Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டிலுள்ள சகல மக்களும் அபிவிருத்தியின் பயனை அடைய வேண்டும் - இனம், மதம் என்ற வித்தியாசம் இல்லை! - தேசத்துக்கு மகுடம் நிகழ்வில் தமிழில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிலுள்ள சகல மக்களும் அபிவிருத்தியின் பயனை அடைய வேண்டும் - இனம், மதம் என்ற வித்தியாசம் இல்லை! - தேசத்துக்கு மகுடம் நிகழ்வில் தமிழில் பேசிய ஜனாதிபதி 

[saturday, 2014-02-22 08:52:09]
Mahinda-Rajapaksa_150seithy.jpg

பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் பல சவால்களை சந்தித்துள்ளோம். எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார். குளியாப்பிட்டியில் நேற்று 8வது தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.

ஆசியாவில் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் போது, பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது நாம் அறிந்ததே. இந்த சவால்களுக்கு முகம்கொடுக்கத் தயார் என்பதால்தான் நாம் இச்சவாலைப் பொறுப்பெடுத்துக் கொண்டோம். நாம் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டே ஆட்சி நடத்தப் பார்க்கின்றோம். அனைத்தையும் தெரிந்தே நாம் நாட்டின் ஆட்சியைப் பொறுப்பெடுத்தோம். கஷ்டத்தோடும் சரி நாம் பிரச்சினைக்குத் தீர்வு காணுவோம்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளையும் நாம் தெரிந்துகொண்டுள்ளோம். எமது அரசாங்கம் பலவீனமான அரசாங்கம் இல்லை. பலமான அரசாங்கம். எமது அரசாங்கத்தை நாம் மேலும் பலப்படுத்துவோம். இந்த நாட்டில் அனைத்து மக்களும் சகல வசதிகளையும், உரிமைகளையும், அபிவிருத்திகளையும் அனுபவிக்க வேண்டும், எமது செயற்பாடுகளை சிலர் எரிச்சலுடன் நோக்கினாலும், விமர்சித்தாலும், சர்வதேச அளவில் உலக வங்கி, ஐ.நா. அமைப்புகள் போன்ற பிரசித்தமான உலக அமைப்புகள் எமது செயற்பாடுகளை அங்கீகரித்துள்ளன.

இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், நாட்டிலுள்ள சகல மக்களும் அபிவிருத்தியின் பயனை அடைய வேண்டும். இனம், மதம் என்ற வித்தியாசம் இல்லை. அனைவரும் பயன்பெறவேண்டும் என்பதே எமது நோக்கமாகும். சகலரும் நிம்மதியாக வாழக்கூடிய உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம் என்றார். தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி குளியாப்பிட்டிய வயம்ப பல்கலைக்கழக வளாகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களால் நேற்று மாலை 5.45 மணிக்கு உத்தியோகபூர்வமாக அரம்பித்து வைக்கப்பட்டது.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=104164&category=TamilNews&language=tamil

அவர் சொல்லில் தவறுவிட்டு விட்டார். அவர் கட்டி எழுப்ப முயல்கிற நாடு சீனா. கந்தறுந்து போன நாடு இலங்கை.

அன்பான ஜனாதிபதி அவர்களே இந்த விடயத்தில் நான் உங்கள் பக்கம்தான்  ஆசியாவில் சிறந்த நாடாக இலங்கையை கட்டி எழுப்புவோம். சிங்கள மக்கள் தமது  பிரதேசங்களை கட்டியெழுப்ப  தமிழ் மக்கள் தமது பிரதேசங்களை கட்டி எழுப்ப எவரும் எவருக்கும் சுமை இல்லாமல் அனைத்து இலங்கையும் எந்த பந்தாவும் இல்லாமல் அபிவிருத்தி அடையும்.   தேசத்திற்கு மகுடம் கிடைக்கும்.    இது எப்படி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் படியுங்கோ.. சுதந்திர திபெத் தேசம் என்ற கோரிக்கையை தலாய்லாமாவும் கைவிட்டு.. இப்போ அவரும்.. எங்களைப் போல ஆட்டோனமி கேட்கிறார்.

 

_73104773_008775016-1.jpg

 

மகிந்த எங்களைப் பார்த்துச் சொல்லுறதும்.. சீனா.. தலாய்லாமாவப் பார்த்துச் சொல்லுறதும் ஒண்டு தான். தலாய்லாமா உலகத்தப் பார்த்துச் சொல்லுறதும்.. நாங்க சொல்லுறதும் ஒன்று தான்...

 

Beijing described the Dalai Lama as a separatist, while the spiritual leader said he only advocates greater autonomy for Tibet, not independence.

 

ஆனால் அவருக்கு.. சீனா அளித்திருக்கும் பதிலும்.. மகிந்தவுக்கு சொல்லிக் கொடுத்திருக்கும் பதிலும் ஒன்று தான்.

 

'' China has been widely accused of repressing political and religious freedoms in Tibet. Beijing rejects this and says economic development has improved Tibetans' lives. "

 

அதோட.. ஒபாமாவும் லேசு இல்லை. சுதந்திர திபெத் தேசம் உருவாகிட்டா.. பிரச்சனை முடிஞ்சிடும்.. அப்புறம்.. அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நகர்வுகளுக்கு எங்க போறது.. தாய்வானைத் தான் நம்பி இருக்கனும்.. அதனால...

 

ஒபாமா (அவர் சார்ப்பா பேசவல்ல பெண் அதிகாரி) இப்படிச் சொல்லுறாரு..

 

"We do not support Tibetan independence," she said, adding that the US "strongly supports human rights and religious freedom in China.

 

"We are concerned about continuing tensions and the deteriorating human rights situation in Tibetan areas of China."

 

http://www.bbc.co.uk/news/world-asia-china-26271596

 

 

 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.