிற்கான ஆலோசனை மையம் ஒன்றை நடத்துகிறார். புலிகளால் அச்சுறுத்தப்படும் மக்கள் இவரிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். இங்கு உதவி கேட்டு வருபவர்கள் கருத்துக்களின்படி தாயகம் சென்றவர்களின் கடவுச்சீட்டை புலிகள் பறிமுதல் செய்கிறார்கள் என்றும் இதற்கு காரணம் அவர்கள் நிதி வழங்கவில்லை என்பது அல்லது குறைந்த நிதி வழங்கியுள்ளார்கள் என்பதுமே யாகும். (இதையே தான் பெரியதம்பி சொல்கிறார்.)

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் எல்லகைள் சரியாக கண்கானிக்கப்படுகின்றன. பயணம் செய்யும் ஒவ்வொரு வெளிநாட்டவர்கள் பற்றியும் தகவல்களை வைத்திருக்கிறார்கள்.

தங்களது உறவினர்களிற்கு எதுவும் எற்படலாம் என்ற பயத்தினாலயே ஒருவரும் அங்கு காவல்துறையினரிடம் செல்வதில்லை.

nஜகன் பெரியதம்பி தனது குடும்பத்துடன் 20 வருடங்களாக சுவிசில் அகதியாக வாழ்ந்து வருகிறார். புலிகளின் தனிநாடு கோட்பாட்டை அவர் ஆதரிக்கிறார். ஆனால் அதற்கான புலிகளின் அணுகுமுறைகளை அவர் கண்டிக்கின்றார்.

தனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தவர் விடுமுறைக்கு சிறீலங்கா சென்றதாகவும் அங்கே புலிகள் அவரின் கடவுச்சீட்டை பறித்து வைத்துவிட்டு 12 ஆயிரம் பிராங்குகள் கேட்டதாகவும் ௬றுகிறார். பின்பு பணத்தை கட்டியே அவர் மறுபடியும் இங்கு வந்து சேர்தார்.

தமிழ் கடை வைத்திருப்பவர்களும் ஆயிரக்கணக்கில் நிதி வழங்கியுள்;ளார்கள். இவர்கள் பொருட்களை சிறீலங்காவில் இருந்து எடுப்பதால் அடிக்கடி அங்கே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால் வேறு வழியின்றி கட்டுகிறார்கள்.

ஒரு கடை உரிமையாளர் 70 ஆயிரம் பிராங் கட்டியதாக அறியமுடிகிறது. இது அவரின் விருப்பத்திற்கு மாறாக நடந்தது. பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் ௬றுகிறார்: புலிகள் தங்களிடம் வந்து 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கேட்பார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்தால் குறைந்தது 5 ஆயிரம் என்றாலும் கட்ட சொல்வார்கள்.

நாங்கள் புலிகளின் பேச்சாளர் திரு அன்ரம் பொன்ராயா அவர்களை இது பற்றி அறிய கேட்டோம்.

அவர் ௬றுவது: எங்களிற்கு நிறைய பணம் தேவை. நாட்டை கட்டியெருப்புவதற்கு. எங்களிற்கு அவசரமாக பணம் தேவை படும் போது கேட்போம். யாரிடமாவது பணம் இல்லாவிட்டால் கிரேடிட் எடுத்து தரும்படி கேட்போம். ஆனால் நாங்கள் அந்த பணத்தை திருப்பி கொடுப்போம் என ௬றினார்.

இந்தப் பணம் சமாதானத்திற்கா அல்லது சண்டைக்கா என்பது இவரிற்கு தெரியாது. ௬டுதலான தமிழ் அமைப்புக்கள் புலிகளால் கண்காணிக்கப்படுகின்றன.

