-
Tell a friend
-
Topics
-
29
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By goshan_che · Posted
கேள்வி 2 சரி நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கட்டும், ஆனால் கெளரவமாக வாழ முடியும் எனும் போது அதை ஏற்றால் என்ன பிழை? பதில் இதை பிழை என வெளிநாட்டு பிரசை நான் சொல்ல முடியாது. இன்று ஒருவர் கூறினார் போதை பொருளை யாழில் ஒழிப்பார்கள் எனவே என் வோட்டு என் பி பிக்குத்தான். நாம் உரிமையை (பிச்சை) கேட்ட போது அவர்களாகவே நாயை (போதைபொருள்) அவிழ்த்து விட்டார்கள். இப்போ நாம் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்கிறோம். ஆனால் இதுதான் வாக்காளர் தேர்வு என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாது. -
ஆலோசனைக்கு நன்றி பேராண்டி .
-
By goshan_che · பதியப்பட்டது
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம் ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்) அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன: சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும். அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு. இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே. முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது. இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழர்களோடு டீல் பண்ணுவது மட்டும் இல்லாமல், முன்னர் தரகர்களாக இருந்த தமிழ் தேசிய, அபிவிருத்தி அரசியல்வாதிகள் சாதிக்காத பலதை செய்து தரபோகிறனர் என்ற செய்தியையும் சொல்லி நிற்கிறது. யாழ்களத்தில் இந்த இரு நிகழ்வுகளும் பலரை கொஞ்சம் அல்ல நிறையவே நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது என்பது தெரிகிறது. எனக்கும் நம்பிக்கை துளிர்விடத்தான் செய்கிறது. களத்துக்கு வெளியிலும் இப்படியே இருக்கும் என ஊகிப்பது கடினம் அல்ல. ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருப்பதை நாம் மறக்க கூடாது. அது பற்றிய என் பார்வை கீழே. தமிழ் அரசியல்வாதிகள் கேட்டபோதெல்லாம் கொடுக்காததை - இப்போ எனக்கு வாக்கு போடுங்கள் தருவேன் என்கிறார் அனுரா. அதாவது, தமிழ் அரசியல்வாதிகளை காயடித்து, அவர்களால் எதுவும் முடியாது என்ற நிலையை வலிந்து உருவாக்கி விட்டு, அவர்களிடையே சுயநலமிகளை இறக்கி ஒற்றுமையை தூள் தூளாக்கி விட்டு, இப்போ தமிழ் மக்களிடம் தெற்கு நேரடியாக டீல் பேசுகிறது. சுயநிர்ணயம், 13+, இப்போ இருக்கும் மாகாணசபை கூட இல்லை, ஆனால் அரசியல் கைதிகளை, காணிகளை, விடுவிப்போம். உங்களை ஒரு சம பிரசையாக நடத்துவோம். எமக்கு வாக்களியுங்கள். இதுதான் தெற்கு, வடக்கு-கிழக்கு தமிழ் வாக்காளரோடு இப்போ போடுகிற டீல். இதை நான் ஒரு நெடிய, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட போரின், மூன்றாவதும், கடைசியும், வெற்றியை உறுதி செய்ய விழைவதுமான பகுதியாக பார்க்கிறேன். 50 களில் பேரினவாதம் எம்மீதான போரை தொடங்கிய போது தொட்டு இன்று வரை அதன் இலக்கு - எமக்கான குறைந்த பட்ச சுயாட்ச்சியை கூட தராமல், எமது நில, பொலிஸ் அதிகாரங்களை, பாரம்பரிய வாழிடம் மீதான எம் கோரிக்கையை, பின்னாளில் திம்பு கோட்பாடு வலியுறுத்திய அத்தனையையும் நிராகரித்து, அந்த நிராகரிப்பை நாமே ஏற்கும் அளவுக்கு எம்மை தோற்கடித்தல். நாம் இந்த நிலையை ஏற்கும் போதுதான் பேரினவாத்ததின் எம் மீதானா போர் வெற்றி முழுமை அடையும். இந்த வகையில்தான் எம்மீது போர் 3 பகுதிகளாக நடத்தப்பட்டது. பகுதி 1 -1948 முதல் 2009 வரை. பேரினவாதம் எம்மீது வன் போரை தொடுத்தது. நாமும் பாரிய தவறுகளை விட்டோம். முடிவு -பேரினவாதம் வன்போரில் வென்றது. பகுதி 2 -2009 முதல் 2024 வரை. இது மென்போர் காலம். எமது