Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் மூன்று வேளை உணவு உட்கொள்ள முடியாது அவதியுறும் நிலையில் அரசாங்கம் ஆசியாவின் ஆச்சரியம் பற்றி பேசுகின்றது! – சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மூன்று வேளை உணவு உட்கொள்ள முடியாது அவதியுறும் நிலையில் அரசாங்கம் ஆசியாவின் ஆச்சரியம் பற்றி பேசுகின்றது! – சரத் பொன்சேகா 

[Wednesday, 2014-02-19 12:11:32]
sarath-fonseka200_150.jpg

கள்ள அரசியல்வாதிகளினால் போர் வெற்றி ஈட்டப்படவில்லை எனவும் ஆயிரக் கணக்கான படைவீரர்களினாலேயே போர் வென்றெடுக்கப்பட்டது என்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டின் முதல் நான்கரை மாதங்களிலேயே உச்சக்கட்ட போர் இடம்பெற்றது. அந்தக் காலத்தில் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு ஆட்சியாளர்கள் கோரினர். ஐரோப்பாவின் அழுத்தங்கள் காரணமாக இவ்வாறு கோரினார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார். போர் நிறுத்த யோசனையை நான் நிராகரித்தேன், படைவீர்ர்களும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

  

2009ம் ஆண்டு சுதந்திர தினமன்று ஆட்சியாளர் போர்க்கள விடயங்கள் பற்றி பெருமிதத்துடன் உரையாற்றினார். எனினும், எனது தலை நெருப்புப் பற்றிக்கொண்டது. ஆட்சியாளரின் அழுத்தம் காரணமாக எமது முன்நகர்வுகளில் பாதிப்பு ஏற்பட்டது. புலிகள் மீளவும் பலமடைய ஆரம்பித்திருந்த காலமது. எவ்வாறெனினும், அனைத்து படையினரும் அர்ப்பணிப்பு காரணமாக போரை வெற்றிகொள்ள முடிந்தது.

ஆட்சியாளரின் உத்தரவிற்கு அமைய 3 கிலோ மீற்றர் பின்நகர்ந்திருந்தால் பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார். மக்கள் அன்றாடம் மூன்று வேளை உணவு உட்கொள்ள முடியாது அவதியுறும் நிலையில் அரசாங்கம் ஆசியாவின் ஆச்சரியம் பற்றி பேசுகின்றது. நாட்டில் எரிபொருள் வளம் காணப்படுவதாக ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை, சூதாட்டத்தில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் அரசாங்கம், மஞ்சள் கடவையில் பாதையை கடக்காத அப்பாவி பொதுமகனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கின்றது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாஹாகொல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103973&category=TamilNews&language=tamil

எல்லாம் ஒரு பில்டப் தளபதி. இவங்களை போய் எல்லாம் சீரியஸா எடுத்துகொண்டு.

"2009ம் ஆண்டின் முதல் நான்கரை மாதங்களிலேயே உச்சக்கட்ட போர் இடம்பெற்றது. அந்தக் காலத்தில் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு ஆட்சியாளர்கள் கோரினர். ஐரோப்பாவின் அழுத்தங்கள் காரணமாக இவ்வாறு கோரினார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார். போர் நிறுத்த யோசனையை நான் நிராகரித்தேன், படைவீர்ர்களும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை." 

 

அப்ப இவருக்கும் போர்குற்றங்களுக்கும் நிறைய தொடர்பு என்று சொல்ல வருகிறார். மூன்று வேளை சாப்பாடு பற்றி உளறுகிறார். இவர் அதை தான் எங்களுக்கு செய்தார். இப்ப இவர் பெரிய நீதி தேவனாம்.

எதோ பதவி வேண்டிக்கிடக்கு. விழுந்தடிச்சு அரசரை காப்பாறுகிறார்! :unsure:  <_<

இந்தாளை தேர்தலுக்கு நிறுத்தும் போதும்,  வலிந்து காப்பாற்றி சிறையால் வெளியில் எடுக்கும் போதும் அரசரை விட பெரிய சூதாடியை அமெரிக்க தெரியாமல் நடந்து கொள்கிறது என்றது வெளிச்சம். :(

இன்னும் புலிகள் இல்லாமல் அரசியல் செய்யும் திறமையும் அறிவும் இனிவரும் சிங்கள தலைமுறைகு  எண்டாலும் வருமா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.