பொன்ராயா வன்முறையை பயன்படுத்தி பணம் சேர்ப்பதை மறுக்கிறார். அவர் ௬றுகிறார்: ஒருவர் நிதி பங்களிப்பு செய்யவில்லை என்றால் அவரிற்கு மனதிற்குள் ஒரு குற்ற உணர்சி இருக்கும். மற்றவர்கள் செய்கிறார்களே தன்னால் செய்ய முடியவில்லை என்று. இந்தப் குற்ற உணர்ச்சியே அவர்களை பயத்திற்கு உள்ளாக்குகிறது.

பின்னர் பெரியதம்பி அவர்களை பேட்டி காண்கிறார்கள். அவரிடம் தற்பெர்ழுது சுவிசில் நிறைய மக்கள் காசு கொடுக்கிறார்களா அல்லது கொடுக்க மறுக்கிறார்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கிறார்: நிறைய மக்கள் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவர்களால் அப்படி கொடுக்காமல் இருக்கு முடியாது (பயத்தினால்).

புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாலும், தற்கொலைத்தாக்குதல்களை மேற்குகொள்வதாலும் இவர்களை நிறைய நாடுகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதி தடை செய்துள்ளுது.

ஆனால் சுவிசில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்படவில்லை. எனவே அவர்கள் நிதி சேகரிப்பது தடைசெய்ய முடியாது. 10 வருடத்திற்கு முன்பு நடந்த சுற்றிவளைப்பில் நிறைய பணம் அரசாங்கத்தால் முடிக்கப்பட்டது. ஆனால் இந்த சுற்றிவளைப்பு அரசாங்கத்திற்கு தோல்வியியையே முடிந்தது. காரணம் நிதி சேகரிப்பது சுவிசில் தடைசெய்யப்படவில்லை என்பதேயாகும். வன்முறையை பயன்படுத்தி காசு சேர்ப்தாக ஒருவரும் குற்றம் சொல்லவும் இல்லை (10 வருடத்திற்கு முன்னம்).

புலிகளிற்கு பணங்கள் போய் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு நிரந்தரமான சமாதனம் சிறீலங்காவில் ஏற்பட நிறைய காலம் எடுக்கும்.

முக்கிய குறிப்பு: இதில் எழுதியிருப்பவை எனது கருத்து அல்ல!!

எடுத்தவுடனேயே ஏதோ எட்டப்பர் வேலை என்று குற்றஞ்சாட்டுவதில் பயனில்லை. சென்றவருடம் இங்கு புலிகள் இங்குள்ள தமிழர்களுக்கு கொடுத்த அடையாள அட்டை விண்ணப்பப்படிபமே இவ்வளவு பிரைச்சினைகளுக்கும் காரணம். அந்தப்படிவம் பற்றி பொலிஸ் திணைக்களம் மற்றும் ஊடகங்கள் இங்குள்ள தமிழர்களை பேட்டி எடுத்து அவற்றை வெளியிடுகின்றார்கள். அதன் தொடர்ச்சியாகவே சுவிஸ் அரசாங்க ஜேர்மன்மொழித் தொலைக்காட்சி இதனைச் செய்துள்ளது.

வ(ச)ம்பு உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் உங்களை வற்புறுத்தினார்களா?

இந்த ஜெகன் என்பவர் யார்?

இவருடைய பின்னணி உங்களுக்கு தெரியுமா? இவர் சுவிஸில் பொதுமக்களுக்கு செய்யும் உதவி என்ன?

நண்பரே உங்கள் கருத்துக்கள் சிலவற்றில் ஆர்வமுள்ளவன் நான்..

நீங்கள் அறிந்தான் எழுதுகின்றீர்களா? அல்லது குத்து மதிப்பாகத்தான் எழுதுகின்றீர்களா?

இனிமேல் நான் எழுதுவது உங்கள் பதிலை கண்டு. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்.............