ஒற்றுமையை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் சிதைத்து, போலிகளை உள்ளிருத்தி, ஓர்மத்தை முனை மழுங்க வைத்து, ஆளை ஆள் சந்தேகபட வைத்து, தலைவர் இருக்கிறார், இன்னும் பல மாயக்கதைகளை, மாய மனிதர்களை எம்மை நம்பவைத்து, அல்லது நம்பாமல் அடிபட வைத்து, கூடவே ஊரில் உள்ள எமது தேசிய தலைமைகளுக்கு எதுவும் கொடாமல் (வடக்கு முதலமைச்சர் நிதியம்) அவர்களை காயடித்து, கேலிப்பொருளாக்கி, சுயநலமிகளை அவர்களாகவே அடையாளப்படுத்த விட்டு (கஜேஸ், சுமந்திரன், சிறி, சுரேஸ் இத்தியதிகள்), வினைத்திறன் அற்றோரை மேலும் வினைதிறனற்ரோர் ஆக்கி (விக்கி), அபிவிருத்தி அரசியல் காரர்களை கூட ஒரு அளவுக்குள் தட்டி வைத்து (டக்கிளஸ், அங்கயன், பிள்ளையான்), இவர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்று முழுதாக துடைத்தெறித்தார்கள். இதையேதான் நாடுகடந்த அரசு இதர புலம் பெயர் தமிழ் அமைப்புகளிலும் செய்தார்கள். எனக்கு இதை எழுதும் போதே ஐலண்ட்டின் @island குரல் கேட்கிறது. இந்த பகுதி 1, 2 இல் நடந்தவைக்கு புலிகளும், நமது அரசியல்வாதிகளும், புலம்பெயர் பிரமுகர்களும் அல்லவா அல்லவா பொறுப்பு என்பார் அவர். அவர்களும் பொறுப்பு, மறுக்கமுடியாது. ஆனால் நான் மேலே விபரித்த வகையில் இந்த இரு காலப்பகுதிகளிலும் எம்மீது ஒரு நேரடி, பின் மறைமுகப்போரை நன்கு திட்டமிட்டு, இலங்கையின் ஆழ்-அரசு தொடுத்தது என்பது என் நம்பிக்கை. அதற்கு நாமும் அறிந்தோ அறியாமலோ துணை போனோம். இப்போ…. பகுதி 3 - போர் வெற்றியை நிரந்தரமாக்கும் காலம் -2024 முதல். மேலே நான் சொன்னதை போல - நாமாக “திம்பு”வை கைவிடும் காலம் வரும் வரை தெற்கின் எந்த வெற்றியும் நிரந்தரமானதல்ல (நாம் என்றால் வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்கள்). இப்போ இதை நோக்கித்தான் அதாவது தாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கும் நகர்வைத்தான் தெற்கு எடுக்கிறது. ஒற்றை இலங்கையர் அடையாளம்+ மாகாணசபைகள் வெறும் விரய செலவுகள்,+தமிழ் கட்சிகள் எதுவும் செய்யாது+ஊழல் அற்ற அரசு+ எல்லோர்க்கும் ஒரே உரிமை +மேனாடுகள் போன்ற ஒரு இனவாதமற்ற நாடு = நீங்களாகவே “திம்பு” வை மறுதலித்தல், அதாவது தமிழ் தேசிய அரசியலை கைவிடல். இதை நோக்கி எம்மை உந்துவதுதான், இந்த கடைசி பகுதி போரின் நோக்கம். இதுதான் தெற்கு பெற்ற போரின் வெற்றியை நிரந்தரமக்கும் மூலோபாயம். இதன் முதல் படிதான் 2024 இன் இரு தேர்தல்களும். இதுதான் என் பார்வை. ———————————————— அடுத்து…… இங்கே சில கேள்விகளை ஊகித்து பதிலை தருகிறேன். கேள்வி1 அறகல, என்பிபி எழுச்சி, கோவிட், பொருளாதார நெருக்கடி எல்லாமும் random நிகழ்வுகளாக இருக்கும்போது , நீங்கள் சொல்லும் மூன்றாம் பகுதி ஏற்படவே இவைதான் காரணம் எனும் போது - இதை எப்படி ஒரு நீண்ட போரின், போர் இலக்கின் ஒரே பகுதி என்பீர்கள்? பதில் இவை எல்லாமுமே உண்மையில் random நிகழ்வுகளா என்பது கேள்வி குறி. அப்படியே random நிகழ்வுகளாக இருப்பினும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு ஆழரசு (deep state) இலங்கையில் உள்ளது என்பதையும் அதன் முதல் இலக்கு பெளத்த-சிங்கள மேலாண்மையை பேணல் என்பதையும் இங்கே அநேகர் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆள் அரசைத்தான் நாம் இலகு மொழியில் பிக்குகள் என்போம். நான் சொன்னபடி 1950 இல் இருந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலில்த்தான் இந்த யுத்தம் நடக்கிறது எனில், இப்போ நடக்கும் random நிகழ்வுகளை சுற்றி, இப்போரின் மூன்றாம் பகுதியை இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்பது என் பதில். -
நவம்பர் 15 பின்னர் யாழ் களமும் திசைகாட்டி என்.பி பி ..என மாற்றப்படுமா என்பதே எனகிருக்கும் சந்தேகம்..
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.