Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் வறட்சியால் 26961 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2013 ஆம் ஆண்;டு காலபோக நெற்செய்கையானது வறட்சி காரணமாக 26961 ஏக்கர் அழிந்துள்ளது என கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் நிலைய உதவி ஆணையாளர் தயாரூபன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று(20) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கடந்த வருடம் பருவமழை பொய்த்து போனமையால் மழையை நம்பி வருடந்தோளும் மேற்கெர்ளளப்படும் மானாவாரி நெற்செய்கை முற்றாக அழிந்துள்ளது. குளங்களின் கீழ்மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை பெருமளவுக்கு நீர்பாசனம் மேற்கொள்ளப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 64635 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதில் 26961 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளது.

இதன்படி கிளிநொச்சி கமநலசேவைகள் நிலைய பிரிவில் 17492 நெற்செய்கையில் 3007.5 ஏக்கர் அழிந்துள்ளது, அக்கராயன் கமநலசேவைகள் பிரிவில் 4830 ஏக்கர் நெற்செய்கையில் 1046.5 ஏக்கர் அழிந்துள்ளது, இராமநாதபுரம் கமநல சேவைகள் பிரிவில் 4142.5 ஏக்கர் நெற்செய்கையில் 450 ஏக்கர் அழிந்துள்ளது, உருத்திரபுரம் கமநல சேவைகள் பிரிவில் 7707.5 ஏக்கர் நெற்செய்கையில் 2267.5 அழிந்துள்ளது, பூநகரி கமநலசேவைகள் பிரிவில் 12512.5 ஏக்கர் நெற்செய்கையில் 10145 ஏக்கர் அழிந்துள்ளது,புளியம்பொக்கனை கமநலசேவைகள் பிரிவில் 13658 ஏக்கர் நெற்செய்கையில் 6879 ஏக்கர் அழிந்துள்ளது, முழங்காவில் கமநலசேவைகள் பிரிவில் 2692.5 ஏக்கர் நெற்செய்கையில் 1722.5 அழிந்துள்ளது,பளை கமநல சேவைகள் பிரிவில் 1600 ஏக்கர் நெற்செய்கையில் 1442.5 ஏக்கர் அழிந்துள்ளது. என கமநலசேவைகள் உதவி ஆணையாளரினால் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு இவ்வழிவு காரணமாக இவ்வருடத்திற்கான விதை நெல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
  http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103301/language/ta-IN/article.aspx

மிகவும் கவலையான செய்தி.

விவசாயிகளுக்கு மானியம் மற்றும் கடன் ஒத்திவைத்தல் போன்ற உதவிகள் செய்யவேண்டும்.

இந்த நிலையில் இரணைமடுவில் இருந்து யாழுக்குத் தண்ணீர்..????

மன்னாரில் காலபோக வேளாண்மை பாதிப்பு

 

கடந்த ஆண்டு மாரி மழை பொய்த்துப் போனதால் 2013 - 2014 கால

போக வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் விவசாயச் செய்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையை மட்டும் நம்பிய விவசாயச் செய்கை முழுமையாக அழிந்துள்ளதோடு சிறுதானிய மேட்டுநில பயிர்ச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் சிறு குளங்களை நம்பிய நெற்செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாகாண நீர்ப்பாசன குளங்களுக்குட்பட்ட  சில பகுதிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கட்டுக்கரைக் குளத்தில் உள்ள தற்போதைய நீர் மட்டத்தை வைத்து சிறுபோகப் பங்கீடு நடைபெறுகின்றது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் முதல் நடந்தது போல் எல்லை மீறிய செய்கை தொடர்ந்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு விவசாயச் செய்கை படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கட்டுக்கரை நீர் பகிர்ந்து வழங்குவதில் சீரான முறையில் நீர் முகாமைத்துவம் ஒரு காலமும் பேணப்படுதில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே வங்கிகளில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதிலும் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் குடும்ப வாழ்விலும் வறுமை நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

தமக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதீக்கப்பட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

 

மண்ணுக்கு ஏற்ற பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டும்: குணபாலன்

 

எமது மண் வளத்துக்கேற்ற பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன்,  பொருத்தமற்ற பயிர்ச் செய்கைகள் மூலம் எமது இலக்குகளை வீணாக்கக் கூடாதெனவும் துணுக்காய் பிரதேச செயலர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்;பட்ட பிரதேசங்களில் இறப்பர் செய்கை மேற்கொள்ளும் நோக்கில் 2012ஆம் ஆண்டு முதல் இறப்பர்மரக் கன்றுகள் விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்பட்டு வந்தன. இதுவரையிலும் 1,000 இற்கும் மேற்பட்ட கன்றுகள் நடுகைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பிரதேச செயலர் தெரிவிக்கையில்,

விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட இறப்பர்மரக்; கன்றுகள் வளரவில்லை. இதன் மூலம் எதுவித பயனும் இல்லை. இது  எமது பிரதேசத்திற்கு ஏற்ற பயிர் இல்லையென்பதால் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனால் செய்கையாளர்களின் நேரமும் வளமும் விரயமாகியுள்ளன.

எமது பிரதேசத்திற்கு ஏற்ற, எமது மண்ணில் செய்யக்கூடிய பயிர்ச் செய்கைகளினை மேற்கொள்வதிலேயே விவசாயிகள் அக்கறை செலுத்த வேண்டும். அதுவே பயன்தரும். அதனை விடுத்து வேறு பயிர்ச் செய்கைகளில் வளங்களை வீண் விரயம் செய்ய வேண்டாம் எனவும் கூறினார்.

 

tamilmirror.lk

Edited by Athavan CH

விவசாயிகளின் வீக்னெஸ் விளைச்சல்.

டை கட்டின விதை கொம்பநிகாரன் விளைச்சல் கூட என்று கண்ட கண்ட விதையையும் விற்பான்.

பிலிபீன்சில் முப்பது வருடங்கள் முன்பு ஆயிரம் வகை உள்ளூர் நெற்கள் இருந்தன. இப்போது இரண்டு வகை தான் உண்டு.

இந்த விதைகளுக்கு நிறைய இராசயன உரம், கிருமிநாசினிகள் மற்றும் நீர் வேண்டும்.

இப்போது டெர்மினேட்டர் விதையும் வந்துவிட்டது. இந்த விதையை ஒருக்கால் தான் பாவிக்கலாம்.

உள்ளூர் இயற்கை விதைகளை பாவித்து பின் அவற்றை சேமிக்கவும் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணசபையை கூட்டி ஏகோபித்த தீர்மாணம் ஒன்றை போட்டால் வறட்ச்சி போயோ போச்சு ஆராவது சொல்லுங்கப்பு விக்கியருக்கு அந்தாள் இரணைமடு குளத்துகட்டிலை ஓட்டை போட்டு பைப்மூலமா தன்னும் யாழ்பானத்துக்கு தண்ணீ கொண்டு போவது என்கிறமுடிவிலை தீயாய்வேலை செய்யிறார் குளத்து தண்ணியை நம்பி கமம் செய்தவன் வீட்டு அடுப்படியிலை பூனை படுத்துக்கிடக்கு விவசாயின் வயிறு எரிந்தால் அந்தநாடே உருப்படாது இதுக்குள்ளை வடமாகாணசபை முதைலை அமைச்சர் :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.