தயவுசெய்து நுனிப்புல் மேயாதீர்கள்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையை சொல்லப்போனால் இந்த யெகன் என்பவரை நான் இதுவரை சுவிசில் கண்டதில்லை!! இவரை பற்றி கேள்விப்பட்டதுமில்லை. அரசாங்கத்திடம் இருந்து தமிழனை கேவலமாக திசைதிருப்புவதற்கு இவர் போன்றவர்களிற்கு பணம் நன்றாகவே வரும்.

உண்மையை சொல்லப்போனால் இந்த யெகன் என்பவரை நான் இதுவரை சுவிசில் கண்டதில்லை!! இவரை பற்றி கேள்விப்பட்டதுமில்லை. அரசாங்கத்திடம் இருந்து தமிழனை கேவலமாக திசைதிருப்புவதற்கு இவர் போன்றவர்களிற்கு பணம் நன்றாகவே வரும்.

என்ன என்னவும் பாவித்துவிட்டீர்களா? இந்த நாய் பக்தி வியாபாரம் செய்கின்றது. சொறிநாய் புளொட் அமைப்பின் உறுப்பினன். உங்கடை நாட்டிலை எங்கோயோ ஒரு இடத்திலை கோவில்கட்டி வியாபாரம் செய்வதாக அறிந்தேன். அந்த இடம் சரியாக ஞாபகத்துக்கு வரவில்லை. நண்பர்களை விசாரித்து சொல்கின்றேன்.

இந்த கோவிலிருந்து ஐயர் பிரிந்து தனியாக கோவில் ஆரம்பித்ததாக அறிந்தேன். இந்த அகிம்சாவாதி புளொட் அடியாட்களை திரட்டி ஐயருக்கு அடிப்பதற்காக ஆயத்தங்கள் செய்ததாக கள உறுப்பினர் ஒருவர் முன்பு குறிப்பிட்டிருந்தார் :twisted:

வடிவு..சில செயற்பாடுகளை எதிர்க்கினம் என்றதுக்காக அவை பணம் பெறுகினம் என்றதை நீங்கள் என்ன ஆதாரத்தோட சொல்லுறீங்கள். நீங்கள் சொன்னது போல 30,000 பேர் உள்ள இடத்தில் நீங்கள் அனைவரையும் சந்திச்சு இருக்கிறீங்களா.??! அவை ஒவ்வொருவருக்கையும் உள்ள உள்ளக் கிடக்கைகளை கேட்டிருக்கிறீங்களா...??! சில பேர் சில வழிகளில் பாதிக்கப்பட்டிருக்கும் போது..அவர்களுக்கு தீர்வுகளை எட்டிக் கொடுத்திருந்தால் நிச்சயம் அவர்கள் எதிராப் போகாயினம். அவர்களை தட்டிக் கழிக்கிறது போன்ற..இப்படியான பணம் பெறுறார் துரோகி கைக்கூலி என்பது போன்ற ஆதாரமற்ற செய்திகளைச் சொல்வதுதான் பாதிக்கப்பட்டவர்கள் போராளிகள் மீது வெறுப்படைக் காரணமாகிறது.

மக்களை அணுகும் முறையில் இருக்கிறது மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதில்..! எனவே புகலிடத்தில் இப்படியான சகட்டுமேனிக்கான குற்றச்சாட்டுக்களை மக்கள் மீது சுமத்தி வீணான எதிர்ப்புக்களை சம்பாதிப்பதை விடுத்து மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் அபிப்பிராயம் பெற்று..மாற்று உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதோடு..நிதி சேகரிப்பில் கூட ஒரு மென்மைப் போக்கையும்..மக்கள் விருப்பங்களுக்கு முதன்மை அளித்து அவர்களின் வசதிக்கேற்றார் போலான கொடுப்பனவு வகைகளையும் பரிந்துரைத்து நடவடிக்கைகளைச் செய்யும் போது மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவியளிப்பர் என்பது நிச்சயம். காரணம்..மக்களுக்கு எது விளங்குதோ இல்லையோ..போராட்டத்தின் அவசியம் புரிந்திருக்கிறது..! :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முட்டாள் குருவியளே ஒழுங்க வாசிக்கப்பளகும். மேல எழுதினது என்ர கருத்தில்லை என்டு ஏற்கனவே சொல்லீட்ன். இதை மொழிபெயர்க்க சொல்லி சொன்னதால மொழிபெயர்தனான்.

உண்மையை சொல்லப்போனால் இந்த யெகன் என்பவரை நான் இதுவரை சுவிசில் கண்டதில்லை

குருவிகள் எழுதியது நீங்கள் மொழிபெயர்த்ததுக்கு அல்ல..அதன் பின்னர் எழுதிய உங்கள் குறிப்புச் சொன்ன விடயமாக..!

அதுமட்டுமன்றி...நீங்கள் கோப்படுறதைப் பாத்தால்..செய்திகள் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாகத்தான் வந்திருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது..! :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலவசம் எனும் போது கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும். இவர் செய்யும் வேலை இலவசம் அல்ல. மக்களிடம் இவர் பணம் வாங்குவதில்லை. ஆனால் அரசாங்கம் இவரிற்கு பணம் கொடுக்கிறது. இது போன்று இங்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். பொதுச்சேவை என்று சொல்லி செய்வார்கள். நாங்களும் மக்கள் மேல் உள்ள ஆர்வத்தாhல் செய்கிறார்கள் என்று எண்ணி எமாந்து போகிறோம். ஆனால் அரசாங்கத்தால் இவர்களிற்கு பணம் வருகிறது என்பதை மறந்து விடுகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யெகநாதன் அவரின் ஆலோசனை மையம்.

http://db.integration-zh.ch/iframe/adresse...il.php?id=10427

வடிவேல் 007 எழுதியது:

இலவசம் எனும் போது கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும். இவர் செய்யும் வேலை இலவசம் அல்ல. மக்களிடம் இவர் பணம் வாங்குவதில்லை. ஆனால் அரசாங்கம் இவரிற்கு பணம் கொடுக்கிறது. இது போன்று இங்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். பொதுச்சேவை என்று சொல்லி செய்வார்கள். நாங்களும் மக்கள் மேல் உள்ள ஆர்வத்தாhல் செய்கிறார்கள் என்று எண்ணி எமாந்து போகிறோம். ஆனால் அரசாங்கத்தால் இவர்களிற்கு பணம் வருகிறது என்பதை மறந்து விடுகிறோம்.

வடிவேல்

இலவசமாக உதவுவதற்கு கரிதாஸ் போன்ற நிறுவனங்களிடமிருந்து இட வாடகை தொலைபேசி போன்றவற்றிற்கான உதவிகள் மட்டுமே கிடைக்கும். அதற்கும் சரியான கணக்கு வழக்குகள் காட்டினால் மட்டுமே கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை தான்!! இந்த கண்கொள்ளாக்காட்சியை நான் நேரில் பார்த்தேன். அன்று பொழுதுபோகவில்லை என்று கண்ணுக்கு குளிர்சியா ஏதாவது பாக்கலாம் என்று கோயிலுக்கு போனேன். அங்கு அர்ச்சனை முடிய வேறு அர்ச்சுனை நடந்தது. அன்றைய தினத்துடன் பூசாரியின் கொன்ரக்ட் முடிந்து விட்டதாம். ஆனால் அவரோ தான் வெளியில் போக மாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு ஒரு மூலையில் போய் இருந்திட்டடார். அங்கால பூசாரிக்கு சம்மந்தமா (குடுதலாக பெண்கள்) சார்பாக பேச, இங்கால நிர்வாகத்திற்கு ஆதரவாக (குடுதலான ப்புளட் உறுப்பினர்கள்) பேசினார்கள். பின்னு கொஞ்சம் தள்ளுப்பட்டார்கள். அதன் பின் அந்த கிராமத்தின் அதிபர் அங்கு வர வைக்கப்பட்டார். அதன் பின்னர் பூசாரி அன்றைய தினத்திற்கு பின் அங்கு வருவதில்லை. சில வாரங்கள் கழித்து அந்த கோயில் இருக்கும் இடத்திலிருந்து ஒரு 200மீற்றர் தள்ளி அவர் ஒரு கோயிலை தொடங்கினார். ஒரு முறை சென்றிருந்தேன். போன உடனேயே தங்கள் கோயிலுக்கு ஏதாவது காணிக்கை செலுததுமாறு கேட்டாங்கள். ஆளுவிடங்க சாமி என்டு வந்திட்டன்.

இந்த இரு கோயில்களும் இருக்குமிடம் adliswil.

அப்படியே இந்தப் பிரைச்சினை(கோவில்) எப்படி ஆரம்பமாகியது என்பதையும் எடுத்து விடலாமே வடிவேலு. பூசாரி ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது உட்பட.

சிட்னி கோயில்களை பற்றி தூயா,சுண்டல்,புத்தனின் கவனத்துக்கு.......... :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியல்ல வசம்பு. நீங்கள் சொன்னது போல் சரியான கணக்கு வழக்கு காட்டினால் பணம் கிடைக்கும். ஆனால் அவரிற்கான சம்பளம் என்பது ஒரு மணத்தியாலத்திற்கு இவ்வளவு என்று முடிவு பண்ணப்படும். அதுவே அவரிற்கு போதுமானது. மற்றது நீங்கள் காட்டும் கணக்கை அவர்கள் 80வீதம் சரியா பிழையா என்று ஆராய மாட்டார்கள் (நான் ஒரு புறேயேக்ற் செய்தேன் அந்த அனுபவம் தான். என்னுடன் சேர்ந்து செய்தவர் எனக்கு தெரியாமலே நிறைய அடித்து விட்டார். அதற்கு பிறகு இப்படியான விசயங்களிலிருந்து ஒதுங்கி விட்டேன்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியப்பா பக்தர்கள் ஆர்வமா கேட்கேக்கை நான் சொல்லாமல் இருக்கிறது சரி இல்லை.

இந்த அட்லீசுவீல் கோயில் (அதாவது பழைய கோயில்) தொடங்கப்பட்ட வரலாறு எனக்கு கொஞ்சம் தெரியும். 90ஆம் ஆண்டுகளில் சுவிசில் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவு என்பது நிறையவே இருந்தது. அப்பொழுது விடுதலைப்புலிகளின் பொறுப்பாளராக இருந்த திரு முரளிதரன் அவர்கள் இந்த கோயிலை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தார் (அந்த நேரத்தில் அவர் விடுதலைப்புலிகளின் அமைப்பில் அங்கத்தவராக மட்டுமே இருந்தார்). அதன் பின் அவர் பொறுப்பாளராக உயர்ந்த போது கோயில் விசயங்களில் இருந்து விலகிக்கொண்டார். பூசாரியாக இருந்தவர் கொஞ்சம் புலிகளிற்கு ஆதரவானவர். முரளிதரன் சுவிசில் பொறுப்பாளராக இருக்கும் வரை இந்த கோயிலில் உள்ளவர்கள் தாங்கள் மாற்று இயக்கத்தவர்கள் என்ற வேறு பாட்டை காட்டவில்லை. அதன் பின்னர் 1996 (என்று நினைக்கின்றேன்) முரளிதரன் சுவிசிலிருநது வெளியேறினார். அதன் பின் மெல்ல மெல்ல இந்தக் கோயில் புளேட் இயக்கத்தினரின் கைக்கு மாறியது. சுவிசில் வாசூலில் கொடிகட்டிப்பறந்த கோயில் (கிட்டத்தட்ட 8 லட்சம் பிராங) என்றால் இது தான். அதற்கு காரணம் இந்தக் கோயில் ஒரு ஆத்தங்கரையுடன் சேர்ந்து இருந்ததும் என்று சொல்லலாம். சில கோயில்கள் நகரத்திற்குள் இருப்பதால் உள்ளே செல்லும் போது கோயில் என்ற ஒரு எண்ணம் வருவது குறைவு.)மற்றும் இது முக்கிய நகரங்களிற்கு இடையில் உள்ளது என்பதால் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் வருவார்கள்.

இப்படி இருக்கும் பொழுது இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போது மக்கள் அனைவரும் வன்னிக்கு இடம் பெயர்ந்தார்கள். அந்த சமயம் தமிழர் புணர்வாழ்வுக்கழகம் மக்களிடம் நிதி சேகரித்தது. அந்த காலகட்டத்தில் தான் கோயில்களும் போராட்டத்திற்கு நிதி வழங்க முன் வந்தன. அதற்கு முன்னைய காலங்களில் கோயில்கள் போராட்ட நிதி வழங்கியது கிடையாது. செஞ்சோலை , தமிழர் புணர்வாழ்வுக்கழம் என்பனவற்றிற்கு தான் வழங்கினார்கள்.

எனவே இந்த கோயிலின் பூசாரி என்ன செய்தார் என்றால். கோயில் நிர்வாகத்திற்கு (புளேட் உறுப்பினர்கள்) கோயிலின் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களிற்கு அனுப்புவதாக சொல்லி ஒரு உண்டியலை வைத்தார். இங்க தான் எல்லாமே ஆரம்பிச்சது. அன்றிலிருந்து நிhவாகத்தினர்க்கு பூசாரி மீது வெறுப்பு உண்டாயிற்று. வருடாந்த பொதுக்குட்டத்தில் பூசாரி ஒருவர் "நீ என்னன்டடா எங்களுக்கு தெரியாமல் உண்டியல் வைக்கலாம்" என்று கேட்டதாக அங்கே சென்ற ஒருவர் சொன்னார் (அதாவது இந்த பொதுக்குட்டத்திற்கு யாரும் செல்லலாம்). அதன் பின் இந்த பூசாரியுடன் நிர்வாகத்தினர் புதிய கொன்ராக்;டை போட விரும்பவில்லை.

வெகு வேகமாக நிர்வாகம் இலங்கையிலிருந்து ஒரு புதிய பூசாரியை அழைத்தது.

அதன் பின்னர் நடந்தது ஏற்கனவே சொல்லியிருக்கிறனே;.

வடிவேல் அங்கிள் ஏன் நீங்கள் கருத்த கண்ணாடி போட்டு இருக்கிறீங்க???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யமுனா என்னை அங்கிள் என்று சொல்லாதீர்கள் எனக்கு வயது 23 (ஒரு வேளை நான் எழுதுவதை வைத்;து அப்படி நினைத்திருப்பீர்கள்) . நான் ஏன் கறுத்தக்கண்ணாடி போட்டிருக்கிறேனா? அதாவது நான் எதை எப்படி கவனிக்கிறேன் என்று மற்றவர்கள் என்னை கவனிக்காமல் இருக்கத் தான். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா என்னை அங்கிள் என்று சொல்லாதீர்கள் எனக்கு வயது 23 (ஒரு வேளை நான் எழுதுவதை வைத்;து அப்படி நினைத்திருப்பீர்கள்) . நான் ஏன் கறுத்தக்கண்ணாடி போட்டிருக்கிறேனா? அதாவது நான் எதை எப்படி கவனிக்கிறேன் என்று மற்றவர்கள் என்னை கவனிக்காமல் இருக்கத் தான். :lol::lol:

தம்பி உங்களுக்கு வயது 32 ஆ அல்லது 22 ஆ :?:

அப்ப கருணாநிதியும் கருப்பு கண்ணாடி அதற்கு தான் போடுபவரோ :?: :?:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.